ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார்.
அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
************************************
அத்தனை பேரும் படிக்கனும் என்கின்றேன்...
வயிற்றில் ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்..? அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன்..?
ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிகூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்கனும். தேவைப்பட்டால் பகல் உணவிற்கென்று தனியாக வரி போடத் தயங்கமாட்டேன்...
அதனால் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இதே வேலையாக ஊர் ஊராகப் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்...!
-காமராஜர்
(அதனால் தான் மக்கள் மனதில் உயர்ந்து நி்ற்க்கிறார்..)
# படித்ததில் பிடித்தது #
பொற்காலம்...
ReplyDeleteஇப்போ போறாத காலம்
Delete