தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை ஹீரோக்களில் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு வந்துவிட்ட விஜய சேதுபதி, திடீர் புகழுக்குப் பின் காணாமல் போன ஹீரோக்களை மனத்தில் கொண்டு அடுத்தடுத்த ஸ்டெப்களை கவனமாக வைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விஜய சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘சூது கவ்வும்’ ரசிகர்களிடத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சூதுகவ்வும் திரைப்படத்தில் நடித்தது பற்றி சமீபத்தில் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விஜய சேதுபதி “ உண்மைய சொல்லனும்னா எனக்கு நடிப்பு அப்படீனு எதுவும் தெரியாது. பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்க ஒழுங்க நிக்க கூட தெரியாதவன் நான்.
தேவைக்கு அதிகமா நடிக்காதால என் நடிப்பு இயற்கையா இருக்கு. ஒரு ஹீரோவின் என்ட்ரி ரசிகர்கள் கைதட்டனும், சத்தம் போடனும் அப்படீனு யோசிச்சு எடுக்கப்படும். ஆனால் சூது கவ்வும் படத்துல நான் கொடுத்த மொக்க என்ட்ரிக்கு ரசிகர்கள் கைதட்டி, சத்தம் போட்டதை பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம் தாங்கல” என்று கூறியுள்ளார்.
2014 வரைக்கும் கால்ஷீட் இல்லாத விஜயசேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம்.
***********************************
இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர், அவரை 3 இடியட்ஸ் என்னும் இந்தி படம் மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ளார்.
சீனப் பிரதமர் லீ கெகியாங் 3 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். நேற்று முன்தினம் டெல்லி வந்த அவர் எல்லை பிரச்சனை மற்றும் பிற முக்கிய ஒப்புதல்கள் குறித்த ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங் உடன் தொடர்ந்து இரண்டு நாட்களாக மேற்கொண்டார்.
இந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகள் இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, அணுமின் உற்பத்தி திட்டங்கள், ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேசப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர், இயல்ப்பான முறையில் உரையாடிய சீன பிரதமர் லீ கெகியாங் சீனாவில் இந்திப் படங்களுக்கு வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, இந்தியில் வெளியான ‘3 இடியட்ஸ்’ என்னும் படத்தை விரும்பி பார்த்ததாக குறிப்பிட்ட சீன பிரதமர், அப்படத்தை அவரது மகள் பார்த்துவிட்டு, தன்னையும் பார்க்க சொன்னதாக கூறினார்.
கல்வி பயிலும் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பிடித்ததை முழுமனதுடன் செய்தல் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. இந்த படம்தான் தமிழில் விஜய் நடிக்க நண்பன் படமாக வெளிவந்தது.
சீன பிரதமரின் மகள்களுக்கு வாழ்த்துக்கள்...!!!
ReplyDeleteசீன பிரதமரை கவர்ந்த விஜய் படமும்...
ReplyDeleteவிஜய் படமா ?...................அதான் 3 இடியட்ஸ் சொல்லியாசு ...அப்புறம் என்ன விஜய் படம்............விஜயின் சுறா , ATM பார்த்தால் சீன பிரமர் ...நம்ம எல்லைக்கே வரமாட்டார்
3 இடியட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னரே, அவர் யாரை சொல்லி இருப்பார்? இருந்தாலும் அவருக்கு நக்கல் ஜாஸ்தி.
ReplyDeleteஉங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/
ReplyDelete