முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து கடந்த 2 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் 100 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார் இந்தத் தகவலை தமிழக சட்டசபையில் சபாநாயகர் ப.தனபால் பெருமிதத்துடன் நேற்று தெரிவித்தார். முதல்வர் விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாசிப்பதை திமுக கூட தொடர்ந்து கேலி செய்து வந்தது. ஆனால் அதில் புதிய சாதனையே படைத்து விட்டார் முதல்வர்.
தினந்தோறும் சட்டசபையில் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்
நேற்று முதல்வர் ஜெயலலிதா இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதல்வர் ஜெயலலிதாவை வெகுவாக பாராட்டிப் பேசினார்கள்.
கடைசியாக சபாநாயகர் ப.தனபால் பாராட்டிப் பேசும்போது, ‘‘முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 ஆண்டுகளில் 100 முக்கிய அறிவிப்புகளை பேரவை விதி 110-ன்கீழ் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார் என்றார்.
அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை பலமாக தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த மகிழ்ச்சி ஆரவாரம் சில வினாடிகள் நீடித்தது.
முதல்வர் ஜெயலலிதா பேரவை விதி 110-ன்கீழ் சட்டசபையில் வாசித்த உரைகளின் இரண்டவாது தொகுப்பை ‘விதியை மாற்றிய விதி' என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை வண்ண புத்தகமாக அச்சிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நேற்று வழங்கியது.
அறிவிப்புக்களும் சாதனை படைக்க வேண்டும்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி...