Friday, April 29, 2011

மங்காத்தா நிறுத்தம் பரபரப்பு தகவல்...


எங்கள் ஊரில் இருக்கும் சிலர் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் புளியமரத்தடியில் எப்போதும் மங்காத்தா ஆடிக்கொண்டு காலத்தையும் பணத்தையும் விரயம் செய்துக் கொண்டிருந்தனர். 

இதனால் பலகுடும்பங்கள் வறுமையில் வாட நேர்ந்தது. குடும்ப பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினார்கள். இதற்கு முடிவுகட்ட நினைத்த கிராம மகளிர் அணி அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சுமார் 20 பெண்கள் சென்று புகார் கொடுத்தார்கள். 

அந்த புகாரில் தங்களின் கணவன்மார்கள் வேலைக்கு செல்லாமல் எப்போதும்  பொருப்பில்லாமல் மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கிறார்கள் எப்படியாவது அதை நிறுத்தவேண்டும் ‌என்று கேட்டுக்கொண்டார்கள்.


அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் ஒரு சிறப்புபடையுடன் சென்று அப்போது அங்கு மங்காத்தா ஆடிக் கொண்டிருந்த அனைவரையும் மடக்கிப் பிடித்தனர்.

பிடிப்பட்ட அனைவரையும் நைய்ய புடைத்த போலீஸ் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்கினர். பின்பு இனி மங்காத்தா ஆடுவதில்லை என்று அங்கு பிடிப்பட்ட அனைவரும் வாக்கு கொடுத்தோடு மட்டுமல்லாமல் கைப்பட எழுதியும் கொடுத்தனர். அதன் பிறகுதான் பெண்கள் நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு மங்காத்தா நிறுத்தப்பட்டது.


டிஸ்கி : அஜித் நடிக்கும் மங்காத்தாவிற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

Thursday, April 28, 2011

இதெல்லாம் ஒரு பதிவுன்னு படிச்சிக்கிட்டு.. போங்க பாஸ்...


கமலா: எ‌வ்ளோ நாளா‌‌ச்சுடி உ‌ன்னைப் பா‌ர்‌த்து...எ‌ப்படி இரு‌க்க?

குடு‌ம்ப ச‌ண்டை விமலா: ந‌ல்லா இரு‌க்கே‌ன்டி


கமலா: எ‌ப்போ பா‌த்தாலு‌ம் உ‌ன் கணவரோடு ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ப்பாயே.. இ‌ப்போவு‌ம் அ‌ப்படியே‌த்தா‌ன் இரு‌க்‌கியா?

விமலா: இ‌ல்லடி.. இ‌ப்போ‌ல்லா‌ம் ச‌ண்டை போடுறதே இ‌ல்லை.
 

கமலா : அ‌ப்படியா பரவா‌யி‌ல்லையே.. ஏ‌ன்.. ‌நீ ‌திரு‌ந்‌தி‌ட்டியா?

விமலா : இ‌ல்லடி அவர் இறந்துவிட்டார்!


எப்படியெல்லாம் கிளம்பியிருக்கோம் பாத்திங்கிளா....

Tuesday, April 26, 2011

தமன்னா படத்தை பயன்பத்த உயர்நீதிமன்றம் தடை...



பவர் சோப் விளம்பரங்களில் நடிகை தமன்னாவின் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவனம், சென்னை தி.நகரைச் சேர்நத் ஜே அன்ட் டி கம்யூனிகேஷன் மூலமாக தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசடராக செயல்பட அணுகியது. இதையடுத்து 2008ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் எனது அனுமதியின்றி எனது படங்களை தனது விளம்பரங்களில் அது பயன்படுத்தி வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் தமன்னா. இதை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், வருகிற ஜூன் 8ம் தேதி வரை பவர் சோப் விளம்பரங்களில் தமன்னாவின் படங்கள், வீடியோ கிளிப்பிங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

நாஞ்சில் மனோ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாரு..



கவிதை வீதி  : ஆமா... மக்கா மனோ நல்ல ஆளாச்சே  அவர் எதுக்கு சரிபட்டு வரமாட்டாரு....
 
பாட்டு ரசிகன் : (**********************************)
 
கவிதை வீதி : ஆமா...  அவர் அதுக்கெல்லாம் அவர் சரிபட்டு வரமாட்டாரு...
 
நாஞ்சில் மனோ : டேய் மக்கா எல்லாத்துக்கும் நான் சரிபட்டு வருவேன்... எதுக்குடா நான்  சரிபட்டு வரமாட்டேன்..

கவிதை வீதி : யோய் அதுக்கெல்லாம் நீ சரிபட்டு வர‌மாட்டே...
வந்தமா நாலு ஜோக் படிச்சமா கமாண்டும்,   ஓட்டும் போட்டாமான்னு போயிடு...
 
நாஞ்சில் மனோ : ................
 
பாட்டு ரசிகன் : புரிஞ்சதா யாராவது... எதுக்கு சரிபட்டு வரமாட்டார்ன்னு கேட்டிங்க அவ்வளவுதான் அவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு....

**************************************************************

ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?

வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

**************************************************************

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!

**************************************************************

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...

**************************************************************

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..

மகன் : 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய் : இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் : நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் : சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

**************************************************************

அடிங்க எஜமான் அடிங்க வலிக்காம அடிங்க...

Saturday, April 23, 2011

திடீர் விஜயம்... ரஜினி பரபரப்பு...


ராணா படம் துவங்கவிருப்பதையொட்டி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம. பாபா படத்தின் பெரும் பகுதி காட்சிகள் காளிகாம்பாள் தெய்வத்தை சார்ந்தே இருந்தன. அந்த படத்தில் இடம்பெற்ற 'சக்தி கொடு' என்ற பாடலே, காளிகாம்பாள் சிலை முன்பு பாடப்படுவது எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜி இந்த கோவிலில் தனது வாளை வைத்து வழிபட்டான் என்பது வரலாறு.

ரூ 100 கோடி பட்ஜெட்டில், மிக பிரமாண்டமாக 'ராணா' படப்பிடிப்பு துவங்கும் நிலையில் ரஜினி காளிகாம்பாள் கோவிலுக்கு திடீரென வந்தார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். காளிகாம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகளும் செய்தார்.

பின்னர் கோவிலை சுற்றி வந்து வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் தனது குருக்கள் மற்றும் தெய்வத்தை வழிபட்டுவிட்டே ஆரம்பிப்பது ரஜினியின் வழக்கம். இதனை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார். அடுத்தவாரம் துவங்கும் 'ராணா' படப்பிடிப்பு வெற்றிகரமாக நடக்க வேண்டி இந்தப் பிரார்த்தனை நடந்தது", என ரஜினிக்கு நெருக்கமானவர்கள்

Friday, April 22, 2011

விஜய் வீட்டு முன்பு பரபரப்பு... அரசியலுக்கு வாருங்கள் ரசிகர்கள் அழைப்பு..



விஜய் வீட்டு மீது யாரோ சிலர் கல்லெறிந்த விவகாரத்தால் ஆவேசமடைந்துள்ள ரசிகர்கள், விஜய் உடனடியாக அரசியலில் குதிக்க வேண்டும் என அவரை சந்தித்து வற்புறுத்தினர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே விஜய் அரசியலில் ஈடுபடுவார் என எதிர் பார்க்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன்பே இதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினார். மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து கருத்துக்களும் கேட்டார்.

எல்லோரும் ஒட்டு மொத்தமாக அரசியல் கட்சி துவங்க வேண்டும் என வற்புறுத்தினர். இதையடுத்து விஜய் துவக்கிய மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.  ஆனால் திடீரென முடிவை மாற்றிக் கொண்டார். அ.தி.மு.க.வுக்கு மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததோடு ஒதுங்கிக் கொண்டார். விஜய்யின் தந்தை மட்டும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தார். (தட்ஸ்தமிழ்)

இந்த நிலையில் இருதினங்களுக்கு முன் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீடு கல்வீசி தாக்கப்பட்டது. இவர் படுக்கை அறையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இந்த வீட்டில் இப்போது விஜய் வசிக்கவில்லை. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வாடகைக்கு குடியிருக்கிறார்.  ஆனாலும் விஜய் வீட்டில் கல்வீசப்பட்டதாக பரவிய தகவல் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களை ஆத்திரப்படுத்தியது.

மாவட்ட நிர்வாகிகள் பலரும் விஜய்யை நேரில் சந்தித்து அவர் உடனடியாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த கல்வீச்சு சம்பவத்தை எப்படி எதிர் கொள்வது என நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம் விஜய்.

விஜய் அரசியலுக்கு வருவார்.. ஆனா...

Wednesday, April 20, 2011

தெய்வத் திருமகன் படத்திற்கு எதிராக போராட்டம்...




விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள 'தெய்வத் திருமகன்' தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.

எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம். என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Tuesday, April 19, 2011

கல்வியறிவு பெற்ற மாவட்டம் இப்படியா இருக்கும்...



கடந்த 13-ம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.

கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் நூற்றுக்நூறு எழுத்தறிவு பெற்ற மாவ்டடமான குமரியில் 4 ல்டசம் பேர் வாக்களிக்கவேயில்லை.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 424 வாக்கள்ர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 804 பேர் வாக்களிக்கவில்லை.

இத்தனை பேர் வாக்களிக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதில் ஏராளமானோர் கேரளா, குஜராத் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும், வளைகுடா நாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறையின்போது மட்டும் தான் சொந்த ஊருக்கு வருகின்றனர்.

இதுதவிர ஏராளமானவர்கள் கேரள மாநிலத்தில் கட்டுமானப் பணி செய்து வருகின்றனர். மேலும் பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் பலர் வாக்களிக்க வரவில்லை. அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறுகையில்,

கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 63.7 சதவீத வாக்குகளும், 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 64.50 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஆனால் இந்த தேர்தலில் 68.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார். (தட்ஸ் தமிழ்)

Saturday, April 16, 2011

சினிமாவுக்கு மோசமான காலகட்டம் - வைரமுத்து வேதனை...


பொய்கள் மட்டுமே வழிந்தோடும் சினிமா மேடைகளில் உண்மை பேசவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியசாலிகளில் தானும் ஒருவர் என்று நிரூபித்தார் கவிப்பேரரசு வைரமுத்து. சென்னையில் நடந்த ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, சினிமாவின் தற்போதைய பரிதாப நிலையை புட்டு புட்டு வைத்தார்.

இந்த படம் பொன்விழா காணும். வெள்ளி விழா காணும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் வாழ்த்தினார்கள். அது அவர்களின் நம்பிக்கை, ஆசை. ஆனால் நிஜம் அப்படியல்ல. இப்போதெல்லாம் ஒரு படத்தை எடுப்பது கூட எளிது. அதை ரிலீஸ் செய்வதுதான் மிக மிக கஷ்டம். அப்படி வருகிற படத்தை தியேட்டரில் ஒரு வாரத்திற்கு மேல் இருக்க வைப்பது அதைவிட பெரிய கஷ்டம். முன்பெல்லாம் சினிமா என்ற ஒரே ஒரு பொழுதுபோக்குதான் இருந்தது மக்களுக்கு. இன்று சினிமாவை வேறு பல பொழுது போக்குகள் பங்கு போட்டு விட்டன. இந்த யதார்த்தத்தை ஜீரணிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

கடந்த இருபது நாட்களாகதான் நான் என் வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பல படங்களை பார்த்து வருகிறேன். சுப்ரமணியபுரம், மைனா, யுத்தம் செய் போன்ற படங்களை இப்போதுதான் பார்க்கிறேன். தமிழுக்கு மிக அற்புதமான இயக்குனர்கள் கிடைத்திருக்கிறார்கள். மிஷ்கின், சுசீந்திரன், சசிகுமார், பிரபு சாலமன் ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள்.

'அடப்பாவிகளா... சினிமாவின் மிக மோசமான கால கட்டத்தில் வந்திருக்கிறீர்களே' என்று அவர் மேற்படி இயக்குனர்கள் பற்றி கூறியபோது வைரமுத்துவின் பேச்சில் தொணித்த ரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

பெரியார், அண்ணா - வடிவேலு, குஷ்பு - என்ன கொடுமை..

 
பெரியாரும் அண்ணாவும் எம்ஜிஆரும் பேசிய திமுக மேடைகளில் வடிவேலுவும் குஷ்புவும் பேசிக் கேட்க வேண்டிய கொடுமை வந்துவிட்டதே, என்றார் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத்.

திண்டுக்கல்லில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியது:

வரும் காலம் வைகோவின் காலம்!

தி.மு.க.,வால் அவமானப்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர்., திண்டுக்கல்லில்தான் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட விடாமல் அவமானப்படுத்தப்பட்ட ம.தி.மு.க.வின் முதல் கூட்டமும் இப்போது அதே திண்டுக்கல்லில் நடக்கிறது.

இதனால் வரும் காலம் வைகோவின் காலமாக மாறப்போகிறது. ம.தி.மு.க. உறுதி குலையாத இயக்கம். அ.தி.மு.க., தொண்டர்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. துரோகத்தை செய்த ஜெ., மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.

அ.தி.மு.கவிற்கு நாங்கள் உழைத்த உழைப்புக்கும், சிந்திய வியர்வைக்கும் எங்களுக்கு கிடைத்த பரிசு இதுதானா. நாங்கள் தனித்து நின்றால், பணம் வாங்கி விட்டு தனித்து நிற்பதாக எங்கள் மீது பழி வரும். ஊடகங்கள் குறை கூறும்.

கூட்டணியில் இல்லாத விஜயகாந்துக்கு 41 சீட், கூட்டணியில் இருந்து 7 ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு 12 சீட்டா?

பெரியார் ஈவெரா, அண்ணா, சிட்டிபாபு, பட்டுக்கோட்டை அழகிரி, எம்ஜிஆர், வைகோ பேசிய திராவிட மேடைகளில், இன்றைக்கு வடிவேலு, குஷ்பூ, ராதிகா, செந்தில், சிங்கமுத்து என்று பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொள்கையைச் சொல்லி ஓட்டுக்கேட்கவில்லை. இலவசங்களை சொல்லி ஓட்டுக்கேட்கிறார்கள்.

ஜாதிகளை ஒழிப்போம் என்று கூறி விட்டு, ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். ம.தி.மு.க., இல்லாததால், அ.தி.மு.க.,வுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது. துரோகம் செய்தவர்கள் அதற்கான துரோகத்தை அனுபவித்தே தீருவார்கள்.

நாங்கள் தேர்தலில் நிற்காததால் அ.தி.மு.க., தொண்டர்களிடம் அனுதாபம், தி.மு.க.,தொண்டர்களிடம் கவுரவம், பொதுமக்களிடம் பரிவு கிடைத்துள்ளது. பார்த்துக் கொண்டே இருங்கள், மே13-ம் தேதிக்குப் பின் பல அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மதிமுகவுக்கு வருவார்கள்’’ என்றார்.

இன்னும் எதிர்காலம் மேடைப்பேச்சில் எவ்வளவு இழிவுகளை சந்திக்கபோகிறதோ....

Thursday, April 14, 2011

பாகிஸ்தானுடன் மோத உள்ளது இந்தியா...


இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவைப் புதுப்பிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு துண்டிக்கப்பட்டது.


இந்த நிலையில், சமீபத்தில் மொஹாலியில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரை இறுதிப் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று அவரும் வந்திருந்தார். அப்போது இரு நாடுகளும் மீண்டும் பழையபடி கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார் கிலானி.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவைப் புதுப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பூர்வாங்கப் பணிகளைச் செய்யுமாறு பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தான் தன்னைக் கேட்டுக் கொண்டதாக ராணாவும் அமெரிக்க கோர்ட்டில் தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. (தட்ஸ் தமிழ்)

இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வரும். அதேசமயம், கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம் தொடரும். மும்பை தாக்குதலுக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அது உறுதி. அதற்கான முயற்சிகளை இந்திய அரசு தொடர்ந்து செய்து வரும் என்றார் அவர்.


அட இதை இன்னும் படிக்கலையா : 

நான் பன்னிக்குட்டி ராமசாமிக்கே தண்ணிக்காட்டினவன்...

நான் பன்னிக்குட்டி ராமசாமிக்கே தண்ணிக்காட்டினவன்...


ஒரு சமயம் தண்ணி எது? என்ற கேள்விக்கு நான்  பன்னிக்குட்டிராமசாமிக்கு
எது எது தண்ணீர் என்று சுட்டிக்காட்டினேன்..


இது தண்ணீர் துளி...


இது குளம்...

 இது கடல்..


 இது குழாயில் வரும் தண்ணீர்

 இது குட்டை..

 இது அருவி...

இது நீர்த்தேக்கம்..

இதுவும் தண்ணி தாங்க...


இதுமாதிரி தாங்க பன்னிக்குட்டிராமசாமிக்கு தண்ணி காட்டினேன்..

அய்யோ..
பாருங்க உங்களுக்கு தண்ணிக்காட்டிட்டேன்..

அடிங்க எஜமான் அடிங்க... ஆனால் வலிக்கா அடிங்க...
ஜாக்கிரதையா இரு (நான் என்னை சென்‌னேன்)

அப்படியே சித்திரை திருநாள் வாழ்த்துச்சொல்றேங்க...

Tuesday, April 12, 2011

நல்ல ஓட்டு - கள்ள ஓட்டு போடுவது எப்படி? எளிய விளக்கம்...


அன்பான பதிவர்களே வாசக பெருமக்களே தங்களுக்கு இன்னும் பதிவை படித்தவுடன் எவ்வாறு ஓட்டுப்போடுவது என்று தெரியவில்‌லை
அந்த குறையை போக்கவே இந்த எளிய விளக்கம்

**********************************************************
முதலில் தமிழ்மணத்தில் எப்படி ஓட்டுப்போடுவது..


கீழே உள்ள தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் உயர்த்தியுள்ள கட்டை  விரல் படத்தை கிளிக் செய்யுங்கள்..
பின்பு உங்களுடைய  பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..

*****************************************************************
 
அடுத்து தமி‌ழ் 10...


இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்
பின்பு உங்களுடைய  பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..

*****************************************************************
 
அடுத்து இண்ட்லி...


இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்
பின்பு உங்களுடைய  பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
இதில் ஒரு வசதியிருக்கிறது ஒரு முறை Login  செய்துவிட்டால் பலமுறை செய்யதேவையில்லை..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..

*****************************************************************

அடுத்து உளவு...

இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்
பின்பு உங்களுடைய  பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..

அவ்வளவுதான் வந்த வேலையை முடித்துவிட்டு மேற்கண்ட விளக்கங்களை பயன்படுத்தி ஓட்டு போட்டுவிட்டு தாங்கள் கிளம்பலாம்.. 
*****************************************************************

டிஸ்கி:இது நல்லவோட்டு போடமட்டும்தான் கள்ளவோட்டு போடவும் இதே வழிமுறைதான் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடலாம்.
 
டிஸ்கி1: இது பொதுவாக நாஞ்சில் மனோ தெரிந்துக்கொள்ள வேண்டும்..


Friday, April 8, 2011

அடுத்த முதல்வர் போட்டியா- முகஅழகிரி முடிவு


முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. கருணாநிதி 6வது முறையாக மட்டுமல்ல, 7வது முறையும் முதல்வராக அமர்வார் என்று மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வருகிற தேர்தலுக்குப் பின்னர் நான் முதல்வர் பதவியில் அமரக் கூடும் என்று வருகிற செய்திகளில் உண்மை இல்லை. முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. அதைக் குறி வைத்தும் செயல்படவில்லை. எனது தந்தை கருணாநிதி 6வது முறையாக மட்டுமல்ல, 7வது முறையும் முதல்வராவார்.

திமுக கூட்டணி 200 இடங்களுகக்குக் குறையாமல் வெற்றி பெறும். அதிமுக அணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி என்பதெல்லாம் கிடையாது. திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும். மாநில அரசியலுக்குத் திரும்புவது குறித்து நான் முடிவெடுக்கவில்லை.

எங்களது சாதனைகளை நம்பித்தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம். ஆனால் எங்களை வசை பாடியே எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக விஜயகாந்த் திமுகவை வசை பாடி வருகிறார். அத்தோடு நில்லாமல் அவரது கட்சி வேட்பாளரையே போட்டு அடிக்கிறார்.

கோவையில் நடந்த கூட்டத்திற்கு விஜயகாந்த் ஏன் போகவில்லை என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அந்தக் கூட்டத்திற்கு முதலில் விஜயகாந்த்தை அழைத்தார்களா என்பதே தெரியவில்லை என்றார் அழகிரி.

தற்போதுகூட கலைஞர் தான் முதல்வர் என்று கூறிவருகிறார் ஸ்டாலின் பற்றி அழகிரி  ஏதும் சொல்லாததது.. அடுத்த முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவிக்கு ஆசை படுவதாகவே தெரிகிறது.. அதிமுக பக்கம் வெற்றி முகம் தெரிவதாலே மு.க.அழகிரி தற்போது அடக்கி வாசிக்கிறார்.

Thursday, April 7, 2011

குஷ்புவை காப்பாற்றிய ஜெ.., பரபரப்பு தகவல்


தமிழகப் பெண்களின் கற்பு குறித்துப் பேசி பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டத்தால் தத்தளித்த நடிகை குஷ்புவை, காப்பாற்றி அவரை மீட்டது ஜெயலலிதாதான். ஆனால் அவர் நன்றி மறந்து பேசி வருகிறார் என்று நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார் சிங்கமுத்து. அப்போது அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை குறித்து விளக்கிப் பேசினார். திமுக அரசின் குறைகளையும் விளக்கிப் பேசினார்.

பின்னர் வடிவேலு, குஷ்புகுறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வடிவேலுவை குளிக்க வைத்து, முதன் முதலில் வேட்டி கட்டி நடிக்க வைத்ததே விஜயகாந்த் தான். நாங்கள் தான் அவரை உருவாக்கினோம். அதை மறந்து விட்டு, விஜயகாந்தை அவன், இவன் என்று பேசுகிறார்.

இந்த குஷ்பு. இவருக்கு ஜெயலலிதா குறித்து பேச என்ன தகுதி உள்ளது. முன்பு தமிழக பெண்களின் கற்பு குறித்துப் பேசி பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள், பாமக மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.

விளக்குமாறு உள்ளிட்டவற்றைக் கொண்டு குஷ்பு படத்தை அடித்து நொறுக்கிப் போராட்டம் நடத்தினர். கொடும்பாவிகளைக் கொளுத்தினர். இதனால் வெளியில் வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் குஷ்பு. ஆனால் அப்போது அவரைக் காப்பாற்றியவர் ஜெயலலிதாதான். சரி, நம்ம தமிழ்நாட்டை நம்பி வந்து விட்டார். தமிழ்நாட்டின் மருமகளாகப் போய் விட்டார் என்று கருதி அவரைக் காப்பாற்றி பிரச்சினையை அமைதிப்படுத்தினார். ஆனால் இன்று நன்றி மறந்து பேசி வருகிறார் இந்த செந்தமிழ்ச்செல்வி குஷ்பு.

மக்கள் இதையெல்லாம் சிந்தித்து்ப பார்க்க வேண்டும். பாமகவும் சரி, விடுதலைச் சிறுத்தைகளும் சரி குஷ்புவுக்கு எதிராக அவர்களை விட யாருமே மோசமாக போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் இன்று அவர்களுக்கு குஷ்புவின் ஆதரவு தேவைப்படுகிறது.

திமுககாரர்கள் அன்று இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தார் பூசி அழித்தனர். ஆனால் இன்று இந்தி பேசும் குஷ்புவின் ஆதரவில், அவரது தயவில் அண்டியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தையுமே ஜெயலலிதா செய்வார், நிறைவேற்றுவார்.

தமிழக மக்களை பாடாய்ப்படுத்தி வரும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் ஆகியவற்றை சிந்தித்துப் பாருங்கள். இதை ஒழிக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் சிங்கமுத்து.

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்...

Wednesday, April 6, 2011

செல்வாவை நாறடித்த மொக்கராசு...


மொக்கராசு ஒரு முறை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார் அதில் 10 வெள்ளாடுகளும் 10 செம்மறி ஆடுகளும் இருந்தன. 

அப்போது அங்கு வந்த செல்வா எப்படியாது நிறைய கேள்விகள் கேட்டு இவனை அழ வைக்க வேண்டும் என்று நினைத்து பல்வேறு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்....

செல்வா: இந்த ஆடுகள் எவ்வளவு புற்களை திண்ணும்...

மொக்கராசு : இந்த வெள்ளாடுகள் 5 கிலோ புற்கள் வரை திண்ணும்

செ: அப்ப அந்த செம்மறியாடுகள்...

மொ : அதுவும் 5 கிலோ புற்களைத்திண்ணும்..

செ : சரி இந்த ஆடுகள் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் நடக்கும்...

மொ : இந்த வெள்ளாடுகள் சுமார் 10 கிலோ மீட்டர் வரை நடக்கும்..

செ : அப்போ இந்த செம்மறியாடுகள்..

மொ : அதுவும் 10 கிலோமீட்டர் வரை நடக்கும்...

செ: சரி இந்த ஆடுகள் எவ்வளவு விலைப்போகும்..

மொ : இந்த வெள்ளாடுகள் 4000 ரூபாய் வரை விற்பனையாகும்..

செ : அப்போ.. இந்த செம்மறியாடுகள்..


மொ : அதுவும் 4000 ரூபாய் வரை விலைப்போகும்..

செ: ஏன்னடா நீ என்ன லூசா.. எல்லாத்தையு்ம் ஒண்ணா சொல்ல வேண்டியது தானே ஏன் இப்படி பிரிச்சி பிரிச்சி சொல்ற...

மொ : ஏன்னா.. இதில் வெள்ளாடுகள் என்னுடைய  சொந்த ஆடுகள்..

செ: அப்போ செம்மறியாடுகள்.. 

மொ : அதுவும் என்னுடைய ஆடுகள் தான்...

செ : .....ம்... என்னால முடியல...


மொக்கை ராசாவை கலாய்க்க வந்த செல்வா தான் காய்ந்து மொக்கராசாவை முறைத்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்..

இது போன்று தான் சொல்வாவை மொக்கராசா நாறடித்தார்..

டிஸ்கி: நீங்கதான் டிஸ்கி போடுவிங்களா நாங்களும் போடுவோம்ல...

டிஸ்கி 1 : இதில் செல்வா மொக்கராசு இருவரும் எங்க கிராம்மத்துல இருக்கிற நம்ம பயபுள்ளைக...


டிஸ்கி 2 : இங்க யாராவது இது மாதிரி இருக்காங்களா... இருந்தா வந்து ஒரு அட்டனசை போட்டுட்டு போங்க..

Tuesday, April 5, 2011

ஆதரவு கேட்டு வரும் அதிமுகவினர்... சங்கடத்தில் ரஜினி!!


தர்மசங்கடம் என்பதற்கு சரியான அர்த்தத்தை இந்தத் தேர்தலில்தான் ரஜினி உணர்ந்திருப்பார்!

இந்தத் தேர்தலில் ரஜினியின் ஆசி பெற்ற வேட்பாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். முதலில் ஆயிரம் விளக்குத் தொகுதியின் வேட்பாளர் முகமது ஜின்னா ரஜினிக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார்.

அடுத்து துணை முதல்வர் முக ஸ்டாலின் போய் ரஜினியைச் சந்தித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். அடுத்து மத்திய அமைச்சர் முக அழகிரி தொலைபேசியில் ரஜினியிடம் பேசி வாழ்த்துக்களைப் பெற்றார். இதனால், ரஜினியின் மறைமுக ஆதரவு திமுகவுக்குதான் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதி ரஜினி ரசிகர்கள் முக ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்ததாகக் கூறப்பட்டது. (தட்ஸ் தமிழ்)

இந்த நிலையில், அதே கொளத்தூர் பகுதியில் முக ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கியுள்ள சைதை துரைசாமியும் நேற்று ரஜினியைச் சந்தித்தார். ரஜினிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். ரஜினியும் அவருக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்துக்களைச் சொன்னார்.

தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் இருப்பார் ரஜினி என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க சென்னையிலேயே இருந்தார் ரஜினி. இன்னும் சில அதிமுக, பிஜேபி வேட்பாளர்கள் ரஜினியைச் சந்திக்க இப்போது நேரம் கேட்கிறார்களாம்...

இதுக்கு வெளிநாட்டுக்கே போயிருக்கலாமே, என்று ரஜினியை யோசிக்க வைத்துவிட்டது தமிழக அரசியல்!

யாருக்கும் தனிப் பெரும்பான்மையோ... அல்லது ஆதரவு  அலையோ இல்லாத நிலையில் ரஜினின் ஆதரவு இருந்தால் ஓட்டு வங்கியை வாங்கி விடலாம் என்பது பல்வேறி கட்சியின்  குறியாக இருக்கிறது. ஆனால் ரஜினி இன்னும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையோடு வகித்து வருகிறார்..

Monday, April 4, 2011

திமுக., தோல்வியில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் - ஜெ. ஆவேசம்


கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு திமுகவும், அது சார்ந்த கட்சிகளும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தேனி, திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்து அதிமுக, தேமுதிக, இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

ஆண்டிப்பட்டியில் நடந்த கூட்டத்தி்ல் அவர் பேசுகையில், ஆண்டிப்பட்டி அதி்முக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன், பெரியகுளம் சிபிஎம் வேட்பாளர் லாசர் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். போடிநாயக்கனூரில் நடந்த பிரசாரத்தில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கம்பம் தேமுதிக வேட்பாளர் முருகேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இந்தப் பிரசாரத்தின்போது ஜெயலலிதா பேசியதாவது

ஸ்ரீரங்கத்தில் நான் போட்டியிட்டாலும் ஆண்டிப்பட்டியும் எனது தொகுதிதான். இது எனது தொகுதி என்பதால் திமுக அரசு எந்த நலத் திட்டங்களையும் இங்கு செய்யவில்லை, நிறைவேற்றவில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் குன்னூர் கண்மாயிலிருந்து வீணாகும் நீரை கோவில்பட்டிக்குத் திருப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தேனி மருத்துவக் கல்லூரி உள் கட்டமைப்பு சீரமைக்கப்படும். காமராஜர் கல்லூரி விரிவுபடுத்தப்படும்.

இன்று தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. எந்தப் பொருளையும்,யாரும் வாங்க முடியவில்லை. கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூகத் தீமைகள் அதிகரித்து விட்டன.ரூ. 1லட்சம் கோடி கடனை சேர்த்து வைத்ததுதான் கருணாநிதி செய்த சாதனை. தமிழகத்தை சுரண்டி வரும் கொள்ளைக்காரக் குடும்பத்தை விரட்டியடிக்க வேண்டும்.

உலகிலேயே பணக்கார குடும்பம் இன்றைக்கு கருணாநிதி குடும்பம்தான். அவர்கள் குபேரர்களாக மாறியிருப்பதன் ரகசியம் என்ன என்பதை மக்கள் உணர வேண்டும்.

தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி திமுக கூட்டணியை முற்றிலுமாக தோற்கடித்து டெபாசிட் இழப்பதில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு தோல்வியைத் தர வேண்டும் என்றார்.. போடிநாயக்கனூரில், ஜெயலலிதா பேசுகையில், சொந்த நலனுக்காக நாட்டையே அந்நிய சக்திகளிடம் அடமானம் வைத்தவர் கருணாநிதி.

போடிநாயக்கனூரில், அரசு பொறியியல் கல்லூரி நிறுவப்படும். அங்கு பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். அரசு மருத்துவமனை விரிவுபடுத்தப்படும். போடி நீதிமன்றத்திற்குப் புதிய கட்டடம் கட்டப்படும். மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

Sunday, April 3, 2011

இப்படை தோற்பின் எப்படை வெல்லும்..










 
 
உலக கோப்பை இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக தரங்கா, தில்ஷன் களமிறங்கினர். தரங்கா 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஜாகீர் வேகத்தில் சேவக் வசம் பிடிபட்டார். ஜாகீர் 3.1 ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் முதல் விக்கெட்டை சாய்த்தார்.

அடுத்து தில்ஷனுடன் கேப்டன் சங்கக்கரா ஜோடி சேர்ந்தார். தில்ஷன் 33 ரன் எடுத்து ஹர்பஜன் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கராவுடன் ஜெயவர்தனே இணைந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 62 ரன் சேர்த்தனர்.

சங்கக்கரா 48 ரன் (67 பந்து, 5 பவுண்டரி) எடுத்து யுவராஜ் சுழலில் டோனியிடம் பிடிபட்டார். இலங்கை அணி 27.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து தடுமாறியது. ஜெயவர்தனே & சமரவீரா இருவரும் 57 ரன் சேர்த்தனர். சமரவீரா 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கபுகேதரா 1 ரன்னில் வெளியேற, இலங்கையை குறைந்த ஸ்கோரில் சுருட்டி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி உறுதியுடன் விளையாடிய ஜெயவர்தனே அரைசதம் அடித்து முன்னேறினார். குலசேகரா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, இலங்கை ஸ்கோர் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக உயர்ந்தது. ஜாகீர் வீசிய 48வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 17 ரன் கிடைத்தது. குலசேகரா 32 ரன் (30 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட் ஆனார். இந்த தொடரில் பெரிய ஸ்கோர் அடிக்காமல் இருந்த ஜெயவர்தனே பைனலில் சதம் விளாசி அசத்தினார்.

ஜாகீர் வீசிய கடைசி ஓவரில் (18 ரன்) பெரேரா அதிரடியாக 2 பவுண்டரி ஒரு சிக்சர் அடிக்க இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. ஜெயவர்தனே 103 ரன் (88 பந்து, 13 பவுண்டரி), பெரேரா 22 ரன் (9 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதிர்ச்சி தொடக்கம்: அடுத்து 50 ஓவரில் 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சேவக், சச்சின் பலத்த ஆரவாரத்துக்கிடையே களமிறங்கினர். மலிங்கா வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

உலக கோப்பையில் கடைசி முறையாக விளையாடும் சச்சின் 18 ரன் மட்டுமே எடுத்த நிலையில், மலிங்கா வேகத்தில் சங்கக்கராவிடம் பிடிபட இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். முக்கியமான 2 விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
கம்பீர் & கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு போராடியது. இருவரும் 83 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். கோஹ்லி 35 ரன் எடுத்து தில்ஷன் பந்தில் அவரிடமே பிடிபட்டார். அடுத்து கம்பீருடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்பீர் 97 ரன் எடுத்து (122 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். கம்பீர் & டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி வரை நகம் கடிக்க வைத்த திக்...திக்... ஆட்டத்தில் இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டோனி இமாலய சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார். டோனி 91 ரன் (79 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), யுவராஜ் 21 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆர்ப்பரிக்க, வான்கடே ஸ்டேடியம் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் குலுங்கியது.

Saturday, April 2, 2011

கதவை தட்டி கேட்கலாமா? தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை


வீட்டின் கதவை தட்டி ஓட்டு கேட்கலாம். ஆனால் வீட்டின் உரிமையாளர் தொந்தரவு செய்கிறார்கள் என புகார் கொடுத்தால் தேர்தல் சட்ட விதியின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், வேட்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. தேர்தல் பார்வையாளர் அஜித்வர்மா தலைமை வகித்தார். வேட்பாளர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்க போகும்போது கடை பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து விளக்கப்பட்டது. 

ஓட்டு கேட்க செல்லும் போது போக்குவரத்துக்கு இடையூறு செய்ய கூடாது. வழிபாட்டு தலம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி வளாகம் அருகே ஓட்டு கேட்டு கோஷம் போடக்கூடாது. வாக்காளர்களை இடையூறு செய்ய கூடாது. உரிய நேரத்தில் பிரசாரத்தை முடிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

கட்சியினர், 500 பேர் ஒட்டு மொத்தமாக ஓட்டு கேட்க செல்ல அனுமதிக்கப்படுமா, வீட்டின் கதவை தட்டி ஓட்டு கேட்கலாமா, எத்தனை வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு என கேள்வி கேட்டனர். இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், ‘‘எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம்.

ஆனால் செல்லும் போது எந்த இடத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது. 3 வாகனங்களில் மட்டுமே வேட்பாளர், அவர் சார்ந்தவர் செல்லவேண்டும். வீட்டின் கதவை தட்டி ஓட்டு கேட்கலாம். ஆனால் வீட்டின் உரிமையாளர் தொந்தரவு செய்கிறார்கள் என புகார் கொடுத்தால் தேர்தல் சட்ட விதியின் படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வீட்டுக்கு வெளியே நின்று ஓட்டு கேட்கலாம்’’ என தெரிவிக்கப்பட்டது. 


இதைதொடர்ந்து, தேர்தல் கணக்கு பார்வையாளர் முதின் நாக்பால் தலைமையில் செலவு கணக்கு தொடர்பாக வேட்பாளர்கள் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது.  இதில் அதிகாரிகள் பேசுகையில், ‘‘தேர்தல் செலவு கணக்கு சரியாக தாக்கல் செய்யவேண்டும். வங்கி கணக்கு, அதில் எடுக்கப்பட்ட பணம், செலவிடப்பட்ட தொகை போன்றவற்றை சரியாக காட்டவேண்டும். ஆட்டோவில் பணம் எடுத்து சென்றால்கூட அதற்கான ஆவணங்களை எழுதி வைத்த பின்னரே கொண்டு செல்லவேண்டும்’’ என்றனர்.

Friday, April 1, 2011

பிணம்திண்ணி ராஜபச்சே உன் கனவு பலிக்காது..

மும்பையில் நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கள் நாட்டு அணியின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்கிறார். இதற்காக சென்னை வந்து அங்கிருந்து கார் மூலம் அவர் திருப்பதி செல்கிறார்.

ஈழத்தில் நடந்த கொலை வெறியாட்டத்திற்குப் பின்னர் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள ராஜபக்சே இதுவரை சென்னை வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக தமிழக மண்ணில் அவர் காலடி எடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய, இலங்கை அணிகள் மோதம் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதைக் காண இலங்கை அதிபர் ராஜகபக்சே இந்தியா வருகிறார்.

போட்டிக்கு முன் திருப்பதி கோயிலுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அவர் இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் 1 மணி நேரம் செலவிடுகிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்.

இன்று இரவு திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு நாளை காலை மும்பைக்கு புறப்படுகிறார். ராஜபக்சே திருப்பதி கோயிலுக்கு வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவீந்தர் கூறியதாவது,

இலங்கை அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பாதுகபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் வருகையில் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை பத்திரமாக அழைத்துச் செல்வோம் என்றார்.

ராஜபக்சேவின் வருகையையொட்டி நேற்று தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, சாமியின் அனைத்து பிரசாதங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

பிணம்திண்ணி ராஜபக்சேசவே உண்ணுடைய எண்ணம் பலிக்காது... இந்தியா இலங்கையை வென்று சாதிக்கும்

பிரபல பதிவரின் மறைக்கப்பட்ட உண்மைகள்..!

ரஹீம் கஸாலி அவர்கள்  தனது  புரோபைலில்  ‌இதுவரை பயன்படுத்திய
அவரது மற்றும் அவருடைய குழந்தையின் படங்கள்....







என்னங்க ஏதாவது சிண்டுமுடிக்கிற வேலைன்னு நினைச்சி வந்திங்களா..
இன்னிக்கு நான் வேறஎன்னதான் பண்றது..

(புகைப்படங்கள் சிறியதாக இருந்ததால் மிக தெளிவாக இல்லை)

வலிக்காம திட்டிட்டு போங்க...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...