Wednesday, December 5, 2012

கமல்ஹாஸனின் டாப் 5 பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ்!கமல்ஹாஸன் என்றால் மிகச் சிறந்த நடிப்பு, புதிய கோணத்தில் படமாக்கம், கலை நேர்த்தி போன்றவற்றைத்தான் பிரதானமாகப் பேசுவார்கள். வசூல் இரண்டாம்பட்சம்தான்.

ஆனால் கமல் படங்களும் வசூலில் பெரிய சாதனைப் படைத்தவைதான். பல வெள்ளிவிழாக்கள் கண்டவைதான். கமல் ஹாஸனின் கேரியரில் மிகச் சிறந்த வசூலைக் குவித்த 5 படங்களை இங்கே பார்ப்போம்.


ஜிஎன் ரங்கராஜன் இயக்க, இளையராஜா இசையில் வெளியான படம் இது. பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் உருவாகியிருந்தது. பாடல்கள் பட்டையைக் கிளப்பின அன்றைய நாட்களில். இன்று கேட்டாலும் தித்திக்கும் மலர்களில் ஆடும் இளமை, காதல் வந்துருச்சி... பாடல்கள். வெள்ளிவிழா மட்டுமல்ல.. வசூலிலும் சாதனை படைத்த படமிது.


சகலகலா வல்லவன்...


எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முரட்டுக் காளை முத்திரைப் படமாக அமைந்ததென்றால், அதற்கு நிகராக கமலுக்கு அமைந்த படம் சகலகலா வல்லவன். பழைய எம்ஜிஆர் படத்தின் ரீமேக்தான் இது. ஆனால் அதிரடி மசாலா... அதற்கேற்ப பட்டி தொட்டியெங்கும் கலக்கல் வசூல்.
கிராமங்களிலிருந்து வண்டி கட்டிக் கொண்டு போய் பக்கத்திலுள்ள சிறு நகரங்களில் மக்கள் படம் பார்த்தது இன்னும் கண்ணில் நிற்கிறது. மிகச் சிறிய பட்ஜெட்டில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் இயக்குநர் எஸ்பி முத்துராமன்


அபூர்வ சகோதரர்கள்


கமல்ஹாஸன் கேரியரில் மறக்க முடியாத வசூலைத் தந்த படம் இது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். தொழில்நுட்பம், படமாக்கம், இசை என பல வகையிலும் அருமையாக வந்திருந்தது அபூர்வ சகோதரர்கள். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், இளையராஜா இசையில், தமிழ் சினிமாவில் இடம்பிடித்த முக்கியப் படம் இது.


நாயகன்


இந்தப் படம் காட் பாதரின் காப்பி என விமர்சிக்கப்பட்டாலும், அந்த விமர்சனங்களை இடது கையால் புறம் தள்ள வைத்தது இரண்டு விஷயங்கள்.
ஒன்று கமல் எனும் கலைஞனின் காலத்தை வென்ற நடிப்பும், இசைஞானியின் ஜீவ இசையும்தான்.
இந்தப் படத்தின் ஆரம்ப வசூல் அத்தனை திருப்தியாக இல்லை. ஆனால் நாளாக நாளாக தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டது தனிக்கதை.


தேவர் மகன்


கமல் படங்களிலேயே வசூலிலும் வெற்றியிலும் தனி முத்திரைப் பதித்த படம் தேவர் மகன். ஒவ்வொரு காட்சியும் க்ளாஸ் எனும் அளவுக்கு பரதனின் இயக்கமும் கமலின் திரைக்கதையும் அமைந்திருந்தன. இளையராஜாவின் இசை ராஜ்யம் இந்தப் படத்திலும் கொடி கட்டிப் பறந்தது.

இந்தப் படங்களுக்குப் பிறகு வந்தவற்றில் இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்றவையும் நல்ல வசூலைக் குவித்தவையே. ஆனால் Mass with Class என்று பார்த்தால் மேற்கண்ட ஐந்தையும் எந்த விவாதமின்றி ஒப்புக் கொள்வார்கள், மாற்று முகாம் ரசிகர்களும்!Sunday, December 2, 2012

விஸ்வரூபம் பாடல்கள்கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஆடியோ டிசம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தில் கமல்ஹாசன் எழுதி, அவரும், சங்கர் மகாதேவனும் இணைந்து பாடிய ஒரு பாடல் வரிகள் வெளியாகியுள்ளன.

சங்கர் எஹஸான் லாய் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. நடனத்தின் வடிவிலான இந்தப் பாடலை கமல் ஹாசன் எழுதியுள்ளார். அவரும், சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியுள்ளனர்.

பாடல் வரிகள் இதுதான் ..

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

க்ரிஷ்ணா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ

உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

Monday, October 8, 2012

எல்லோரையும் கொஞ்சம் பேச விடுங்க கோபிநாத்!விவாத நிகழ்ச்சி என்றாலே நிகழ்ச்சி தொகுப்பாளரை விட பங்கேற்பாளர்தான் அதிகம் பேசவேண்டும். ஆனால் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளரை விட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்தான் அதிகம் பேசுகின்றனர்.

‘நீயா நானா' நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருந்தாலும் அவர்கள் பேசுவதை விட தொகுப்பாளர் கோபிநாத்தான் அதிகம் பேசுகிறார் என்கின்றனர் விமர்ச்சகர்கள்.

இந்தவாரம் உறவுகளுக்குள் திருமணம் செய்யலாமா கூடாதா என்பது பற்றி விவாதம் நடைபெற்றது. அத்தைப் பெண்ணையோ, மாமன் மகனையோ திருமணம் செய்வதை ஏன் விரும்புகின்றனர். அந்நியத்திற்குள் திருமணம் செய்வதை ஏன் தவிர்க்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் கருத்துக்களை முன் வைத்தனர். சொந்தங்களுக்குள் திருமணம் செய்வது பாதுகாப்பானது என்ற கோணத்திலேயே பேசினார்கள் ஒரு சாரார். அதற்கு கோபிநாத், எத்தனையோ வீடுகளில் அந்நியத்தில் இருந்து வந்த பெண் மகள் போல நடந்து கொள்வதும், சொந்தத்தில் திருமணம் செய்த பெண் குடும்பத்தை பிரிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறினார் கோபி. இந்த இடத்தில்தான் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை சரியாக கூட கூறவிடாமல் தொகுப்பாளரான கோபிநாத் அதிகம் பேசினார். அது தவிர ஒருவர் கருத்துக்களை கூறும் முன்பாக வேற... வேற... என்று கூறி டைவர்ட் செய்வதும் நடந்தது.

சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதன் மூலம் வெளி வட்டார பழக்க வழக்கம் தடுக்கிறது. மரியதை கிடைக்காது. பரம்பரை பகையா மாற வாய்ப்புள்ளது எனவே நெருங்கிய உறவுக்குள் திருமணம் கூடாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இது சாதிய சிந்தனை என்றும் கலப்புத்திருமணங்கள் ஏற்படுவதை தடுக்கிறது என்றும் கூறினார்கள்.

நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது அழகானது. ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். சொந்தமும் சொத்தும் விட்டுப்போகாது என்று கூறினார்கள் சொந்தங்களுக்குள் திருமணம் செய்தவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, எழுத்தாளர் ராஜேந்திர சோழன், டாக்டர் கமலா செல்வராஜ், உள்ளிட்ட பல சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

உறவுகளுக்குள் திருமணம் செய்வது விபரீதம். ஆளுமையற்ற குழந்தைகளை உருவாக்கும், தலைமுறையை பாதிக்கும். குழந்தைகள் அசாதாரணமான நிகழ்வுகளோடு இருக்கும்.எதிர்கால தலைமுறையை பலவீனமானதாக இருக்கும் என்றார் எழுத்தாளர் ராஜேந்திர சோழன்.

ஆனால் சொந்தக்களுக்குள் திருமணம் செய்வது காலம் காலமாக நடைமுறையில் இருக்கிறது. பாரம்பரியத்தை உடைக்கவேண்டாம் என்றார் வேல. ராமமூர்த்தி

உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் மரபணு ரீதியான பிரச்சினையைத்தான் தரும் என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர் ஹெப்சிபா. டாக்டர் கமலா செல்வராஜ். சொந்தத்தில் திருமணம் செய்வதால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று கூறினார். எத்தனையோ கண்ணீர் கதைகள் உள்ளன என்றார்.

இளங்கோ கல்லானை சமூக பார்வையாளர் எழுத்தாளர், மரபணு மாற்றத்தினாலும், அறிவியல் ரீதியாகவும் கூட சில தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன என்ற கருத்தை முன்வைத்தார்.

நிகழ்ச்சி சுவாரஸ்யமாக போகும் போதே பிரேக் விடும் கோபிநாத், அனல் பறக்கும் இந்த விவாதம் பற்றி பேசலாம் இன்னும் ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு என்று சொன்னாலும் நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை விட கோபிநாத்தான் அதிகம் பேசினார் என்கின்றனர் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள்.

எனவே கோபிநாத் நீங்க அதிகமா பேசுறதை விட கொஞ்சம் பங்கேற்பாளர்களையும் பேச விடுங்களேன் என்பது நேயர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Monday, September 24, 2012

விஜய் நடிக்கும் துப்பாக்கி... பெயர் மாற்றம்


விஜய் நடிக்கும் துப்பாக்கியின் தலைப்பு பிரச்சினை ஒன்பதாவது முறையாக ஒத்திவைப்புக்குப் போயிருக்கிறது சென்னை நீதிமன்றத்தில்.

இந்த போராட்டத்தில் துப்பாக்கி தரப்பு சோர்ந்து போயிருக்கிறது. மீண்டும் வரும் அக்டோபர் 3-ம் தேதிக்கு வழக்கு தள்ளிப் போயிருப்பதால், நவம்பர் 13-ம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்தப் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று கருதும் தயாரிப்புத் தரப்பு, இரு மாற்றுத் தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளதாம்.

அதில் ஒன்று சரவெடி. தீபாவளிக்கு வரும துப்பாக்கிக்கு சரியான மாற்றுத் தலைப்பு இதுதான் என்பது ஒரு தரப்பின் அபிப்பிராயம்.

இன்னொன்று மும்பைத் தமிழன். படம் முழுக்க மும்பையில் நடப்பதால், இந்தத் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும். எனவே இதையே வைக்கலாம் என்று இன்னொரு தரப்பு கூறுகிறதாம்.

அக்டோபர் 3-ம் தேதிக்கு மேலும் தடை நீடித்தால், அநேகமாக இந்த மாற்றுத் தலைப்புகளில் ஒன்றை சூட்டி, தீபாவளி களத்தில் இறக்கப் போகிறார்களாம்.

Saturday, September 15, 2012

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

sd
தன் பலம், தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்வதில் மீண்டும் ஒரு முறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார். அந்த வகையில் சுந்தரபாண்டியன் அவருக்கு இன்னொரு சுப்பிரமணியபுரம்.

நண்பர்களுக்குள் நெருக்கமும் சரி, பெரும்பகையும் சரி... அதன் பின்னணி காதல்தான் என்பது அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சசிகுமார். அவரது நண்பர்கள் பரோட்டா சூரி, இனிகோ பிரபாகரன். சசிகுமார் ஒரு பெண்ணைக் காதலிக்க, அந்தப் பெண்ணை அவர் நண்பனும் ரூட் விட, அதே பெண்ணை நண்பனின் நண்பனும் டார்கெட் பண்ண, அதில் சசிகுமார் ஜெயிக்கிறார்.

தோல்வியை ஒரு நண்பன் சகித்துக் கொள்ள, மற்றொருவனோ லட்சுமியிடம் வம்பு செய்கிறான். தொடரும் கைகலப்பில் பஸ்ஸிலிருந்து தள்ளப்பட்டு செத்துப் போகிறான். கொலைப் பழியை சசிகுமார் ஏற்று சிறை சென்று, 15 நாள் காவலுக்குப் பிறகு வெளியில் வர, காதலி கண்டு கொள்ளாமல் போகிறாள்.

இருவரும் இணைந்தார்களா என்பது மறுபாதி. இந்தப் படத்தைப் பொறுத்தவரை அந்த மறுபாதிக் கதைதான் செம த்ரில்லிங் என்பதால், திரையில் பார்த்து சசிகுமார் அண்ட் நண்பர்களுக்கு மரியாதை செய்யுங்கள்!

காதல் அரும்பும் பருவத்தில் இனி இளைஞர்கள் ரொம்ப சூதானமா நடந்துக்கணுமப்பா... என்று சொல்லவைக்கும் ஷார்ப்பான திரைக்கதை. புதிய இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனை வாழ்த்தி வரவேற்கலாம்.

சசிகுமாரின் முகத்தில் முன்பெல்லாம் எப்போதாவது எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனம் கூட இதில் இல்லை. ஒரு நடிகராக இந்தப் படத்தில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஒரு ரஜினி ரசிகன் நிச்சயம் இருந்தே தீருவான். அதை அழகாக நம்முன் நிறுத்தியிருக்கிறார்.

ரஜினி ரசிகராக அமர்க்களமாக அறிமுகமாவதில் தொடங்கி, நம்மைக் கொலை பண்ண வந்தது நம்ம நண்பனா இருந்தா அவனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுடா என முத்திரை வசனம் சொல்வது வரை... சசிகுமார் கொடி பறக்குது!

லட்சுமி மேனனுக்கு இது முதல் படம். ஒப்பனையில்லாத அழகி. பிரகாசமான எதிர்காலம்.

இந்தப் படத்தின் Show stealer என்றால் அது சசிகுமாரின் தந்தை ரகுபதி தேவராக வரும் நரேன். லட்சுமியை பெண் கேட்கும் காட்சியில் அப்படி ஒரு கம்பீரம்.. காட்சிப்படுத்திய விதம், இடம்பெற்ற நடிகர்களின் பங்களிப்பு என எல்லா வகையிலும் அந்த 4 நிமிடக் காட்சி.. .A pure manly show!

தென்னவன் இன்னொரு மிகச் சிறந்த நடிகர். ஒரு பெண்ணைப் பெற்றவனின் ஆத்திரம், அக்கறை, வேதனை, பாசம் அனைத்தையும் நிஜமாகக் காட்டியிருக்கிறார்.

பரோட்டா சூரியின் ராஜ்ஜியம்தான் முதல் பாதியில். அவரது ஒன்லைனர்கள் நிச்சயம் நண்பர்களின் உதடுகளில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருக்கும்.

இனிகோ பிரபாரகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜன், அந்த பாட்டிகள், சித்தி, அத்தைப் பெண் என அத்தனை பேரும் நடிகர்களாகத் தெரியாமல், கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள்.

அப்புக்குட்டி கிட்டத்தட்ட வில்லன். கொஞ்சம் வெறுப்பைச் சம்பாதிக்கும் ரோல்தான். நன்றாகவே செய்திருக்கிறார்.


ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பெரிய ப்ளஸ். பாடல் காட்சிகளில் பாலுமகேந்திரா சொன்னதைத்தான் திரும்ப சொல்ல வேண்டும்! அந்த முள்காட்டு பயங்கரத்தை முதுகு தண்டு சில்லிடும் அளவுக்கு சொன்னதில் இயக்குநருக்கு இணையான பங்கு, காமிராக்காரருக்கும்!

படத்தின் ஆகப் பெரிய மைனஸ் இசை. இசையமைப்பாளர் ராஜாவின் ரசிகரோ அல்லது ராஜா இசையால் பெரிதாக பாதிக்கப்பட்டவரோ தெரியவில்லை. காதல் வந்து பொய்யாக, ரெக்கை முளைத்தேன், நெஞ்சுக்குள்ளே... என அவர் போட்ட பாடல்கள் திரையில் வரும்போது, நமக்கு ராஜாவின் ஏதோ மோகம், ஒருகிளி உருகுது, அம்மம்மா (தாலாட்டுப் பாடவா...), பாடல்கள்தான் காதுகளில் கேட்கின்றன!!

இன்ஸ்பிரேஷனுக்கும் இமிடேஷனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டாவது படத்திலேயே காணாமல் போகும் இசையமைப்பாளராக ரகுநந்தன் மாறாமலிருக்கக் கடவது!

சசிகுமாரின் பலம், பலவீனம் புரிந்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ் ஆர் பிரபாகரனின், முதல் முயற்சியே சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெற்றி தொடர வாழ்த்துகள்!

நடிப்பு: எம் சசிகுமார், லட்சுமிமேனன், நரேன், சூரி, தென்னவன், அப்புக்குட்டி, இனிகோ பிரபாகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜா
இசை: என் ஆர் ரகுநந்தன்
ஒளிப்பதிவு: ச பிரேம்குமார்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
தயாரிப்பு: எம் சசிகுமார்
எழுத்து-இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன் (Thanks Thats Tamil)

Wednesday, September 12, 2012

மறக்க முடியாத ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்!!!


திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்றாலே அனைவரது நினைவிற்கும் வருபவர் "ரஜினிகாந்த்" தான். அவர்கள் தென்னிந்தியாவில் மட்டும் புகழ் பெற்று விளங்கவில்லை. உலகம் முழுவதும் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தைப் பெற்று, அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வருகிறார். 

இத்தகைய புகழ் பெற்ற ரஜினிகாந்த், தன் ஸ்டைலால் மட்டும் அனைவரையும் கவரவில்லை, பஞ்ச் டயலாக்குகள் மூலமும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதை, தன் படங்களின் வழியாக உண்மையாக வெளிகாட்டி வருகிறார். 

இவரது பெயரைக் கேட்டாலே அனைவரின் மனதிலும் ஒரு குதூகலம் பிறக்கும். இத்தகைய சூப்பர் ஸ்டார் ரஜினியின், சிறந்த, இன்றும் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும், மறக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் சிலவற்றை படித்து பாருங்களேன்...* ரஜினியின் சூப்பர் ஹிட் படமான "பாட்ஷா" படத்தில் நிறைய டயலாக்குகள், மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதில் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற டயலாக், இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.

* அதிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்குகளான "பேரை கேட்டாலே, சும்மா அதிருதுல்ல...", "பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்" போன்றவை சிறந்த பஞ்ச் டயலாக்காக உள்ளது.

* ரஜினி அவர்கள் சிவாஜியுடன் நடித்த கடைசி படமான "படையப்பா"-வில் கூட வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் டயலாக்கை சொல்லியுள்ளார். அதுதான் "அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல".

அதுமட்டுமல்லாமல், இன்னும் சில சூப்பர் மற்றும் சிந்திக்க வைக்கும் உண்மை டயலாக்குகளான...

* "எப்பவும் பொன், பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போகக் கூடாது. ஆம்பளைங்க பின்னாடி தான் இதெல்லாம் வரணும்."

* "நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்."

* "நம்ம வாழ்க்கை நம்ம கையில தான் இருக்கு."

* "நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்."

* "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது."

* "வாழ்க்கையில பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது."

* "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்குறது எதுவும் நிலைக்காது."

இவை மட்டுமல்ல இன்னும் இருக்கின்றன. மேலும் ரஜினி அவர்களின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அளவே இல்லை. அந்த அளவு அவர் தன் ஸ்டைலோடு, மக்களையும் சிந்திக்க வைத்துள்ளார். என்ன நண்பர்களே! உங்களுக்கு பிடித்த டயலாக் என்னன்னு, எங்களோடயும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Tuesday, September 11, 2012

ரஜினி படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் பவர் ஸ்டார்...


ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தின் ரீமேக்கை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது வேந்தர் மூவிஸ். அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

மிர்ச்சி சிவா, பிரகாஷ் ராஜ், இஷா தல்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். பத்ரி இயக்கி வருகிறார்.

ரஜினி வேடத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், மாதவி வேடத்தில் இஷா தல்வார், செளகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா என்று அனைவரும் எந்த வேடத்தில் நடிக்கிறார்கள் என்று உறுதி செய்தார்கள்.

தற்போது நாகேஷ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியை மீசையோடு ஒரு வேடம், மீசையில்லாமல் ஒரு வேடம் என்று நடிக்க சொல்வார் நாகேஷ். அவருடைய தூண்டுதலின் பேரிலேயே ரஜினி இரு வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார்.

நாகேஷ் நடித்த முக்கிய வேடத்தில் பவர் ஸ்டார் நடிக்க இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Monday, September 10, 2012

ஷங்கர் படத்தில் நடிப்பதோடு, பாடகர் ஆகிறார் நம்ம பவர் ஸ்டார்ஒரு காலத்தில் நக்கல் நையாண்டிப் பொருளாகப் பார்க்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், இன்று நிஜமாகவே 'பவர்' கூடி வருகிறார்.

ஷங்கர் படம், பாலா படம், சந்தானத்துடன் ஒரு படம் என ஏகப்பட்ட வாய்ப்புகள், கூடவே சொந்தமாக ஏழெட்டு பட தயாரிப்புகள் என உடம்பெல்லாம் மச்சம் கொண்ட அதிர்ஷ்ட பார்ட்டியாகிவிட்டார்.

இப்போது பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் சீனிவாசன்.

அவரது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக அவரே சொந்தக் குரலில் பாடியுள்ளாராம். இந்தப் பாடலை விரைவில் யு ட்யூபில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலிருக்கிறார் சீனிவாசன்.

இன்றைய சூழலில் பல முக்கிய படங்கள் யு ட்யூபை விளம்பர சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. எனவே தானும் அந்த யுத்தியைக் கையாளுவதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யு ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைத் தளங்களில் சீனிவாசனுக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் டிவிட்டருக்கு தடை விதிக்கிறது மத்திய அரசு? Govt Was Planning Ban Twitter 8 States
தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களில் டிவிட்டர் இணையளதளத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வடகிழக்கு மாநில மக்கள் இடையே கடந்த மாதம் வதந்தியை கிளப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டதாக கூறி இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் கடந்த மாதம் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் இந்த வதந்தி கிளப்பப்பட்டதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இதனையடுத்து இந்த மாநிலங்களில் டிவிட்டர் இணையதளத்தை எப்படி முடக்குவது பற்றி தொழில்நுட்ப வல்லுனர்களிடம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசனை கேட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி இத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலத்தவர் இடையே வதந்தியை கிளப்பியதாக இதுவரை 310 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

Friday, September 7, 2012

ரஜினி விரும்பிப் படித்த மொழிபெயர்ப்புப் புத்தகம்!சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி 3டி-யை ஒரு புதிய படத்துக்கு நிகரான ஏற்பாடுகளுடன் வெளியிடத் தயாராகிறது ஏவிஎம் நிறுவனம்.

இந்தப் படத்தை ஜப்பானில் அதிக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறார்கள். படத்தின் விளம்பரத்துக்காக ஹீரோயின் ஸ்ரேயாவை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் இருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு. இதை ஸ்ரேயாவே பேட்டிகளில் கூறிவருகிறார்.

சமீபத்திய பேட்டியில், “5 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தாலும், இப்போது பார்த்தாலும் புத்தம் புதிதாகவே இருக்கும். மீண்டும் மீண்டும்மக்கள் பார்க்க விரும்பும் படம் சிவாஜி. இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது,” என்றார்.

ரஜினி விரும்பிப் படித்த மொழிபெயர்ப்புப் புத்தகம்!The Legend of the Holy Drinker – இது ஆஸ்திரிய எழுத்தாளர் ஜோசப் ரோத் எழுதிய ஆங்கில நாவல். இதை தமிழில் புனிதமான குடிகாரன் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார் சுரா.

இந்த நூல்குறித்து சுரா எழுதியுள்ளது:

“அதிர்ஷ்டம் பல தடவைகள் வந்து ஒரு மனிதனின் கதவைத் தட்டிக் கொண்டே
இருக்கும். அதை அவன் அந்தச் சமயத்தில் கவனமாக இருந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கவனமாக இல்லாமல் போய்விட்டால், இந்த புதினத்தின் கதாநாயகனான ஆண்ட்ரியாசின் நிலைதான் அவனுக்கும். இது கதை அல்ல- வாசிப்பவர்களுக்கு பாடமும் கூட. சில வருடங்களுக்கு முன்பு, நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னுடைய இந்த மொழி பெயர்ப்பு நூலை முழுமையாக வாசித்து, மிகவும் ஈர்க்கப்பட்டார்!”

-Thanks என்வழி ஸ்பெஷல்

Monday, August 27, 2012

வசூலை அள்ள வரும் அசத்தல் படங்கள்..!
பொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் மெகா படங்கள் பற்றித்தான் முன்னோட்டம் எழுதுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே மாறி வருகிறது. காரணம்.. தீபாவளிக்கு வெளியாகப் போவது ஒரு படமோ.. இரண்டு படங்களோ என்றாகிவிட்டது நிலை.


ஒரு புதிய படம்... அதுவும் முக்கிய நடிகரின் பெரிய படம் ரிலீசாகிறதென்றால், அது கிட்டத்தட்ட தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதனால் வேறு படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காத நிலை... எனவே, கிடைக்கிற இடைவெளியில் படங்களை சோலோவாக அதிக அரங்குகளில் வெளியிட்டு வசூலை அள்ளுவதுதான் இன்றைய ட்ரெண்ட்!


வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.


இவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்...மாற்றான்

சூர்யாவின் இரட்டை வேட நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கான்செப்டை ஹாலிவுட் படங்கள் சில சொல்லியிருந்தாலும், தமிழில் எப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்ற ஆர்வக் கேள்வி ரசிகர்கள் அனைவர் மனதிலுமே உண்டு. முற்றிலும் முதல் நிலைக் கலைஞர்கள், முதல் தர இயக்குநர் என எல்லா வகையில் எதிர்ப்பார்ப்பைக் கிளறும் படம். செப்டம்பர் - அக்டோபர் மாத ஷெட்யூலில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரே படம் மாற்றான்தான்! அக்டோபர் 12-ம் தேதி வெளியாகிறது.. தியேட்டர்கள் விவரம் விரைவில்.


விஸ்வரூபம்


நட்சத்திர முக்கியத்துவம் என்ற வகையில் பார்த்தால், உலக நாயகன் கமல்ஹாஸனின் விஸ்வரூபம்தான் முதலிடத்தில் நிற்கிறது. அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் இது. மாற்றான் 12-ம் தேதி ரிலீஸ் என்பதால் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும். பெரும் வியாபாரம், உலகளாவிய ரிலீஸ் என்ற வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.


சுந்தர் பாண்டியன்இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நாயகனாக நடிக்கு அவரிடம் இணை இயக்கநராக இருந்த எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்'. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.


இந்தப் படம் செப்டம்பர் 14-ல் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. தேதி மாறவும் வாய்ப்புள்ளது.


தாண்டவம்


விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவரும் படம் தாண்டவம். கிட்டத்தட்ட லண்டனிலேயே முக்கால்வாசிப் படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய்க்கு இந்தப் படம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தெய்வத்திருமகள் வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதால் ரசிகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும். படத்தைப் பார்த்தவர்கள் நிச்சய வெற்றி என்கிறார்கள். செப்டம்பர் இறுதியில் வெளியாகும் படம் இது.


பரதேசிபாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் பரதேசி. பொதுவாக பாலாவின் படங்கள் எப்போது தொடங்கி, எப்போது முடிந்து, எப்போது திரையைத் தொடும் என்பதை முன்கூட்டி கணிப்பது சிரமம். ஆனால் பரதேசி அவற்றையெல்லாம் பொய்யாக்கிவிட்டது.


படத்தின் கடைசி காட்சி எடுத்த மறுநாளே எப்போது ரிலீஸ் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இப்போதைக்கு தயாரிப்பாளரும் பாலாதான். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர். அக்டோபர்19-ல் படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் லண்டனில் இசை வெளியீட்டை வைத்திருக்கிறார்கள்.


இவற்றைத் தவிர அமீரின் ஆதி பகவன், விஜய் நடிக்கும் துப்பாக்கி, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், செல்வராகவனின் இரண்டாம் உலகம், பிரபு சாலமனின் கும்கி போன்ற படங்களும் உள்ளன. ஆனால் இவை அக்டோபருக்குப் பிறகே ரிலீசாகும் என்று தெரிகிறது. இடையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறு படங்கள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.


சிவாஜி 3 டி


இவற்றை விட மிக முக்கியமான படமாக இப்போது முன் நிற்பது சூப்பர் ஸ்டாரின் அதிரடிப் படமான சிவாஜி. ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலை அள்ளிய இந்தப் படம் பக்கா 3 டியில் தயாராகி, புதிய படங்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மற்ற நடிகர்களின் புதிய படங்களுக்கு பாதிப்பில்லாமல் முன்கூட்டியே வெளியிட்டுவிடுங்கள் என ரஜினியே ஏவிஎம் நிறுவனத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
முகமூடி


மிஷ்கின் படங்களில் ஆபாசம், வன்முறை அதிகமிருக்காது. வன்முறை ரசிக்கிற மாதி‌ரி இருப்பதால் சென்சார் பெ‌ரிதாக‌க் கண்டுகொள்வதில்லை. அதிகபட்ச ஆபாசம் என்றால் மஞ்சள் சேலையில் வரும் கானா. அதுவும் உடல் ஆபாசம் அல்ல. ‌ரிப்பீட் செய்வதால் உண்டாகும் அசௌக‌ரியம். 


ஒருநல்ல செய்தி, முகமூடியில் இந்த மஞ்சள் காமாலை இல்லை. ‌ஜீவாவின் கரோத்தே சண்டையைப் பார்த்தால் சராச‌ரி படத்தின் வன்முறைகூட தெ‌ரியவில்லை. ஃப்ரெண்ட்லி மேட்ச் போலிருக்கிறது. அப்புறமென்ன... சென்சார் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்து முகமூடிக்கு முதல் வெற்றியை ப‌ரிசளித்திருக்கிறது.


முகமூடி, சிலந்தி மனிதன், இரும்பு மனிதன் இவர்கள் எல்லாம் சிறுவர்களின் ஆர்வத்தால் உயிர் வாழ்கிறவர்கள். ஏ சான்றிதழ் கிடைத்தால் இவர்கள் எங்கே போவார்கள்? அந்தவகையில் முதல் ப‌ரிட்சையை டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்திருக்கிறான் முகமூடி.

Tuesday, July 31, 2012

டாஸ்மாக் கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு..! ஜெயலலிதா அதிரடி முடிவு?


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.

அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Thursday, July 26, 2012

வேதனையோடு ஓதுங்கிபோகிறேன்.. ரஜினியின் அதிர்ச்சி பேட்டி..!


என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.

பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:

இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.

இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.

நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு... என்று கூறினேன். 'உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்' என்றார்.

எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல... என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.

ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்... நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.

கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல... லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.

என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.

காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.

என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் - படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.

சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.

சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.

ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்..."நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்"னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்...," என்றார்.

Friday, June 22, 2012

ரஜினி கோச்சடையான் முழு கதை...


இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான்.

ஆரம்பத்தில் இது வெறும் அனிமேஷன் படம்தானே, எப்படி வரப் போகிறதோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள், நாளுக்கு நாள் அந்தப் படம் குறித்த உண்மையான தகவல்கள் தெரிய வந்ததும், அமைதியாகி, ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது சௌந்தர்யாவுக்கு நிச்சயம் நல்ல செய்திதான்!

 
இந்தப் படத்துக்கு தமிழ் திரையுலகம் தாண்டி, இந்தி, தெலுங்கு, ஜப்பான், கொரியா, யுஎஸ் என பல நாடுகளிலும் விசாரிப்புகள் தொடர்கின்றன. ஹாலிவுட்டில் நடிக்காமலேயே, ஹாலிவுட் நடிகருக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது.

கோச்சடையான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சில பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் ரஜினி ஹாங்காங் செல்லப் போகிறார்.
 

இந்த நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் ரஜினி, அப்பா - மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கதைப்படி ரஜினி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் பண்டைய தமிழ் மன்னர்கள். ரஜினி, ஜாக்கி ஷெராப் ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையில் சண்டை நடக்கிறது.

இந்த சண்டை அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ரஜினியின் மகனுக்கும் (ரஜினி), ஜாக்கி ஷெராப் மகனான ஆதிக்கும் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இதில் ரஜினிக்கு உதவும் பாத்திரத்தில் சரத்குமார் வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்கிறார்கள். படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிந்துவிட்டாலும், தொழில்நுட்ப நேர்த்திக்காக இன்னும் சில மாதங்கள் கூட அவகாசம் தேவைப்படுகிறதாம். ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தபர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

 இன்னும் விரிவான கதைக்கும் விமர்சனத்திற்கும் காத்திருப்போம்...

Thursday, May 3, 2012

எம்ஜிஆரை இழிவுபடுத்தும் விஜயகாந்த்... இனி எழுவாரா?


ஒரு காட்டில் வீரதீரப் புலி ஒன்று இருந்ததாம். அந்தப் புலியைப் பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் அடங்கி ஒடுங்கி வாலைச் சுருட்டியபடி இருந்தனவாம். 

இதைக் கவனித்த ஒரு பூனைக்கு, தானும் அந்தப் புலி போல் ஆகி, எல்லா விலங்குகளையும் அடக்கி ஆள வேண்டும் என்ற விபரீத ஆசை வந்து விட்டது. 

எனவே, புலியைப் போன்ற உருவத்தைத் தன் உடலில் கொண்டு வருவதற்காக வட்ட வட்டப் புள்ளியாக தனது உடலில் சூடு போட்டுக் கொண்டதாம். சூடு தாங்காமல் அலறியபடி அங்கும் இங்கும் ஓடி, பின் தண்ணீரில் உடலை நனைத்துவிட்டு, "நாம் பேசாமல் பூனையாகவே இருந்திருக்கலாமே, ஏன் இந்த விபரீத விளையாட்டில் இறங்கினோம்' என்று சிந்தித்துக் கண்ணீர் விட்டதாம். 

மேற்சொன்ன இந்தக் கதையைப் போல் தான் விஜயகாந்தின் நடவடிக்கைகள் உள்ளன. தன்னை எம்.ஜி.ஆராக பாவித்துக் கொண்டு பேசுவதும், தான், கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று தன்னைத் தானே புகழாரம் சூட்டிக்கொண்டு, மக்களுக்காகப் பாடுபடுவதாக பிரசாரம் செய்வதும் வேடிக்கையாக உள்ளது. 


தவிர, எம்.ஜி.ஆர்., சினிமா வழி அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்தாலும், ஒரு போதும் அவர் சினிமா பாணியில் நடந்து கொண்டதில்லை. பொதுக்கூட்ட மேடைகளிலும் சரி, சட்டசபையிலும் சரி, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டதில்லை. கையை நீட்டி, நாக்கை மடித்து தகாத வசனங்களைப் பேசியதில்லை. மிக மிக கண்ணியத்துடனும், நாகரிகத்துடனும் நடந்து கொண்டார். 

அண்ணாதுரையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைசி வரை கடைபிடித்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே. தனக்கு கிடைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்து, தான் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசிடம் சுமுகமாக நடந்துகொண்டு, நிதி ஆதாரங்களைக் கேட்டுப் பெற்றிருக்கலாம். 

அதை விட்டுவிட்டு, வீணாக வாயைக் கொடுத்து, வம்பில் மாட்டிக் கொள்வது தேவையா? பொது வாழ்வில் இருப்போருக்கு வேகத்தை விட, விவேகம் தேவை. ஆனால், விஜயகாந்திடம் இருப்பது வேகம் மட்டுமே. விஜயகாந்த் தனது பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்க நேரிடும்.

Friday, March 30, 2012

ஏள் தோற்கிறார் வைகோ..? எழுச்சிகள் சில வீழ்ச்சிகள்...?


கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், "புழுதிப்புயல்' சாரி, "புரட்சிப்புயல்' வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார். 

சிறந்த பாராளுமன்றவாதி என பெயர் பெற்ற வைகோ, சமீப காலமாக குழப்பவாதியாக, சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கத் தெரியாதவராக இருக்கிறார். அவருக்கு, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம், பேச்சு திறமை இருந்தும், எதுவும் சாதிக்க முடியாததற்கு, அவரின், "எடுத்தேன் கவிழ்த்தேன்' முடிவுகளே காரணம். 

எந்த ஒரு செயலிலும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு எதிர்க்கருத்தை எடுப்பதே, வைகோவின் வேலையாக உள்ளது. இதனால் தான், போதிய திறமை இருந்தும், அவரால் வெகுஜன தலைவராக வரமுடியவில்லை. 

அவர் எடுத்த, அவரைக் கவிழ்த்த சில முடிவுகள் இதோ...

தி.மு.க.,வில் இருந்து, துரோகி என்ற பட்டம் கிடைத்ததால் வெளியேறியதாக கூறி, புதுக்கட்சி கண்டார். "ஊழல் ராணி ஜெ.,வின் சொத்துக்களை பறிமுதல் செய்வேன்' என்ற கோஷத்துடன், கன்னியாகுமரியில் இருந்து, சென்னை நோக்கி நடைபயணம் சென்றார். 

இளைஞர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது. ஆனால், முடிவில் நடந்ததோ வேறு கதை. எந்த கட்சியை எதிர்த்து நடைபயணம் செய்தாரோ, அதே கட்சியுடன் கூட்டணி வைத்தார். இவரின் இந்த முடிவால், இவர் மீது நம்பிக்கை வைத்த பலர் பின்வாங்கினர். 

அடுத்த சில ஆண்டுகளில், எந்த கட்சியில் இருந்து குறை கூறி வெளியேறினாரோ, அந்த தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தார். இதனால், மீதியிருந்த பலரும் சொல்லாமல் வெளியேறினர். 

ராஜிவ் கொலையில், 20 ஆண்டு விசாரணைக்குப் பிறகு, மூன்று பேருக்கு விதித்த தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி, தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, நியாயமான மனிதர்களை கொதிப்படையச் செய்தது. அவரது தம்பியையோ, மகனையோ, கொன்றிருந்தால் விட்டுவிட சொல்வாரா இவர்? ஏன் இவருக்கு இப்படி ஒரு போராட்டம்? 

சமீபத்தில் நாடே இருளில் மூழ்கிக் கிடக்க, கூடங்குளத்தை திறக்க தவமிருக்கின்றனர். இவரோ, அதை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். 

தனது சொந்த தொகுதியிலேயே, இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்க முடியாத இவர், மக்களால் புறக்கணிக்கப்பட்ட இவர், இனியேனும் வெகுஜன மக்களின் விருப்பத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Thursday, March 29, 2012

'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான' அதிமுகவினர்!


எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சசிகலா நீக்கப்பட்டபோது சித்தாந்தமாக பேசி சிலாகித்துப் போன அதிமுகவினர் இப்போது எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டதே என்று திகிலடித்துப் போய் நிற்கின்றனராம்.


காரணம், சசிகலாவின் மறு வருகை.. இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், பின்னர் சேர்ந்து கொள்வார்கள், இது என்ன புதுசா என்றுதான் 4 மாதத்திற்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு அதிமுகவை விட்டும் போயஸ் கார்டன் வீட்டை விட்டும் ஜெயலலிதா தூக்கியபோது அனைவருமே நினைத்தார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவின் செயல்பாட்டு வேகத்தைப் பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும், பரவாயில்லையே உண்மையிலேயே சசிகலாவை துரத்தி விட்டு விட்டாரே என்றுதான் நினைத்தனர்.


விரட்டிய வேகத்தில், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக வழக்குகள் பாயத் தொடங்கின. இதுவரை நடராஜன், திவாகரன், ராவணன் என மூன்று பேர் சிறைக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டுள்ளனர். அடுத்து மகாதேவன், தொடர்ந்து சசிகலா என பெயர் அடிபட்ட நேரத்தில்தான். அக்கா.. என்னை மன்னிச்சுடுக்கா என்று அறிக்கை வந்துள்ளது சசிகலாவிடம்...


சசிகலாவின் அறிக்கை தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதிமுக சார்ந்த, அதிகார மட்ட, காவல்துறை அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், இனி மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்கும், நாமெல்லாம் மறுபடியும் கைகளை மாற்றிக் கட்ட வேண்டும் என்ற பதட்டமே.


சசிகலா நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவான கட்சிக்காரர்களை மேலிடத்திற்குப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர் தற்போது அதிர்ச்சி அடைந்து போய் நிற்கின்றனராம். தாங்கள் சசிகலாவால் பழிவாங்கப்படலாம் என்ற பயம்தானாம் அது.


அதேபோல சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீஸாரும் கூட பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகள் மட்டத்திலும், இனி என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, சசிகலா தலையீடு மறுபடியும் இருக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனராம்.


மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம், சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரும் ஆட்டம் போட ஆரம்பிப்பார்களே, அதை முதல்வர் ஜெயலலிதா எப்படித் தடுக்கப் போகிறார் என்ற கேள்விகள் அதிமுகவினர் மத்தியில் இல்லாமல் அரசு அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது.


சசிகலாவின் மறு வருகையால், உண்மையான அதிமுகவினர்தான் பெரும் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். கட்சி உருப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டு தற்போது மறுபடியும் கலங்கலாக்கி விட்டனரே என்ற வேதனையிலும், விரக்தியிலும் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் சசிகலா நீக்கப்பட்டபோது அதற்கு கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என பல தரப்பிலும் பெரும் வரவேற்பு காணப்பட்டது. காரணம், சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தை சூறையாடி போட்ட ஆட்டம்தான். கருணாநிதி குடும்பத்தினரை மிஞ்சி விட்டனரே என்றுதான் அத்தனை பேரும் சசிகலா குடும்பத்தி்னர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.


சசிகலா நீக்கத்தை வைத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பல முக்கியப் புள்ளிகளும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப யோசித்து வருவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அத்தனையும் தவிடுபொடியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா சண்டை என்பது பொம்மை விளையாட்டு போல என்றாகி விட்டது. எனவே அதிமுகவின் தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இந்த உண்மையான அதிமுகவினர் உள்ளனராம்.


சசிகலாவின் மறு வருகை அதிமுகவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

Friday, March 23, 2012

தமிழ் ஈழம் பிறக்க வேண்டும், அதுதான் எனது வாழ்நாள் லட்சியம்- கருணாநிதி


தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிய செய்தியைத் தொடர்ந்து செய்தியாளர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...

கேள்வி: ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியதால், இலங்கையில் உடனடியாக எந்தமாதிரியான நெருக்கடி ஏற்படும்?

கருணாநிதி: இப்போதே மிரட்டல், பயமுறுத்தல்கள் எல்லாம் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு அங்கேயுள்ள சிங்களவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன. இதன்மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று நம்முடைய பிரதமருக்கு "பேக்ஸ்'' மூலமாக கேட்டுக் கொண்டு செய்தி அனுப்பியிருக்கிறேன்.

கேள்வி: ஜெனீவாவில் இந்தத் தீர்மானத்தில் இருந்த கடுமையான வார்த்தைகளை எடுத்துவிட்டு மென்மையான வார்த்தைகளை தீர்மானத்தில் சேர்த்ததாகவும் சொல்கிறார்களே? குறிப்பாக முதலில் "போர்க்குற்றங்கள்'' என்ற வார்த்தைகள் இருந்ததாகவும், பின்னர் அதை எடுத்து விட்டதாகவும் சொல்கிறார்களே?

கருணாநிதி: அது உண்மையாக இருந்தால் அதைப் பற்றிய திருத்தங்கள் வருவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

கேள்வி: மத்திய அரசு தற்போது இந்த முடிவினை எடுக்க தி.மு.கழகம் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதே மாதிரியான அழுத்தத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் கொடுத்திருக்கலாமே?

கருணாநிதி: கொடுத்தோம். ஆனால் அந்தக் கருத்துகள் யார் யாரால் பாழ்படுத்தப்பட்டன என்பது கூட நாடறிந்த உண்மை.

கேள்வி: உலகத்தின் பார்வை ஒட்டுமொத்தமாக இதிலே திரும்பியிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

கருணாநிதி: என்னைப் பொறுத்தவரையில் அது தான் குறிக்கோள். நான் அண்மையிலே என்று மாத்திரமல்ல, கடந்த காலத்திலே பெரிய பத்திரிகைகளின் நிருபர்கள் சில பேர் "உங்களுடைய நிறைவேறாத கனவு என்ன'' என்று என்னிடம் கேட்ட போது, "தமிழ் ஈழம் தான்'' என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனவே அந்த கனவு நிறைவேறுகிற வரை, அது உருவாகிற அளவுக்கு என்னுடைய போராட்டமும் இருக்கும்.

கேள்வி: தற்போது ஐ.நா. வில் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிய காரணத்தால் இந்திய, இலங்கை உறவுகள் பாதிக்காதா?

கருணாநிதி: இப்போது அதைப்பற்றியெல்லாம் சொல்ல முடியாது.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு இனி மத்திய அரசு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய வேண்டும்?

கருணாநிதி: இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் யோசித்து, முடிந்தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: அமெரிக்கா கொண்டு வந்ததால் தான் இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதா?

கருணாநிதி: இந்தத் தீர்மானம் வந்ததால் வெற்றி பெற்றது.

கேள்வி: தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், இலங்கை அரசுக்கு என்னென்ன நெருக்கடிகள் ஏற்படும்? இலங்கைத் தமிழர்களுக்கு என்னென்ன பயன்கள் ஏற்படும்?

கருணாநிதி: அவர்கள் இதுவரை இலங்கைத் தமிழர்களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடுகின்ற நெருக்கடி ஏற்படும். ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள். சவக்குழிக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல்லவும் இலங்கை அரசு கடமைப்பட்டிருக்கிறது.

கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே தான் கொடுமைகளுக்கெல்லாம் காரணம், அவர் சர்வ தேச குற்றவாளி என்று தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே?

கருணாநிதி: இப்போது தான் பெரும்பாலான நாடுகளுடைய தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

Saturday, March 3, 2012

சும்மா சிரிச்சிட்டு போங்க...


 யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வர சூப்பர் ஐடியா!

4 மணிக்கு எழுந்திரிச்சு பிரஸ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் குளிங்க. 5 மணி ஆயிடும் அம்மாவ எழுப்பினா காபியோ டீயோ தருவாங்க. 6 மணிக்கு கிளம்பி 6.30க்கு யுனிவர்சிட்டி போயிடுங்க. நீங்கதான்
யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட

**********************************************************************************. 

ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.
 என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்

எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்

***********************************************************************************
திருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர். கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார்.

அக்கம் பக்கம் நின்றவர்கள் நீ ஏன் அழுகிறாய்?... என்று வினாவினார்கள். அதற்கு அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று.


அப்போ அருகில் நின்ற கணவன் சொன்னார்!... ஏன் கவலைப்பட்டு அழுகிறாய்?... வெகு விரைவில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்!...... 
**********************************************************************************
இது என்னங்க வரவேற்பு பேனர்ல ’கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக’ ன்னு வித்தியாசமா எழுதியிருக்காங்க ?'

'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் !

 Re-Post

Monday, February 13, 2012

ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ரகசிய ஆலோசனை! மாறுகிறதா கூட்டணி..!


தனியார் விமானம் ஒன்றில் 'தற்செயலாக' ஒன்றாகப் பயணித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவராகிய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விமான பயணத்தின்போது ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக 'வானிலிருந்து' வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. அதேபோல தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் நடக்கும். கொள்கை, லட்சியம், கோட்பாடு, குறிக்கோள் என்று எதுவும் அரசியலுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் கூடிக் கொள்வார்கள், தேவையில்லாவிட்டால் கூச்சலிட்டுக் கொண்டு பிரிந்து கொள்வார்கள். யார் யாருடன் சேருகிறார்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியமே இல்லை.

அதைத்தான் தமிழக அரசியல் களம் கடந்த பல காலமாகவே சந்தித்துக் கொண்டிருக்கிறது. திமுகவிலிருந்து விரட்டப்பட்ட வைகோ மதிமுகவை ஆரம்பித்தார். பின்னர் அவரே திமுகவுடன் போய்க் கூட்டணி வைத்தார். பாமகவின் கூட்டணி வரலாறும், அதற்கு அது உதிர்த்த தத்துவ முத்துக்களும் மக்களால் மறக்க முடியாதது. அதேபோலத்தான் காங்கிரஸின் கூட்டணிகளும், தாவல்களும். தத்துவ ரீதியாக வலுவானவர்கள் என்று கூறப்படும் கம்யூனிஸ்டுகளும் கூட மாறி மாறி கூட்டணி மாறித்தான் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் புதிதாக ஒரு கூட்டணி தாவல் கட்சி தமிழக அரசியல் வானில் உதயமாகியுள்ளது. அது தேமுதிக. தனித்தே போட்டியிடுவோம், அதுதான் எங்களது லட்சியம், கொள்கை என்றெல்லாம் கூறி தனியாகவே போட்டியிட்டும் வந்த கட்சிதான் தேமுதிக. ஆனால் அந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது நடுநிலை வாக்காளர்கள் அத்தனை பேரும் அதிர்ந்துதான் போனார்கள்.

ஆனால் இந்தக் கூட்டணி 6 மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு சட்டசபையில் வைத்து இந்த கூட்டணியை சிதறு காய் போல உடைத்தெறிந்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா.

மேலும் சங்கரன்கோவிலில் ஒண்டிக்கு ஒண்டி நிற்கத் தயாரா என்றும் சவால் விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் குறைந்தது 3வது இடத்தையாவது பெற்றாக வேண்டிய நிலையில் அந்தக் கட்சியும், கடந்த முறை வாங்கியதை விட அதிக அளவில் வெல்வதோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தையும் காட்டியாக வேண்டிய நிலையில் அதிமுகவும் உள்ளது.

இந்த நிலையில் புதிய கூட்டணிக்கான வெளிச்சக் கீற்றுகள் அரசியல் வானில் தென்படத் தொடங்கியுள்ளது. அந்த மடம் இல்லாவிட்டால் சந்தை மடம் என்பது போல அதிமுக இல்லாவிட்டால் திமுக என்ற கூட்டணி தர்மத்திற்கேற்ப தற்போது திமுகவை நோக்கி தேமுதிக வேகமாக நகரத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

இதை நிரூபிக்கும் வகையில் நேற்று மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த தனியார் வி்மானத்தில் விஜயகாந்த்தும், ஸ்டாலினும், கார்த்தி சிதம்பரமும் ஒன்றாகப் பயணித்துள்ளனர். விமான பயணத்தின்போது மூவரும் கூடி ரகசியமாக பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தேமுதிக கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்துக்காக விஜயகாந்தும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கைக்காக மு.க. ஸ்டாலினும் விருதுநகர் சென்றிருந்தனர். இருவரும் மாலையில் தனியார் விமானம் மூலம் சென்னைக்குத் திரும்ப மதுரை வி்மான நிலையம் வந்தனர். முதலில் ஸ்டாலின் வந்து விட்டார். பின்னர்தான் விஜயகாந்த் வந்தார். ஸ்டாலின் வந்திருப்பதை கட்சிக்காரர்கள் அவருக்குச் சொல்ல, நேராக ஸ்டாலினிடம் சென்று பேசினாராம் விஜயகாந்த். அவரும் என்ன கேப்டன் எப்படி இருக்கீங்க என்று அன்புடன் பேசினாராம். இருவரும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனராம். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் வேறு யாரும் இல்லையாம்.

பின்னர் விமானம் கிளம்ப சில நிமிடங்கள் இருந்தபோது கார்த்தி சிதம்பரம் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் விமானத்தில் இந்த மூன்று பேரும் சந்தித்துப் பேசினராம். நிச்சயமாக அவர்கள் அரசியல் பேசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. விமான பயணத்தின்போது மூன்று பேருமே இடைவிடாமல் பேசிக் கொண்டிரு்ந்ததாகவும், ஊர் வந்து இறங்கியபோது மூவருமே இணை பிரியா நண்பர்கள் போல ஒருவருக்கொருவர் விடை பெற்றுக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் சாராம்சம் என்னவாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. நிச்சயமாக சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான பூர்வாங்க ஆலோசனையாகவே இதை பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மேலும் ஏற்கனவே கூட்டணியாக உள்ள திமுக, காங்கிரஸுடன் தேமுதிகவும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் என்றும் திமுக, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கையுடன் கூறத் தொடங்கியுள்ளனர்.

தங்களது கூட்டணியின் பலத்தை சங்கரன்கோவிலில் பரீட்சித்துப் பார்க்கவும் இவர்கள் முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது வேட்பாளரை இவர்கள் களம் இறக்குவார்களா அல்லது தேமுதிகவை களத்தில் இறக்கி அக்கட்சிக்கு திமுகவும், காங்கிரஸும் ஆதரவு தருமா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது.

Tuesday, January 31, 2012

ஹெல்மெட் விவகாரத்தில் அடுத்த அதிரடி ...


ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று ராஞ்சி மாவட்ட நிர்வாகம் அங்குள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் இன்று உத்தரவிட்டுள்ளது.


ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சமீப காலமாக ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் அதிக அளவில் சி்க்கி படுகாயமடைந்ததும், உயிரிழந்ததும் தெரியவந்தது.


இதையடுத்து, ராஞ்சி நகரில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது.
மேலும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், ராஞ்சி நி்ர்வாகம் நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதன்படி, ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அந்த நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பெட்ரோல் பங்குகளில் அறிவிப்பு பலகை வைக்கவும் அந்த நகர நிர்வாகம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. 


இதுதவிர, ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்க பெட்ரோல் பங்குகளில் கட்டாயம் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், அந்த வாகனங்களின் பதிவு எண்களை குறித்து வைக்கவும் அந்த நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


ஏற்கனவே போபால் மற்றும் நொய்டா நகரங்களின் நிர்வாகத்தினரும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

Wednesday, January 25, 2012

கோவையில் அப்துல் கலாமின் கொடும்பாவி எரிப்பு


முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள அச்சங்களைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சி செய்து வருகிறார். அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர் அது மிகவும் பாதுகாப்பானது, அதனால் யாரும் கவலைப் பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை மேம்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாணவன் கலாமின் உருவ பொம்மைக்கு தீ வைத்தார். அதை உடனே போலீசார் அணைத்துவிட்டு அந்த 12 மாணவர்களையும் கைது செய்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார். அவருக்குப் போகும் இடமெல்லாம் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கொடும்பாவி தமிழகத்தில் முதல்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல்முறையாக எரிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, January 17, 2012

பனிக்காலத்துக்கு ஏற்ற டாப் 10 காய்கள், பழங்கள், கீரைகள்!சீசனுக்கு ஏற்ற காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது உடலுக்கு ஊட்டம் தரும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பனிக்காலத்தில் இந்த காய்கறிகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

அதிரடி ஆரஞ்சு

சிட்ரஸ் அமிலச்சத்து நிறைந்த பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்தது. இதில் உள்ள பொட்டாசியம், போலேட், தாது உப்புகள், நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது.

ஊட்டம் தரும் ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள். அந்த அளவிற்கு பனிக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது பயன்தரக்கூடியது. நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு உற்சாகம் தரும்.

கண்ணுக்கு ஒளி தரும் காரட்

கிழங்கு வகை காயான காரட் உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது. கரோட்டின் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் அதிகம் கொண்டுள்ளது. மேலும் வைட்டமின் பி,சி,டி,ஈ மற்றும் கே போன்ற உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. கால்சியம் பெக்டேட் காரட்டில் அதிகம் உள்ளது. இது பனிக்காலத்தில் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

கடுகு இலைகள்

பனிக் காலத்தில் கடுகு செடியில் இருந்து கிடைக்கும் இலைக்கள் மிகவும் சத்து நிறைந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். பச்சை கடுகில் ஆண்டிஆக்ஸிடென்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் வைட்டமின்கள், தாது உப்புகள், கரோட்டீன்கள் அதிகம் உள்ளன. 

பச்சை பட்டாணி

பச்சைப்பட்டாணியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஊட்டச்சத்தினை அதிகரிக்கும். இது வயிறு புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நார்ச்சத்து டர்னிப்

கிழங்குவகை காய்கறியான டர்னிப்பில் போலேட், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் உள்ளன. இந்த டர்னிப் வகை காய்கறியை பனிக் காலத்தில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

பாலக்கீரை

சத்து நிறைந்த உணவாக கொண்டாடப்படும் பாலக்கீரையில் ப்ளேவனாய்டுகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் 

பனிக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.

வெந்தையக்கீரை

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. இது நார்ச்சத்து அதிகம் கொண்டது. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுகிறது. வெந்தைய சப்பாத்தி பனிக்காலத்திற்கு ஏற்ற உணவு. thats tamil

முள்ளங்கி சாம்பார்

பனிக்காலத்தில் முள்ளங்கி சாம்பார் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இந்த காய்கறியில் பொட்டாசியம், போலிக் அமிலம் அதிகம் உள்ளது. இதனை சாலட் போலவும் சாப்பிடலாம்.

Saturday, January 7, 2012

தமிழ் சினிமாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் சிறந்த நடிகருக்கு விருது


சிறந்த தமிழ்ப் படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள், கலைஞர்களுக்கு 'எடிசன் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு

இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆணடாள் பள்ளி அரங்கில் நடக்கிறது.

2011-ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். தனி குழு எதுவும் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யவில்லை. ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக www.edisonawards.in என்ற இணையதளத்தின் மூலம் வாக்கெடுப்பு நடந்து வருகிறது. தவிர, முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்களின் பேஸ்புக், யாஹூ மற்றும் கூகுள் குரூப்ஸ் ஐடிகள் பெறப்பட்டு, அவர்களுக்கு நியூஸ்லெட்டர்கள் அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது. இதுபோல பல லட்சம் நியூஸ்லெட்டர்கள் அனுப்பப்படுவதா விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் இணையதளம் பயன்படுத்தாத பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 110 மையங்களில் வாக்கு சீட்டு முறைப்படி ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை வாக்களிக்கவும், கல்லூரி, ஷாப்பிங் மால், பீச் போன்ற இடங்களிலும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த எடிசன் விருது வழங்கும் விழா 7 நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மேலும் மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏற்பாட்டின் கீழ் மலேசிய நடன கலைஞர்கள், பாடகர்கள், சிங்கப்பூர் வசந்தம் டிவி நடன கலைஞர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

முதல் ரஜினி விருது...

இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மரியாதை, வர்த்தக எல்லையை விரிவுபடுத்தியது மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் நிகரற்றுத் திகழ்வது என பெருமை சேர்த்தவர் என்பதால் இந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் வழங்குவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ரஜினி பெயரில் தனி விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவர் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. விஜய், தனுஷ், அஞ்சலி, ரிச்சா, கவிஞர் வாலி, இயக்குநர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

250 வெளிநாட்டுப் பார்வையாளர்கள்

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் ரசிகர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் தவிர, வெளிநாட்டு அமைச்சர்கள், வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே 250 பேர் பங்கேற்கவிருப்பதாக நிகழ்ச்சியின் அமைப்பாளர் 'மைதமிழ்மூவிஸ்' ஜெ செல்வகுமார் தெரிவித்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...