Friday, December 30, 2011

2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!


2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. 

2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது. 

இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. 

ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!

ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.

இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. மங்காத்தா

அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது. 

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம். 

2. காஞ்சனா

சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார். 

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா!

3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.

3. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது. 

அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. கோ

ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள். 

படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா. 

5. தெய்வத் திருமகள்

விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.

விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா. 

6. 7ஆம் அறிவு

இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது. 

படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.

7. வேலாயுதம்

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல். 

8. அவன் இவன்

இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது!

விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்!

9. காவலன்

விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன். சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் 'நடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது!

10. ஆடுகளம்

தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்!!). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!

Tuesday, December 27, 2011

2011-ல் வெளிவந்த தமிழ்படங்கள் பட்டியல்



2011 -ல் நேரடியாகவும், மொழிமாற்று படங்களாகவும் 165 திரைப்படங்கள் வெளிவந்தன.

2011 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
  1. கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
  2. தம்பி வெட்டோத்தி சுந்தரம்
  3. வித்தகன்
  4. கருவறைப் பூக்கள்
  5. மயக்கம் என்ன
  6. நா சிவனாகிறேன்
  7. மருதவேலு
  8. காதலர்கதை
  9. ஒத்திகை
  10. பாலை
  11. தமிழ்தேசம்
  12. சிவப்பு சாமி
  13. சொல்லித்தரவா
  14. தெய்வத் திருமகள்
  15. போட்டாபோட்டி
  16. வேங்கை
  17. ஆடுகளம்
  18. ஆடு புலி
  19. அழகர்சாமியின் குதிரை
  20. அவன் இவன்
  21. காவலன்
  22. கண்டேன்
  23. நஞ்சுபுரம்
  24. சீடன்
  25. புலிவேசம்
  26. பதினாறு
  27. பொன்னர் சங்கர்
  28. மங்காத்தா
  29. சிறுத்தை
  30. சிங்கம் புலி
  31. வானம்
  32. வெப்பம்
  33. இளைஞன்
  34. வாடா போடா நண்பர்கள்
  35. யுத்தம் செய்
  36. தூங்கா நகரம்
  37. பயணம்
  38. நந்தி
  39. வர்மம்
  40. தம்பிக்கோட்டை
  41. இது காதல் உதிரும் காலம்
  42. காதலர் குடியிருப்பு
  43. தப்பு
  44. நடுநிசி நாய்கள்
  45. ஆரானின் காவல்
  46. மார்கழி 16
  47. அன்வர்
  48. அய்யன்
  49. பவாநி ஜ. பி. எஸ்
  50. ஜவர்
  51. முத்துக்கு முத்தாக
  52. அவர்களும் இவர்களும்
  53. மின்சாரம்
  54. லத்திகா
  55. படைசூழ
  56. குள்ளநரிக்கூட்டம்
  57. சிங்கையில் குருஷேத்திரம்
  58. சட்டப்படி குற்றம்
  59. குமரா
  60. அப்பாவி
  61. தென்காசி பக்கத்துல
  62. மாப்பிள்ள
  63. விகடகவி
  64. கோ
  65. காதல் மெய்பட
  66. பூவா தலையா
  67. மாப்பிள்ளை
  68. எங்கேயும் காதல்
  69. பாசக்கார நண்பர்கள்
  70. அழகர்சாமியின் குதிரை
  71. இவன் சத்திரியன்
  72. நர்த்தகி
  73. இதயத்தில் ஒருவன்
  74. சுட்டும் விழி சுடரே
  75. கண்டேன்
  76. மாவீரன்
  77. சபாஷ் சரியான போட்டி
  78. மைதானம்
  79. எத்தன்
  80. ஆண்மை தவறேல்
  81. ஒரு சந்திப்பில்
  82. ஆரண்ய காண்டம்
  83. ஆசை படுகிறேன்
  84. சாந்தி
  85. எதிர்மறை
  86. அவன் இவன்
  87. உதயன்
  88. பிள்ளையார் தெரு கடைசி வீடு
  89. 180
  90. தேநீர் விடுதி
  91. அரும்பு மீசை குறும்புப் பார்வை
  92. கருங்காலி
  93. காஞ்சனா
  94. போடிநாயக்கனூர் கணேஷன்
  95. வெப்பம்
  96. மார்க்கண்டேயன்
  97. சிங்கக்கோட்டை
  98. ராமநாதபுரம்
  99. போட்டாபோட்டி
  100. டூ
  101. சகாக்கள்
  102. சங்கரன் கோவில்
  103. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
  104. உயர்திரு 420
  105. சுசி அப்படித்தான்
  106. நானே என்னுள் இல்லை
  107. ரௌத்திரம்
  108. திருமங்கலம் பேருந்து நிலையம்
  109. பரிமலா திரையரங்கம்
  110. முதல் இடம்
  111. எந் உள்ளம் உன்னைத் தேடுதே
  112. வெங்காயம்
  113. மிட்டாய்
  114. மெய்யல்ல பொய்யல்ல
  115. கல்லூளி மங்கன்
  116. மெய்யல்ல பொய்யல்ல
  117. யுவன் யுவதி
  118. அகராதி
  119. மங்காத்தா
  120. மாசி
  121. புலிவேஷம்
  122. காவல்துறை
  123. அம்மு கொலை வழக்கு
  124. மேதை
  125. உன் வசமானேன்
  126. ஆயுதப் போராட்டம்
  127. மதிகெட்டான் சாலை
  128. பத்ரா
  129. காசேதான் கடவுளடா
  130. இளவரசி
  131. சே. கூடலூர்
  132. எங்கேயும் எப்போதும்
  133. வந்தான் வென்றான்
  134. நாம் ஒருவர்
  135. ஆயிரம் விளக்கு
  136. அடுத்தது
  137. வெடி
  138. முரண்
  139. வேலூர் மாவட்டம்
  140. ரா ரா
  141. வருடங்கள் 20
  142. வர்ணம்
  143. உயிரின் எடை 21 கிராம்
  144. கீழ்த்தெரு கிச்சா
  145. காதல் அல்ல அதையும் தாண்டி
  146. அன்புள்ள கமல்
  147. மை
  148. காதல் கொண்ட மனசு
  149. சதுரங்கம்
  150. ரா 1
  151. ஏழாம் அறிவு
  152. வேலாயுதம்
  153. போராளி
  154. குருசாமி
  155. வெண்மணி
  156. ஒஸ்தி
  157. நீயே என் காதலி
  158. யுவன்
  159. மம்பட்டியான்
  160. மௌன குரு
  161. உச்சிதனை முகர்ந்தால்
  162. பாளை சிறைச்சாலை
  163. இந்திர சேனா
  164. விண்
  165. காதலுக்காக போராட்டம்

Monday, December 26, 2011

நாட்டைத் துண்டாடும் அரசியல்வாதிகள்...! மௌனமாய் உடைப்படும் ஒற்றுமை...


"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. "ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்லை தரும் முல்லைப் பெரியாறு பிரச்னை, அரசியல்வாதிகள் பலரது வெறும் வாய்க்கு கிடைத்த அவல். "சந்துலே சிந்து பாடற மாதிரி' திராவிடர் கழகத்தினர் கோவிலையும் சாடுவதற்கு ஒரு வாய்ப்பு. 

தேனியில், வைகோ கூட்டத்தில் பேசிய கோவை ராமகிருஷ்ணன், "கேரள கோவில்களுக்குச் செல்வதை தவிர்த்து, தமிழக கோவில்களுக்குச் செல்லுங்கள். அரிசியைக் கூட சுமந்து சென்று, ஏன் கேரளாவுக்கு காணிக்கையாக்குகிறீர்கள்?' என்று கூறுகிறார். வேறு சிலர், பழனி மற்றும் மதுரை கோவில்களுக்குச் செல்லும் படி ஆலோசனை கூறுகின்றனர். 

அய்யப்ப சாமிக்கு ஊரு தோறும், தமிழகத்திலேயே கோவில் கட்டி கும்பிடச் சொல்கிறார் விஜயகாந்த். இவர்கள் கூறுவது, பிரச்னைக்குத் தீர்வாகத் தெரியவில்லை. புது பிரச்னைகளுக்கு வித்திடுவதாகவே தெரிகிறது. இரண்டு பேர் சண்டையிடும் போது, அவர்களுக்குள் சமாதானம் செய்து வைக்க முயற்சிப்பதை விடுத்து, மேலும் பல ஆயுதங்கள் கொடுத்து, "இன்னும் நல்லா அடிச்சிக்கங்கடா' என சொல்வது போலுள்ளது, இந்த அரசியல்வாதிகள் செயல். 

தமிழகத்திலுள்ளவன் பழனி, மதுரை கோவில்களுக்கும், ஆந்திராவிலுள்ளவன் திருப்பதிக்கும், கேரள மக்கள் சபரிமலை மற்றும் குருவாயூர் கோவிலுக்கும், மகாராஷ்டிர மக்கள் மகாலெட்சுமி கோவிலுக்கும், கர்நாடக அன்பர்கள் கொல்லூர், உடுப்பி கோவில்களுக்கும் மட்டும் செல்ல முடியும் என்ற நிலைமை வந்தால், இந்திய ஒருமைப்பாடு என்பது வெறும் கேலிக்கூத்தாகும். 

புண்ணியத் தலமான காசி வட மாநிலத்திலும், மற்றொரு புண்ணியத் தலமாம் ராமேஸ்வரம் தமிழகத்திலும் உள்ளன. காசி தரிசனம் முடித்து, ராமேஸ்வரம் சென்று வந்தால் தான், புனிதச் சுற்றுலா முடிவடைந்ததாய் பொருள். அப்படியிருக்க, மாநிலங்களை தொகுதிப் பங்கீடு செய்து கொண்டால், ஆன்மிக அன்பர்களின் நிலை என்னவாகும்? 

காசிக்குப் போகக் கூட விசா, பாஸ்போர்ட் தேவைப்படும் படியல்லவோ நிலைமை மாறிவிடும். இது தேவையா? கோவில், சாமி, பக்தர்கள், புனிதப் பயணம், காணிக்கை, விரதம் ஆகியவற்றை, அரசியல்வாதிகள் பகடைக் காயாய் மாற்ற வேண்டாம்.

Monday, December 19, 2011

பிரபல பெண்பதிவரிடம் பல்பு வாங்கிய சிபி செந்தில்குமார்...


பதிவுலகில் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர் அட்ராசக்க சிபி செந்தில் குமார் இவருக்கு வேலை சினிமா விமர்சனம் எழுதுவது  அதற்கடுத்து காமெடி கும்மி என்ற பெயரில் இருக்கிற பதிவர்களை போட்டு கலாய்ப்பது தான் இவருக்கு வேலை...

இதைவிட்டு இன்னும் வேற ஏதாவது சொன்ன பயபுள்ளைக்கு கோவம் வரும் நான் மேட்ருக்கு வந்துடுறேன்.

கடந்தவாரம் அவரோட பிளாக்கில் இவர் போட்ட பதிவுதான்


பிரபல பதிவர்கள் சுயம்வரத்தில் செய்த சலம்பல்கள் காமெடி கலாட்டா

இந்த பதிவுல பிரபல பதிவர்கள் சுயம்வரம் சென்று அங்கு மாட்டை அடக்க சொல்லியிருந்தா என்ன பண்ணுவாங்க என்ற கருத்தை மையமா வச்சி ஒரு பதிவு போட்டிருந்தாரு.

அந்த பதிவுல நம்ம மனோ அண்ணாச்சி, விக்கி உலகம் விக்கி, தமிழ்வாசி பிரகாஷ்,  சூர்ய ஜீவா, ஐ.ரா ரமேஷ்பாபு, போகுலத்தில் சூரியன் வெங்கட், நல்லநேரம் சதீஷ், சிரிப்பு போலீஸ் ரமேஷ் ஆகியோர் சுயம்வரத்தில் கலந்துக்கொண்டு மாடுபிடிச்சா எப்படியிருக்கும்ன்னு நல்ல அவருக்கே உரிய பாணியில் நல்ல நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார்.

அந்த பதிவு கமாண்ட்டுல நம்ம காணாமல் போன கனவுகள் ராஜி அக்கா வந்து போட்டாங்க பாருங்க ஒரு கமாண்டு....


எல்லோரையும் சிபி கலாய்ச்சா, சிபியை இவங்க கலாய்ச்சிட்டாங்க...

அந்த கமாண்ஸ்ல சிபி சுயம்வரத்தில் கலந்துக்கொண்டு மாட்டை அடக்க சொன்னால் எப்படியிருக்கும் என்று போட்டிருந்தார்கள்...

/////////
மாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,
சிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை
மாமனார்: அதுக்கு என்ன இப்போ,
சிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.
மாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்?
சிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.
பொண்ணு: கிர்ர்ர்ர்ர்ர் டமால்
///////////

எனகருத்திட்டு அனைவரையும் பரவசப்படுத்தினார்.

Thursday, December 15, 2011

பதிவுலகிற்கு விடிவு வந்துவிட்டது...!


2003-ம் ஆண்டு முதல் தமிழ் வலைப்பூக்களுக்கு வாசல் திறந்து வசந்தத்தை காட்டியது கூகுள் நிறுவனம். 2004 ம் ஆண்டு முதல் விஸ்வரூபம் எடுத்து வந்த தமிழ் வலைப்பூக்கள் நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் மாறியது. 

புதிய புதிய பதிவர்கள் வந்து தன்னுடைய படைப்புகளையும், தன்னுடைய ஆக்கங்களையும் இந்த வலைப்பூக்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவவிடப்பட்டது.

அடுத்தக்கட்டத்தில், தமிழ்10, இண்டிலி, தமிழ்மணம், உலவு, தமிழ்வெளி போன்ற திரட்டிகள் வந்து தமிழ் வலைப்பூக்களின் வாசகர்களை அதிக அளவில் ஈர்த்தது. இதனால் வலைப்பதிவர்களும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எழுத ஆரம்பித்தார்கள். பதிவுலகம் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது.

ஆனால் சில ஆண்டுகளாக கூகுள் பஸ் வந்தபிறகு அதன் வசதியை காரணமாக கொண்டு பிளாக்கில் எழுதுபவர்கள் அப்படியே கூகுள் பஸ்க்கு சென்று விட்டனர். இதனால் பதிவு எழுதும் பதிவர்களின் எண்ணிக்கையும், பதிவுகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

கூகுள் நிறுவனம் கூகுள் +  என்ற சமூக வலைதளத்தை பேஸ்புக்கிற்கு போட்டியாக ஆரம்பித்தது. ஆரம்பித்த உடன் கூகுள் பிளஸ்க்கு கிடைத்த ஆதரவு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கூகுள் பஸ்ஸைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையாத பட்ச்சத்தில் கூகுள் பிளஸ்-ன் தாக்கம் குறைய தொடங்கியது இதனால் கூகுள் நிறுவனம் கூகுள் நிறுவனம் கூகுள் பஸ்ஸை மூட முடிவெடுத்துள்ளது என்று நினைக்கிறேன்.

இன்று காலை முதல் கூகுள் பஸ் மூடப்பட்டுள்ளது. (கூகுள் மெயிலை ஓபன் செய்து பார்க்க) கூகுள் பஸ்ஸில் எவ்வளவோ தகவல்கள் பகிரப்பட்டிருந்தது ஆனால் அது மூடப்பட்டவுடன் அவை அனைத்தும் அதோடே போய் விட்டது. இதையே தன்னுடைய பிளாக்கில் எழுதியிருந்தால் அவைகள் கால பொக்கிஷமாக இருந்திருக்கும் என்பதை கூகுள் பஸ் வாடிக்கையாளர்கள் கருதுவார்கள்.

இதனால் மீன்டும் பிளாக் பக்கம் அவர்கள் பார்வை திரும்ப வாய்ப்பிருக்கிறது. இனி தொடர்ந்து பிளாக் எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று நம்புகிறேன். இதனால் பிளாக் படிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிரிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் நண்பர்களே தங்களின் படைப்புகளை, கருத்துக்களை விவாதங்களை தங்களுக்கு என்று ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் பறிமாறிக்கொள்ளுங்கள். அவைகள் காலத்திற்கும் அடையாளம் காட்டப்படும்.

Tuesday, December 13, 2011

நான் உங்க வீட்டு பிள்ளை: தமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...

தமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...



விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்துச் சென்று, தவறிழைத்த காவலர்கள், அவர்களை கதறக் கதற கற்பழித்திருப்பது கொடுமையிலும், கொடுமை. 


இதற்கு முன், வாச்சாத்தியில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த, 17 பெண்கள், வனத்துறை மற்றும் ரெவன்யூ துறையினரால் கற்பழிக்கப்பட்டது நமக்கு தெரியும். இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தற்போது ஜாமினில் வெளியே இருப்பதும் தெரியும். "கண்ணைக் காப்பாற்றும் இமைகள் போல செயல்படுகின்றனர் நம் காவல்துறையினர்' என, ஜெயலலிதா பெருமைப் படுகிறார். 


ஆனால், "பயிரை மேயும் வேலிகள்தான் நாங்கள்' என்கின்றனர், நம் "மதிப்புமிகு' காவல்துறையினர் ! இப்படிப்பட்ட காவல் துறையினருக்குத்தான், "மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் அங்காடிகள் வேண்டும்' என்றும், "ராணுவத்தினரைப் போல், நம் தமிழகக் காவல்துறையினரும், பல பயன்களை பெற வேண்டும்' என்றும் முதல்வர் ஆசைப்படுகிறார்.

ராணுவத்தினர் லஞ்சம் பெறுவதில்லை; கட்டப்பஞ்சாயத்து நடத்தி, யாரிடமும் கமிஷன் வாங்குவது இல்லை. தண்ணி அடித்து விட்டு, ரோட்டில் செல்லும் பெண்களை அழைத்து வந்து அசிங்கப்படுத்தும் கேவலமான செயல்களில் ஈடுபடுவதில்லை. 


நம் காவல்துறையினர் எப்படியெல்லாம் செயல்படுகின்றனர் என்பதை, தமிழ்த்திரைப்படங்கள் தெளிவாக காட்டுகின்றன. "காவல்துறையின் ஈரல்கெட்டுப் போய்விட்டது' என்றார் கருணாநிதி. ஈரல் மட்டுமல்ல, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்தும் கெட்டுப் போயிருக்கின்றன என்பதற்கான அடையாளம் தான், இந்த கற்பழிப்புச் சம்பவங்கள்! 


கற்பை இழந்த வாச்சாத்தி பெண்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் தான் கிடைத்தது. தற்போது, விழுப்புரம் மாவட்ட பெண்கள், தங்கள் கற்பை இழந்ததற்காக, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றிருக்கின்றனர். உண்மையிலேயே, தற்போது கற்பின் மதிப்பு கூடியிருக்கிறது! எத்தனை சட்டங்கள் போட்டாலும், யாரும் திருந்தப் போவது இல்லை. 


சிறையிலிருந்து விடுதலையாகும் குற்றவாளிகள், மனம் திருந்தி வாழ, மனநலம் பேணும் மருத்துவர்களை நியமிக்க உள்ளாராம், நம் தமிழக முதல்வர்! உண்மையில், மனநல வைத்தியம் தேவைப்படுவது குற்றவாளிகளுக்கு அல்ல; இப்போது, காவல்துறையினருக்குத் தான், அது அவசியம் தேவைப்படுகிறது!

Monday, December 12, 2011

ஸ்டைலின் உலக நாயகன்....


ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62 வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

உடல் நலமின்றி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள ரஜினி புதிதாய் பிறந்த வருடம் இது என்றால் மிகையல்ல. அதனால்தான் 61 ஆண்டுகளுக்கும் இல்லாத மகத்துவம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது. மறுபிறவி எடுத்துள்ள ரஜினியின் பிறந்தநாளை அதீத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார். அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார்.

உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான். அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.

ஸ்டைல் மன்னன்

ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது.

நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.

உலகளாவிய ரசிகர்கள்

ரஜினி மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல அவரை திரைத்துறை என்பதையும் தாண்டி ரசிக்கும் ஏராளமான மக்கள் என்பது தற்போது ரஜினிக்கு உடல்நலமில்லாமல் போனபோது தான் உண்மையாக அறியமுடிந்தது. அந்த அளவிற்கு அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகையாகாது.

அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக பிரசித்தி பெற்ற நாளான 12-12-12 அன்று வருவதை ஒட்டி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட ரஜினி ரசிகர்களும், அவருடைய குடும்பத்தினரும் இப்போதே திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 10, 2011

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு.. இதில் திமுக-வும் உடந்தையா..?


மத்திய அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்றாமல், தமிழக அரசிற்கு உரிய நிதியை ஒதுக்காமல், பாரபட்சம் காட்டுவதும், பாராமுகமாகவே இருப்பதும், வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மாநில அரசிடமிருந்து வரும் வருவாய் மட்டும் பெற்றுக் கொண்டு, தக்க சமயத்தில் போதுமான நிதி தராமல், பல வகையில் இழுத்தடிப்பது சரியல்ல. காங்கிரஸ், தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள், ஆளும் மாநிலங்களுக்குத் தேவையான நிதியை அள்ளித் தருகிறது. ஆனால், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, தேவையான நிதியை ஒதுக்காமல், பாரபட்சமாக செயல்படுகிறது. 

நேரடியாகவும், மறைமுகமாகவும் மாநில அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வருவாய், பல வகை வரிகளின் மூலமாக கிடைக்கிறது. இதை வேண்டாம் என்று சொல்ல, மத்திய அரசு முன் வருமா? மத்தியில் ஆளும் காங்கிரஸ், மாற்றாந்தாய் மனப்பக்குவம் கொண்டிருப்பதால், தமிழகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மத்தியில் நிதி அமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜியோ, "காங்கிரஸ் மாற்றாந்தாய் மனப்பக்குவத்தோடு செயல்படவில்லை' என்று கூறி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். 

அவர் கூறியதை, தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களும், சுனாமி போன்ற பேரழிவுகளும் ஏற்பட்டன. ஆனால், அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தமிழகத்திற்கு உரிய நிதியைத் தராமல் வஞ்சித்து விட்டன. 

மேலும், வறட்சி மற்றும் வெள்ள நிவாரணக் குழு, தமிழகத்தைப் பார்வையிடவே வரவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்திவிட்டு, "மங்களம்' பாடிவிட்டன. இதற்கு, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் உறுப்பினரும், நிதி அமைச்சரும் உடந்தை என்பது மிகவும் வேதனையான ஒன்று. 

மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற போதிலும், மத்தியில் ஒட்டிக்கொண்டு, அழையா விருந்தாளியாக இருந்து கொண்டு, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடைக்கல்லாக இருப்பது, தமிழனே தமிழனுக்கு எதிரியாக இருப்பதாகவே தோன்றுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி ஏற்பட்டால், இணக்கமான சூழல் ஏற்படும். "தேனாறும், பாலாறும் ஓடும்' என்று வாய்ச்சவடால் பேசி, ஆட்சியை மக்களுக்கு விரோதமாகவே நடத்தியதை, மக்கள் மறக்கவில்லை. 

தமிழகத்தின் கடனை, லட்சம் கோடியாக உயர்த்திவிட்டதையும், கஜானாவை துடைத்து வைத்துவிட்டு, தங்களுடைய கஜானாவை நிரப்பிக்கொண்டதையும், யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மத்திய அரசு, கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டு, தமிழக அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய நிதியைத் தராமல், வஞ்சம் செய்தால், வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி கட்டாயம் காணாமல் போய்விடும் என்பது மட்டும் நிதர்சனம். 

மாற்றாந்தாய் மனப்பக்குவத்தை மாற்றிக்கொண்டு, கேட்பார் பேச்சைக் கேட்டு, கெட்டுப் போகாமல், தங்கள் மிச்சம் மீதி கவுரவத்தை, காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ளுமா?

Thursday, December 8, 2011

வெப்பமயமாதலால் ஒரு உயிரினத்தின் நிலை...


எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய பிரச்சனை உலகம் வெப்பமயமாதல் என்ற பிரச்சனை.

இந்த வெப்பமயமாதலால் உலக உயிரினங்கள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.


நாளைய எதிர்காலம் என்னவாகும் என்று ஒரு விலங்கிடம் சோதனை நடத்தியபோது அது வேடிக்கையாய் செய்த நிகழ்வு இங்கே...


Monday, December 5, 2011

புதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...


வாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, 

அப்புறம் நீங்க
ஷேமமாக இருக்கேளா? ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா?  அப்படின்னு கேட்க நான் ஐயர் ஆத்து பிள்ளை இல்லிங்க... உங்க வீட்டுப்பிள்ளை...

நீங்கள் பதிவுலகில் தற்போதுதான் புதியவராக வந்துள்ளீர்களா? பலே. இந்தப்பதிவு உங்களுக்குத்தான். பத்திரிகைகளில் சாதிக்கும் ஆர்வமும், திறமையும் இருந்தாலும் வாய்ப்பு மிகச்சிலருக்கே கிடைக்கிறது. எனவே உங்களுக்கென ஒரு வலைப்பூவை தொடங்கி அதில் தங்கள் திறமையை நிரூபித்து வெற்றி பெற காலடி எடுத்து வைத்து இருப்பீர்கள். 

அப்படி வெற்றிப்பெறவரும்போது முன்னோடி பதிவர்களையும், தங்கள் தளத்துக்கு வரும் பதிவர்களையும் வரவேற்க மறக்காதீர்கள். பதிவுலகத்திற்கு வந்தபிறகு, ஏன் தாங்கள் தனியாக யாரும் இல்லாத ஆள்போல் இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம்.. அதற்காக அறிவுரைகள் இங்கே வழங்குகிறேன்.. வாருங்கள்...


********* நல்ல பதிவுகளை போடுங்கள்.... மற்ற பதிவுகளை வாசித்து அந்த பதிவு எப்படியிருக்குன்னு பார்த்து உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்க. பதிவு பிடிச்சிருந்தா பிளஸ் ஓட்டு போடுங்க.. பிடிக்கலையா மைனஸ் ஓட்டுப்போடுங்க தப்பே இல்லை. பதிவர்களில் என்ன கலப்பட பதிவர்கள் இங்க என்ன பால் வியாபாரமா செய்யுறோம் கலப்படம் செய்ய.

********* பதிவை படிங்க, சும்மா சிம்பிளா ஒரு கமாண்ட் போட்டுட்டு போங்க.. அதுல தப்பே இல்ல. உதா. ஒரு கவிதைப்படிக்கிறோம்ன்னு வச்சிக்கங்க.. அது பிடிச்சிருந்தா சூப்பர், அருமை, வாழ்த்துக்கள் அப்படின்னு போடுங்க தப்பேயில்லை. கவிதை பிடிச்சிருக்கு அதுக்காக பத்து பக்கத்தில கமண்ட்ஸ் போடனுமா என்ன...? விருப்பம் இருந்தா விவரமா கருத்துப்போடுங்க. இல்லன்னா சுருக்கமா.. அம்புட்டுத்தான்.

********* உங்க வலைப்பூ ஆரம்பிச்ச உடனே வரக்கூடய பாளோவர்களை அன்போடு அழையுங்கள். அவருக்கு நன்றி சொல்லுங்க. முதலில் வருவதால் உங்க சொத்தையா கேட்க போறாங்க. சிலர் இருக்காங்க நீங்க வளர்ந்து பெரிய ஆளா ஆனப்பிறகு வந்து ஒட்டிப்பாங்க அவங்கள நம்பாதீங்க. முதலில் வருபவர்கள் ஓட்டுக்குத்தான் வராங்க அப்படின்னு நினைக்காதீங்க. நீங்க ஓட்டுப்போட்டு பிரதமர் பதவிக்காக வரப்போறாங்க. எல்லாம் ஒரு நட்புதான்.

********* முதலில் பாளோவரான வந்து சேர்ந்தால் அவர்களுக்கு ஒரு அறிவிப்பு வையுங்கள் அதற்கு பரிசாக அன்பு பகிரப்படும் அப்படின்னு போர்டு வையுங்க. அப்படி அன்பே காட்டவில்லையென்றாலும் நம்ம பதிவுலக எதார்த்தவாதிகள் பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி பதிவர்கள் ஆகியோர் கண்டிப்பாக வந்து சேருவாங்க. ஏன்னா அவர்களுக்கு  குஷிப்பட ஜோதிகா மாதிரி ஈகோ-வெல்லாம் கிடையாது. புதியதாக வரும் பதிவர்களை கண்டிப்பாக இவர்கள் அன்போடு வரவேற்பார்கள். அம்புட்டு நல்ல மனசு.

********* பதிவுலக அரசியல் கத்துக்கங்க. நீங்க யாரையும் மதிக்காம, யாருடைய வலைப்பூவுக்கும் போகாமல், யாருடைய பதிவையும் வாசிக்காமல், யாருக்கும் கருத்திடாமல், வாக்களிக்காமல் இருந்துவிட்டு என் கடைப்பக்கம் யாரும் வரவில்லை என்று சொன்னால் எப்படி. அதனாலே வினைவிதைப்பவன் வினைஅறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது போல நீங்கள் மற்றவர்களிடம் அன்பை விதையுங்கள் அன்பை அறுவடை செய்யலாம்.

********** உங்க கருத்தை, உங்க சிந்தனையை, உங்க படைப்புகளை பதிவா போடுறீங்க அதை யாரும் படிக்க கூடாதுன்னு க‌தவை அடைச்சிட்டா எப்படி. அதை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்க..

********** இங்கு இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரையறை இல்லை. எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், தங்கள் மனதுக்கு பட்டதை சொல்லுங்கள். அதில் மற்றவர் மனசு சங்கடப்படாமல் இருந்தால் மட்டும் போதும்.

பிரெட்சிக்காரன் என்ற பேரில் ஒருவர் பதிவுலகில் நுழைந்து இந்த பதிவுலகையே புரட்டிபோட்டுவிடலாம் என்று, ஜேம்ஸ்பாண்டு 009 மாதிரியும், புரட்சிபுயல் வடிவேலு மாதிரியும் வந்திருக்கிறார்


அவரை யாரும் நம்பாதீர்கள். அவரிடம் பெரிய புரட்சியெல்லாம் ஒன்றும் இல்லை பதிவுலகில் வளர்ச்சிப்பாதையில் இருக்கும் பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி ஆகிய மூவரை மட்டுமே தாக்கி எழுத வந்திருக்கும் புதிய அவதாரம். 

அவரு்டைய பதிவுகளை பாருங்கள் அதில் இந்த மூவரை மட்டுமே தாக்கி எழுதியிருக்கும் பதிவுகள் மட்டுதான் இருக்கும். இவர்கள் தானும் வாழமாட்டார்கள் மற்றவர்களையும் வாழ மாட்டார்கள்.

பிரெட்சிக்காரன் என்ற போலி முகத்தைக் கொண்டு யாரும் இந்த பதிவுலகை ஆட்சிசெய்து விடமுடியாது. அன்புக்கு மட்டுமே தலைவணங்கும் இந்த பதிவுலகில் யாவரும் மன்னர்களே..!

அவர் பெரியவர் இவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையுடன் வலம் வருவோம்.  என்றாவது ஒருநாள் முகம் பார்க்காத நாம் முகம்பார்க்கும் போது அன்பை வெளிக்காட்டி அரவணைப்போம். அப்போது ஒரு துளி கண்ணீர் நம் கண்களில் எட்டிப்பார்க்கும் அப்போது புரியும் நம் பந்தங்களின் உறவு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...