Saturday, March 30, 2013

இது கவனக்குறைவல்ல, அலட்சியம்!

மழை வெள்ளத்தால் குடிசைகள் அடித்துச் செல்லப்படுவதும் மனித உயிர் இழப்புகள் ஏற்படுவதும் இயற்கைப் பேரிடர். இதையும்கூட சரியான திட்டமிடல் மூலம் தடுக்க முடியும். இருப்பினும் எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லாமல், அணை நீரைத் திறந்து மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தினால் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அதை ஒரு விபத்து என்று விட்டுவிட்டால் போதுமா? அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டாமா? 

மார்ச் 27-ஆம் தேதி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஒரு தையலர் குடும்பத்தினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அவர்களில் 5 பேர் இறந்துள்ளனர். இதற்குக் காரணம், பில்லூர் அணையிலிருந்து திடீரென 6,000 கனஅடி தண்ணீர் மின்உற்பத்திக்காகத் திறந்துவிடப்பட்டதுதான். இவர்கள் பவானி ஆற்றின் நடுவே இருந்த பாறையில் ஏறி நின்று தப்பிக்க முயன்றும் முடியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம், வண்டிப்பாளையம் அணை நீர் திடீரென 8,000 கனஅடி திறக்கப்பட்டு, அங்கே ஞாயிறு விடுமுறைக்காக குழந்தைகளுடனும் சவுதி அரேபியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்துடனும் மகிழ்உலா வந்திருந்த இரண்டு குடும்பத்தினரில் 9 பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் இறந்தனர். 

இந்தச் சம்பவத்திலும் சொல்லப்பட்ட காரணம், மின்உற்பத்திக்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டோம். எதிர்பாராத வகையில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள் என்பதுதான். 

இவ்வாறு அணையின் நீர் திறக்கும்முன்பாக சங்கொலி எழுப்புவது மரபு. "அதிகாரிகள் ஏன் அவ்வாறு செய்யவில்லை?' என்ற கேள்விக்கு, அன்றைய ஆட்சியர் அளித்த பதில், "உள்ளூர் மக்களுக்கு அணை நீர் திறக்கப்படும் நேரம் தெரியும். பராமரிப்புப் பணிக்காகத்தான் அணையைச் சிறிதுநேரம் மட்டுமே மூடி வைத்திருந்தனர்' என்பதுதான். அணையை பலநாள் மூடிவைத்து திறப்பு விழா செய்தால் மட்டுமே சங்கொலி ஒலிக்கும் என்பதுபோல சித்திரிக்கப்பட்ட இந்தப் பதில், அதிகாரிகளையும் தொடர்புடைய ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டுமானால் உதவலாம். அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவாது. 

2011-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம், இந்தூர் அருகே ஒரு சுற்றுலாத் தலத்தில் மழையினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, 5 பேர் உறவினர்கள் கண்ணெதிரே அடித்துச் செல்லப்பட்டனர். எங்கோ பல கிலோமீட்டர் தொலைவில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து, இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதமான தகவலோ, எச்சரிக்கையோ இல்லை. அதை வேண்டுமானால் இயற்கை இடர் என்றோ, விதிப்பயன் என்றோ எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டதா, அணைகளிலிருந்து நீரைத் திறந்து விடும் செயல்? 

ஒரு ரயில் வண்டி ஓட்டுநர்கூட, ஆளில்லா சாலைக்குறுக்குத்தடம் நெருங்கி வரும் முன்பாக ஒலி எழுப்புகிறார். சுமார் ஒரு மைல் தூரத்துக்கும் மேலாக அந்த ஒலி கேட்கும். ஆனால், அணையில் பல ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிடும்போது எந்த எச்சரிக்கையும் இல்லாமல் திறந்துவிடுவார்கள் என்றால், இதை எப்படி அனுமதிப்பது? ஒரு துயரச் சம்பவம் நடந்தபிறகும் அதிகாரிகள் பொறுப்பில்லாமல் நடக்கிறார்கள் என்றால், தவறிழைத்தவர்களை மேலதிகாரிகளும், அரசும் தண்டிக்காமல் காப்பாற்ற முற்படுவதுதான் காரணமாக இருக்க முடியும். 

எல்லா அணைகளிலும் நீர் திறக்கும்போது எவ்வாறு குறைந்த அளவில் தொடங்கி, நீர்அளவைப் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும், எச்சரிக்கை ஒலி எழுப்பத் தேவையான வசதிகளை உருவாக்கித் தருவதற்கும் சட்டப்பேரவை நடைபெறும் இந்த நேரத்தில், பேரவை உறுப்பினர்கள் இதுகுறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வழி காண வேண்டும். முறையான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஒலி இல்லாமல் அணை நீர் திறக்கப்பட்டு அசம்பாவிதம் நேர்ந்தால், அதற்கு அணையின் பொறியாளரைப் பொறுப்பாக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மழைக்காலத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்போர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறுங்கள் என்று மட்டுமே அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்துகிறார். ஆனால், அவர்கள் அவ்வாறு வெளியேறினார்களா? வெளியேறினால் அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட வேண்டும் என்பது குறித்த எந்தவித நடவடிக்கையையும் முன்னெச்சரிக்கையாகச் செய்வதில்லை. குடிசைகளும் மனிதர்களும் அடித்துச்சென்ற பிறகுதான் அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு, அவர்களுககு அரிசி, உணவு, உடை எல்லாமும் வழங்கப்படுகின்றன. முன்னதாகவே இவர்களைக் கட்டாயமாக வெளியேற்றி தங்க இடமும் உணவும் தந்தால், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியுமே! 

ஜனநாயக இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை, எந்த அசம்பாவிதத்திற்கும் யாரும் பொறுப்பேற்கவோ அல்லது பொறுப்பாக்கப்படுவதோ இல்லை என்பதுதான். ஓர் அரசு ஊழியர் தவறு செய்தால், அவரைத் தண்டிக்காமல் எப்படி காப்பாற்றுவது என்பதில்தான் அதிகாரவர்க்கமும், ஆட்சியாளர்களும் முனைப்பாக இருப்பார்களே தவிர, பொதுமக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியோ, நிர்வாகம் சீர்கெடுவதைப் பற்றியோ கவலைப்படுவது கிடையாது என்பதுதான் யதார்த்த உண்மை. 

அரசு ஊழியரின் குடும்பம் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவார்களே தவிர, பொதுமக்கள் அவதிப்படுவதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இருக்கும் போக்கு பரவலாகவே காணப்படுகிறது. எதிர்ப்பு வலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போதுகூடக் கடைநிலை ஊழியர்கள் பலிகடா ஆக்கப்படுவார்களே தவிர, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தவறுக்கு தார்மிகப் பொறுப்பேற்றதாக சம்பவம் இதுவரை இல்லை. இந்த நிலைமை மாறாதவரை, அப்பாவி இந்தியக் குடிமகனுக்காக அனுதாபப்படுவதைத் தவிர நமக்கு வேறு வழியேதும் தோன்றவில்லை. 
(தினமணி தலையங்கம்)

Thursday, March 28, 2013

விஜய்-யின் தலைவா படத்தின் கதை..!


விஜய்-விஜய் கூட்டணியில் படுவேகமாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘தலைவா’. விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத்தொடர்ந்து, தலைவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. 


சமீபத்தில் ஒரு வாரப்பத்திரைக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் விஜய் “ மதராசபட்டினம் படத்தைப்பார்த்த விஜய், ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாமே’ எனக்கூறியிருந்தார். தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் விஜய்யின் கால்ஷீட்டுடன் வர விஜய்யிடம் தலைவா படத்தின் கதையைக் கூறினேன்.





‘தலைவன்கிற பட்டத்த நாம தேடிப்போகக் கூடாது. அது நம்மள தேடி வரணும்’ என்கிற ஒன் லைன் ஸ்டோரியுடன் துவங்கி முழுக்கதையையும் கூறினேன். கதையை கேட்டதும் ஒக்கே சொன்னார் விஜய். ஆனாலும் துப்பாக்கி படத்தின் வெற்றியால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதை உணர்ந்து நல்ல ஸ்ட்ராங்கான திரைக்கதையை பிடிச்சிருக்கோம்.


’தலைவா’ படத்தில் சீனுக்கு சீன் ஆர்.டி.எக்ஸ் தான். ஒவ்வொரு தலைவனுக்கும் ஒவ்வொரு ஃபிளாஷ்பேக் இருக்கும். அப்படி தலைவனான ஒருத்தனோட ஃபிளாஷ்பேக் கதை தான் தலைவா படத்தின் கதை” என்று கூறியுள்ளார். 

Wednesday, March 27, 2013

திரும்புகிறது 2001 மு.க. அழகிரியை வைத்து அதிமுக போடும் தேர்தல் கணக்கு!


ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசில் இருந்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக விலகிய பின்னரும் திடீரென மு.க. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பை தொடருவதற்கு அதிமுக அரசு முடிவு எடுத்ததன் பின்னணியில் ஒரு தேர்தல் கணக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிற திமுகவின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்து போனார் மு.க. அழகிரி. மற்ற திமுக அமைச்சர்களுடன் சேராமல் தனியே போய் ராஜினாமா கொடுத்தார். 

அத்துடன் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றோரை தனியே சந்தித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அண்மையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தின் போது 'சென்னையில்' இருந்து மதுரைக்கு போய் முகாம் அடித்திருந்தார். 

இப்படி திமுகவில் கலகக் குரலாக தம்மை வெளிப்படுத்தி வருகிறார் மு.க. அழகிரி. இந்நிலையில்தான் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்பும் கூட அழகிரிக்கான போலீஸ் பாதுகாப்பை தொடர அதிமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 

அத்துடன் லோக்சபா தேர்தல் காலம் வரை அழகிரி முகாம் மீது எந்த வழக்கும் போட வேண்டாம் என்றும் அழகிரி தரப்பு வழக்குகளில் கடுமை காட்ட வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டிருக்கிறlது என்கிறார்கள். 

அதிமுக அரசுக்கு மு.க அழகிரி மீது அப்படி என்ன கரிசனை என்றால் 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களேபரம் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தத் தேர்தலில் திமுக தலைமையோடு மோதிக் கொண்டிருந்த அழகிரி தமக்கும் செல்வாக்கு இருக்கு என்பதைக் காண்பிப்பதற்காக திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான போட்டி வேட்பாளர்களை நிறுத்தி கலகமூட்டினார். 

அவர் நினைத்தபடியே மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் தோற்றுப் போயினர். இதனால் எப்படியும் வரும் லோக்சபா தேர்தலிலும் திமுகவுக்கு அழகிரி ஆப்படிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் மீதான இறுக்கத்தை தளர்த்தியிருக்கிறதாம் அதிமுக அரசு. தலைமை மீதான கோபத்தில் லோக்சபா தேர்தலில் ஏதாவது கலாட்டா செய்வதன் மூலம் ரிசல்ட் தங்களுக்கு சாதகமாகிவிடும் என்பதுதான் அதிமுகவின் கணக்காக சொல்லப்படுகிறது.

Tuesday, March 26, 2013

பாராளுமன்ற தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி



பாராளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் பிஸியாகியுள்ளன. அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணியை பிரிந்து தனித்து நிற்கின்றன.

எந்த எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாகவில்லை என்றாலும், சில கட்சிகளில் நடவடிக்கைகளைப் பார்த்தால் திமுக, தேமுதிக-வுடன் கூட்டணி அமைப்பதற்காக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த திமுக, இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. அதேபோல தேமுதிக-அதிமுக கூட்டணி பிரிந்து விட்டதாலும், இவர்களும் இனி கூட்டண் அமைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கருதும் திமுக, தேமுதிகாவை இழுக்க முயற்சித்து வருகிறது.

அதேபோல தேமுதிக-வை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரசும் முயற்சிக்கிறது. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் காங்கிரசுடன் இணைந்தால் நன்மை ஏதும் நடக்காது என்று கருதும் தேமுதிக மேலிடத்திற்கும் தற்போதுள்ள ஒரு வாய்ப்பு திமுக தான்.

அதற்கு ஏற்றாற் போல் சட்டசபையிலும் தே.மு .தி.க.வுக்கு ஆதரவாளரின் நிலைப்பாட்டையே தி.மு.க. கடை பிடிக்கிறது. நேற்று 6 எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு நீக்கப்பட்டதும், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே போல் இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று விமர்சிப்பதை நிறுத்தி விட்டன. விஜயகாந்தும் தி.மு.க.வை அவ்வளவாக விமர்சிப்பதில்லை.

இந்த சூழ்நிலைகளை பார்க்கும் போது தி.மு.க.-தே.மு.தி.க. இடையே நெருக்கம் அதிகரிப்பதையே காட்டுகிறது. எனவே தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இரு கட்சி வட்டாரத்திலும் பலமான பேச்சு அடிபடுகிறது. 

Saturday, March 23, 2013

யாருக்கு வரும் இந்த மனசு! அஜீத்தின் தியாகம்!


சமீபகாலமாக நடிகர் அஜீத்தை குறித்தும் அவரது எதிர்கால படங்களை குறித்தும் பல்வேறு யூகங்கள் பரபரப்பாக ஊடங்கங்களில் விவாதிக்கப்படுகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் படபிடிப்பில் கார் சேசிங் காட்சியில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக அஜீத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 




அதற்கான மருத்துவ ஆலோசனைக்கு சென்ற போது அறுவை சிகிச்சை தான் நிரந்தர தீர்வு என்று கூறப்பட்டதால் வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி அஜீத்துக்கு அறுவை சிகிச்சைக்கு நடக்க இருக்கிறது. அது வரையில் புதிய படத்துக்கான எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவதிலை என தீர்மானித்து இருக்கிறார்.


அறுவை சிகிச்சைக்கான கால தாமதம் ஏன் என்று விசாரித்தபோது நம்மை வியக்க வைத்தார் அஜீத். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தயாரிக்கும் இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா , ராணா , நயன்தாரா, டாப்சீ, கிஷோர், அத்துல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேகர், சுமா ரங்கநாத் என்ற பல்வேறு நட்சத்திர கூட்டம் நடித்து வருகின்றனர். 


தன்னுடைய சிகிச்சையினால் இவர்களின் தேதியும் வீணாகும் என கருதிய அஜீத் தன சிகிச்சை காலத்தை ஒத்தி வைத்துள்ளார் அஜீத். 


இதை தொடர்ந்து தான் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி விஜயா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் படத்தில் நடிக்க உள்ளார். தான் பெரிதாக மதிக்கும் மறைந்த திரு நாகி ரெட்டியாரின் நூற்றாண்டை ஒட்டி ஒப்பந்தமான படம் என்பதாலும் இப்படத்திலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் சிலர் இருப்பதால் அவர்களின் கால்ஷீட் வீணாக கூடாது என்று கருதி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் அறுவை சிகிச்சை என்று முடிவு செய்திருக்கிறார் அஜீத். வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது. 


சக நடிகர்களின் வளர்ச்சிக்காக தன் உடல்வலியையும் பொறுத்துக்கொண்டு நடிக்கும் அஜீத்தின் தியாக உணர்வு திரையுலகில் சக நடிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

Friday, March 22, 2013

ராஜபக்சே தூக்கிலிட உத்தரவு வாத விவரம் மற்றும் தீர்ப்பு... படங்களுடன்...




மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று (22.03.2013) சர்வதேச நீதிமன்றம் போல் மேடை ஒன்றை வடிவமைத்தனர். சர்வதேச மாதிரி நீதிமன்றம்போல் அமைக்கப்பட்ட அந்த மேடையில், ராஜபக்சே உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது. நீதிபதி கேள்வி கேட்கும்போது, ராஜபக்சேவுக்கு ஆஜரான வழக்கறிஞர், அந்த உருவபொம்மையின் காதில் பேசிவிட்டு, நீதிபதிக்கு பதில் சொன்னார்.


சர்வதேச நீதிமன்றம் மதுரை. வழக்கு எண் 1/2003. குற்றவாளி: ராஜபக்சே என்ற சர்வதேச மாமா. தந்தை பெயர் ரத்தவெறி காளியப்பன். இலங்கை.


மனுதாரர்: ஈழத்தமிழகம். இலங்கை. 


நீதிபதி நக்கீரன் கருகாராலன் மற்றும் ஏ.கே.ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு. 


ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக முன்வரவில்லை என்பதால், நீதிமன்றமே இலவச சட்ட ஆலோசகராக உசிலை சிங்கம் செல்வராஜ் என்பவரை ஆஜராக உத்தவிட்டது. ஈழமக்களுக்காக வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜரானார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 313 சிஆர்பிசியின்படி கேள்விகளை குற்றவாளியிடம் கேட்டனர்.


நீதிபதி: ஏன் தலையை தொங்கப்போட்டு வருகிறாய். வெட்கமா?


ராஜபக்சே: என்னை எல்லோரும் சர்வதேச மாமா என்று அழைப்பதால் வெட்கமாக இருக்கிறது.


நீதிபதி: சர்வதேச மாமா என்று உங்களுக்கு பட்டம் கொடுத்தவர் யார்?


ராஜபக்சே: எனக்கு சோனியாவும், மன்மோகன் சிங்கும் கொடுத்தார்கள் அய்யா. இந்த பட்டத்தை அவமானமாக கருதுகிறேன்.


நீதிபதி: இது சரியான பட்டம்தானே என்ற நீதிபதிகள், ஒழுங்காக கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.


நீதிபதி: நீ ஆயிரம் பெண்களை கற்பழித்தாயா? உன் மீது குற்றம் சுமத்தப்படுகிதே.


ராஜபக்சே அமைதியாக இருக்கிறார்.


நீதிபதி: குற்றம் செய்தாயா? இல்லையா?


ராஜபக்சே: நான் கற்பழித்தது உண்மைதான். ஆனால் பெண்களை தனி அறையில் வைத்து கற்பழிக்கவில்லை. எங்கள் நாட்டு ராணுவத்துடன் பாதுகாப்புடன் கற்பழித்தேன். 


நீதிபதி: அது என்ன பாதுகாவல்


ராஜபக்சே: கணவன் முன்பு அவன் மனைவியை, தாய், தகப்பன் முன்னால் மகள்களையும், சாட்சிகளாக உற்றார் உறவினர்கள் முன்னிலையில் நான் கற்பழித்தேன். என் படை பாதுகாப்புடன்தான் கற்பழித்தேன். இது எப்படி குற்றமாகும். ஆயிரம் பெண்கள் என்று குறைவாக சொல்லுகிறீர்கள். ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை கற்பழித்தேன்.


நீதிபதி: 50 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்றாயா?

ராஜபக்சே: இல்லை அய்யா. ஒன்றரை லட்சம் பேர்.

நீதிபதி: நீ கொலை குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?

ராஜபக்சே: நான் கொலை செய்யவில்லை. என் ராணுவ வீரர்கள் கொன்றார்கள்.

நீதிபதி: உன் சம்மதத்துடன்தானே கொன்றார்கள்.


ராஜபக்சே: தாயிடம் கேட்டு தகப்பனை கொன்றேன். தகப்பனை வைத்து தாயை கொன்றேன். கணவனை வைத்து மனைவியை கொன்றேன். மனைவியை சம்மதிக்க வைத்து கணவனை கொன்றேன். தாய், தகப்பன், பிள்ளைகளை வைத்து பெரியவர்களை கொன்றேன். இது எப்படி குற்றமாகும். நீதிபதி மயங்கி விழுகிறார்.


நீதிபதி: நீ குற்றவாளியா இல்லையா


ராஜபக்சே: நான் குற்றவாளி இல்லை. ஆனால் ஒரு லட்சம் பேரை கற்பழித்தேன். ஒன்றரை லட்சம் பேரை கை, கால்களை கட்டி சாட்சியாக கொன்றிருக்கிறேன். 


நீதிபதி: ஒன்றரை லட்சம் பேரை கொன்ற உன்னை பொதுமக்கள் முன்னிலையில் உன் கை, கால்களை கட்டி சர்வதேச நீதிமன்றத்தில் தூக்கிலிட உத்தரவிடுகிறேன். வழக்கில் கொலைக்கான அனைத்து சான்றுகளும் இந்த நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதால், சாகும் வரை தூக்கிலிட்டு செருப்பால் அடித்து கல்லால் அடிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 


இதையடுத்து அந்த மேடையில், ராஜபக்சே உருவபொம்மையை கொண்டு வந்து தூக்கிலிட்டனர். தூக்கு நிறைவேற்றப்பட்டதும், ராஜபக்சேவின் உருவபொம்மையை செருப்பால் அடித்தும், அந்த உருவபொம்மைக்கு தீவைத்தும் எரித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.




இந்த நிகழ்வு விரைவில் கண்டிப்பாக உண்மையாகும்...

நன்றி நக்கீரன் படங்கள்: அண்ணல்

Thursday, March 21, 2013

விஜய், அஜீத்துக்காக காத்திருக்கும் இயக்குனர்!


தமிழ் சினிமாவின் யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது. இதையடுத்து, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘தீபாவளி’, ’மனம் கொத்திப் பறவை’ ஆகிய படங்களை இயக்கியவர். 





அஜீத் நடிப்பில் இவர் இயக்கிய பூவெல்லாம் உன் வாசம் சுமாரான வெற்றியை பெற்றது. தொடர்ந்து ராஜா என்ற படத்தில் அஜீத்துடன் இரண்டாவது முறையாக இணைந்தார். நீண்ட இவைவெளிக்குப் பிறகு தன் நண்பர் லிங்குசாமியின் தயாரிப்பில் தீபாவளி படத்தை இயக்கினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் மனம் கொத்திப் பறவை படத்தை இயக்கினார். படம் சுமாரான வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல படம் என்றும் பரவலாக பேசப்பட்டது.


இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தேசிங்கு ராஜா’வில் விமலுக்கென்று இருக்கிற டிரேட் மார்க் காமெடி இருக்கும். சூரி, பிந்து மாதவி என்று கமர்ஷியல் பார்முலாவைக் கலந்து, இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் கமர்ஷியல் வெற்றியாகும் என்றார். 


மேலும் அவர், நல்ல கமர்ஷியல் கதைக்களத்துடன் காத்திருக்கிறேன். நிச்சயம் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். என்னைப் பொறுத்தவரை விஜய், அஜீத் இருவருமே என் கண்கள்மாதிரி. அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன் என்றார். 

Tuesday, March 19, 2013

கருணாநிதிக்கு யாரும் நிகரில்லை : ஜெயலலிதா பரபரப்பு அறிக்கை



தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. 

2009 ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி. அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவோ இல்லை. 

இலங்கைத் தமிழர்களை ஈவுஇறக்கமின்றி இலங்கை அரசின் குண்டு மழையினால் கொன்று குவிக்கப்பட்டதற்கு கருணாநிதி தான் காரணம். இந்தச் சமயத்தில் மத்திய அமைச்சரவைக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். இதை செய்யவில்லை. இது தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய துரோகம். 

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட ஓரளவு வலுவான தீர்மானத்தை இந்திய அரசு வலுவிழக்கச் செய்த போதாவது கருணாநிதி அதனைக் கண்டித்து இருக்க வேண்டும். 

ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ததே இந்தியா தான் என்று பட்டவர்த்தனமாக அனைவருக்கும் மத்திய அரசே பிரதமரின் கடிதத்தை வெளியிட்டு தெரியப்படுத்தியது. அப்போதும் கருணாநிதி அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் துரோகம். ஒரு வேளை, அவ்வாறு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போக செய்த சூழ்ச்சியில் கருணாநிதிக்கும் பங்கு உள்ளது. எனவே தான் அதைப் பற்றி அப்போது அவர் எதையும் சொல்லவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 

இவ்வாறு மத்திய அரசை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணாத் துயரங்களுக்கு எல்லாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். 

இது மட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும், இப்பிரச்சனையில் இந்தியா வலுவான வரலாற்று சிறப்புமிக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், அந்தத் தீர்மானத்தை வலுவடையச் செய்ய என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் நான் விரிவான கடிதம் ஒன்றை பாரதப் பிரதமருக்கு நேற்று எழுதியுள்ள நிலையில், 18.3.2013 அன்று ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்ததும் கருணாநிதி அளித்த பேட்டியில், இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க் குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு எதிராகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், வலுவான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால் தான் இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க இயலும். 

ஆனால், கருணாநிதி, இந்திய நாடாளுமன்றத்தில் இதைப் போன்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார். அவரது இன்றைய (19.3.2013) பேட்டிக்குப் பின் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 21.3.2013 வரை காலம் இருப்பதாகவும், அதற்குள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.க. தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்றும் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் உறுதியான பயனளிக்கக் கூடியது அல்ல. மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் தான் தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதுவும் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல், இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இது போன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். மீண்டும் கொண்டு வரப்பட்ட டெசோ அமைப்பிற்கு மக்களிடமும், மாணவர்களிடமும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தற்போது அரங்கேற்றியுள்ள நாடகத்தின் மூலம் தன் மீது ஏற்பட்டுள்ள நீங்காத பழியை குறைத்துக் கொள்ளலாம் என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் எண்ணம் நிறைவேறாது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கபட நாடகங்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்பது திண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Monday, March 18, 2013

தமிழக மாணவர் போராட்டங்கள் தீவிரவாத செயலே...


தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை தீவிரவாத நடவடிக்கை என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழகத்தில் இலங்கைக்கு எதிராகவும் தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களை கடந்த ஒரு வார காலமாக நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் டெல்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் தேவையற்றது. இலங்கையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு தேவையில்லை. நாங்களே ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறோம். 

சர்வதேச நிலையிலான ஒரு தீர்மானம் என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் உணர்வுகளை கிளப்பிவிடக் கூடியதாகவே இருக்கும். தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை வெளிநாடு வாழ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தூண்டி விடுகின்றனர். 

இந்தப் போராட்டங்கள் தீவிரவாத செயல்களைப் போல இருக்கின்றனர். அப்பாவி இலங்கையர்களைத் தாக்குகின்றனர். இதைத்தான் இலங்கையில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கடை பிடித்தனர். வன்முறை மூலம் எந்த தீர்வையும் உருவாக்கி விட முடியாது என்றார் அவர்.

நியாயமான முறையில் போராடும் இந்த போராட்டங்களே தீவிரவாத செயல் ‌என்றால்... ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தார்களே அதை என்னவென்று சொல்வது....

இவருக்கு உங்கள் அர்ச்சனை செய்துவிட்டுபோங்கள்...

Friday, March 15, 2013

பரதேசி - சிறப்பு விமர்சனம்



தேயிலைத் தோட்டங்களில் அப்பாவி ஏழைத் தமிழர்கள் எப்படி உரமாக மாறினார்கள் என்ற கண்ணீர் கதையை, கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் மாதிரி விவரிக்கிறது பாலாவின் இந்த பரதேசி.

சாலூர் கிராமத்தில் வசிக்கும் அரைகிறுக்கன் ஒட்டுப் பொறுக்கி எனும் ராசாவுக்கு (அதர்வா) தாய் தந்தை இல்லை. பாட்டிதான் வளர்க்கிறாள். ஊரில் எது நடந்தாலும் தண்டோரா போட்டு, அதில் கிடைப்பதைக் கொண்டு வயிற்றைக் கழுவி வாழ்வதுதான் ராசாவின் தொழில். அதே ஊரில் உள்ள அங்கம்மாவும் (வேதிகா) ராசாவும் ஒருவரையொருவர் 'நினைத்துக் கொள்கிறார்கள்'. அந்த நினைப்பு ஊருக்குத் தெரியாமல் 'உறவா'கிவிடுகிறது.


இதற்கிடையே ஊரில் ஏகப்பட்ட பஞ்சம். வேலையில்லை. கஞ்சிக்கு வழியில்லை எனும் சூழலில், தேயிலைத் தோட்டத்துக்கு ஆள்பிடிக்க வரும் கங்காணியின் சர்க்கரை வார்த்தையில் சிக்குகிறார்கள்.



ஊரின் பெரும்பகுதி மக்கள் கிளம்புகிறார்கள் தேயிலைத் தோட்டத்துக்கு. கூடவே ராசாவும். அங்கம்மா கிராமத்திலேயே நின்றுவிடுகிறாள். பச்சைமலைக்குப் போனபிறகுதான் அது வேலை செய்யும் இடமல்ல... கடைசி வரை அங்கேயே வெந்து சாக வேண்டிய சுடுகாடு என்பது புரிகிறது. கொட்டும் பனி, அடை மழை, அட்டைக்கடி, அதைவிட மோசமான கங்காணியின் உறிஞ்சல், வெள்ளைக்காரனின் காமப் பசி, கொள்ளை நோய் என அத்தனையையும் சகித்துக் கொண்டு அல்லது பலியாகி மண்ணோடு மண்ணாகிறார்கள்... ஒரு கூட்டத்தில் பாதிக்கும்மேல் செத்துவிழ... அடுத்து புதிய கூட்டம் புறப்பட்டு வருகிறது... அதில் ராசாவின் அங்கம்மாளும்.. அவர்களின் உறவுக்கு சாட்சியாய் பிறந்த குழந்தையும்...

தேயிலை ருசியாகக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது, செத்து விழுந்த மக்களின் உடல் தந்த உரத்தில்!

இந்தப் படம் ரசித்துப் பார்க்கத்தக்க படமா என்றால்.. சத்தியமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பச்சைப் பசேல் என்ற தேயிலைத் தோட்டங்களின் பின்னால் குரூரமாய் சிந்த வைக்கப்பட்ட ரத்தத் துளிகளின் பதிவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், நிறைகளை விட, மனதை நெருடும் முட்களாய் பல காட்சிகள், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு அமைந்திருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

எதை வைத்து ஒளிப்பதிவின் தன்மையை தீர்மானிக்கிறார்கள் என்பது கடைசி வரை புரியவில்லை. கதை நிகழும் காலம் எதுவாக இருந்தாலும், இயற்கையின் நிறம் மாறப்போவதில்லை. நன்றாக நினைவிருக்கிறது.. எழுபதுகளின் இறுதியில் தமிழகத்தில் வறட்சி தலை விரித்தாடியது. கற்றாழைக் கிழங்கைப் பிடுங்கி அவித்துத் தின்ற கோர நாட்கள். ஆனால் அன்றும்கூட தமிழகத்தின் எந்த மாவட்ட காடும் நிலங்களும் பச்சைப் பசேல் என்றுதான் இருந்தன. சாம்பல் படிந்த நிறத்தில் எந்த ஊரையும் பார்த்த நினைவில்லை. சரி ஊர்களைத்தான் அப்படி பாதி கருப்பு வெள்ளையில் காட்டுகிறார்கள் என்றால்... தேயிலைத் தோட்டத்துக்குப் போன பிறகும் தேயிலைகள் சாம்பல் பூத்த மாதிரி காட்டியிருப்பது என்ன வகை உலகத் தரமோ.. செழியனும் பாலாவும்தான் விளக்க வேண்டும்.

இசை... பாவம் ஜிவி பிரகாஷ்குமார். அவரிடம் இல்லாத விஷயத்துக்காக திட்டி பிரயோசனமில்லை. அதர்வா தப்பித்து ஓடும் காட்சிக்கு வாசித்திருக்கிறார் பாருங்கள்... பக்கா டெம்ப்ளேட் இசை. அதேபோல தன்ஷிகாவின் மரணத்தை விட கொடூரமாகக் காதுகளைப் பதம் பார்க்கிறது ஜிவியின் பின்னணி. பாடல்களில் வைரமுத்துவை ரொம்ப கவனமாகத் தேடியும் கடைசிவரை கிடைக்கவே இல்லை.

ஆரம்பக் காட்சியில், ஒரு திருணமத்தின் போது பெரியப்பா விக்ரமாதித்யன் செத்துப் போகிறார். அந்த சாவை ஊரறிய சொல்லிவிட்டால் கிராமத்து மக்கள் நெல்லு சோறு சாப்பிடும் பாக்கியம் போய்விடுமே என்று மறைத்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்து, நாலைந்து பந்தி சோறும் சாப்பிட்டு கையைக் கழுவுகிறது. ஆனால் பெரியப்பன் பிணத்தை அப்படியே விட்டுவிடுகிறார்கள். பாலா படத்தில் இவ்வளவு வெளிப்படையான ஓட்டை இதுதான் முதல் முறை.

இந்தக் காட்சிகளின் போது அதர்வாவை டீஸ் செய்கிறேன் பேர்வழி என வேதிகா செய்யும் ஒவ்வொரு செயலும் மகா அருவருப்பு. 1939-ல் நடக்கும கதைக் களத்தில் பெண்கள் இப்படியெல்லாம் லூசுத்தனமாக நடந்து கொள்வார்களா...


அதர்வாவுக்குதான் நன்றாக காதலிக்கத் தெரிகிறது. நல்லது கெட்டது தெரிகிறது.. பெரியப்பா வராமல் தாலி கட்டக் கூடாது என்ற இங்கிதம் தெரிகிறது... கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வலி புரிந்து அவள் குழந்தையை நேசிக்கத் தெரிகிறது.. அப்புறம் ஏன் அவரை கேனயனாகக் காட்ட வேண்டும்?

சோகம் என்பது காட்சிகளில் மறைபொருளாக இருக்க வேண்டும். அதைப் பார்ப்பவர் உணர்ந்து கசிந்துருக வேண்டும். அதுதான் நல்ல காட்சி அமைப்பு. அதை இதற்கு முந்தைய பாலா படங்களில் அனுபவித்தவர்கள் நாம். ஆனால் இந்தப் படத்தில் தங்கள் சோகங்களைச் சொல்லிச் சொல்லி ஓங்கி கதறிக் கொண்டே இருக்கின்றன பெரும்பாலான பாத்திரங்கள். ஆனால் பார்ப்பவரை அந்த சோகம் தாக்கவே இல்லை. அதுதான் பரதேசியின் பிரதான குறைபாடு.

மற்றபடி அன்றைய சமூக நிலையை பாலா கச்சிதமாக சித்தரித்திருக்கிறார். வேலைகேட்டு வரும் ஒரு முன்பின் தெரியாதவனை மாட்டை அடிப்பது போல அடித்துவிட்டு, பின் ஒரு வண்டி விறகை பிளந்து கொடுக்கச் சொல்லி, கடைசியில் அதற்கும் கூட கூலி கொடுக்காமல் விரட்டியடித்தவன் வெள்ளைக்காரனில்லை.. நம்மிடையே வாழ்ந்த கொள்ளைக்காரன்கள்தான் என்பதை வலிக்கிற மாதிரி பதிவு செய்திருக்கிறார் பாலா.

குறிப்பிட்ட மதத்தின் பெயரைச் சொல்லி சமூக சேவை செய்ய வரும் மருத்துவர்கள்கூட, நோயை விரட்டுவதைவிட, தங்கள் மதப் பிரச்சாரத்தை முன்னெடுத்து மக்களை மாற்றுவதிலேயே குறியாக இருப்பதை இத்தனை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

படத்தின் இன்னொரு ப்ளஸ்.... நாஞ்சில் நாடனின் வசனங்கள். 'கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு பேள்றது கூட கஷ்டம்தான்..' போன்றவவை ஒப்பனைகளற்றவை. என்ன... சில பாத்திரங்கள் இந்த வசனங்களை உச்சரிக்கும் விதம் மகா செயற்கையாய் இருப்பது!

படத்தின் பிரதான பாத்திரம்... நம்மைப் பொறுத்தவரை.. வீரமும் தன்மானமும் மனிதாபிமானமும் மிக்க அந்தப் பாட்டி கச்சம்மாள். அவர் நடித்தார் என்று சொல்வது ரொம்ப தப்பு. அந்தப் பாட்டியை அவராகவே இருக்க விட்டிருக்கிறார் பாலா.

பாலாவின் இந்த பரதேசி இயல்பான படம்தான்.. ஆனால் சுவாரஸ்யம் இல்லாத ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை!

நடிப்பு: அதர்வா முரளி, வேதிகா, தன்ஷிகா, ஜெர்ரி, ரித்விகா 
ஒளிப்பதிவு: செழியன் 
வசனம்: நாஞ்சில் நாடன் 
இசை: ஜி வி பிரகாஷ்குமார் 
கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா

Thanks : One india

Wednesday, March 13, 2013

பரதேசி பட்ட பாடு..! பாலா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்


இது பாலா வாரம்.. எனும் அளவுக்கு பரதேசி பற்றிய செய்திகளும் படங்களும் வீடியோக்களும் ஊடகங்களில் குவிந்துவிட்டன. 

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இந்தப் படம் உலகம் முழுக்க வெளியாகிறது. 

பரதேசி பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகளும்… கடைசியில் ஒரு ஷாக்கிங் வீடியோவும் உங்களுக்காக! 

* பரதேசி படத்தின் ஒரிஜினல் கதை ரெட் டீ நாவல்.. அது மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் தமிழிலும் வெளியானது. தமிழில் தலைப்பு எரியும் பனிக்காடு! 

* இந்தப் படத்துக்கு முதலில் சனி பகவான் என்று பெயர் வைத்தார். அந்த நேரம் பார்த்து ஆதி பகவன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் அமீர். அதை பின்னர், கல்லறைத்தோட்டம் என மாற்றினார். பின்னர் என்ன நினைத்தாரோ.. பரதேசி என்று முடிவு செய்துவிட்டார். 


* பாலா என்ற ஒரு இயக்குநர் வெளியில் தெரியும் முன்பே அவருக்கு எல்லாமாக இருந்து ஆசி வழங்கியவர் இளையராஜா. தன் இசையால் அவர் படைப்புகளுக்கு அர்த்தம் தந்தவர். ஆனால் இந்தப் படத்தில் முதல் முறையாக ராஜா குடும்பத்துக்கு வெளியில், ஜி.வி.பிரகாஷிடன் இணைந்திருக்கிறார் பாலா. ஆனால் மனசுக்குள் ராஜா மேல் உள்ள மரியாதையைக் காட்ட, படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவுக்குக் காட்டி ஆசி பெற முடிவு செய்துள்ளாராம்.

* பாலாவின் படங்களில் வெளிநாட்டில் அதிக அரங்குகளில் வெளியாவதும் பரதேசிதான். 18-ம் நூற்றாண்டில் தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளுக்கு ஆங்கிலேயர் செய்த கொடுமைகளை ஆங்கிலேயருக்குச் சொல்ல ஆங்கில சப்டைட்டிலுடன் 25 திரையரங்குகளில் பிரிட்டனில் வெளியாகிறது பரதேசி.


* பொதுவாக தன் பாடல் வரிகளில் யார் செய்யும் திருத்தங்களையும் அத்தனை சுலபத்தில் ஏற்க மாட்டார் வைரமுத்து. ஆனால் பாலா பல திருத்தங்கள் சொல்லச் சொல்ல, அதற்கேற்ப தன் பாடல்களை மாற்றிக் கொண்டாராம். அது மட்டுமல்ல, அடுத்த படத்துக்கும் வாய்ப்பு கேட்டுள்ளார். பாலா வழக்கம் போல சிரித்து வைத்தாராம். காரணம், அடுத்த படத்துக்கு மீண்டும் இளையராஜாவிடம் போகும் திட்டத்திலிருக்கிறார் பாலா. வைரமுத்துவுக்கு எப்படி வாக்கு தரமுடியும்! 

* இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச இயக்குனர் சீமானை அழைக்க முடிவு செய்தார் பாலா. ஆனால், கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டார். அஜீத் விவகாரத்தில் சீமான்தான் பாலாவுக்கு உதவியவர் என்பது நினைவிருக்கலாம். 

* படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமெடுத்து முடித்துவிட்டு, மனசு பாரம் தாங்காமல் சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் இரண்டு நாட்கள் படுத்துறங்கிவிட்டு வந்தாராம்! 

* இந்தப் படம் வலி மிகுந்த ஒரு வரலாற்றைச் சொல்லும் படம்தான் என்றாலும், பாலாவின் படங்களுக்கே உரிய நகைச்சுவையும் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள். 


* அதெல்லாம் ஓகேதான்… இந்தப் படத்துக்காக பாலா தன் நடிகர்களைப் படுத்தியிருக்கும் பாட்டை ஒரு வீடியோவாகத் தந்திருக்கிறார். 

அதைத்தான் எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை.. ரீலா.. ரியலா.. ? 

பரதேசியை அவர் பாராட்டினார்.. இவர் சிலாகித்தார் என்று வந்த அத்தனை பாஸிடிவ் செய்திகளையும் நாசமாக்கியிருக்கிறது இந்த ரியாலிட்டி டீஸர் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.  (
நன்றி சினிமா தளங்கள் 
)

இதோ அந்த வீடியோ.. 



Tuesday, March 12, 2013

விஸ்வரூபம் போல விஜய்யின் தலைவா படத்தையும் முடக்க சதி...!


நடிகர் விஜய்யின் படங்களுக்கு வைக்கும் டைட்டில்களுக்கு திரையுலகில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. என்ன டைட்டில் வைத்தாலும் அதற்கு சம்மந்தமான ஒரு டைட்டிலுடன் ஒரு கோஷ்டி கிளம்புகிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்திற்கு, கள்ளத்துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் பிரச்சனை வந்தது. 


பல நாள் போராட்டத்திற்குப் பிறகு இரு பிரிவினரும் சமாதானம் அடைந்து துப்பாக்கி ரிலீஸ் செய்யப்பட்டது. துப்பாக்கி திரைப்படத்திற்கு ஏற்பட்ட இதுபோன்ற பிரச்சனைகள் இனி ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் விஜய், தான் நடிக்கும் படத்தின் இயக்குனர்களிடம் ’தலைப்பு தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்’ என்பது தானாம். 





விஜய்-விஜய் இணைந்திருக்கும் ’தலைவா’ படத்தின் டைட்டிலை தேர்ந்தெடுத்த போதும் பல அசிஸ்டண்ட் இயக்குனர்களின் தலை உருட்டப்பட்டது. அவ்வளவு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பிற்கும் இப்போது பிரச்சனை வந்துவிட்டது. சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘தலைவன்’. 


விஜயகாந்த் நடித்த உளவுத்துறை, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சுமன், கோட்டா சீனிவாசராவ், சந்தானம் என வலிமையுடன் இருக்கும் ‘தலைவன்’ படக்குழுவில், இனிமையான நிகிஷா படேலும் நடிக்கிறார். 


விஜய்-விஜய் திரைப்படம் துவங்கப்பட்டபோது ’தலைவன்’ என பெயரிட இருந்தபோது சசிகலா மகன் பாஸ்கரன் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததால் ‘தலைவா’ என மாற்றினார்கள். ஆனால் ‘தலைவா’வின் தலையையும் இப்போது குறிவைத்திருக்கிறதாம் ‘தலைவன்’ படக்குழு. 


விஜய்யின் தலைவா திரைப்படம் ரிலீஸாகும் போது பிரச்சனை செய்யும் நோக்கில், ரிலீஸுக்கு தயாராகிவிட்ட ‘தலைவன்’ திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறாதாம்.

Monday, March 11, 2013

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்!

இந்திய திரையுலகின் இரண்டு சூப்பர்ஸ்டார்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மேடை நிகழ்ச்சியில் ஒன்றாக நின்றாலே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு மாபெரும் விருந்தாக அமையவிருப்பது, இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பது தான். ரஜினி-அமிதாப் என இரு திரையுலக சிகரங்களையும் இணைத்து இயக்கப் போவது ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தான்.





நீண்ட நாட்களுக்கு முன்பு ’அமிதாப் பச்சனிடம் ஒரு கதையைச் சொல்லி ரசூல் பூக்குட்டி சம்மதம் வாங்கிவிட்டார்’ என்ற செய்தி வெளிவர, அமிதாப் பச்சனும் ரசூல் பூக்குட்டியும், இணைவது இந்தி திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் ரசூல் பூக்குட்டி திடீர்ப் பயணமாக சென்னை கிளம்பி வந்து தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளார்.


“தன் திரைப்படத்தில் நடிக்குமாறு ரஜினியிடம் கேட்கவே ரசூல் பூக்குட்டி சென்னை சென்றிருக்கிறார்” என்று இந்தி திரையுலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதால், ’அமிதாப் பச்சனிடம் கூறிய கதையைத் தான் ரஜினியிடமும் ரசூல் பூக்குட்டி கூறியிருப்பாரா?’ என்று இந்திய திரையுலகமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. 


அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகிய இரு சூப்பர்ஸ்டார்களின் கால்ஷீட் கிடைக்கும் பட்சத்தில் பிரம்மாண்டமான இத்திரைபடத்தில் இந்திய திரையுலகின் இரண்டு சூப்பர்ஸ்டார்கள் இணைவார்கள். ரஜினிகாந்தின் பல படங்களில் அமிதாப் சிறப்புத் தோற்றத்திலும், அமிதாப்பின் பல படங்களில் ரஜினி சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார். இருவரும் கதாநாயகனாக நடித்த படம் ‘ஹம்’ தான்.

Saturday, March 9, 2013

”எனக்கு கமலை விட ரஜினி தான் நெருக்கம்” - கே.எஸ்.ரவிகுமார்!


கே.எஸ்.ரவிகுமார் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கிய அவ்வை ஷண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி தசாவதாரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் கடைசியாக இவர்கள் இணைந்த மன்மதன் அம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தகர்த்து கமல்-கே.எஸ்.ரவிகுமார் நட்பிலும் ஒரு விரிசலை ஏற்படுத்தியது. 




மன்மத அம்பு படத்தின் தோல்வியை அடுத்து கே.எஸ்.ரவிகுமார் “மன்மதன் அம்பு என் கதை அல்ல. கமல் சொன்ன கதை. அதன் தோல்விக்கும் எனக்கும் சம்மந்தமல்ல” என்று கூறிவிட்டார். இதையறிந்த கமல் “ தசாவதாரமும் என் கதை தான். அதன் வெற்றிக்கும் எனக்கு சம்மந்தமில்லை என்று சொல்லிவிடுவாரா?” என்று சூடாக திருப்பிக் கொடுத்தார். அதன்பிறகு இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இல்லாமல் கமல் விஸ்வரூபம் படத்தை இயக்கி முடித்தார்.


விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கலந்து கொண்டு பேசிய கே.எஸ்.ரவிகுமார் “ கமலை வைத்து படம் இயக்க பல இயக்குனர் தவம் கிடக்கும் போது. அவர் ஏன் எல்லா பளுவையும் தன் தலை மேல் ஏற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். கே.எஸ்.ரவிகுமாரின் சுமூகமான அணுகுமுறையினால் கமலும், கே.எஸ்.ரவிகுமாரும் எப்போது இணைவார்கள் என்ற கேள்வி வலுத்திருந்தது. 





சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய போது இந்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.ரவிகுமார் “மன்மத அம்பு படத்திற்கு பிறகு கமலிடம் நான் படங்களைப் பற்றியோ மற்றதைப் பற்றியோ பேசியதே இல்லை. ரஜினியுடன் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது பேசிவிடுவேன். கமலுடன் அதுபோன்ற தொடர்புகளும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Friday, March 8, 2013

”இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இந்த பாடல் சமர்ப்பனம்” - கார்க்கி!


’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கும் அவரது இரண்டாவது படத்தின் பெயர் “ரெண்டாவது படம்”. தமிழ்ப்படம், ரெண்டாவது படம் என வார்த்தைகளைக் கொண்டு விளையாடும் அமுதன் தன் பட பாடல்களுக்கு குப்ப தொட்டி, ஆப்பு பர்த்டே, அடுத்த பருப்பு, ரோஜாப் பூ, டெத் ஆன்தம் (DEATH ANTHEM) என டைட்டில் கொடுத்திருக்கிறார். 

”ரோஜா பூ ஒன்று ராஜாவின் கைசேர... வானம் செந்தூரம் சூடும்” என்ற பாடல் 80-களில் வெளிவந்த பாடல்களின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜாவும்- வைரமுத்துவும் இணைந்து 80-களில் இணையற்ற பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் அந்த ஸ்டைலில் யாராலும் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்ற குறை இப்போது தமிழ் சினிமாவில் இருப்பதை உணர்ந்தே அமுதன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். 


இந்த ரோஜா பூ பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி பேசிய மதன் கார்க்கி “ 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதியது எனக்கு சவாலாக இருந்தது. நான் சிறிய வயதிலிருந்தே வைரமுத்து - இளையராஜா இணைந்து உருவாக்கிய பாடல்களைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்தப் பாடலை எஸ்.பி.பி - சித்ரா பாடியிருக்கிறார்கள். நான் எழுதிய வரிகளை முதல்முதலாக இருவரும் பாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடல் இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்” என்று கூறினார்.


புன்னகை மன்னன் படத்தில் பிரிந்த இளையராஜாவையும் வைரமுத்துவையும் இணைத்து வைக்க பலர் முயற்சி செய்தாலும், அது நடக்காமலே போனது. பாரதிராஜாவும் இந்த விஷயத்தில் போராடித் தோற்றுப்போனார். இந்த சூழலில் ரெண்டாவது படம் படத்தில் வரும் ரோஜா பூ ஒன்று என்ற பாடல் கேட்பவர்களை பரவசப்படுத்தும் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது!


ரோஜா பூ - பாடல் வரிகள்...


குழு - மயில் தோகை கொண்டே 
விசிறி தோழன் ஒருவன் மயங்கிவிட்டானே
காதல் மதுவை அருந்தி... 
திருக்கோவில் தீபம் எனவே
தோழி கைத்தலம் பிடிக்க வந்தாலே
தீயில் ஒளியாய் பொருந்தி...
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே 
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே!


பல்லவி


ஆண் - ரோஜா பூ ஒன்று... ராஜாவின் கைசேர... 
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்
மாயம் புரிந்தாய்...
காற்றாய் நிறைந்தாய்...


குழு - உனக்கே பிறந்தாள் 
இதயம் திறந்தாள் 
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்


சரணம் - 1


ஆண் - தானாய் வந்ததொரு நந்தவனம் 
என் சொந்தவனம் 
பெண் - நீதான் காலமெங்கும் என் வசந்தம் 
ஒரு பொன்வசந்தம்
ஆண் - தேன் மழை பொழியவா
பெண் - நான் அதில் நனையவா
ஆண் - உயிரே... உயிரில் இணையவா...


சரணம் - 2


பெண் - காமன் கோயிலுக்குள் போக மேடை
அதில் ராஜ பூஜை
ஆண் - மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை 
பெண் - வேர்வையில் குளிக்கலாம்
ஆண் - பார்வையில் துடைக்கலாம் 
பெண் - உறவே இரவை படிக்கலாம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...