Saturday, April 16, 2011

சினிமாவுக்கு மோசமான காலகட்டம் - வைரமுத்து வேதனை...


பொய்கள் மட்டுமே வழிந்தோடும் சினிமா மேடைகளில் உண்மை பேசவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியசாலிகளில் தானும் ஒருவர் என்று நிரூபித்தார் கவிப்பேரரசு வைரமுத்து. சென்னையில் நடந்த ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, சினிமாவின் தற்போதைய பரிதாப நிலையை புட்டு புட்டு வைத்தார்.

இந்த படம் பொன்விழா காணும். வெள்ளி விழா காணும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் வாழ்த்தினார்கள். அது அவர்களின் நம்பிக்கை, ஆசை. ஆனால் நிஜம் அப்படியல்ல. இப்போதெல்லாம் ஒரு படத்தை எடுப்பது கூட எளிது. அதை ரிலீஸ் செய்வதுதான் மிக மிக கஷ்டம். அப்படி வருகிற படத்தை தியேட்டரில் ஒரு வாரத்திற்கு மேல் இருக்க வைப்பது அதைவிட பெரிய கஷ்டம். முன்பெல்லாம் சினிமா என்ற ஒரே ஒரு பொழுதுபோக்குதான் இருந்தது மக்களுக்கு. இன்று சினிமாவை வேறு பல பொழுது போக்குகள் பங்கு போட்டு விட்டன. இந்த யதார்த்தத்தை ஜீரணிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

கடந்த இருபது நாட்களாகதான் நான் என் வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பல படங்களை பார்த்து வருகிறேன். சுப்ரமணியபுரம், மைனா, யுத்தம் செய் போன்ற படங்களை இப்போதுதான் பார்க்கிறேன். தமிழுக்கு மிக அற்புதமான இயக்குனர்கள் கிடைத்திருக்கிறார்கள். மிஷ்கின், சுசீந்திரன், சசிகுமார், பிரபு சாலமன் ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள்.

'அடப்பாவிகளா... சினிமாவின் மிக மோசமான கால கட்டத்தில் வந்திருக்கிறீர்களே' என்று அவர் மேற்படி இயக்குனர்கள் பற்றி கூறியபோது வைரமுத்துவின் பேச்சில் தொணித்த ரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

8 comments:

  1. தைரியசாலிகளில் தானும் ஒருவர் என்று நிரூபித்தார் கவிப்பேரரசு வைரமுத்து.

    ReplyDelete
  2. சினிமா உலகம் அழிவை நோக்கிதான் செல்கிறது..

    ReplyDelete
  3. //அடப்பாவிகளா... சினிமாவின் மிக மோசமான கால கட்டத்தில் வந்திருக்கிறீர்களே' என்று அவர் மேற்படி இயக்குனர்கள் பற்றி கூறியபோது வைரமுத்துவின் பேச்சில் தொணித்த ரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.///

    ஆமாமா ஆட்சி மாரப்போவதை இப்பிடி சிம்பாலிக்கா சொல்றார் போல ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  4. சினிமா ஒரு மோசமான கால கட்டத்தை நோக்கி தான் போய்க் கொண்டு இருக்கிறது..வாஸ்தவம் தான்!!

    ReplyDelete
  5. சுசீந்திரன், நம்பிக்கை தரும் இயக்குனர் வரிசையில் சேர்ந்திருக்கிறார்.

    ReplyDelete
  6. கவிஞரின் பேச்சு அவர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு(மாறும்!) கலர் மாறப்போகிறார் என்பதையே காட்டுகிறது.
    சினிமா உலகின் இன்றைய அவல நிலைக்கு யாருடைய குடும்பத்தினரின் ஆதிக்கம் காரணம் என்று கவிஞருக்குத் தெரியாதா?
    ஒரு அஜித்,ஒரு விஜய் (ரஜனி கூட)ஊரறியச் சொன்ன் விஷயத்தை -நிஜ வாழ்க்கையில் உண்மை மட்டுமே பேச வேண்டிய கவி மேதை-மறைத்து அப்பாவி போலப் பேசுவது தகுமா, கவிஞரே?
    சினிமாவின் கெட்ட காலம உங்களைப் போல- செருப்படி பட்டாலும் ,நல்ல வேலை ரத்தம் வரவில்லை என்று சமாளிக்கும்- ஊமை சாமியார்கள்(ரஜனி,கமல்,வாலி)இருந்ததால்தான்.
    சினிமா உலகின் பொது நன்மைக்காகப் பாடு படாமல் தங்களில் ஒருவரையே காறித்துப்பிக் கொண்டிருக்கும் குஷ்பூ,வடிவேலு போன்றவர்களும்தான்!
    தயவு செய்து சம்பந்த்மேயில்லாத மூன்றாம் மனிதர் போல (போகிற போக்கில் அறிவுரை என்ற பெயரில் புலம்புவது)பேசாதீர்கள்.

    ReplyDelete
  7. வைர முத்து தில்லானவர் தான்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...