Monday, September 30, 2013

தமிழகத்தில் ஏன் இப்படி மரணங்கள்தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர், சிறுமியர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது பெரும் கவலையாகவே உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். 

தமிழகத்தில் தொடரும் நிகழ்வுகள் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூடப்படாத ஆழ்துளைக் கிணறு, தேவி என்ற 4 வயதுச் சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோல், கரூர் அருகே முத்துலட்சுமி என்ற 7 வயதுச் சிறுமி ஆழ்துளை கிணற்றில் கடந்த ஏப்ரல் மாதம் விழுந்து உயிரிழந்தாள். 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்மாளத்தூர் கிராமத்தில் குணா என்ற 3 வயதுச் சிறுவன் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கைலாசநாதபுரம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மாதம் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது சுதர்சன் என்ற 5 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். 

இதுபோல் நாடு முழுவதிலும் ஏதும் அறியாத சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் பலர் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து உயிரை விடும் துயரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏன் இந்த மரணங்கள்? 

விவசாயத் தேவைகளுக்கு மட்டுமின்றி பல்வேறு காரணங்களுக்காக இன்று நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து பல பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படாத மற்றும் தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சிலர் அப்படியே விட்டு விடுகின்றனர். 

லட்சக்கணக்கில் செலவு செய்து தோண்டப்படும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகளுக்கு, அந்த கிணறுகளை மூட வேண்டுமானால் மேலும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் பலர் அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். வயல்வெளிகளில் விளையாடச் செல்லும் குழந்தைகள் இதுபோன்ற மூடப்படாத கிணறுகளில் தவறி விழுந்து உயிரை விடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

அரசின் கடமை 

இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க, பயன்படுத்தப்படாமல் மற்றும் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து, அவற்றை மூடுவதற்கு குறிப்பிட்ட துறையினரை பொறுப்பாக்க அரசு முன்வரவேண்டும். மரணங்கள் நிகழும் நேரத்தில் மட்டும் அதிரடியாக நடவடிக்கை எடுப்பதும், பின்னர் அதுபோன்ற கிணறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் சிறுவர் மரணங்கள் தொடர காரணமாக உள்ளன. கிணறுகளை மூடாத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும். 

கண்டுகொள்ளப்படாத உச்ச நீதிமன்ற உத்தரவு 

ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும்போது அது தொடர்பான விவரங்களை தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு, நில உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். 

வெளியாட்கள் யாரும் அருகில் செல்ல முடியாத வகையில் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றை திறந்து வைக்காமல், உரிய அளவிலான மூடியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். பயன்படுத்தப்படாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடி விட வேண்டும் என பல வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. 

எனினும் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்திட தொடர்புடையவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத வரை, தேவியைப் போன்ற சிறுவர், சிறுமியருக்கான ஆபத்து தொடரவே செய்யும்.  (தி ஹிந்து  கட்டுரை)

Saturday, September 28, 2013

முதுகெலும்பு இல்லாத தமிழ் சினிமா..! பாரதிராஜாவின் அடுத்த அதிரடி


தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது... இனி தமிழ் சினிமாவுக்கென தனி சங்கங்கள் வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா குரல் கொடுத்துள்ளார்.  
ஞானக்கிறுக்கன் படத்தின் இசையை வெளியிட்ட பாரதிராஜா, பின்னர் பேசியதாவது: 

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கவுரவித்தார். 

முதுகெலும்பு கிடையாது 

தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம். சினிமா இங்கு உருவாகியபோது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் என ஆரம்பிக்கப்பட்டன. 

எல்லா மொழி கலைஞர்களும் அப்போது சென்னையில்தான் இருந்தார்கள். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் கர்நாடகத்தில் இருக்கும் நடிகர்கள் கன்னட நடிகர் சங்கம் என உருவாக்கினார்கள்.ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கமும், கேரளாவில் மலையாள நடிகர்கள் சங்கமும் தோன்றின. அநாதைகளாக.. 

கன்னட- தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைகளும் உருவாயின. ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம், தென் இந்திய வர்த்தக சபை என்றே நீடிக்கிறது. அதனால்தான் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. 

தமிழ் கலைஞர்களுக்கு தனி சங்கங்கள் இருந்திருந்தால் அழைப்பிதழ்கள் வீடு தேடி வந்து இருக்கும். நமக்கு சுய இடம், சுய அதிகாரம் வேண்டும். அப்போதுதான் உருப்படுவோம். அதற்கு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக வேண்டும். 

'ஞான கிறுக்கன்' படத்தின் இயக்குனர் இளைய தேவன் என் மண்ணின் மைந்தன். என்னைப்போல் ஒப்பனை, பூச்சு எதுவும் இன்றி யதார்த்தமான கிராமத்து கதையை படமாக எடுத்துள்ளார். என் பாதையில் அவர் வருகிறார்," என்றார்.

ராஜா ராணி / ஓநாயும் ஆட்டுக்குட்டியும் / விமர்சனங்கள்...

 
விமர்சனங்கள் படிக்க அந்ததந்த பதிவர்களின் பெயரில் கிளிக் செய்யவும்


ராஜா ராணி விமர்சனங்கள்...


*******************************

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனங்கள்...வேறு ஏதாவது லிங்க் இருந்தால் தாருங்கள்.. இணைத்து விடுகிறேன்.

Thursday, September 26, 2013

சும்மா சிரிச்சிட்டு போங்க...


யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வர சூப்பர் ஐடியா!

4 மணிக்கு எழுந்திரிச்சு பிரஸ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் குளிங்க. 

5 மணி ஆயிடும் அம்மாவ எழுப்பினா காபியோ டீயோ தருவாங்க. 
6 மணிக்கு கிளம்பி 6.30க்கு யுனிவர்சிட்டி போயிடுங்க. 

நீங்கதான் 
யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட


*********************************************************************************


ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.

என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்

எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்


********************************************************************************

திருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர். கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார். 

அக்கம் பக்கம் நின்றவர்கள் நீ ஏன் அழுகிறாய்?... என்று வினாவினார்கள். அதற்கு அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று. 

அப்போ அருகில் நின்ற கணவன் சொன்னார்!... ஏன் கவலைப்பட்டு அழுகிறாய்?... வெகு விரைவில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்!...... 

***************************************************************************

இது என்னங்க வரவேற்பு பேனர்ல ’கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக’ன்னு வித்தியாசமா எழுதியிருக்காங்க ?'

'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் !  (Re-Post)

Wednesday, September 25, 2013

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? 

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.


முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 


நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. 


இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. 


தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. 


இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். 


இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். 


மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். 


இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். 


இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். 


விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

Tuesday, September 24, 2013

முதல்வருக்கு டாஸ்மாகிலிருந்து ஒரு குடிமகனின் கடிதம்


தமிழக அரசு, மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்குவது போல, "டாஸ்மாக்' பார்களில், மலிவு விலையில் ஊறுகாய், வறுத்த முந்திரி, தண்ணீர் பாக்கெட் வழங்கி, "குடிமகன்'கள் வயிற்றில், சரக்கை வார்க்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து, இப்பகுதியில், "குடிமகன்' ஒருவர், கடிதம் எழுதிஇருந்தார். 

அதைக் கண்டு, "நஞ்சுண்பார் கள்ளுண்பவர்' என, "கள்ளுண்ணாமை'யை ஆணித்தரமாக வலியுறுத்திய, வள்ளுவர் காட்டிய வழியில் இருந்து, தமிழன் இப்படித் தடம் புரண்டு போய்க் கொண்டிருக்கிறானே என, வேதனைப்படுவதா அல்லது இலவசங்களால், மக்களைக் கவர நினைக்கும் அரசுக்கு, இப்படியும் ஒரு கோரிக்கை வைக்கலாம் என, அவர் எண்ணியதை நினைத்து, சிரிப்பதா என, தெரியவில்லை. 

எப்படியோ ஒரு உண்மை புரிகிறது. இந்த இலவச, மலிவுக் கலாசாரம், தமிழன் நல்வாழ்வுக்கு உதவாமல், அவனை மேலும், சோம்பேறியாக, பிச்சைக்காரனாக, தன்மானம் இல்லாதவனாக மாற்றிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற அறிவுரையை பின்பற்றாமல், வாழ்வுத் தரத்தை முன்னேற்றாத, மக்களை மயக்கி ஏமாற்றும், தற்காலிக பயன் தரும், இலவச பொருட்களை அள்ளிவிடும் அரசியல் கலாசாரத்திற்கு அடிமையாகாமல், இனி, இலவசங்களை புறக்கணிப்போம்.


மதுக்கடைகளால், அரசுக்கு வரும் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல், பூரண மதுவிலக்கை, பல ஆண்டுகளாக அமல்படுத்தி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால், "ஜம்'மென்று வளர்ந்து வரும் குஜராத் மாநிலத்தை, தமிழகமும், மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். 

மலிவு ஊறுகாயோடு, சரக்கடிக்க, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும், வீரக் குடிமகன்களும், அவர் தம் குடும்பங்களும், தமிழகமும் மேலும் சீரழிவதைத் தடுக்க, தமிழக முதல்வர் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும். வேண்டாம் டாஸ்மாக்; தமிழன் வாங்கட்டும், "பாஸ்மார்க்!'

Monday, September 23, 2013

ஏன் இந்த ஆவேசம் விஜயகாந்த் அவர்களே...!


‘தொண்டர்கள் உள்ளவரை என்னை யாரும் அழிக்க முடியாது, என்னை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். தேமுதிக தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளர் முஜிபுர்ரகுமான் மகள் சபினா , சேக் அப்துல்லா திருமணம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

எனக்கு எம்மதமும் சம்மதம். எனக்கு ஜாதியில்லை, மதமும் இல்லை. பணம், காசு முக்கியமல்ல. காசு அதிகமிருந்தால் தூக்கம் வராது. நாட்டில் லஞ்ச லாவண்யங்கள் பெருகி விட்டன. மக்களிடம் நிம்மதியில்லை. நம்புகிறார்களோ, நம்பவில்லையோ தெய்வம் இருக்கிறது. நான் நம்புகிறேன். அதேநேரம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. 

என் மீது 34 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் பயப்படவில்லை. மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுவேன். எந்தத் தவறும் செய்யவில்லை.

மக்கள் பிரச்னையை பேசக்கூடாது என்றால், நான் கட்டாயம் பேசுவேன். யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். தேர்தல் அறிவித்ததும் இந்த கேள்வியைக் கேளுங்கள். காலம் முன்னேறி விட்டது. அதேபோல் நாட்டில் லஞ்ச லாவண்யங்களும் முன்னேறி விட்டன. 

எப்படியும் காசு சேர்க்க நினைக்கிறார்கள். உழைத்தால்தான் காசு நிற்கும். உழைப்பை மட்டுமே நம்பியுள்ளேன். எல்லோருக்கும் நேரம் நன்றாக இருக்கும் வரை எதுவும் நன்றாக இருக்கும். தெய்வத்தையும், மக்களையும் நம்பித்தான் உள்ளேன். தொண்டர்கள் உள்ளவரை யாரும் என்னை எதுவும் செய்யமுடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். தெய்வம் நின்று கொல்லும். என் கட்சியை யாரும் அழிக்கமுடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

கொஞ்சம் ஆவேசத்தை குறைத்துக்கொண்டு செயலில் காட்டுங்கள் விஜயகாந்த் அவர்களே...!

Saturday, September 21, 2013

மீண்டும் ரஜினி பட தலைப்பை கையிலெடுக்கும் கார்த்தி


கார்த்தி நடிப்பில் தொடர்ந்து வெளிவரவிருக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குள்ளான திரைப்படங்கள். பிரியாணி பாடல்கள் ஒருபுறம் ரசிகர்களை ஈர்க்க, மறுபுறம் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் விமர்சனத்திற்குள்ளான ஒரு முன்னோட்டன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படி தமிழ்த்திரையுலகில் மீண்டும் பரபரப்பான ஹீரோவாக மாறியிருக்கும் கார்த்தி அடுத்ததாக ‘அட்டக்கத்தி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காளி’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். காளி படம் குறித்து பேசியபோது பா.ரஞ்சித் “வடசென்னை என்றதுமே பழுப்பேறிய கட்டடங்கள், அழுக்கு மனிதர்கள், வன்முறை தோய்ந்த வாழ்க்கை போன்றவை தான் இதுவரை படங்களில் காட்டப்பட்டு வந்துள்ளன. அவை யாவும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


விளையாட்டு, இசைக்கச்சேரி, நடனம், வீரக்கலை என எதுவாக இருந்தாலும் முழு மூச்சாக இருந்து மூர்க்கமான ஊக்கத்துடன் கற்றுக் கொள்ளும் வடசென்னை இளைஞர்களுக்கு குருநாதர்களே கிடையாது. அவ்வளவு கலைகளையும் தங்கள் முயற்சியின் மூலமே கற்றுக் கொள்வார்கள். அப்படி ஒரு வடசென்னை வாலிபன் தான் காளி. அவனும், அவன் குடும்பமும், அவன் சார்ந்த மக்களும், அவர்களின் கொண்டாட்டமும் குதூகலமும் தான் “காளி” திரைப்படம்” என்று கூறியுள்ளார்.கார்த்தி இதற்கு முன்னர் ரஜினி நடித்த ’நான் மகான் அல்ல’ என்ற திரைப்படத்தின் டைட்டிலில் ஒரு திரைப்படத்திலும், ரஜினி நடித்து பிரபலமாக பேசப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் பெயரைக்கொண்ட ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 


தற்போது மீண்டும் ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ’காளி’ திரைப்படத்தின் டைட்டிலில் நடிக்கிறார். கன்னடம், தெலுங்கு என இரு திரையுலகிலும் பிரபலமான நடிகை கேதரின் தெரசா காளி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 19, 2013

பரவசப்படுத்தும் சிரிப்பு மிட்டாய்
பக்கத்து வீட்டுல ஒரே சத்தம்.

என்ன? ஏதுன்னு விசாரிக்கிறதுக்காக ஓடினேன்.

அந்த வீட்டுக்காரர் சமையலறையை நோக்கி நின்றுகொண்டு படு பயங்கரமாகக் கத்திக்கொண்டிருந்தார்.

"என்ன‌ சார் ... யாரை திட்டுறீங்க‌?" கேட்டேன் நான்.


"நீங்க போங்க சார் ... நான் என் மனைவியைத்தான் திட்டிகிட்டிருக்கேன்"


அவங்க ஊருக்கு போயிருக்காங்கன்னு சொன்னீங்க...

அதான் தைரியா திட்டிகிட்டு இருக்கேன்...!

+++********************************+++


மதிய நேரம்.

அலுவலகத்தில் சக நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தி கொண்டிருந்தேன்...

அப்போது ஒரு நண்பரிடம்,

"சார் ... உங்க கேரியர்ல மறக்க முடியாதது எது ?" என்று கேட்டேன் நான்.

அதற்கு அவர் சொன்ன பதில்,

"போனா மாசம் ஒரு நாள் என் பொண்டாட்டி எனக்கு கொடுத்தனுப்பிய பழைய சாதமும், பச்சை மிளகாவும் தான் ... உங்களுக்கும் ஒரு நாள் எடுத்து வரவா?"+++********************************+++நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?

ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.

அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,

"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"

கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,

"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன்.

அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,

"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். .."+++********************************+++டாக்டர் : தினமும் காலையில வெறும் வயித்துல அரை மணி நேரம் நடந்தா உங்க வெயிட் குறைஞ்சிடும்.

பேஷண்ட் : யார் வயித்துல டாக்டர் நடக்கணும்?


டாக்டர் எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு...


டாக்டர் கிட்ட சொல்றதுக்கு என்னம்மா கூச்சம், தயங்காம சொல்லுங்க...

அட நீங்க வேற டாக்டர், எனக்கு பல்லு கூச்சமா இருக்குனு சொன்னே


+++********************************+++


வீட்டு ஓனர் : வாடகையை எப்ப சார் தருவீங்க?

குடியிருப்பவர் : சம்பளம் வாங்கினதும் தந்துடுறேன்ங்க...

வீட்டு ஓனர் : அப்படியா... அப்போ உங்களுக்கு எப்போ சம்பளம் போடுவாங்க...?

குடியிருப்பவர் : என்ன சார், சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க. வேலை கிடச்சா தானே சம்பளம் கிடைக்கும்..


+++********************************+++
ரசித்தது

Monday, September 16, 2013

யார் வேண்டுமானாலும் டாக்டர் ஆயிடலாம் போல...!
நம் நாட்டின், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காக, எம்.பி.பி.எஸ்., படிப்பில், "ஹவுஸ் சர்ஜன்' பயிற்சி முடித்த பிறகு, "எக்சிட்' தேர்வு முறையை, அறிமுகப்படுத்தப் போவதாக, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்திருக்கிறது. 

தமிழக மருத்துவர்கள் சங்கம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மனித உயிர்களைக் காக்கும், பொறுப்பு நிறைந்த தொழிலில் ஈடுபடுவோர், தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று, அரசு எதிர்பார்ப்பதில், எந்த தவறும் இல்லை. 

இன்று, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், மருத்துவம் படித்து வரும் மாணவர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலின், "எக்சிட்' தேர்வு என்னும் தகுதித் தேர்வை நிறைவு செய்தால் தான், இங்கு, மருத்துவராகப் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவர். 

அது போல, இங்குள்ள எம்.பி.பி.எஸ்., - எம்.டி., போன்ற மருத்துவப் பட்டங்கள், சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளால், அங்கீகரிக்கப்படவில்லை. இங்குள்ள மருத்துவக் கல்வியின் தரம், சர்வதேச மருத்துவக் கல்வியின் தரத்துக்கு, இணையாக இல்லை என்பதே, இதற்கு காரணம். இன்று, பிற நாடுகளில், மருத்துவத் துறையில், புகழ் பெற்று விளங்கும் இந்திய மருத்துவர்கள் எல்லாருமே, அந்தந்த நாட்டின் தகுதித் தேர்வை, நிறைவு செய்தவர்கள் தான். அமெரிக்கா போன்ற நாடுகளின், மருத்துவத் துறையின் தரத்தோடு, ஒப்பிடும்போது, நாம், 50 ஆண்டுகள், பின் தங்கித்தான் இருக்கிறோம். 

அங்கு, நோயாளிக்கு பரிந்துரைக்கப்படும், ஒவ்வொரு பரிசோதனைக்கும், மருந்துக்கும், மருத்துவர், தகுந்த விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். தேவையில்லாத பரிசோதனைகளையோ, மருந்துகளையோ, நோயாளிக்கு பரிந்துரை செய்ய முடியாது. ஆனால், இங்கு... 

நோயாளிக்கு, நிறைய, "டெஸ்ட்'களை பரிந்துரை செய்து, மளிகை சாமான், "லிஸ்ட்' போல, இரண்டு பக்கத்துக்கு எழுதும் மருத்துவர்கள் தான், விவரமுள்ள மருத்துவராகக் கருதப்படுகிறார். 

அவர், இங்கு, யாருக்கும், விளக்கம் சொல்லவும் தேவையில்லை. 

அது மட்டுமின்றி, இங்கு, ஒரு மருத்துவரிடம், ஆறு மாதம் உதவியாளராக இருந்து, "ஸ்டெதஸ்கோப்பை' காதில் மாட்டவும், "சிரிஞ்சை' பிடித்து ஊசி குத்தவும் கற்றுக் கொண்டால் போதும், யார் வேண்டுமானாலும், டாக்டர் ஆகி விடலாம். எட்டாம் வகுப்பு கூட பாஸ் ஆகாத, போலி டாக்டர்கள், தமிழகத்தில் மட்டுமின்றி, படித்தவர்கள் அதிகம் வாழும், கேரளத்திலும் இருக்கத் தான் செய்கின்றனர். இவர்கள், காயத்துக்கு கட்டுப் போடுவதிலிருந்து, கருக்கலைப்பு வரை, அனைத்து சிகிச்சையிலும், வித்தகர்களாக செயல்படுகின்றனர். அப்பாவி கிராம மக்கள், குறைந்த செலவில், சிகிச்சை பெறுவதற்காக, இவர்களை நாடுகின்றனர். நாட்டின் மருத்துவத் துறையின் தரம் மேம்பட வேண்டுமானால், ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்து வரும் டாக்டர்களுக்கு, "எக்சிட்' தேர்வு நடத்தி, ஓராண்டு கிராமப்புற மருத்துவமனையில் பணியாற்றிய பின் தான், எம்.பி.பி.எஸ்., பட்டம் கொடுக்கப்பட வேண்டும். 

ஆனால், அந்த ஓர் ஆண்டு காலத்துக்கு, அரசு உதவி மருத்துவர்களுக்கு இணையாக, சம்பளம் வழங்கப்பட வேண்டும். போலி மருத்துவர்களை ஒழிக்க, முறையான சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். இல்லையெனில், எத்தனை நூற்றாண்டுகளானாலும், நம் மருத்துவத் துறையின் தரத்தை, உயர்த்த முடியாது. (
டாக்டர் டி.ராஜேந்திரன், அருப்புக்கோட்டை)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...