Friday, May 31, 2013

‘ரஜினிகாந்துக்கும் எலெக்ட்ரீஷியனுக்கு ஒரு வித்தியாசமும் இல்லையா?’கேள்வி: “ரஜினிகாந்துக்கும், ஒரு எலக்ட்ரீஷியனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்று சொல்லுங்கள்.. அதை வேண்டுமானால் ஒத்துக்கொள்கிறேன்,” -இப்படி ஒருவர் எழுதியிருக்கிறார். அதை தலைவரை வைத்து விழா நடத்தி புத்தக வெளியீடு செய்து பாராட்டிப் பேசிய மனுஷ்ய புத்திரம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறாரே… இது சரியா? எந்த பதிலும் தராமல் இருப்பது சரியா?

- இப்படி தொலைபேசியில் நான்கைந்து நண்பர்கள் கேட்டார்கள். இந்தக் கேள்விக்கான பதிலை, கருத்தைப் பகிர்ந்த மனுஷ்யபுத்திரன் பக்கத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு, இங்கே தருகிறேன்.

எனது பதில்: 

“மிகத் தவறான மனப்போக்கு இது. ஒரு எலெக்ட்ரீஷியனை வைத்து உங்களால் பிரமாண்டமாக ஒரு புத்தக வெளியீட்டை நடத்தி களிப்படைந்திருக்க முடியுமா? ‘இந்த மாமனிதர் வந்ததால் இந்த அரங்கம் எத்தனை மகிழ்ச்சியடைகிறது..’ என்று ஒரு எலெக்ட்ரீஷியனை உங்கள் வாய் புகழுமா?

நல்ல எழுத்துக்களைத் தருபவர்களின் தலைக்குப் பின்னால் எப்போதும் எழுத்தாளன் என்ற ஒளிவட்டம் தேவையே இல்லை, அது இல்லாத பல எழுத்தாளர்களை இந்த உலகம் கொண்டாடி இருக்கிறது.

உங்களைப் போன்ற பலருக்கும் ஆதர்ஸ எழுத்தாளராகத் திகழ்ந்த சுஜாதா, ஆணா பெண்ணா என்ன வித்தியாசம் கூட தெரியாத எண்பதுகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதற்காக அவருக்கு புகழும் மரியாதையும் கிடைக்காமலா போய்விட்டது..? அவரை இழுத்து வைத்து கண்டவனெல்லாம் கழுத்தறுப்பு செய்தானா என்ன?

ஒரு காலிப் பானை என்று தெரிந்த பிறகு அவ்வளவு நேரம் அந்த நபருடன் காலத்தை ஓட்டியது ஜெயமோகனின் தவறு. அவரது பக்குவமற்ற மனதை பறைசாற்றும் எழுத்து அது. மிக எளிமையாகக் கடந்து செல்ல வேண்டிய ஒருவனைப் பற்றி, தன் மேதைமையை துருத்திக் காட்டும் வகையில் அவர் எழுதிய ஒரு கட்டுரைக்கு இந்த அளவுக்கு மாய வேண்டியதில்லை (ஜெயமோகன் கட்டுரையை அவர் தளத்தில் படித்துக் கொள்ளவும்).


ஒருவர் தன் ஈகோவைத் தின்ன முயலும்போதே, அந்த ஈகோ அவரை காலி பண்ணிவிடுகிறது. அது எழுத்தாளனாக இருந்தால் என்ன, பிளம்பராக இருந்தாலென்ன.. அந்த ஈகோ, உலகெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடினாலும் ரஜினிக்கு ஒருபோதும் இருந்ததில்லை!” (Envazhi)

Wednesday, May 29, 2013

இவைதான் நம் முதல் எதிரி...!


நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...! (ரசித்தது )

Tuesday, May 28, 2013

கேன்ஸ் விழாவுக்கு ரஜினி ஏன் போகவில்லை / கோச்சடையான் புத்தம்புதிய ட்ரைலர்


கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக உருவாக்கிய பிறகே சர்வதேச விழா ஒன்றில் வெளியிட வேண்டும் என்பதாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி கேன்ஸ் விழாவுக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார், என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார். 

கோச்சடையான் படத்தின் முதல் முன்னோட்டக் காட்சியை சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில், உலகின் முக்கிய படைப்பாளிகள் மத்தியில் திரையிட வேண்டும் என படக்குழுவினர் விரும்பினர். 

ரஜினியும் இதற்கு முதலில் ஒப்புக் கொண்டார். ட்ரைலரைப் பார்த்துப் பாராட்டிய ரஜினி, 'இந்த ட்ரைலர் நன்றாகத்தான் உள்ளது. நிச்சயம் பெரிய மைல்கல்லாக அமையும். ஆனால் இந்தப் படம் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம். சர்வதேச விழாவில் திரையிடுகிறீர்கள். எனவே இன்னும் சிறப்பாக தயார் செய்யுங்கள்," என்று கூறினாராம். 

ஆனால் அப்படி தயார் செய்ய காலதாமதமாகிவிட்டதால், தனது கேன்ஸ் பயணத்திட்டத்தை ரத்து செய்துவிட்டாராம். ஆனால் வெளியில் பிரான்ஸ் செல்லும் அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இடம்தரவில்லை என்பதுபோல சிலர் கிளப்பிவிட்டனர். 

இதுகுறித்துப் பேசிய தயாரிப்பாளர் முரளி மனோகர், "இது முற்றிலும் மடத்தனமான கற்பனை. ரஜினி ஒரு ஆண்டுக்கு முன்பே உங்களையும் என்னையும் போல மிக நல்ல ஆரோக்கியமடைந்துவிட்டார். ரஜினியின் புகழை சிதைப்பதாக நினைத்து தம்மைத் தாமே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள் இதுபோன்ற செய்தியைப் பரப்புபவர்கள். 

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா... கோச்சடையான் ட்ரைலர் பார்த்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், இன்னும் கூட சிறப்பாக இந்த ட்ரைலரை உருவாக்கலாமே என யோசனைகள் சொன்னார். எனவே அவசர கோலத்தில் எதுவும் செய்யாமல், கொஞ்சம் பொறுமையாக இந்த ட்ரைலரை உருவாக்குமாறு ரஜினி கூறியதால், நாங்கள் கேன்ஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ட்ரைலரை சிறப்பாக உருவாக்கும் முயற்சியில் உள்ளோம். 

கேன்ஸ் ரத்தால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வேறு சர்வதேச நிகழ்வுகள் நிறையவே உள்ளன. அதில் ட்ரைலரை வெளியிடுவோம். இன்னும் 10 நாட்களில் பிரமாதமான ட்ரைலர் தயாராகிவிடும். இந்தப் படத்துக்கு ஏராளமான உழைப்பும் அபரிமிதமான ஆற்றலும் தேவைப்படுகிறது. ரஜினி சாரின் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றைத் தந்துவிட முடியாது. இருப்பதிலேயே சிறப்பான படைப்பால்தான் அவர்களைத் திருப்திப்படுத்த முடியும்," என்றார்.

பணமாகும் தவறுகள், தடுமாறும் இந்தியா? கேள்விக்குறியில் விளையாட்டு..!
"பதினோரு பேர் விளையாடும் விளையாட்டை,10 ஆயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கும் விளையாட்டு, கிரிக்கெட்' என்ற விமர்சனம், அந்த விளையாட்டைக் கண்டு, மனமகிழ்ச்சிக்காக செய்யப்படும் செயல்கள், ஒழுங்கு முறை ஆட்டமாகத் தொடர்வதற்குப் பதில், பந்தய ஆட்டமாக மாறி, முடிவில், சூதாட்ட ஆட்டமாக மாறிப் போயுள்ளது வேதனைக்குரியது. 

இந்தியாவில் நடைபெற்று வரும், ஐ.பி.எல்., போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த, பவுலர்களான ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் மூவரும், சூதாட்டக்காரர்களுடன் ஒப்பந்தம் போட்டு, போட்டிகளில் சொதப்பியதால், கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த, மூன்று போட்டிகளிலும், இவர்கள் மூவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில், ஸ்ரீசாந்தின் தந்தை, "என் மகன் அப்பாவி. தோனி, ஹர்பஜன் சிங்கின் கூட்டுச் சதியால் பலியாகியுள்ளான்' என, பேட்டி அளித்துள்ளது வேடிக்கையாய் உள்ளது.

அதிக ரன்கள் எடுத்தால், அதிக விக்கெட்டுகள் சாய்த்தால், பாராட்டு, பரிசு என்ற நிலைமை போய், அதிக ரன் விட்டுக் கொடுத்தால், குறிப்பிட்ட ஓவரில், "நோ பால்' வீசினால், "ஒய்டு' வீசினால், கேட்சை நழுவ விட்டால், ரன் அவுட்டானால் அதிக பணம் என, விளையாட்டே சூதாட்டமாகிப் போயுள்ளது. 

இந்தப் போட்டிகளின் தொடக்க நாளிலும், நிறைவு நாளிலும், திருவிழா என்ற பெயரில், பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. மேலும், விளையாட்டில் கவர்ச்சியைக் கூட்ட, கன்னிகளை, அரைகுறை ஆடையுடன் ஆட வைக்கின்றனர். 

அதாவது, ரன்னோ, விக்கெட்டோ எடுத்தால், ஆட வேண்டும்; அவுட் ஆனாலோ, பந்துகளை, "கேட்ச்' பிடிக்காமல், "மிஸ்' செய்து விட்டாலோ, சோக முகத்தைக் காட்ட வேண்டும். 

இதற்கு, இவர்களுக்கு காசு. கலாசார சீரழிவுக்கும், குறிப்பிட்ட சில நிறுவனங்கள், கோடி கோடியாகப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவும், நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள் நசியவும் காரணமான கிரிக்கெட்டிற்காக, கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிப்பது, வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு அழகா? 

Monday, May 27, 2013

எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் - சோ அதிசயப் புகழாரம்!


பொதுவாக பாராட்டுவதில் பத்திரிக்கையாளரும் நடிகருமாகிய சோ ராமசாமி மிகவும் கஞ்சத்தனமாக இருப்பவர்.

விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் எந்த ஒரு ஆளுமையையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம். சமீபத்தில் ஜெயலலிதாவைத்தவிர வேறு யாரையும் அவர் பாராட்டுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாரோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஜெ.-வுக்கு அப்படி ஒரு ஆதரவு!

உண்மையில் இசை உலகில் சுப்புடு எப்படியோ அப்படித்தான் அரசியலிலும், சினிமாவிலும் சோ! அவர் ஒருவரை புகழ்கிறார் என்றால் அது வசிஷ்டர் வாயால் கிடைத்த பிரம்ம ரிஷி பட்டம் போன்றுதான்.

சரி அஜித் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கவிரும்பவில்லை. சோ அஜித் பற்றி என்ன கூறினார்? 

எம்ஜிஆர் தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர் அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.

அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித் தான் ஆனாலும் எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை. என்று சோ புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒரு நிபுணர் மற்றும் விமர்சகரிடமிருந்து தல-க்கு இவ்வளவு பெரிய பாராட்டு மிகவும் அதிசயம்தான்! அஜித் உண்மையில் எம்.ஜி.ஆர்.தான்! சோ-வையுமே அசத்தியுள்ளாரே தல!

Sunday, May 26, 2013

ஓ... இதனாலதான் விஜய்-யை மக்களுக்கு பிடிக்குதோ...!விஜய் குறித்து பேசிய கமல்ஹாசன், விஜய்யின் வெற்றி பூவா தலையா போட்டு வந்த வெற்றியல்ல, கடின உழைப்பால் கிடைத்த வெற்றி இது என்றார். கை தூக்கிவிட அப்பா இருந்தாலும் சினிமாவில் நிலைத்து நிற்க அதையும் தாண்டிய கடின உழைப்பு வேண்டும். விஜய்யிடம் அது இருக்கிறது. விஜய்யை ஒருவர் விரும்புவதற்கான ஐந்து காரணங்களை பார்ப்போம்.


1. நடனத் திறமை!

ஆரம்ப காலத்தில் விஜய்யின் நடன அசைவுகள் சுமாராகவே இருக்கும். பலமுறை நடன அசைவுகளுக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார் விஜய். அது விஜய்க்கும் தெ‌ரியும். எதில் பலவீனமாக இருக்கிறோமோ அதில் சிறந்தவனாக வேண்டும் என்ற உந்துதலில் வீட்டில் கடுமையாக பயிற்சி எடுத்த பின்பே செட்டில் நடனக் காட்சிக்கு கேமரா முன் வந்து நிற்பார். 


இப்போது தமிழ் சினிமாவில் நடனத்தில் நம்பர் ஒன் இம் ஹீரோ விஜய்தான். எவ்வளவுதான் நன்றாக ஆடினாலும் விஜய்யைப் போல ஆட முடியலை, அவரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று சூர்யாவே ஒருமுறை கூறியிருக்கிறார்.


2. கடின உழைப்பும் விடா முயற்சியும்!

நாளைய தீர்ப்பு படத்திற்கு முன்பு குடும்பத்துடன் அம‌ர்ந்து பத்தி‌ரிகை ஒன்றிற்கு பேட்டி தந்தார் விஜய். அதில் ர‌ஜினியைப் போல ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என்று தெ‌ரிவித்திருப்பார். ஆனால் அந்த லட்சியம் அவ்வளவு எளிதில் அடையக் கூடியதாக இல்லை. தொடர்ச்சியாக அவரது தந்தை படங்கள் எடுத்த போதிலும் ஆக்சன் ஹீரோ இமேஜை பெற அவர் கடினமாக உழைக்க வேண்டி வந்தது. முக்கியமாக விடா முயற்சி. 

இன்றைய தேதியில் அறிமுகமானதிலிருந்து தொடர்ச்சியாக தொய்வில்லாமல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்று இவரைச் சொல்லலாம் (இன்னொருவர் கமல்). 

இன்று அடுத்த ர‌ஜினி என விநியோகஸ்தர்களால் பாராட்டப்படும் நிலையிலும் தலைவா படம் வெளிவரும் முன்பே ‌ஜில்லா படத்தில் கமிட்டாகி நடிக்கும் விஜய்யின் கடின உழைப்பு அவ‌ரின் ரசிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.


3. கச்சிதமான உடம்பு!

உடம்பை எப்போதும் கத்தி மாதி‌ரி வச்சுக்கணும்... கட்டுமஸ்தான உடம்பு குறித்த கேள்வி வந்த போது விஜய் சொன்ன வார்த்தைகள் இவை. கத்தியை எப்படி வேண்டுமானாலும் வீசலாம். அதுமாதி‌ரி உடம்பு எந்த திசையிலும் வளையக்கூடியதாக எதற்கும் ஒத்துழைப்பு தரக்கூடியதாக இருக்க வேண்டும். 


சிலருக்கு கரளை கரளையாக மசில் இருக்கும், ஆனால் அரையடி உயர மதிலை தாண்ட மூச்சு வாங்கும். துப்பாக்கி படத்தில் வரும் அறிமுகப் பாடலில் விஜய்யின் கச்சித உடம்பை பார்க்கலாம். அவ‌ரின் அதிரடி ஆக்சனுக்கும், நடனத்துக்கும் அவ‌ரின் உடலமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.

4. அறிமுக இயக்குனர்களின் தலைவாசல்!

முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் விஜய் மிகக்குறைவாகவே நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி, நண்பனை கழித்தால் முன்னணி இயக்குனர்கள் எவ‌ரின் படத்திலும் விஜய் நடிக்கவில்லை என்றே சொல்லலாம் (மின்சார கண்ணா கே.எஸ்.ரவிக்குமார் விதிவிலக்கு). 


அதிக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய இளம் நடிகர்களில் முன்னணியில் இருக்கிறார் விஜய். நண்பன், துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு கௌதம், லிங்குசாமி போன்றோர் விஜய்யின் கால்ஷீட்டுக்கு காத்திருந்தும் நேசன் என்ற பெயர் அறியாத இயக்குனருக்குதான் தனது புதிய படத்தை இயக்கும் பொறுப்பை தந்திருக்கிறார். 

நேற்று வந்த நடிகர்களே முன்னணி இயக்குன‌ரின் படத்தில்தான் நடிப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கையில் விஜய்யின் இந்த பண்பு உதவி இயக்குனர்களை கை தூக்கிவிடும் அ‌ரியபணியை செய்கிறது.


5. குழந்தைகளின் நடிகர்!

ர‌ஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் ஒரே நடிகர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்சனா இல்லை காமெடியா... எது என்று தெ‌ரியாது. வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் மூன்று பேர் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். 


ஆபாசமான, வன்முறையான படங்களை இப்போது அவர் தேர்ந்தெடுக்காமல் இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகளை கவர்வதுதான் இருப்பதிலேயே கடினமானது. காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. விஜய்யின் படங்கள், அவ‌ரின் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் குழந்தைத்தனத்தின் வெற்றியாக இதனை சொல்லலாம். 

Saturday, May 25, 2013

மறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்


டி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம் 

சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாக்ப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார். டி.எம்.சௌந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் 


டி.எம்.எஸ்.... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்: தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்! 

· டி.எம்.எஸ். என்பதில் உள்ள `எஸ்’ என்றால், செளந்தரராஜன்: `எம்’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: `டி’ என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது! 

· டி.எம்.எஸ்- ஸீக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்! 

· மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். 

· டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் `ராதே என்னை விட்டு ஓடாதேடி’ ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்! 

· மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஒடியது! 

· டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்....’ `உள்ளம் உருகுதய்யா முருகா’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்! 

· டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்! 

· `அடிமை பெண்’ படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். `பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு. அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். `ஆயிரம் நிலவே வா!’ 

· பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். `இல்லாட்ட ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! `பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோ!’ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு’ என்பார்! 

· கவிஞர் வாலியை த் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல்.`இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி! 

· `நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்ஸீம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது! 

· தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸீக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்! 

· `வசந்தமாளிகை’ படத்தில் வரும் `யாருக்காக’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். `அதெல்லாம் வீண் வேலை’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட `எக்கோ எஃபெக்ட்’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்! 

· வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் `யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு’. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்தை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்! 

· காஞ்சிப் பெரியவர். புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை `கற்பகவல்லி’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்! 

· கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் `சாக வேண்டும்’என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் `சாகவேண்டும்’ என்பதை `வாடவேண்டும்’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்! 

· நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையவாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு. பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்! 

· எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி ஜெயலலிதா என அனைவைரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்! 

· `பாகப் பிரிவினை’ படத்தின் 100- வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில் `கடவுள் வாழ்த்து’ பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன! 

· `நவராத்திரி’ படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்! 

· `பட்டினத்தார், `அருணகிரிநாதர்’ என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்! 

· மத்திய அமைச்சர் மு.க அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ் பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்! 

· தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.) 

· சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாராம் என்று டி.எம்.எஸ்ஸீக்கு எதுவும் இல்லை. 

· எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ் சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்


T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள் : 

1.மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 ) 
2.வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 ) 
3.மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 ) 
4.ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 ) 
5.ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 ) 
6.மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 ) 
7.யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 ) 
8.சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959) 
9.உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 ) 
10.நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 ) 
11.இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 ) 
12.நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 ) 
13.நினைத்து நினைத்து ( சதாரம் 1956 ) 
14.முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 ) 
15.பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 ) 
16.சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 ) 
17.சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 ) 
18.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 ) 
19.டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே ) 
20.முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி ) 
21.ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை ) 
22.கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் ) 
23.என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் ) 
24.வெண்ணிலா வானில் ( மன்னிப்பு ) 
25.வாழ நினைத்தால் ( பலே பாண்டியா ) 
26.மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை ) 
27.கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் ) 
28.மெல்ல மெல்ல அருகில் ( சாரதா ) 
29.குயிலாக நான் ( செல்வமகள் ) 
30.மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் ) 
31.ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு ) 
32.பேசுவது கிளியா ( பணத்தோட்டம் ) 
33.மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் ) 
34.முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை ) 
35.கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி ) 
36.ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் ) 
37.எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் ) 
38.திருடாதே பாப்பா ( திருடாதே ) 
39.காசேதான் கடவுளப்பா ( சக்கரம் ) 
40.தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் ) 
41.ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் ) 
42.ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் ) 
43.மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் ) 
44.கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் ) 
45.அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா ) 
46.அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி ) 
47.அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் ) 
48.பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு ) 
49.நான் மலரோடு ( இரு வல்லவர்கள் ) 
50.அஹா மெல்ல நட ( புதிய பறவை ) 
51.அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் ) 
52.யார் அந்த நிலவு ( சாந்தி ) 
53.சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே ) 
54.பொன்மகள் வந்தாள் ( சொர்கம் ) 
55.என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் ) 
56.உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் ) 
57.சத்தியம் இது ( வேட்டைக்காரன் ) 
58.சத்தியமே ( நீலமலைத் திருடன் ) 
59.நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி ) 
60.எங்கே நிம்மதி ( புதிய பறவை ) 
61.தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி ) 
62.சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் ) 
63.நண்டு ஊறுது ( பைரவி ) 
64.அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை ) 
65.ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் ) 
66.உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் ) 
67.எங்கே அவள் ( குமரிக் கோட்டம் ) 
68.ஒரு தரம் ( குமரிக் கோட்டம் ) 
69.யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா ) 
70.அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாகாரன் ) 
71.மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் ) 
72.ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை ) 
73.உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் ) 
74.அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் ) 
75.அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் ) 
76.ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் ) 
77.முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை ) 
78.மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் ) 
79.நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் ) 
80.மலர் கொடுத்தேன் ( திரிசூலம் ) 
81.கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் ) 
82.அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் ) 
83.நீயும் நானும் ( கெளரவம் ) 
84.தெய்வமே ( தெய்வ மகன் ) 
85.யாருக்காக ( வசந்த மாளிகை ) 
86.நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை ) 
87.பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் ) 
88.வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )

“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”


பைத்தியக்கார ஆஸ்பத்திரியை ஒரு தரம் பார்க்கணும்ன்னு என் நண்பர் கிட்டே சொன்னேன்.

“என்னிக்கோ ஒரு நாள் போகத்தான் போறே, இன்னிக்கே போறதிலே தப்பில்லே” ன்னு கூட்டிக்கிட்டுப் போனாரு.

“ஓரளவு குணமானவங்களை பார்த்தா போதும். ரீசன்ட்டா அட்மிட் ஆனவங்கல்லாம் வேண்டாம்”

“அதிலே கூட ரிஸ்க் இருக்கு”

“அதிலே என்ன ரிஸ்க்கு?”

“வின்ஸ்ட்டன் சர்ச்சிலொட பையன் உன் மாதிரிதான் குணமானவங்களை பார்க்கப் போனாராம். ஒருத்தன் அவரைப் பார்த்து நீ யாருன்னு கேட்டானாம். இவர், நான்தான் சர்ச்சிலொட பையன்னாராம். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”

“என்ன சொன்னான்?”

“உனக்கு சீக்கிரம் சரியாய்டும். நான் வர்றப்போ சர்ச்சிலே நாந்தான்னு சொல்லிக்கிட்டு வந்தேன்னானாம்.”

“ஐயய்யோ, என்னை யாராவது நீ யாருன்னு கேட்டா என்ன பண்றது?”

“உனக்கந்த கவலை இல்லே. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க”

“ஏன்?”

“எப்டி இருந்தாலும் ரொம்ப நாள் கூட இருக்கப் போறான், மெதுவா கேட்டுக்கலாம்ன்னுதான்”

நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.

“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

அடப்பாவமேன்னு அடுத்த ஆளைக் கேட்டோம்.

“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

ஓ… ஒரே மாதிரி ரெண்டு கேசா!

அடுத்த ஆளைக் கேட்டோம்.

“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

என்னடா இது!

மூணு நாலு அஞ்சுன்னு எல்லாரும் இதே பதிலைச் சொல்ல எங்களுக்கு அலுப்பாயிடிச்சு.

ஆறாவது ஆளும்

“விமலாவைக் காதலிச்சேன்…..” ன்னு ஆரம்பிச்சான்.

நான் வெறுத்துப் போய் “காதல் தோல்வியா?” ன்னு கேட்டேன்.

“இல்லே.. வெற்றி. அவளைக் கல்யாணம் பண்ணி கிட்டேன். அதான் பைத்தியமா ஆயிட்டேன்” ன்னான்.

என் நண்பர் என்னைப் பார்த்து சிரிச்சி “இதுலேர்ந்து நாம அறிகிற நீதி என்ன?” ன்னார்.

“தெரியலையே?”

“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”

சொன்னது: 
பட்டி மன்றப் பேச்சாளர் திரு.அறிவொளி 

தேர்தலுக்காக அரசியல் செய்கிறாரா..? ஜெயலலிதாவின் அறிவிப்புகளின் உண்மை பிண்ணனி என்ன ?


தமிழ்த்தாய் சிலை, 100 கோடி ரூபாய் செலவில், அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு, "உண்மையான' தமிழ் ஆர்வலர்கள் இடையில் கூட, அதிருப்தியைத் தான் ஏற்படுத்தி இருக்கும். 

கடுமையான மின்வெட்டு, விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, எதிர்பார்க்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு, தடுமாறும் சட்டம் - ஒழுங்கு, பெருகி வரும் வன்முறை, அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சி போன்ற, பல பிரச்னைகள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில், சிரமங்களை ஏற்படுத்தி உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்து, மக்கள் நிம்மதியாக வாழ, வழி செய்ய வேண்டியது அரசின் முதல் கடமை. 

தமிழை வளர்க்கும் எண்ணம் இருந்தால், முதலில் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழை சரியாக எழுதவும், படிக்கவும் சொல்லித் தரலாம். தமிழ் வளர்த்த சான்றோர் பற்றி அறிமுகம் செய்யலாம். ஓலை சுவடிகளில் உள்ள அரிய பொக்கிஷங்களை, மைக்ரோ பிலிமில் பதிவு செய்து பத்திரப்படுத்தலாம். 

அறிவியல், இயற்பியல் போன்ற பாடங்களுடன், தமிழ்ப் பாடத்தையும் சேர்த்து, கட்டாயப் பாடமாக்கி, மதிப்பெண்களில் முக்கியத்துவம் தரலாம். முன்பெல்லாம், திருப்பாவை, திருவெம்பாவை, திருக்குறள் ஓதுவதில் போட்டி வைப்பர். அது போல, பாரதியார் கவிதைகள், தமிழ் இலக்கணம் போன்றவற்றில், மாநில அளவில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கலாம். 

அரசியல் போட்டிக்காக செய்யப்படும் விசித்திரமான அறிவிப்புகளுக்கு, இது நேரமில்லை. தமிழை வைத்து பிழைப்பவர்கள் சிலர், ஆரவாரத்துடன் இதை பாராட்டலாம். செயற்கரிய செயல்கள் பல, மக்கள் உள்ளத்தில் நிலைத்து நிற்கும். சத்துணவு திட்டம், புரட்சித் தலைவரின் புகழை, உலகெங்கும் பரப்பியது. 

முதல்வரின் வீராணம் குடிநீர் திட்டம், சென்னை மக்களை காப்பாற்றியது. நேரு உள் விளையாட்டரங்கம், உலகத் தரத்துக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது. "அம்மா உணவகம்' மக்கள் பசி தீர்க்கிறது. மழைநீர் சேகரிப்பு திட்டம், பான் பராக், குட்கா தடை போன்றவை, முதல்வரின் பெயர் சொல்லும்! 

தேர்தல் நெருக்கத்தில், அரசியல் செய்யலாம்; இப்போது, அவசியத்தை மட்டுமே பார்க்க வேண்டும்!

Friday, May 24, 2013

கோடையில் நீங்கள் இதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்


* வெயிலுக்கு உகந்தது கதர்ஆடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும்.

* வெயில் காலங்களில், ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக, அதிகமான "அல்ட்ரா வைலட்' கதிர்கள் பாயும். இதனால், கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க 'ஆட்டோ ரிப்ளக்ஷன் கிளாஸ்' அணிவது நல்லது.

* உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க, அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

* வியர்வை நாற்றத்தைப் போக்க, குளிக்கும்போது, எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி, கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால், வியர்வை நாற்றம் வராது.* கோடைக்காலத்தில் வரும் அக்கி, அம்மை நோய்க்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது.

* காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்களை, அருந்துவதைத் தவிர்த்து இந்த சீசனில் கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது அவசியம்.

* ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால், உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

* வட்டமாக அரிந்த வெள்ளரியை, கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால், கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

* மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட, தேங்காய் எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து, மறுநாள் காலை வில்வங்காய் கலந்த சிகைக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பது கோடை காலத்துக்கு உகந்தது.

* குளிக்கும்போது, தேய்ப்பதற்கு என்று நாட்டு மருந்து கடைகளில் தனியாகப் பொடி விற்கப்படுகிறது. இதனை வாங்கி, சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தி வந்தால் முகத்திலும், உடலிலும் எண்ணெய் வழியாமல் நிற்கும்.

* பழ ஜூஸ்களுக்கு, ஐஸ் கட்டிகள் தயாரிக்கும்போது, நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பு கலந்து, "ஐஸ் ட்ரே'யில் ஊற்றி தயாரித்தால், ஜூசில் போடும் போது சுவையாக இருக்கும்.

* இளநீர் காய்களை வாங்கியவுடன், குளிர்ந்த நீரில் போட்டு விட வேண்டும். வெயில் காலத்தில், பனை நுங்குகளை தோலுரித்து சிறு துண்டுகளாக்கி, இளநீருடன் கலந்து குடித்தால், குளிர்ச்சியாக இருக்கும்.

* கோடையில், அதிகமான ஐஸ் கட்டிகள் தேவைப்படும். "ஐஸ் ட்ரே'யில் கொதித்து ஆறிய நீரை ஊற்றி வைத்தால், சீக்கிரமாக "ஐஸ்' கிடைக்கும்.

* கோடையில், குளிர்பானம் அருந்துவதற்கு பதில் சோடா குடிக்கலாம். சிறிது எலுமிச்சை சாறும், உப்பும் சேர்த்து சாப்பிட தாகம் தணியும்.

Thursday, May 23, 2013

ஐபிஎல் சூதாட்டம்... சிக்கும் 6 முன்னணி தமிழ் நடிகைகள்!


ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புகார்களும் சதிகளும் சூதாட்ட மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். 

அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது.


கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது,

"நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்," என்றார். 

கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுடன் சுற்றிய நடிகைகள் யார் யார் என்று போலீசார் விசாரித்து ஒரு லிஸ்ட் தயாரித்துள்ளார்கள். இதில் சில முன்னணி தமிழ் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். 

கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள்தான் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்து விசில் போட்ட சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியுள்ளனர். 

அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக உள்ள 6 நடிகைகள் இந்த விசாரணை வளையத்தில் வருகின்றனர். விரைவில் அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

சும்மா நச்சுன்னு இருக்கு...! சூப்பர் மேட்டர் உங்களுக்காக


துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. 

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...

''அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!''

ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி.

அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''
***********************************


வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.

அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."

Wednesday, May 22, 2013

நான் தவறு செய்யவில்லை- ஸ்ரீசாந்த் விளக்கமும்... வாசகர்கள் குமுறலும்....

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது ஸ்ரீசாந்த் கூறியதை அவரது வழக்கறிஞர் ரிபிக்கா ஜான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விசாரணையின் போது ஸ்ரீசாந்த் கூறியதாவது : நான் எந்த ஸ்பாட் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை; நான் அர்ப்பணிப்பு உணர்வுடனும், முழுமனதுடனுமே போட்டியில் கலந்து கொண்டேன்; நான் அப்பாவி; எனது வாழ்க்கையில் இது சோதனை காலம்; நமது சட்டத்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது; நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது, எனது நேர்மை மற்றும் மதிப்பை நான் நிரூபித்து திரும்பபெறுவேன். இவ்வாறு ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

தினமலரில் வெளிவந்த இந்த செய்திக்கு சில வாசகர்கள் கொடுத்த கருத்துக்கையும் பாருங்கள்...!
////////////
Ganesh - Yathum oore,இந்தியா
22-மே-201311:16:50 IST Report Abuse
Ganesh உனக்கு ஏன் இந்த வேலை, நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவதனா? மக்களே இவன் சொல்றதெல்லாம் நம்பாதிங்க,அத்தனையும் பொய்.பாருங்க பண்றதெல்லாம் பண்ணிட்டு திருவிழா கூட்டதில காணமல் போன புள்ளமாதிரி... அடே உன்ன பத்தி எனக்கு தெரியும் மகனே...நீ ஆணியே போடுங்க வேண்டாம்..கிளம்புடி..காத்து வரட்டும்.. 
////////////////////
ஆரூர் ரங - chennai,இந்தியா
22-மே-201310:45:31 IST Report Abuse
ஆரூர் ரங ஏடுகொண்டல வாடா சீனிவாசா மெய்யாலுமே இந்த சூதாட்டத்தின் முக்கிய //குருநாதர் // சென்னையை சேர்ந்த பெரிய பரம்பரை சினிமா ஸ்டூடியோ வீட்டுப் பேரன் இவரது மாமனார் பி சி சி ஐ யின் பெருந்தலை மற்றும் முன்னணியிலிருக்கும் ஒரு அணியின் உரிமையாளர் ..ஏற்கனவே போலீஸ் பிடியிலிருக்கும் முக்கிய சூதாட்டப் புள்ளியின் வாக்குமூலம் இது .பிரசாந்த் இது மெய்யாப்பா? .ஆகமொத்தம் இந்த ஐ பி எல் துவக்கப்பட்டது கிரிக்கெட்டை வளர்க்க அல்ல..சூதாட்டத்தை வளர்க்க எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது  

//////////////////////

jasmine banu - madras,இந்தியா
22-மே-201310:20:00 IST Report Abuse
jasmine banu ஐயோ பாவம் என்ன செய்ய நம் காவல் துரை இப்படி தவறு செய்யாத அப்பாவி மனிதரை கைது செய்து விட்டது பாவம் விடுங்க சார் இவரை. அவர் முகத்தை பாருங்க. இவரை போய்????????????? 
///////////////////
PRAKASH - chennai,இந்தியா
22-மே-201310:14:29 IST Report Abuse
PRAKASH யப்பா இது உலகமாக நடிப்பு டா சாமி... தம்பி ரீல் அறுந்து 1 வாரம் ஆச்சு .. இன்னும் பிட்டு போடாத 
/////////////
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
22-மே-201309:54:47 IST Report Abuse
Baskaran Kasimani சிலர் எத்தனையோ கோடிகளை திருமணத்துக்கு தண்ணீர் போல செலவு செய்தார்கள். அவர்களை பிடிக்காத காவல்த்துறை ஒரு விளையாட்டு வீரர் 1.95 லட்சத்துக்கு உடை வாங்கியது குற்றம் என்கிறது. 2 லட்சம் என்பது சர்வதேச அளவில் மிக கம்மியான தொகை. தவறான ஆளாய் பார்த்து பிடிப்பது காவலர்களின் வேலை போல அல்லவா இருக்கிறது... 
///////////////////////
Shekar - Nellai,இந்தியா
22-மே-201310:58:29 IST Report Abuse
Shekarஎத்தனை கோடிக்கும் அவர் வாங்கட்டும் அது பிரச்சனை இல்லை அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் வேண்டும், அவன் கோடி செலவு செய்தான் அவனை பிடிக்கவில்லை இவனை ஏன் என்பது சரியான வாதம் இல்லை. ஸ்ரீசாந்த் தன வருமானம் வந்த விதம் பற்றி கணக்கு காட்டிவிட்டால் இது ஒரு பிரச்சனை ஆகாது. அந்த பணம் சட்டபூர்வமாக ஒப்புக்கொள்ளககூடியதாக இருக்கவேண்டும்.... 
///////////////
Narayan Arunachalam - DELHI,இந்தியா
22-மே-201311:04:20 IST Report Abuse
Narayan Arunachalamதவறான உதாரணம்.. லஞ்சபணத்தில் வாங்கியது என்று தான் காவல் துறை கூறியுள்ளது.. வாங்கினது தவறு என்று கூறவில்லை ... ஓரளவுக்கு ஆதாரங்களை சமர்பித்தால் தான் கைது மற்றும் காவல் நீடிப்பு எல்லாம் செய்ய முடியும்...../
./////////////////////
Ramesh - Now Malaysia,இந்தியா
22-மே-201309:56:37 IST Report Abuse
Ramesh அழகிகளுடன் குதாடும் போது நன்றாக இருந்தது, இப்போது "நான் அவன் கிடையாது என்று சொல்கிரையா".

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...