Sunday, February 27, 2011

தனுஷின் வேங்கை புதிய தகவல்கள்..


இந்தியாவின் தலைசிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.நாகிரெட்டியின், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பலவெற்றி படங்கள் வெளிவந்துள்ளன. பி.நாகிரெட்டியின் நல்லாசியுடன் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'வேங்கை'.  

ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த ஆக்ஷன் படம் தான் 'வேங்கை'. காதல் பாங்கான கதைகளிலே நடித்து வந்த தனுஷ், இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்க உள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்

 முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், கலாபவன்மணி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன், பொன்வண்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, ஊர்வசி, ஐஸ்வர்யா, ஜி.சீனிவாசன், 'பரவை' முனியம்மா, பயில்வான் ரங்கநாதன், நிழல்கள் ரவி, அழகு, ஜெயமணி, பெஞ்சமின் ஆகியோரும் நடிக்கின்றனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா பாடல்கள் எழுதுகின்றனர். இயக்குநர் ஹரி கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலைப்பணியைக் கவனிக்கிறார். வி.டி.விஜயன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு ராஜபாளையம் அருகில் உள்ள புளியங்குடியில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. 

படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் அந்தப் பகுதியில் அடைமழை பெய்தது. அந்த அடைமழையிலும் படப்பிடிப்பு விடாமல் நடைபெற்றது. கொட்டும் மழையில் தனுஷும், தமன்னாவும் ஒரே குடைக்குள் ஜோடியாக நடந்து செல்வது போலவும், அப்போது இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொள்வது போலவும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. 2 நிமிடம் ஓடக்கூடிய இந்தக் காட்சியில், தமன்னா தமிழில் நீளமான வசனம் பேசி நடித்தார். ஒரே 'ஷாட்'டில் அந்த காட்சி படமானது.

Saturday, February 26, 2011

சீடன் - ஒரு பார்வை


மித் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் அமித் மோகன். திருடா திருடி பட இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இதனை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தினாவின் 50-வது படம் இது. தனுஷ், அனன்யா,  கே.பாக்யராஜ், சுஹாசினி  மணிரத்னம், ஷீலா, இளவரசன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

2002-ஆம் ஆண்டில் வெளியான "நந்தனம்" என்ற மலையாள படத்தின் ரீமேக் இது. மஹாலக்ஷ்மி (அனன்யா) ஒரு அனாதை பெண்ணாக வருகிறார். அவர் பழனியில் வசிக்கும் தங்கம்(சுஹாசினி) வீட்டில் வேலைக்காரியாக வேலைக்கு சேர்கிறார். அவருக்கு யாரும் இல்லாததால், தன் கதையை தன்னை சுற்றி இருக்கும் சாமி படங்களுடன் பகிர்ந்து கொள்வார். தனக்கென முருகனால் அனுப்பி வைக்கப்படும் ஒருவான் வருவான். அவனை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வாழ்க்கையை கழிக்கிறாள். 

 இதற்கிடையில் தங்கத்தின் மகனாக (மனோ-வாக) வருகிறார் கதையின் ஹீரோ கிருஷ்ணா. இவர் வெளிநாட்டில் படிக்க செல்கிறார். ஒரு சிறிய விடுமுறைக்கு பழனிக்கு வருகிறார். விடுமுறைக்கு வரும் மனோ, மஹாலக்ஷ்மி பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுகிறார். காதலித்தும் அவர்களது காதலை தங்கத்திடம் சொல்லியும் தங்கத்தால், ஏற்று கொள்ளபடுவதில்லை.
 
உடனே மேற்படிப்பு படிக்க மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் மனோ உள்ளார். இதற்கிடையில் தான் தனுஷ் (சரவணன்) சமையல்காரராக வருகிறார். உண்மையான காதலை புரிந்து கொண்ட அவர் எப்படி அவர்களது காதலை சேர்த்து வைக்க (மாமா-வாக) பாடு படுகிறார். இறுதியில் இவர்களை எப்படி ஒன்று சேர்க்கிறார். இந்த ஜோடி ஒன்று சேர்கிறதா, இல்லையா என்பது மீதிக் கதை.

இதற்க்கு முன், நல்ல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா, ஒரு சராசரியான படத்தை வழங்கியுள்ளார். அவர் ரீமேக் செய்யாமல், சொந்தக் கதை எதையேனும் இயக்கி இருக்கலாம். இந்த அளவுக்கு பெரிய நடிகராக இருக்கும் நிலையிலும், இது போன்ற கௌரவ வேடம் ஏற்ற தனுஷை பாராட்ட வேண்டும். ஹீரோயின் அனன்யா ஓகே. இசையும் குட். போலி சாமியாராக வரும் விவேக் வருவதும் போவதும் தெரியவே இல்லை. எல்லோரையும் குறை சொல்லும் சுஹாசினிக்கு, அவரது மேக்கப் ஓவராக இருந்ததெல்லாம் தெரியவில்லையே, கவனித்துக் கொள்வாரா?

ஒட்டு மொத்தத்தில், நேரத்தை கழிக்க ஒரு நார்மல் படம்.

Thursday, February 24, 2011

மாப்பிள்ளை Vs வானம் - போட்டா போட்டி


அஜீத் – விஜய் மாதிரி இப்போது தனுஷ் – சிம்பு என்ற ஒப்பீடு தொடர்கிறது. இருவரின் படங்களும் இணைந்து வெளியாகாவிட்டாலும், அந்த ஆண்டில் அதிக வெற்றிகளை தந்தது யார் என்ற பேச்சு கிளம்பிவிடுகிறது.


இந்த முறை இருவரது படங்களும் நேரடியாகவே மோதிக் கொள்கின்றன. அதுவும் ஒரே நாளில் இரு படங்களும் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஹன்சிகா நடித்துள்ள மாப்பிள்ளை படம் சன் டிவியின் வெளியீடு. வரும் ஏப்ரல் 8-ம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியிடுகிறது.


சிம்பு, அனுஷ்கா நடித்துள்ள வானம் திரைப்படத்தை விண்ணைத்தாண்டி வருவாயாவைத் தயாரித்த கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தையும் ஏப்ரல் 8-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

உலகக் கோப்பை முடிந்த பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை என்பதாலும், இதற்குப் பிறகு தேர்தல் நெருங்குவதாலும், இந்தத் தேதியை விட்டால் நல்ல சமயம் கிடைக்காது என தயாரிப்பாளர்கள் கருதுவதால், இருவரின் படங்களையும் மோதவிடுகின்றனர்.

இந்த இரு படங்களை விட முக்கியமான ஒரு படம் இதே தேதியில் வருகிறது. அது பாலா இயக்க, ஆர்யா – விஷால் நடித்துள்ள அவன் இவன் எந்தப் படம் வெல்லும் என்று இப்போதே பெட்டிங் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில்!

Tuesday, February 22, 2011

டான் பில்லா - போட்டியில் ஷாருக், அஜித்


எண்பதுகளில் இந்தியில் அமிதாப் நடித்து வெளியான 'டான்' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. டான் படத்தை தமிழில் ரஜினியை வைத்து பில்லாவாக எடுத்தனர். தமிழிலும் படம் பிளாக்பஸ்டர். 

பல ஆண்டுகள் கழித்து, பழைய டான் படத்தை, ஷாரூக்கை வைத்து புதிதாக எடுத்தனர். படம் சூப்பர் ஹிட். தமிழில் பில்லாவை அஜீத்தை வைத்து எடுத்தனர். சரிந்து கிடந்த அஜீத் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது அந்தப் படம்.

தற்போது தல அஜீத் முன்பே 'டான் 2' படத்தில் நடிக்க ஆரம்பத்திவிட்டார் ஷாரூக் கான். தமிழிலும் அஜீத் வைத்து 'பில்லா 2' இயக்க திட்டமிட்டுருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். 'மங்காத்தா' முடிந்த பிறகு அடுத்த கட்டமாக 'பில்லா 2' வில் நடிக்கிறார் அஜீத்.  

தற்போது ரீமேக் ஆகி வரும் 'டான் 2' படத்தில் நீண்ட தலைமுடியுடன் மிக வித்தியாசமாகக் காணப்படுகிறார் ஷாரூக்கான். அவருக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா மற்றும் லாரா தத்தா நடிக்கின்றனர். பர்ஹான் அக்தர் இயக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி ஐரோப்பாவில் எடுக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் அடுத்த படத்தில் விஜய் விக்ரம் விஷால்..


இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படமான 'பொன்னியின் செல்வன்' படத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் பல நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை படக்குழு தான் தெரிவிக்க வேண்டும். நமக்கு கிடைத்த சில தகவல்கள் எல்லாம் கோலிவுட்டில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக இளைய தளபதி விஜய் நடிக்கிறாராம். அதே போல் பொன்னியின் செல்வனாக விக்ரமும், தலையாய பாத்திரமான ஆதித்த கரிகாலன் வேடத்தில் விஷாலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
நடிகர்களில் இத்தனைப் பேரையும் சந்தித்துப் பேசி, ஒரு வழியாக ஒப்புக் கொள்ள வைத்தாலும், கதாநாயகி தேர்வுதான் பெரும் சவாலாக உள்ளதாம். இது ஒருபுறம் இருக்க, இசை துறையில் இரு சிகரங்களான இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானை இந்தப் படத்தில் இணைய வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளாராம் மணிரத்னம்.

Monday, February 21, 2011

கள்ளச் சிரிப்பழகா - கதை


யூனிபே 2யூ புரொடக்ஷன் சார்பில் பி.ஜெயப்பிரகாஷ் தயாரிக்கும் படம் ‘கள்ளச் சிரிப்பழகா’. 

ஷக்தி, மேக்னா ராஜ், சந்தானம், தம்பி ராமய்யா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.ரவி. இசை, ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள், விவேகா. எழுதி இயக்கும் எஸ்.கே.ஜீவா கூறியதாவது: 75 சதவீதம் காமெடி, 25 சதவீதம் காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக இது உருவாகிறது. 

எத்தனை பிரச்னைகள் வந்தாலும், சிரித்தபடி சமாளிக்கும் இளைஞனாக ஷக்தி நடிக்கிறார். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால், பின்விளைவுகளை எதிர்பார்க்காமல் செய்வார். கல்லூரியில் அவரும், சந்தானமும் படிக்கிறார்கள். 

இவர்களின் லூட்டிகள் சொல்லி மாளாது. பல் மருத்துவக் கல்லூரி மாணவியாக வருகிறார், மேக்னா ராஜ். இரு பாடல்கள் மலேசியாவில் படமாகின்றன.

Saturday, February 19, 2011

விளம்பரங்களில் நடிப்பது முக்கியம்


சமீபகாலமாக அதிகமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார் ஜெனிலியா. இதுபற்றி அவர் கூறியதாவது: விளம்பரப் படங்கள், ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் முக்கியமானது. படங்களில் நடிகர், நடிகைகள் அந்தந்த கேரக்டராக மட்டுமே நடிக்க முடியும். 

ஆனால் விளம்பரங்களில் மட்டும்தான் இயல்பாக, எப்படி இருக்கிறோமோ அப்படி நடிக்க முடியும். அது மட்டுமில்லாமல் டி.வி விளம்பரங்களில் நடிக்கும்போது, நடிகையாக ரீச் ஆவதை விட, அதிகமான மக்களைச் சென்றடைய முடியும். எப்போதாவது ரசிகர், ரசிகைகளை சந்திக்கும்போது நான் ஏற்கும் வேடங்கள் பற்றி பேசுகிறார்கள். 

நான் கிளாமராக நடிக்காதது பற்றியும் அவர்களது கேள்வி இருக்கிறது. ஆனால், உடைகளை குறைத்தால் அதிகமாக ரீச் ஆக முடியும் என்று நம்பவில்லை. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘உருமி’ படம் முடிந்துவிட்டது. இதில் என் கேரக்டர் பேசப்படும் விதமாக இருக்கும்.

Wednesday, February 16, 2011

சென்னை பயிற்சி யுத்தம்...வலுவடையுமா இந்தியா..

சென்னையில் இன்று நடக்கும் உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.

பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய துணைக் கண்டத்தில் வரும் பிப்., 19ல் துவங்குகிறது. இதற்கு, முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பயிற்சி போட்டியில்(பகலிரவு ஆட்டம்) இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
சச்சின் வருகை:

பெங்களூருவில் நடந்த முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வீழ்த்தியது. இதனால், வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். கடந்த போட்டியில் பங்கேற்காத சச்சின், இன்று களமிறங்க வாய்ப்பு உண்டு. இவருடன் சேவக் இணைந்து அணிக்கு துவக்கம் தரலாம். காம்பிர் மூன்றாவதாக வருவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சேவக் மட்டும், அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது பெரும் ஏமாற்றமே. கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் போன்ற வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது. விராத் கோஹ்லி, யூசுப் பதான் மீண்டும் அசத்த தயாராக உள்ளனர்.
சுழல் ஜாலம்:
 முனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோர், எதிரணியின் விக்கெட் வீழ்ச்சியை துவக்கி வைக்க வேண்டும். சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். இது, ஹர்பஜன், அஷ்வின், பியுஸ் சாவ்லா அடங்கிய நமது "சுழல் கூட்டணிக்கு' உற்சாகம் அளிக்கும்.
நியூசி., சோகம்:
நியூசிலாந்தை பொறுத்தவரை சமீபத்தில் பங்கேற்ற 16 ஒருநாள் போட்டிகளில் 14ல் தோல்வியடைந்துள்ளது. உலக கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றது. இதில் சதம் அடித்த கப்டில், ரோஸ் டெய்லர், பிராங்ளின் ஆகிய "டாப் ஆர்டர்' வீரர்கள் நல்ல "பார்மில்' உள்ளனர். இவர்கள் ரன் சேர்க்க முயற்சிக்கலாம்.
வெட்டோரி பலம்:
வேகப்பந்து வீச்சாளர்கள் மில்ஸ், பென்னட், "ஆல்- ரவுண்டர்கள்' ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ் போன்றவர்கள் இருந்தும், முதல் போட்டியில் அயர்லாந்து அணி அதிக ரன்கள் (279) குவித்தது. கேப்டன் வெட்டோரி மட்டும் சுழலில் சிறப்பாக செயல்பட்டார். இம்முறை ஜான் ரைட் பயிற்சியில், நியூசிலாந்து அணி எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது.
வெற்றி யாருக்கு?
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, வெறுங்கையுடன் தாயகம் திரும்பியது. இதற்கு பழிதீர்க்க, உலக கோப்பை பயிற்சி போட்டியை பயன்படுத்தலாம். அதேநேரம், வெற்றி நடையை தொடர இந்திய அணி காத்திருப்பதால், ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

ஜாகிர் கானுக்கு ஓய்வு: தோனி
இன்றைய போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:
கடந்த போட்டியில் "மிடில் ஆர்டர்' சொதப்பியதால் தான் அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இன்று கடைசி பயிற்சி என்பதால், கடுமையாக போராட முயற்சிப்போம். அணியில் <உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் லீக் போட்டிகளின் போது, ஆடுகளத்துக்கு ஏற்ப, விளையாடும் 11 வீரர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.
ஜாகிர் கானுக்கு இடுப்பு பகுதியில் லேசான வலி தான் உள்ளது. மற்றபடி பெரிய அளவில் எதுவுமில்லை. அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதால், இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில், ஜாகிர் கானுடன் தான் களமிறங்குவோம். இன்று நாங்கள் எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணி, எந்த ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை சார்ந்து இல்லை. அணிக்கு என்ன தேவையோ, அதை அனைத்து வீரர்களும் சேர்ந்து வழங்குவர். மொத்தத்தில் நியூசிலாந்து, மிக திறமையான அணி.
இவ்வாறு தோனி கூறினார்.
நன்றி : தினமலர்

Tuesday, February 15, 2011

பரபரப்பு இல்லாமல் மும்பையில் ரஜினி..

rajnikanth
"எந்திரன்" படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் "ரானா". இதை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். கடந்த வாரம் இறுதியில் மும்பைக்கு சென்றார் ரஜினிகாந்த். தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்துடன் சென்ற இவர் மும்பையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். பின்னர், 

தனது நண்பர் டாக்டர்.முரளி மனோகர் மற்றும் அவரது மனைவி சுஜாதாவின் 25-ஆம் திருமண நாள் விழாவில் கலந்து கொண்டார். இந்த முரளி மனோகர் என்பவரும் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புகள் உடையவர் தான். ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் பிரஷாந்த் நடித்த "ஜீன்ஸ்" படத்தினை தயாரித்தது இவர்கள்தான். ஆக்கர் புரடக்சன் மற்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின்  தயாரிப்பில் முரளி மனோகரும் பங்குகொள்ளப் போகிறார்.

வழக்கமாக பாலிவுட்டில் ஒரு வினோதமான வழக்கம் உள்ளது. சினிமா சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தாங்கள் மேர்கொள்ளும் பயணங்களின் போதெல்லாம், போகும் இடத்தில் எல்ல்லாம் பப்ளிசிட்டி செயய்துக் கொள்வார்கள் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள். ஆனால் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் நடிக்கும் "ரானா" படத்தின் நடிகர்கள், மற்றும் நடிகையர்களின் இறுதிகட்ட தேர்வு செய்யபோகும் போது கூட, எந்த ஒரு பப்ளிசிட்டியும் செய்து கொள்ளாமல் அமைதியாக சென்று வந்திருக்கிறார். அவரது செய்தி தொடர்பாளர் (அப்படி ரஜினிக்கு யாரவது உள்ளார்களா, என்று நினைக்கும் அளவுக்கு ரஜினிகாந்த் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்), புகைப்படம் எடுக்க கூட யாருக்கும் தகவல் வழங்கவில்லை. அந்த அளவிற்கு எளிமையானவர் நமது ரஜினிகாந்த்.

இனி இப்படி ஒரு வேடம் கிடைக்காது..


மித் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமித் மோகன் தயாரிக்கும் படம், ‘சீடன்’. தனுஷ், கிருஷ்ணா, அனன்யா நடிக்கின்றனர். சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். ‘சீடன்’ படத்தை பார்த்த அனன்யா, இயக்குனர் சுப்ரமணியம் சிவாவின் காலை தொட்டு வாழ்த்துபெற்றபடி ‘இனிமேல் இப்படியொரு வேடம் கிடைக்குமான்னு தெரியாது’ என்றாராம்.

இப்படத்தில் நடித்தது குறித்து, நிருபர்களிடம் தனுஷ் கூறியதாவது: இப்படத்தை பெண்களுக்கு குறிப்பாக, என் அம்மா, மனைவி ஐஸ்வர்யா, லதாம்மா போன்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். அனைவரையும் கவரும் வகையில் ஒவ்வொரு காட்சியும் ஜனரஞ்சமாக இருக்கும். இவ்வாறு தனுஷ் கூறினார்.

என்னை நயன்தாராவோடு ஒப்பிடாதீங்க


‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் ஹீரோயின் மேக்னா கூறியது: நயன்தாராபோல இருப்பதாக என்னை அவரோடு ஒப்பிட்டு பலர் கூறுகின்றனர். அவர் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அது உற்சாகம் அளித்தாலும் என் நடிப்பு ஸ்டைலும், அவர் ஸ்டைலும் வேறுவேறுதான். எனது நடிப்பில் எனது இயக்குனர்கள் திருப்தி அடைகிறார்கள். யாராலும் யார் இடத்தையும் நிரப்பிவிட முடியாது. 

தற்போது ‘கள்ள சிரிப்பழகா’ படத்தில் நடிக்கிறேன். சக்தி ஹீரோ. மெடிகல் காலேஜ் மாணவி வேடம் ஏற்கிறேன். இப்படத்தை நகைச்சுவை மிகுந்த ஸ்கிரிப்டாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜீவா. காமெடி காட்சிகளில் சூழலுக்கு ஏற்ப பேசி அசத்துகிறார் சக்தி. அவருக்கு ஈடுகொடுக்க நானும் முயற்சி எடுத்து நடிக்கிறேன். 

தொடர்ந்து நந்தா நந்திதா, காதல் வேதம், உயர் திரு 420 ஆகிய படங்களில் நடிக்கிறேன்.

Monday, February 14, 2011

வதந்திகளை தாங்கிக் கொண்டேன்


பட வாய்ப்பு குறைந்தால் உடனே கல்யாணம் என்று கதை கட்ட தொடங்கிவிடுகிறார்கள். அந்த வதந்திகளையெல்லாம் தாங்கிக் கொண்டேன். 

தமிழில் "அசல்" படத்துக்கு பிறகு நடிக்கவில்லை. அதற்காக கோலிவுட் மீது எனக்கு எந்த புகாரும் இல்லை. அதே நேரம் தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு காலம் வரும். ஏற்கனவே கன்னடத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. கன்னடம் தெரியாததால் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். புனித் ஹீரோவாக நடிக்கும் 'ஜாக்கி" யில் கேட்டபோது ஒப்புக்கொண்டேன். 

பெரிய நடிகர் என்பதோடு கதையும் நன்றாக இருந்தது. அங்குள்ள ரசிகர்கள் ரசனை பற்றி தெரியாததால் படம் ஹிட்டாகுமா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படம் பெரிய ஹிட்டாகிவிட்டது. 2010ம் ஆண்டு மலையாளத்தில் 3 படங்களில் நடித்தேன். நன்றாக ஒடியது. கன்னடத்தில் சுதீப் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கினேன். அவர் எடுக்கும் சொந்த படம் முடியாததால் இப்படம் தள்ளிப்போனது. பிரியதர்ஷன் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருந்ததால் சுதீப் படத்தில் நடிக்க முடியவில்லை. 

ஒரு கல்லூரி வளாகத்துக்குள் நடக்கும் கதையை பிரியதர்ஷன் என்னிடம் சொன்னபோது பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். இதன் ஷூட்டிங் முழுவதும் துபாயில் நடக்க உள்ளது.

இவ்வாறு பாவனா கூறினார்

Saturday, February 12, 2011

சில்க் ஸ்மிதா படத்தில் ரஜினி கதாபாத்திரம்


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினியாக நடிக்கிறார் பாலிவுட்டின் பிரபல நடிகர் நஸ்ருதீன் ஷா.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் எண்பதுகளில் கவர்ச்சிப் புயலாக வந்தவர் சில்க். வெறும் கவர்ச்தசி நடிகை என்பதையும் தாண்டி, ஒரு அழுத்தமான நடிகையாகவும் தன்னை நிரூபித்தவர். இன்றுவரை அவருக்கு நிகரான நடிகையைப் பார்ப்பது அரிதாகவே உள்ளது.

சில்க் ஸ்மிதா சென்னை வானொலிக்கு அளித்த பேட்டியில் (அவரது ஒரே மீடியா பேட்டி) தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று குறிப்பிட்டது ஒருவரைத்தான். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி படங்களிலும் தொடர்ந்து சில்க் ஸ்மிதா இடம்பெற்றிருந்தார். அன்றைய காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான ரஜினி படங்களில் 
 அவர் இடம்பெற்றிருந்தார். மூன்று முகம், பாயும் புலி, தங்க மகன், முரட்டுக் காளை, அடுத்தவாரிசு, தாய் வீடு, துடிக்கும் கரங்கள் போன்ற பல ரஜினி படங்களில் சில்க் ஸ்மிதாவின் நடிப்பு பேசப்பட்டன. அடுத்த வாரிசு படத்தில் ரஜினியின் ஜோடிகளில் ஒருவர் சில்க்தான்.

1996-ல் சாலிகிராமத்தில் தனது குடியிருப்பில் மர்மமாக இறந்து கிடந்தார் சில்க் ஸ்மிதா.

காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை இந்தியில் சினிமா படமாக தயாராகிறது. மிலன் லுத்ரியா இயக்குகிறார். ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தி டர்ட்டி பிக்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது!

சில்க் ஸ்மிதாவின் உறவினர்கள் நண்பர்களிடம் கேட்டும் அவர் வாழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்தும் திரைக்கதை உருவாக்கியுள்ளார். சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.

சில்க் ஸ்மிதாவுக்குப் பிடித்த நடிகரான ரஜினி வேடத்தில் நடிக்க நஸ்ருதீன்ஷாவை இயக்குனர் தேர்வு செய்துள்ளார்.

இதுபற்றி நஸ்ருதீன் கூறும்போது, ரஜினி, சில்க் ஸ்மிதா நடித்த படங்களின் சி.டி.யை இயக்குனர் எனக்கு அனுப்பி வைத்தார். ரஜினி நடித்த எந்திரன் படத்தையும் பார்க்க உள்ளேன். அதன் பிறகு ரஜினி போல் நடிப்பேன் என்றார்.

ரஜினியைப் போன்ற உடைகள் நஸ்ருதீனுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரஜினியின் மேனரிஸங்கள் குறித்த காட்சிகளின் தொகுப்பும் அவருக்குத் தரப்பட்டுள்ளன.

இந்தப் படம் வெளியானால் பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பலாம் என பேசப்படுகிறது.

ரஜினி, விஜய்யுடன் நடிக்க ஆசை


தமிழ் சினிமா உட்பட அனைத்து மாநில கதாநாயகிகளும் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளும் சமீரா ரெட்டிக்கும் இருக்கு என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. 

வாரணம் ஆயிரம், படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சமீரா ரெட்டி. அசல் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தார். இப்போது கவுதம் மேனன் இயக்கியுள்ள 'நடுநிசி நாய்கள்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இப்படம் பிப் 18-ம் தேதி வெளியாகிறது. தமிழ்ப் பட அனுபவங்கள் பற்றி சென்னையில் சமீரா ரெட்டி நேற்று அளித்த பேட்டியில் நான் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகை, அவர்களது படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என்று கூறினார்.

உறுமி படத்தில் நான் நடிக்கவில்லை


சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகும் படம் 'உருமி'. 

படத்தில் தபு, ‌‌ப்ருத்விரா‌ஜ், ஜெனிலியா, பிரபுதேவா, வித்யாபாலன் ஆகியோர் நடித்துள்ளனர். பதினைந்தாம் நூற்றாண்டு பின்னணியில் வாஸ்கோடகாமாவின் கதையை எடுத்து வருகிறார் சந்தோஷ் சிவன். 

இந்த படத்தில் கெஸ்ட் ரோலாக விக்ரம் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிஸியாக இருப்பதால் அவருக்குப் பதில் ஆர்யா நடிப்பார் என கூறப்பட்டது. 

ஆனால் இதனை ஆர்யா மறுத்துள்ளார். சந்தோஷ் சிவனின் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் உறுமியில் நான் நடிக்கவில்லை என்று தெ‌ரிவித்துள்ளார்.

Friday, February 11, 2011

நடிகர் பட்டாளம் - குழப்பத்தில் மங்காத்தா, நண்பன்


நண்பன் படத்தில் ஏற்கெனவே விஜய், ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.

இப்போது ஐந்தாவதாக ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அஸ்தி கரைக்கும் ஒரு பாத்திரத்தில் அவர் வருகிறாராம். இந்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இதுபோலத்தான் மங்காத்தாவில் அஜித், அர்ஜுனில் ஆரம்பித்து அஞ்சலி வரை வந்திருக்கிறது மங்காத்தாவில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரையும் யாருக்குமே தெரியாத புதிராகவே இருக்கிறது.

இலியானா, அனுயா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.

Wednesday, February 9, 2011

ரஜினியை பற்றி அவதூறு வசனம்..சென்சாரில் கட்


ஆன்ட்டிகளை எப்படி மடக்கலாம் என்று கேள்வி எழுப்பி, அந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல் பெயர்களை இழுத்து சிறுமைப்படுத்தியுள்ளாராம் பிரபல தயாரிப்பாளரான எஸ்பிபி சரண்.

இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆரண்ய காண்டம். மூன்றாம் தர மலையாளப் பட ரேஞ்சுக்கு இதில் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளனவாம்.

இந்த படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

52 காட்சிகளை வெட்டி நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர் தணிக்கை குழுவினர். குறிப்பாக ரஜினி, கமலை விமர்சிக்கும் வசனங்கள் அதிகமிருந்ததால், அனைத்தையும் நீக்கினார்களாம்.

இதுபற்றி தணிக்கை அதிகாரி பழனிச்சாமி கூறும்போது, “ஆரண்ய காண்டம் படத்தில் ரஜினி, கமலை சிறுமைப்படுத்தும் காட்சிகள் உள்ளன.
‘ஆன்ட்டிகளை மடக்குவது எப்படி?’ என்று இளைஞர்கள் பேசுவது போன்று ஒரு காட்சி.

இதற்கு ஒருவன் இப்படி ஐடியா கொடுக்கிறான்: ‘கமல் பிடிக்குமா? ரஜினி பிடிக்குமா? என்று ஆன்ட்டிகளிடம் கேள். கமல் பிடிக்கும் என்றால் கிஸ் கொடுத்து ஈஸியா மடக்கிவிடலாம். ரஜினி பிடிக்கும் என்றால் அந்த பெண்மணி வேறுமாதிரி மடக்க வேண்டும்’ என்று விளக்கம் சொல்வது போன்று வசனங்கள் இருந்தன. அவற்றை நீக்கி விட்டோம்,” என்றார்.

இதில் ஜாக்கி ஷெராப் ராயபுரம் தாதாவாக நடித்துள்ளார். அவரது நிர்வாண காட்சிகள், ஆபாசமான மசாஜ் சீன்கள் போன்றவைகளும் படத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.

இவைகளையும் தணிக்கை குழு நீக்கியுள்ளது. தணிக்கை குழு நடவடிக்கைக்கு எஸ்.பி.பி. சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தை டிரிபியூனலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒருவேளை விளம்பர உத்தியின் ஒரு பகுதியாக இந்த வேலையைச் செய்திருப்பாரோ எஸ்.பி.பி. சரண்.

செக் மோசடி படத்தில் நடிக்க நடிகைக்கு தடை

 
யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். இருமொழிகளிலும் இவருக்கு நிறைய இளம் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது “அழகர்சாமியின் குதிரை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் சரண்யா மோகன் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
மலையாள பட உலகை சேர்ந்த ஒருவருக்கு சரண்யா மோகன் குறிப்பிட்ட தொகைக்கு செக் கொடுத்து இருந்தாராம். அதை பாங்கியில் போட்ட போது பணம் கொடுக்க வேண்டாம் என பாங்கியில் சொல்லி “ஸ்டாப் பேமண்ட்” கொடுத்து விட்டாராம்.
 
இதனால் ஆத்திரமான அவர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து அதன் மூலம் நடிக்கத் தடை விதிக்கப்பட்டது என்கின்றனர். தற்போது சமரச பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தடை நீக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது

Tuesday, February 8, 2011

செல்வராகவன் படத்தில் கமல்


"ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு பிறகு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த படங்களை எல்லாம் நிறுத்தி விட்டு, தன் தம்பி தனுஷை வைத்து 'இரண்டாம் உலகம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 

'இரண்டாம் உலகம்' படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இதற்காக கமலிடம் கதை ஒன்றை கூறியுள்ளார் செல்வராகன். மேலும் செல்வராகவன் எழுதிய கதையின் ஒரு வரியை கேட்ட கமல், கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார். 

இதில் தீவிரவாதி வேடம் ஏற்கிறார் கமல். படத்தின் பெயர் மற்றும் ஷூட்டிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

பிற மொழியில் நடிப்பது தவறில்லை


'களவாணி' ஓவியா கூறியது: கன்னடம், தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘களவாணி'. அதிலும் நானே நடிக்கிறேன். இயக்குனர் சற்குணம் எனக்கு கொடுத்த வாய்ப்புதான் இது. கன்னட ரீமேக்கில் மற்றொரு பாடல் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் தொடங்கியது. 

தெலுங்கு பட ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது. எனது நடிப்பை மெருகேற்ற இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘மன்மதன் அம்புÕ படத்தில் எனது காட்சிகள் எடிட் செய்யப்பட்டு ஒன்றிரண்டு சீன் மட்டுமே தியேட்டரில் பார்த்தபோது அப்செட் ஆனேன். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக என் காட்சிகள் எடிட்டிங் செய்யப்பட்டது பற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சொன்னபோதுதான் உண்மை தெரிந்தது. கமல் ஹீரோ. ரவிகுமார் டைரக்ஷன், மாதவனின் முறைப்பெண் என்று சொன்னபோது அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. இதற்கிடையில் ராசு மதுரவன் இயக்கத்தில் ‘முத்துக்கு முத்தாகÕ படத்தில் நடிக்கிறேன். இதுவொரு மாறுபட்ட திரைக்கதையை கொண்டது. குழந்தைகள், பெற்றோர்களுக்கு இடைப்பட்ட சம்பவங்கள்தான் முக்கிய கரு. 

பிறமொழி படங்களில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். அதில் என்ன தவறு? நல்ல வாய்ப்புகள் வரும்போது மொழி ஒரு பிரச்னை இல்லை. கன்னடத்தில் நடிப்பதால் அம்மொழியை கற்று வருகிறேன்.

Monday, February 7, 2011

விஜய் பக்கம் திரும்பும் பெரிய இயக்குனர்கள்!


இந்த ஆண்டு தொடக்கத்தில் காவலன் ஏற்படுத்திய பரபரப்பும், வெளியாவதில் இருந்த சிக்கலும், விஜய் ரசிகர்கள் மத்தியில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது
இளைய தளபதி விஜய் கலத்தில் இறங்கி இந்த ஆண்டை சிறப்பாக தொடங்க வழிசெய்துதார்.  இந்த ஆண்டு வெளிவந்த அவரது படமான் காவலன் மிகப் பெரிய ஹிட்டானது. 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜய், ஷங்கர் மற்றும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது என்று கூறினார். 

இதனையடுத்து அவர் எதர்பார்த்தபடி ஷங்கரின் 'நண்பன்' படத்தில் நடிக்கிறார் விஜய், தொடர்ந்து ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய், - விக்ரம் மற்றும்- விஷாலலுடன் (வி3!) இணைந்து நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது, 

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காதலர் தினத்தில் பெட்ரோல் போடாதிங்க - கமல்


ஓட்டுக்களைச் சேர்ப்பதை விட மனிதர்களைச் சேர்ப்பதுதான் இன்றைக்கு முக்கியம், என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

மேலும் பெட்ரோலைச் சேமிக்கவும், பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தவும் பிப்ரவரி 14-ம் தேதி பெட்ரோல் போடாமல் இருப்போம், என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18- க்கு விற்கப்படுகிறது. நம் நாட்டில் பெட்ரோல் விலை 64 ரூபாய் ஆகும். பெட்ரோல் விலையை குறைக்க அரசியல் கட்சிகள் என்ன முயற்சி எடுக்கின்றன என்பதை விட நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம். இதை 'சோசியல் மெசேஜ்' என்று சொல்வார்கள்.

அரசியல் அமைப்புகளை விட தனி மனிதர்களுக்கு அதிக பலம் இருக்கிறது. நாம் எல்லோரும் ஒருநாள் பெட்ரோலே போடாவிட்டால் பிரச்சினை ஓரளவுக்கு சரியாகிவிடுமே. இதற்கான நாள் பிப்ரவரி 14-ந்தேதி என்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கடைப்பிடித்துதான் பார்ப்போமே... அதற்காக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நான் எதிரி கிடையாது. நாம் இதுபோன்ற பணிகளைச் செய்தால் போதும்.

அதற்கு மேல் போகத்தேவையில்லை. நாம் எந்த கட்சியை சார்ந்தவர்களும் கிடையாது. நம்மால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். மற்றவர்களை குறை சொல்லக்கூடியவர்கள் அல்ல நாம். எதையும் பகுத்தறிந்து, பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நாட்டுக்கு பயன்படக்கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டும்..." என்றார்.

இந்த புதிய இளைஞர் அமைப்பில் ஏராளமான கல்லூரி மாணவ- மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். விழா முடிவடைந்த பிறகு கமலுடன் ரசிகர்கள் ஒவ்வொருவராக போட்டோ எடுத்துக்கொண்டனர்.

Friday, February 4, 2011

தூங்காநகரம் - படவிமர்சனம்படத்தின் கதை :

அருகில் உள்ள நகரங்கலான விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், ஊசிலம்பட்டி-ன்னு நாலு இடத்தில் இருந்து  மாநகர் மதுரைக்கு பிழைக்க வற்றாங்க ஒரு நாலு பேர்... அவங்கதான் (களவாணி விமல், நாடோடிகள் பரணி, நிஷாந்த், டைரக்டர் கௌரவ்) இந்த நாலு பேர் பிரண்ட்ஸ் ஆகராங்க..   குடித்து விட்டு நண்பர்களாகும் இவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தங்களுடைய நட்பை வலுப்படுத்தி கொள்கிறார்கள்... பரணி மனைவியின் சீமந்தம் செய்ய பணத்திற்காக வழுக்கு மரத்தில் ஏறி பணம் ‌ஜெயிக்கிற சீன் மற்றும் பாடல் அருமை...

ஒரு சமூக விரோத கும்பல் துணிக்டையில் உடை மாற்றுகிற ‌பெண்களை ஒளிந்திருந்து செல் போனில் படம் எடுத்து மிரட்டுராங்க... 

நாயகனுக்கு ‌தெரிந்த ஒரு கோயில் பூசாரியின் பெண்ணுக்கு இந்த நிலமை பாரில் ஐய்யர் கண்ணீர் வடிப்பதை பார்த்து அவருக்கு உதவ விமல் வில்லனை போட்டு புரட்டி எடுக்கிறார் கோவத்தில் கல்லை போட்டு அவருடைய கண்னை குருடாக்கிவிடுகிறார்...  ஆந்திரம் அடைந்த வில்லன் ஆட்கள் இந்த நாலு பேரையும் தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்கள்.. 

திரிஷா... என்ற அடை மொழியுடன் வரும்  அங்காடித் தெரு.. அஞ்சலி படத்தில் மதுரை உள்ளுர் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பந்தா பண்ணி விமலுடன் காதல்.. பின் கதையில் இவர்கள் ஒரே ஊர் சின்ன வயசு பழகும் கலைவாணியை இவள் என்று தெரிந்தவுடன் திருமணம் வரை கொண்டு சென்று விடுகிறார் இயக்குனர்..

ஒன்றாக வேலை பார்த்து விட்டு வைகை பாரில் குடித்து விட்டு ஜாலியா இருக்கும் இவர்கள் வில்லனை அடித்த பிறகு அவரவர் ஊர்களுக்கு சென்று  விடுகின்றனர்.

இவர்களை கண்டுபிடித்த வில்லன்கள்... திருமணத்தில் இருக்கும் விமலை கொல்ல மற்ற மூவரையும் விமலை கொலை செய்ய அனுப்பி வைக்கிறது.. அப்படி செய்ய வில்லையென்றால் அவரவர் குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டி பணியவைக்கிறது...


விமலின் திருமணத்திற்கு ‌செல்லும் நண்பர்கள் தன் நண்பனை கொலை செய்ய தனிதனியே முயல்கிறார்கள்... பின்பு மமூவரும் இதற்குதான் வந்தது தெரிய மூவரும் இணைந்து முயல்கிறார்கள்...


முதல் காட்சியில் நால்வரில் ஒருவரை கொன்று எரித்து விடுவது போல் காட்சிகள் நிழல்படத்தில் காட்டப்படுகிறது... அப்படியானால் இந்த நால்வரில் யார் இறப்பது... என்ற படபடப்பு பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது..

நண்பர்கள் மூவரும் விமலை கொல்ல முயற்சித்து தன் நண்பன் என்று மனதுரும் காட்சிகள் நட்பின் இலக்கணததிற்கு புது மரிமாணம்...

இறுதியில் இவர் விமலை கொன்றார்களா..  அல்லது நண்பனுக்காக மனம் மாறினார்களா... என்பதை விருவிருப்பு திகில் என் முடித்திருக்கிற படம் தான் தூங்கா நகரம்.

இந்த நான்கு போரும் மதுரையை சுத்தி தன் வேலையை பார்க்கும் போதும் பாரில் (வைகை பார் அதற்கு பிறந்தநாள் விழா வேறு) குடித்து விட்டு கலாய்க்கும் போதும்... படம் கலகலபாகவும் சிங்கம்புலியின் காமெடியுடன் நகர்கிறது..
வில்லன் அனைவரும் புதுமுகங்கள்  படத்தில் சரியான இடத்தில் சரியான பாடல்களுடன் படம் நகருது... மதுரையில் நடக்கிற அந்தனை விஷயங்களுடன் மதுரையை சுத்தி.. சுத்தி காட்டியிருக்கிறார் டைரக்டர்..

நீ.. சிரிச்சா கொண்டாட்டம்...  பாடல் சரியான கலக்கல் தியாட்டரை ஆடவைக்கிறது.. ஞான கரவேல் அவர்கள் எழுதிய  எட்டு கண்களுக்குள் ஒற்றை பார்வை என்ற பாடல் அருமை படம் முழுக்க இசையால் ஆட்சி செய்திருக்கிறார் சுந்தர் சி. பாபு..

நாலு நண்பர்களுள்  ஈவுஇரக்கம் அற்ற நண்பராக, பிணத்தை எரிக்கும் வேலையில் இருக்கும் இயக்குளர் கௌரவ், தனக்கு விபத்து ஏற்படும் போது தன்னுடைய நண்பர்கள் உதவுவதை பார்த்து மனம் மாரி நட்புக்காக உறுகி நடிப்பிலும் ஜெயித்திருக்கிறார்.. 


வடிவேலு.. படத்தின் ஆரம்பத்திலே தன்னோட குரல்ல கதையை விளக்குறாரு... படம் முழுக்க இசை, ஒளிப்பதிவு,  எடிட்டிங், என ‌அத்தனையும் பாரட்டும் படி இருக்கிறது...  

பாடல்கள் சூப்பர்....


படத்தில் அதிக புது முகங்கள் தன் பங்குக்கு தன்னுடைய வேலையை செய்திருக்கிறார்கள்...
 

மொத்தத்தில் தூங்காநகரம்.. மக்கள் மத்தில் பேசப்படும்

விமர்சம் சரியா...  இல்லையா... ன்னு எனக்கு தெரியாது ஏதோ என் அறிவுக்கு கொடுத்திருக்கிறன்... நன்றாக இருந்தால் வெளிப்படையாக ‌வாழ்த்துங்க.. சரியில்லையா.. மறைமுகமா திட்டுங்க... நன்றி வணக்கம்..

நான் ஹீரோ இல்லை - தனுஷ்


சீடன் படத்தின் விளம்பரங்களின் முழுக்க தனுஷே நிரம்பியிருந்தாலும், இப்படத்தின் ஹீரோ அவர் இல்லை என்பதுதான் உண்மை. இதை இன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற சீடன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கொஞ்சம் விளாவரியாகவே நமக்கு கூறினார் தனுஷ்.

"இந்த படத்தின் முதல் நாள் அன்று என்னுடைய உதவியாளர் "சார் ஹீரோ வந்துட்டாரு என்று என்னிடம் கூறினான்" எனக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை. சிறிது நொடிகளுக்குப் பிறகுதான் புரிந்தது இந்த படத்தின் ஹீரோ நான் இல்லை என்பது. இந்த படத்தின் ஹீரோ புதுமுகம் கிருஷ்ணாதான். இதில் நான் ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருக்கேன். அதுக்காக அது சிறிய வேடமும் இல்லை. 21 நாட்கள் நான் இந்த படத்திற்காக டேட் கொடுத்தேன் அந்த அளவுக்கு அந்த ரோலை மெருகேற்றியிருக்கிறார் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா.

என் வாழ்வில் மிக முக்கியமான பெண்களான எனது அம்மா, என் மனைவி, லதா அம்மா, என் சகோதரிகள் ஆகியோருக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்." என்றார் தனுஷ்.

இந்த படத்தில் தனுஷ் சமையல்காரராக நடித்திருக்கிறார். அதற்காக வீட்ல சமையல் வேலைகளை செய்து பயிற்சியெல்லாம் எடுத்தாராம். அதுபோல ஹீரோயின் அனன்யாவும், மலையாள 'நந்தனம்' படத்தின் பாடலை பாடி பள்ளியில் பரிசு பெற்றாராம். இப்போது அதே படத்தின் தமிழ் பதிப்பில் ஹீரோயினாக நடிப்பதால் பெரும் மகிழ்ச்சியாம் அவருக்கு. பள்ளியில் மட்டுமல்லாமல், இப்போது நிஜமாகவே மக்களிடமும் பரிசு பெறும் அளவிற்கு படத்தின் க்ளைமாக்ஸ் பாடல் காட்சியில் நடித்திருக்கிறாராம் அவர்.

அந்த பாடலை பார்க்கும்போது ரசிகர்கள் கண்டிப்பாக அழுவார்கள். அந்த அளவிற்கு அனன்யாவின் நடிப்பு இருக்கிறது. அப்படி ரசிகர்கள் கண்களில் கண்ணீர் வந்தால் அது எனக்கு கிடைத்த வெற்றியாக நான் எடுத்துகொள்வேன். என்றார் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா.

Thursday, February 3, 2011

‘ரோபோ 2′ ஆரம்பம்


ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ 2 எனும் பெயரில் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

எந்திரனை உருவாக்கிய அதே டீம் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்வதாகவும், சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது இணையதளத்தில் ரசிகர் கேள்விக்கு பதிலளிக்கையில், “ரோபோவின் இரண்டாம் பாகம் குறித்து நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பார்க்கலாம்” என்று பதிலளித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, ரஜினி – ஷங்கர் எப்போது சொன்னாலும் நாங்கள் தயாரிக்க தயாராகவே உள்ளோம் என்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தான் தயாராக இருப்பதாக ரஜினி ஏற்கெனவே கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
 
இப்போது நண்பன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஷங்கர். வழக்கமாக அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தும் ஷங்கர், இந்தப் படத்தை குறுகிய காலத்தில் உருவாக்கித் தரவிருக்கிறார். நண்பன் முடிந்ததும் ‘ரோபோ 2′ வேலைகளைத் தொடங்குவார் என்கிறார்கள்

Wednesday, February 2, 2011

'அழகர்சாமியின் குதிரை' கதை


இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கிகொண்டிருக்கும் 'அழகர்சாமியின் குதிரை' படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

தேனி அருகே உள்ள மல்லையாபுரம் கிராம மக்கள், ஊர் திருவிழா நடந்தால் தான் ஊரில் மழை பெய்யும் என நம்புகிறார்கள். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருவிழா நடைபெறும் நேரத்தில் சாமியின் வாகனமான மரத்தினால் செய்த குதிரை வாகனம் காணாமல் போய்விடுகிறது.

அதே நேரத்தில் பெரியகுளம் அருகே உள்ள அகமலை என்னும் மலைகிராமத்தில் குதிரையில் பொதியேத்தி பிழைக்கும் அழகர்சாமி தன் திருமணம் நெருங்கும் நேரத்தில் குதிரை காணாமல் போய்விடுகிறது. குதிரை கிடைத்தால்தான் தன் திருமணம் என்னும் சூழ்நிலையில் தன் குதிரையை தேடி புறப்படுகிறான்.

மரக்குதிரை கிடைத்து கிராமமக்களின் திருவிழா நடந்ததா? இல்லையா?

நிஜக்குதிரை கிடைத்து அழகர்சாமியின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

இதில் அழகர்சாமியாக சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்த அப்புகுட்டி நடிக்க, அவருக்கு ஜோடியாக சரண்யா மோகன் நடிக்கிறார்.

Tuesday, February 1, 2011

விஜயின் - நண்பன்...


விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.
 
இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.

படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. பாடல்கள்: நா முத்துக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: 
ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர்.

ஹீரோ விஜய், ஹீரோயின் இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர்.

இயக்குநர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். சிவா மனசுல சக்தி நாயகி அனுயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!
இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாண்டியன் படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...