Tuesday, April 30, 2013

"அவமானம் தரும் கரும்புள்ளி குடும்பம்' - கற்பழிப்புக்கு புதிய தண்டனை... ஒரு சபாஷ் கிராமம்


டில்லி, இந்தியாவின் தலைநகர் மட்டுமல்ல, கற்பழிப்பின் தலைநகரமாகவும் உயர்ந்து உள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பரில், மருத்துவ மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, அவள் இறந்ததை தொடர்ந்து, தற்போது, ஐந்து வயது குழந்தை கற்பழிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவது, வெட்கமும், வேதனையும் படக்கூடிய நிகழ்வு. 

இந்த குழந்தை கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள மனோஜ் குமார், பீகாரைச் சேர்ந்தவன். அவன் பிறந்த ஊரான, பரத்துவா என்ற இடத்தின் பஞ்சாயத்து அமைப்பு, அவனையும், அவனது குடும்பத்தையும் அந்த ஊருக்கு வரக்கூடாது என்று தடைவிதித்துள்ளது. 

அவனது குடும்பத்தை, "அவமானம் தரும் கரும்புள்ளி குடும்பம்' என, முத்திரை குத்தியுள்ளது.வானளாவிய சட்டங்களையும், அதிகாரங்களையும் வைத்துள்ள, நம் அரசுகள் சாதிக்காததை, தன் சிறிய அதிகாரத்தை பயன்படுத்தி, மனோஜ்குமாரின் குடும்பத்தையும், அவனையும், பஞ்சாயத்து உடனடியாக, பகிஷ்கரித்திருப்பது, மக்கள் இந்த கொடுமைகளுக்கு, அரசின் தண்டனைகளுக்கு முன், சமுதாயத்தில் எந்த விதத்தில், அவனது பின்புலத்தை கிழித்தெறியும் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்பது புலனாகிறது.

மனோஜ் போன்ற காமுகர்களது வெறிச் செயலை, கிராம மக்கள் வெறுத்து, அவனை ஒதுக்கியது பாராட்டத்தக்கது. இந்த வெட்கக்கேடான குற்றத்திற்கு, கிராம மக்கள் குத்தியுள்ள முத்திரை, அவர்களது மனங்களின் அடித்தளத்தில் இருந்து எழுந்த, கோபத்தின் எழுச்சியே. 

காவல் துறையை கைகாட்டுவதும், அரசின் கையாலாகாத அணுகுமுறைகளை குறை கூறுவதையும் தவிர்த்துள்ள, பரத்துவா கிராம பஞ்சாயத்து, இம்மாதிரி குற்றங்களில், சம்பந்தப்பட்ட குடும்பத்தின் மேல் குத்தும், படுபாதக, அவமான முத்திரையைப் பற்றி, தலைமுறை தத்துவமாய் பேசும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

ஊருக்கு பயந்தாவது, இந்த கொடிய செயலை எதிர்காலத்தில் தங்கள் சந்ததியினர், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் செய்யாமல், சுமுக வாழ்க்கைக்கு வழி கோலுவதாய், அந்த பஞ்சாயத்து முடிவு அமைந்துள்ளது.எதிர்காலத்தில், சமுதாயமே கடுமையாக தண்டித்து விடும் என்ற செய்தியை நமக்கு தெரிவிக்கிறது.

Monday, April 29, 2013

மே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை



சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிறார். அனிருத் இசையமைத்து இருக்கிறார். '3' படத்தினைத் தொடர்ந்து தனுஷ் இப்படத்தினையும் தயாரித்து இருக்கிறார்.

'3' கூட்டணியில் வரும் படம் என்பதால் படம் தொடங்கும் போதே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியது படத்தின் இசை தான். அனைத்து பாடல்களுமே ஹிட். 



பல வருடங்களாக குழந்தை இல்லாமல் ஒரு கோவிலுக்கு சென்று வேண்டுகிறார்கள் சிவகார்த்திகேயனின் அம்மாவும், அப்பாவும். அப்படி வேண்டியதால் பிறக்கும் சிவகார்த்திகேயனுக்கு அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயரான ‘குஞ்சிதபாதம்’ என்ற பெயரையே வைக்கிறார்கள்.

ஆனால் சிவகார்த்திகேயன் வளர வளர அவருக்கு அந்தப் பெயர் பிடிக்காமல் போகிறது. ஸ்கூலில் படிக்கும் போது சக நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிண்டலும்,கேலியும் செய்கிறார்கள், இதனால் தனது பெயரை வெளியில் சொல்ல வெட்கப்படும் அவர் எப்படியாவது தனது பெயரை மாற்றி விட வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறது.

இதனால் பெயரை மாற்றினால் எங்கே தெய்வக்குத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து போய் அந்த எண்ணத்தை கை விடுகிறார். பிறகு கல்லூரிக்கு போகும்போது ஹீரோயின் ப்ரியா ஆனந்த்தின் ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்கிறது. அப்போது அவர் சிவகார்த்திகேயனிடன் பெயரை கேட்கும் போது குஞ்சிதபாதம் என்று சொன்னால் எங்கே அவள் நம்ம சீப்பாக நினைத்து விடுவாளோ..? என்று பயந்து ஹரீஸ் என்று பெயரை மாற்றிச் சொல்கிறார்.


அப்புறம் என்ன ஆனது... வாழ்க்கையில் எப்படி 'எதிர் நீச்சல்' போட்டு ஜெயிக்கிறார் என்பதே 'எதிர் நீச்சல்' படத்தின் கதை.

'எதிர் நீச்சல்' படத்திற்கு மிகவும் பலம் என்றால் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் தான். அதுவும் இசை வெளியாகும் முன்பே பாடல்கள் உருவான விதம் என்று YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். அந்த வீடியோ பதிவு பயங்கர ஹிட். 

பாடல்கள் வெளியானவுடன் அனைத்து பாடல்களுமே YOUTUBE இணையத்தில் ஹாட் டாக். அனைத்து பாடல்களுமே 1,00,000 ஹிட்டுகளை தாண்டிவிட்டது. அதுமட்டுமன்றி நாயகன் வேறு சிவகார்த்திகேயன். இவரது டைமிங் காமெடிக்கு எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும். படத்தின் ஒப்பனிங்கிற்கு கேட்கவா வேண்டும். இப்படத்தின் ஒரு பாடலுக்கு தனுஷுடன் நயன்தாரா வேறு நடனமாடி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் ஒப்பனிங், தனுஷ் தயாரிப்பு, அனிருத் இசை என்று ஹிட் கூட்டணி இருப்பதால் படத்தின் ஒப்பனிங்கிற்கு பஞ்சமில்லை. படம் மே 1ம் தேதி வெளியாகிறது.

********************************



'சூது கவ்வும்' படத்தில் 40 வயது கொண்டவர் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக 'சூது கவ்வும்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சஞ்சிதாஷெட்டி நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துடன் நடித்திருந்தார். இந்தப் படத்தை நளன் குமாரசாமி இயக்குகிறார். 'அட்டக்கத்தி', 'பீட்சா' ஆகிய படங்களை தயாரித்த சி.வி.குமார்தான் தயாரிக்கிறார்.


படத்தில் நாற்பது வயது கொண்டவர் தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் இதுபோன்ற வேடம் ஏற்றிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது: குறும் படங்களில் நடிக்கும் போதே இந்த கதாபாத்திரத்தில் நடிக்கணும் என்ற ஆசை இருந்தது. நளன் எனக்கு நல்ல நண்பர். எனவேதான் நானே விரும்பிச் சென்று நடிக்கிறேன். ஒரு ஹீரோ எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். நாற்பதா இருந்தா என்ன, அறுபதா இருந்தா என்ன" என்று தெரிவித்தார்.

*******************************



அர்ஜுன்-சேரன்&விமல் நடித்த மூன்று பேர் மூன்று காதல் கேளடி கண்மணி, ஆசை, பூவெல்லாம் கேட்டுப்பார், நேருக்கு நேர், ரிதம், சத்தம் போடாதே ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், வஸந்த். இவர் இப்போது, மூன்று பேர் மூன்று காதல் என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார். 

குறிஞ்சி, நெய்தல், மருதம் ஆகிய நிலங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை இது. அர்ஜுன், சேரன், விமல் ஆகிய மூன்று பேரும் முதல்முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். கதாநாயகிகளாக சுர்வீன், லாசினி, பானு ஆகிய மூவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, அப்புக்குட்டி, சத்யன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர். 


யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருக்கிறார். எம்.ஜி.பரத்குமார், பி.ஏ.மகேந்திரன், மகா அஜய் பிரசாத் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர். சென்னை, நாகர்கோவில், ஊட்டி, சாலக்குடி, மங்களூர், பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. முக்கிய காட்சிகள், சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளன.

Sunday, April 28, 2013

எங்க அம்மா அன்னைக்கே சொல்லிச்சி...




ஒரு பெண்ணின் தந்தைக்கும் ,வழிப்போக்கனுக்கும் நடந்த உரையாடல்...!

வழிப்போக்கன் ::: சார் நீங்க அம்ஜிகரை தானே

பெண்ணின் தந்தை ::: ஆமா தம்பி ஏன் ....

வழிப்போக்கன் ::: அப்பால சொல்லுறேன் உங்க கூடவந்த இந்த பொண்ணு யாரு சார் ?

பெண்ணின் தந்தை ::: என்னுடைய குழந்தை தம்பி ...

வழிப்போக்கன் ::: தவறாக நினைகாதிர்கள் இது அமெரிக்கா இல்லே ஏன் இவ்வளவு அரைகுறையாக  ஆடை அணிந்து இருக்கிறது உங்க பொண்ணு

பெண்ணின் தந்தை ::: என்ன என்னுடைய குழந்தையா !!!! ?

வழிப்போக்கன் ::: ஆமாம் சார்

பெண்ணின் தந்தை :: எனக்கு அப்படி தெரியலையே என் குழந்தையே பார்க்கும் போது

வழிப்போக்கன் ::: உங்களுக்கு குழந்தையாக தெரியலாம் உங்களுடைய பொண்ணு பசங்களுக்கு குமரியாக தெரிகிறாள் ம்ம்ம் ....

பெண்ணின் தந்தை ::: கோபத்தோடு அதற்க்கு என்னப்பா ? அது என் பொண்ணுடைய இஷ்டம்.

வழிப்போக்கன் ::: தக்காளி உன்னையும் ஒரு மனுஷன் நெனச்சி சொன்னேன் பார்த்தியா என்ன செருப்பாலேயே அடிக்கணும் .. நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன் போடா வேற யாரவது வீட்ல பெரியவங்க இருந்த கூட்டிட்டு வா

அந்த பொண்ணு :::DAD CALL THE POLICE

வழிப்போக்கன் :::எங்க அம்மா அன்றைக்கே சொன்னுச்சி கருத்து சொல்லாதடான்னு....!

Saturday, April 27, 2013

சத்தியராஜ், பாக்கியராஜ் இவர்கலெல்லாம் ஒரு ஹீரோவா..? இளையராஜா பகீர் பேட்டி..!


‘வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவில் இளையராஜா பேசினார். அப்பொழுது அவர் வில்லன்கள் முகத்தைப் பார்த்தால் இசை அமைக்கவே வராது என்றார்.

இறைவனுக்கு நன்றி... 

பொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி. 

இசையை கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்... 

நான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க. 

வில்லனுக்கு பாட்டு.. ரொம்பக் கஷ்டம் 

சில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது. பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங்க பாட்டு பாடினால், அவங்களுக்கு கம்போஸ் பண்றப்ப என்னோட மன நிலை பாட்டுக்கு போகணும் இல்லையா. 

வில்லன் ஹீரோ ஆனால்... 

ஆனால், இதையெல்லாம் மீறி சத்யராஜ் வில்லனா இருக்கிறப்ப ‘என்னம்மா கண்ணு...செளக்கியமான்னு ஆரம்பமாச்சி... அப்புறம் அவர் ஹீரோவானதுக்கப்புறம் ‘தாஸ் தாஸ்...சின்னப்ப தாஸ்னு' டூயட் போடறதுக்கு வசதியா இருந்துச்சி. 

ரொம்பக் கஷ்டம்... 

இப்படித்தான் பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்' படம் எடுக்கும் போது பாக்யராஜ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணாரு. என்னய்யா நாங்கள்லாம் மியூசிக்லாம் போட வேண்டாமா, முகத்தைப் பார்த்தால் மியூசிக் போடணும்னு தோணுமான்னு ஓபனா கேக்கறன். 

ரொம்ப தப்புனு புரிஞ்சது... 

அதுல என்ன தவறுன்னா, பின்னாடி நான் உணர்ந்தது. இவர் அற்புதமான திரைக்கதை அமைப்பவர். இந்தியாவுலயே பேர் வாங்கினவரு. ஒரு கலைஞனை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நேரத்துலதான் அந்த பாராட்டுக்கு அர்த்தம் வருது. 

பாரதிராஜா செஞ்சது சரி... 

புதிய வார்ப்புகள் படத்துல பாரதிராஜா, பாக்யராஜை ஹீரோவா செலக்ட் பண்ணது அந்த படத்துக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. பாக்யராஜுக்கும் பெரிய எதிர்காலம் அமைஞ்சது. அது மட்டுமல்ல, பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியரா இருந்ததாலதான், அவருடைய வாழ்க்கைக்கு, வெற்றிக்கு திரையுலக பயணத்துக்கு மிகப் பெரிய விஷயமா அமைஞ்சதுன்னு உங்க எல்லாருககும் தெரியும். 

பாடம் கற்றேன்... 

அந்த நேரத்துல அப்ப நான் பாக்யராஜை நம்பலை. படத்தைப் பார்த்த பிறகுதான் பாக்யராஜைப் பத்தி தெரிஞ்சுது, அடடா, பெரிய தப்பு பண்ணிட்டோமே, யார் கிட்டட என்ன திறமை இருக்குன்னு தெரியாம நாம எதுவும் சொல்லக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அன்றிலிருந்து யாரைப் பற்றியும் எந்த முடிவும் எடுப்பதில்லைன்னு ஒரு பெரிய பாடத்தை பாக்யராஜிடமிருந்து கற்றுக் கொண்டேன்," என பேசினார்.

Friday, April 26, 2013

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் / ”காதல் தோல்வி” - தனுஷிடம் சீறிய நயன்தாரா?..

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் 

ஆரூர் மூனா செந்தில் விமர்சனம்

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

அட்ராசக்க சிபி செந்தில்குமார்  விமர்சனம் 

*********************************

\தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை நயன்தாராவின் காதல் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அனைவரும் அறிநததே. அவர் என்ன தான் தேவையே இல்லை என்று ஒதுக்கி வைத்தாலும் சில சம்யங்களில் அவர் காதலினால் பாதிப்பிற்குள்ள்ளாகிறார்.




யாருடனாவது பேசினால் தானே பிரச்சனை என்று பல படங்களில் நடித்து வந்தாலும் திரையுலகிடமிருந்து விலகியே இருந்து வருகிறார் நயன்தாரா. படமே! என்று அமைதியாக இருந்து வந்த போது ஒரு பாடல் ரூபத்தில் வந்தது நயன்தாராவுக்கு பிரச்சனை. நயன்தாரா எதிர்நீச்சல் படத்தில் ‘சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். 


இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய எதிர்நீச்சல் படத்தின் இயக்குனர் துரை “சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல” என்ற பாடல் ஹீரோவின் காதல் தோல்வியின் போது வரும் பாடல். இந்த பாடலுக்கு நடமாடுபவர் உண்மையிலேயே காதலி தோல்வியடைந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நயன்தாராவை தேர்வு செய்து, அவரிடம் பேசுமாறு தனுஷிடம் கூறினோம். தனுஷும் பேசி சம்மதம் பெற்றுத் தர பாடல் சூப்பராக வந்திருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.


அவரது படத்தின் புரமோஷனுக்கு இது நல்ல செய்தியாக இருந்தாலும் ’இனி காதல் தோல்வி சப்ஜெக்ட் என்றால் நயன்தாரா தானா’ என்ற எண்ணத்தை திரையுலகில் ஏற்படுத்திவிட்டது. இதையறிந்த நயன்தாரா தனுஷிடம் ’இதுக்குத்தான் என்னை ஆட சொன்னீங்களா?’ என சீறியதாக கோடம்பாக்கத்தில் கிளுக் என்ற சிரிப்புடன் அடிக்குரலில் பேசிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் இயக்குனர் மாதிரி தனுஷ் வெளியே சொல்வாரா?

Thursday, April 25, 2013

வார்த்தை தவறிவிட்ட அ‌‌ஜீத்...? விருது வாங்கிய பிரபல இயக்குனர்..!


வார்த்தை தவறிவிட்டாய்.... 

கண்ணம்மாவைப் பார்த்து பாடியது போல் யாரும் அ‌‌ஜீத்தைப் பார்த்து பாடி விடுவார்களோ? விஷயம் வேறொன்றுமில்லை. தான் நடிக்கிற படத்தில் அல்டிமேட் என்று அடை மொழி போடுவது, ஊர் திரண்டு வாழ்த்த, 'வந்தேண்டா உங்க தலைவன்' என்பது மாதி‌ரி ஓபனிங் சாங் வைப்பது, பன்ச் டயலாக் போடுவது... இதெல்லாம் சுத்தமா கூடவே கூடாது என்று கட்டளையிட்டிருந்தார் அ‌‌ஜீத். ஆனால்...

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்து வரும் படத்தில் இதில் ஒன்று இடம் பெறுகிறதாம். ஓபனிங் மாஸ் சாங்.

பில்லா படத்தில் சேவற்கொடி பறக்குதடா ஓபனிங் சாங் வைத்த மாதி‌ரி இதிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என வற்புறுத்தி விஷ்ணுவர்தன் அ‌‌ஜீத்திடம் சம்மதம் வாங்கியிருக்கிறாராம். ஆனால் அட்வைஸ் பண்ற மாதி‌ரியெல்லாம் இல்லாமல், செம கிராண்டாக, கலர்ஃபுல்லாக எடுத்திருக்கிறார்களாம். பாடியிருப்பது சங்கர் மகாதேவன்.

அ‌‌ஜீத் அவ்வப்போது வார்த்தை தவறினாலும் நன்றாகதான் இருக்கும்.

*****************************



குறும் படம், ஆவணப் படங்கள் எடுக்கிற இளைஞர்கள் இப்போது வ‌ரிசையாக படம் இயக்குகிறார்கள். குறும் படங்கள் சினிமா இயக்குவதற்கான விசிட்டி‌ங் கார்டாக மாறியிருக்கிறது.

இயக்குனர் பாண்டியராஜன் விஷயத்தில் அப்படியே உல்டா. இருபது வயதில் ஆண் பாவம் படத்தை இயக்கி ஒரு வருடம் ஓட வைத்தவர் இப்போது குறும் படங்கள், ஆவணப் படங்கள் எடுத்து வருகிறார். ஏற்கனவே இவரது படங்கள் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றிருக்கிறது. 

இந்நிலையில் மண் பானை என்ற படத்துக்காக அமெ‌ரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மண் பானைக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார், எடிட்டிங் பி.லெனின். 

Wednesday, April 24, 2013

தலைவா படத்தின் கதை எது? குழப்பத்தில் ரசிகர்கள்!


இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் ‘தலைவா’ என்ற பெயர் ரிலீஸானதும் திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பு சூழ்ந்துகொண்டது. அரசியல் சம்மந்தப்பட்ட படமாக தலைவா இருக்குமா என்ற கேள்வியும் பலரது தலையை பிய்த்துக்கொள்ள வைத்தது. 





சில நாட்களில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன் விஜய் நிற்பது போன்ற தலைவா படத்த்ன் போஸ்டர் ரிலீஸ் ஆனதும் இது அரசியல் சம்மந்தப்பட்ட படம் தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் தலைவா திரைப்படத்தின் இயக்குனர் விஜய்யும், நடிகர் விஜய்யும் அரசியலுக்கும், இத்திரைப்படத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என அடித்துக் கூறினர். 


தலைவா அரசியல் சம்மந்தப்பட்டது இல்லையென்றால் வேறு எந்த மாதிரியான் படம் என்று பலரும் குழம்பியிருக்கும் சமயத்தில் தலைவா திரைப்படத்தின் கதை வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி தலைவா திரைப்படத்தில் “விஜய் ஒரு தமிழ் நடனக்குழுவின் தலைவனாக இருக்கிறாராம். பல நாடுகளுக்கும் சென்று ’தமிழ் பசங்க’ என்ற குரூப்பின் பெயரில் நடனமாடுவது இவர்களின் வேலையாம்” 


மேலும் தமிழ் பசங்க என்ற ஒரு பாடலும் தலைவா திரைப்படத்தில் இடம்பெறுகிறதாம். தமிழ் பசங்க பாடல் காட்சிகளை படமாக்குவதற்காகத் தான் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டிருந்த்தாம் தலைவா படக்குழு. அந்த கதையா? இந்தக் கதையா? என்ற குழப்பத்தில் தலைவா படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Monday, April 22, 2013

விஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கைவிட்டதாக புகார்

கரூரில் தன்னை கைவிட்ட காதலன் வீட்டுக்கு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகில் உள்ள தாளப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (29). தரகம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். 

விஜயகாந்த்தும் மாவத்துரையைச் சேர்ந்த பழனியப்பன் மகள் சரிதாவும்(29) காதலித்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் சரிதாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சரிதா கரூர் கலெக்டர் ஜெயந்தியிடம் நியாயம் கேட்டு மனு கொடுத்தார். 

சரிதாவின் மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் குளித்தலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விஜயகாந்த் மற்றும் சரிதா குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரிதாவை திருமணம் செய்துகொள்வதாக விஜயகாந்த் உறுதியளித்தார். 

ஆனால் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த சரிதா நேற்று முன்தினம் மாலை முதல் விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சரிதாவை சமாதானப்படுத்தினர். விஜயகாந்துக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டது என்றும், உங்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் சரிதாவிடம் தெரிவித்தனர். அதன் பிறகே அவர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்.

Sunday, April 21, 2013

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...