Thursday, June 20, 2013

மதச்சார்பின்மை என்றால் என்ன? சிலைகள் அவசியம் தானா?


"விநாச காலே விபரீத புத்தி!' என்பர். இதற்கான அர்த்தம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பீகாரில் ஆட்சியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கும், அவரது ஐக்கிய ஜனதா தளக் கட்சியினருக்கும், விநாச காலம் துவங்கி விட்டது போலும். 

நிதிஷ் மற்றும் அவரது கட்சியினரின் அன்றாட நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் விபரீதத்திற்கு, கட்டியம் கூறி, வரவேற்றுக் கொண்டுள்ளன.சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், ஐ.ஜ.த., தோல்வியை தழுவியதோடு, சமாதியாகி இருந்த லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளதே, இதற்கு சரியான தாரணம்.அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில், ஐ.ஜ.த., மண்ணைக் கவ்வினாலும், அது, ஆச்சரியமாக இருக்காது. 

நிதிஷின் சோற்றில், மோடி என்றைக்கு மண்ணை அள்ளிப் போட்டாரோ தெரியவில்லை. மோடியை பார்த்தாலே, நிதி
ஷ்
க்கு பற்றிக் கொண்டு வருகிறது. போதாக் குறைக்கு, பா.ஜ.,வின் பிரசார குழுத் தலைவராக வேறு, மோடி நியமனம் செய்யப்பட்டு விட்டார். தகவல் வந்ததிலிருந்து, நிதிஷக்கு மட்டுமின்றி, அவரது கட்சியினருக்கும், உடம்பு எரிய ஆரம்பித்து விட்டது.

நாட்டிலுள்ள விவசாயிகளிடமிருந்து, இரும்புத் துண்டுகளை இனாமாகப் பெற்று, குஜராத்தில், 392 அடி உயரத்திற்கு, இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேலுக்கு, நினைவுச் சின்னமாக, ஓர் இரும்பு சிலை வைக்கப் போவதாக, அறிவித்திருக்கிறார் மோடி. இதில், தவறு ஏதும் இருப்பதாக, யாருக்கும் தோன்றவில்லை. 

ஆனால், ஐ.ஜ.த., கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான, சிவானந்த் திவாரிக்கு தோன்றிருக்கிறது. மோடி, வல்லபாய் படேலுக்கு மதச் சாயம் பூசி, படேலின் பெருமைகளை, களங்கப் படுத்த முயல்வதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.இரும்பாலான சிலை மீது, அது துருப்பிடிக்காமலிருக்க, "எனாமல் கோட்டிங்' பூசுவர். ஆனால், அந்த, 392 அடி சிலைக்கு, மத சாயத்தை எங்கே, எப்படி பூசுவர் என்பது தான், புரியாத புதிராக உள்ளது. 

மதச்சார்பின்மை என்ற வார்த்தையை வைத்து, இதுகாறும், காங்., கட்சி தான் பூச்சாண்டி காட்டி பயமுறுத்தி வந்தது. அந்த வரிசையில், இப்போது, ஐ.ஜ.த.,மும், தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. "மதச்சார்பின்மை' என்றால், என்னவென்றே தெரியாதவர்களிடம், மதச்சார்பின்மை என்ற வார்த்தை மாட்டிக் கொண்டு, "பேய் முழி' முழித்துக் கொண்டிருபதை பார்த்தால், பரிதாபமாக உள்ளது.

தமிழன்னைக்கு, 100 கோடி ரூபாய் செலவில், மதுரையில் சிலை வைப்பேன் என்று, பணத்தை அனாவசியமாக செலவு செய்ய, தமிழக முதல்வர் அறிவித்ததை போல, இந்த, 392 அடி
யர வல்லபாய் படேல் சிலையை செய்வது, அனாவசியமான செலவு என்று சொல்லி இருந்தாலும், அதில் ஒரு அர்த்தம் உண்டு.

3 comments:

  1. எனக்கு தெரிஞ்சது இந்த சிலைகளை எல்லாம் (எல்லா தலைவர், சாமி சிலைகளையும்) கொண்டு போய் வச்சுட்டாலே ரோடு கிளியர் ஆகும் பல பிரச்சனை ஒழியும்...,

    ReplyDelete
  2. ஒன்றும் செய்ய முடியாது என்பதும் உண்மை...

    ReplyDelete
  3. மோடி ஜெயித்து பிரதமராக ஆகிவிட்டால் மதவாத பிரதமர் ஆளும் நாட்டுல இருக்கமாட்டேன் என்று இவர்களே இந்தியாவை விட்டு தொலைந்தால் நன்றாக இருக்கும் இவனுங்க தொல்லை தாங்கமுடியவில்லை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...