Monday, January 31, 2011

தள்ளிப்போகிறது நடுநிசி நாய்கள்


கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம், ‘நடுநிசி நாய்கள்’. சமீரா ரெட்டி, வீரா, தேவா உட்பட பலர் நடித்துள்ளனர். காதல், த்ரில்லர் படமான இது, தெலுங்கில் ‘எர்ரா குலாபிலு’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படம் பிப்ரவரி மாதம் 11&ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தனர். இப்போது, பிப்ரவரி 18&ம் தேதிக்கு ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.

நல்ல கேரக்டருக்காக போராடினேன்


‘தவமாய் தவமிருந்து‘ படத்தில் அறிமுகமானவர் மீனாள். பிறகு சில படங்களில் நடித்தாலும், ‘ஆடுகளம்’ அவருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘தவமாய் தவமிருந்து’ படத்துக்கு பிறகு நல்ல கேரக்டர் அமையவில்லை. அதற்காக போராடினேன். 

‘ஆடுகளம்’ வாய்ப்பை பெற்றுத் தந்ததே, ‘தவமாய் தவமிருந்து’ படம்தான். அந்த படத்தில் என்னை பார்த்துவிட்டுதான் வெற்றி மாறன் நடிக்க அழைத்தார். 60 வயது முதியவருக்கு மனைவி கேரக்டர் என்றதும் முதலில் தயங்கினேன். ‘முதியவரின் மனைவி என்றாலும் நீங்கள் இளமையானவர்தான்’ என்றார். 

அந்த வார்த்தைக்காக நடித்தேன். இப்போது படம் பார்த்தவர்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்.

முதல் ஆட்டம் பெங்களூருக்கு மாற்றம்!


உலகக் கோப்பை கிரிக்கெட் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஆட்டம் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. பிப்., 27 இந்தியா-இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறவிருந்தது. 

ஈடன் கார்டன் சீரமைப்புப் பணி முடிவடையாததால் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. பிப்., 27 ம் தேதி ஆட்டம்தான் இந்திய அணி கொல்கத்தாவில் பங்கேற்கும் முதல் ஆட்டமாகும. முதல் ஆட்டத்தை மாற்றியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளன

Sunday, January 30, 2011

ரஜினி மகள் சவுந்தர்யாவிடம் ரசிகர்கள் தொந்தரவு


ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார்.

சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார்.

அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார்.

பின்னர் அவர் அந்த கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கல்லூரி முதல்வர் மறுத்தார். பிரபலங்களின் வாரிசுகளுக்கு தேர்வு எழுத ஏற்கனவே தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து சவுந்தர்யா அவரிடம் வாதாடினார்.

ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் அதிருப்தியுடன் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

நித்யானந்தா வழக்கு நடிகை ரஞ்சிதா ரகசிய வாக்குமூலம்


சாமியார் நித்யானந்தா வழக்கில் நடிகை ரஞ்சிதா நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி, ரகசிய வாக்குமூலம் அளித்தார். நித்யானந்தா மீதான வழக்கில் முதல் குற்றவாளியாக நடிகை ரஞ்சிதா சேர்க்கப்பட்டு உள்ளார். நேற்று ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவர் நீதிபதி புஷ்பவதியிடம் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக மனு அளித்தார். அந்த மனு ஏற்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு ரஞ்சிதா நேற்று வந்தார். நீதிபதியிடம் தனி அறையில் 30 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்தார். அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

நித்யானந்தாவுக்கு அறிமுகமானது எப்படி? நித்யானந்தாவுடன் வீடியோ காட்சிகளில் நெருக்கமாக இருக்கும் விவகாரம் போன்றவை குறித்து வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாக தெரிகிறது.

Saturday, January 29, 2011

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச் மாதம் தொடங்குகிறது


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ராணா; படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ‘ராணா’ என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

இதில், ரஜினிகாந்த் 3 மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். அவர் ஏற்கனவே மூன்று முகம் படத்தில் 3 வேடத்தில் நடித்தார். அதன்பின் இப்போது 3 வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவும். பட தொகுப்பை ஆன்டணியும் கவனிக்கின்றனர். டெக்னிக்கல் ஸ்பெஷல் எபக்ட்ஸ் விஷயங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் கவனிக்கிறார்.

ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 74 பேருக்கு கலைமாமணி விருது

 
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: (28-01-2001)
 
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் ÒகலைமாமணிÓ எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்பரிந்துரைகளையேற்று முதல்வர் கருணாநிதி அறிவிப்பு செய்துள்ளார்.

2008ம் ஆண்டுக்கான விருதுகள்: சசிரேகா பாலசுப்ரமணியன் (நாட் டியம்), காயத்ரி சங்கரன்(கர்நாடக இசை) வே.நாராயணப் பெருமாள்(கர்நாடக இசை) எம்.வி. சண்முகம்(இசைக் கலைஞர்), இளசை சுந்தரம்(இயற்றமிழ் கலைஞர்), பி.லெட்சுமி நரசிம்மன்(தவில் கலைஞர்), காளிதாஸ், திருமாந்திரை (நாதஸ்வரக் கலைஞர்). பிரேமா ஜெகதீசன்(நாட்டியம்), ரோபோ சங்கர்(சின்னத்திரை கலைஞர்), நாமக்கல் வேணுகோபால்(கிளாரிநெட்), திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி (நாதஸ்வரக் கலைஞர்கள்).

கவிக்கொண்டல் செங்குட்டுவன்(இயற்றமிழ் கலைஞர்), ச.சுஜாதா(நாட்டியம்), ராணி மைந்தன்( இயற்றமிழ் கலைஞர்), ஜி.கே. ராமஜெயம் (ஓவியக் கலை ஞர்), கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்(இயற்றமிழ் கலைஞர்), தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா (பரதநாட்டியக் கலைஞர்கள்), சி.வி. ரமேஸ்வர சர்மா(சமையல் கலைஞர்), திருமுருகன்( சின்னத்திரை இயக்கு நர்), பரத்வாஜ்(இசையமைப்பாளர்), ராஜீவ் மேனன்(ஒளிப்பதிவாளர்), சிற்பி குட்டப்பன் நாயர்(சிற்பக் கலைஞர்), தோஹா பேங்க் சீதாராமன்(பண்பாட்டுக் கலை பரப்புனர்). என்.எத்திராசன்(கலைப் பரப்புனர்), கருணாஸ் (நகைச்சுவை நடிகர்).

2009ம் ஆண்டுக்கான விருதுகள்:

காயத்ரி கிரீஷ் (கர்நாடக இசை), சேக்கிழார்(சின்னத்திரை வசனகர்த்தா), சாக்ஷி சிவா(சின்னத்திரை நடிகர்), மாளவிகா(சின்னத்திரை நடிகை), பூவிலங்கு மோகன்(சின்னத்திரை நடிகர்), எஸ்.முத்துராமலிங்கம் (கூத்துக் கலைஞர்), பி.முருகேஸ்வரி(கரகாட்டக் கலைஞர்), ரேவதி சங்கரன்(சின்னத்திரை நடிகை), தஞ்சை சின்னப்பொன்னு குமார்(கிராமியப் பாடகர்), எல். ஜான்பாவா(சிலம்பாட்டக் கலைஞர்), ரேவதி(வில்லுப்பாட்டுக் கலைஞர்), கே. கருப்பண்ணன்(ஒயிலாட்டக் கலைஞர்).

கே.ஏ. பாண்டியன்(நையாண்டி மேளக் கலைஞர்), எம். திருச்செல்வம்(நையாண்டி மேளக் கலைஞர்), சிவகங்கை வி.நாகு(நையாண்டி மேளக் கலைஞர்), டி.சேகர்(கிராமியக் கருவி இசைக் கலைஞர்), மு.இளங்கோவன்(கிராமியக் கலை பயிற்றுனர்), சா.கந்தசாமி(இயற்றமிழ்), ராஜேஷ் குமார்(இயற்றமிழ்), நாஞ்சில் நாடன்(இயற்றமிழ்), ரோகிணி (குணச் சித்திர நடிகை), சரண்யா (குணச் சித்திர நடிகை), சின்னி ஜெயந்த் (நகைச்சுவை நடிகர்).

2010ம் ஆண்டுக்கான விருதுகள்:

பொன்.செல்வ கணபதி(இயற்றமிழ்), பேராசிரியர் தே.ஞானசேகரன்(இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல்(இயற்றமிழ்), திண்டுக்கல் ஐ.லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்), சொ. சத்தியசீலன்(சமயச் சொற் பொழிவாளர்), தேச.மங்கையர்க்கரசி(சமயச் சொற்பொழிவாளர்), டி.வி. கோபால கிருஷ்ணன்(இசை ஆசிரியர்), கே.என். சசிகிரண்(குரலிசைக் கலைஞர்), குடந்தை ஜெ. தேவிபிரசாத்(வயலின் கலைஞர்).
 
ஐ. சிவக்குமார்(மிருதங்க ஆசிரியர்), என்.எஸ்.ராஜம்(மிருதங்க கலைஞர்), ஸ்ரீனிவாசன்(வீணை கலைஞர்), ராஜேஷ் வைத்யா(வீணைக் கலைஞர்), திருவாரூர் எஸ். சாமிநாதன்(புல்லாங்குழல்), கே.வி. இராமானுஜம்(புல்லாங்குழல்), டாக்டர் தி.சுரேஷ் சிவன்(தேவார இசைக் கலைஞர்), கல்யாணி மேனன்(மெல்லிசைப் பாடகி), திருக்கடையூர் முரளிதரன்(நாதஸ்வரக் கலைஞர்), ரெட்டியூர் செல்வம்(தவில் கலைஞர்).

ஏ.ஹேம்நாத்(பரத நாட்டியம்), பிரசன்னா ராமசாமி(நாடகக் கலைஞர்), எப்.சூசை மாணிக்கம்(நாடக நடிகர்), ஆர்யா (திரைப்பட நடிகர்), அனுஷ்கா (திரைப்பட நடிகை), தமன்னா (திரைப்பட நடிகை). விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) மாலையில் நடைபெறும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சின்னத் திரை விருதுகளும்&பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் வழங்கப்படும். முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குகிறார்.

Friday, January 28, 2011

அர்னால்டின் அடுத்த படம்


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர், மீண்டும் வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார். உலகப் போர் பற்றிய படத்தில் நாஜி கமாண்டராக நடிக்கிறார். ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் (63). கான்கன் த பார்பேரியன், டெர்மினேட்டர், கமாண்டோ என்று அதிரடி ஆக்ஷன் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர். குடியரசு கட்சியில் சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னராக 2003-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-வது முறையாக கவர்னர் தேர்தலில் வெற்றி பெற்ற அர்னால்டின் பதவிக்காலம் கடந்த 3-ம் தேதி முடிந்தது. கவர்னராக இருந்த காலத்திலும் சில படங்களில் தலை காட்டினார்.

ஓய்வுபெற்ற பிறகு அர்னால்டு சில படங்களுக்கு கதை கேட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இரண்டாம் உலகப் போர் கதையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் அவர் நடிக்க இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ‘வித் விங்ஸ் ஆஸ் ஈகிள்’ என்பது படத்தின் பெயர். தாய்நாடான ஆஸ்திரியாவில் வெளியாகும் குரோனன் ஜீடங் என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அர்னால்டு கூறியதாவது:

வயது 63 ஆகிறது. ஆக்ஷன் படம் செய்தாலும் லாஜிக்கோடு செய்ய வேண்டும். முன்பு செய்ததுபோல ஆக்ஷன் செய்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். அதற்கேற்ப 3 கதைகள் கேட்டிருக்கிறேன். தற்போது நடிக்கும் ஈகிள் படம் 2-ம் உலகப்போர் பற்றியது. இதில் நாஜி கமாண்டராக நடிக்கிறேன். வயதான ராணுவ அதிகாரி ரோல். போர் முடிவின்போது, கூட்டமாக குழந்தைகளை கொல்ல வேண்டிய பொறுப்பு தரப்படுகிறது. அதற்காக புறப்பட்டு செல்லும் நான் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பத்திரமாக காப்பாற்றும் கதை. வீரதீர சாகசங்கள் நிறைந்த படமாக இருக்கும். இவ்வாறு அர்னால்டு கூறினார்.

Thursday, January 27, 2011

போட்டோகிராபர்களை குமுறவைத்த 'கோ'


கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்திருக்கும் 'கோ' படத்தினால் பத்திரிகை போட்டோகிராபர்கள் ரொம்பவே கோவமாக இருக்கிறார்கள். இந்த படம் வெளிவந்த பிறகு பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மரியாதை கிடைக்குமாம். அந்த அளவுக்கு அவர்களுடைய வேலையை பற்றியும், அதில் இருக்கும் ஆபத்துக்களை பற்றியும் தெள்ளந்தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அப்படி இருக்க இவர்களுக்கு என்ன கோபம் என்று யோசிப்பது புரிகிறது. இந்த கோபத்திற்கு காரணம் கலைஞர் தொலைக்காட்சி தானாம்.

கோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மற்ற தொலைக்காட்சி கேமராக்களின் கண்களுக்கு காட்டாமல் பிரத்யேகமாக கலைஞர் டிவியே படம்பிடித்தது. ஆது ஒரு பக்கம் இருக்க, இயக்குநர் கே.வி.ஆனந்த், தான் முதலில் பத்திரிகையில் போட்டோகிராபராகத்தான் என் வாழ்க்கையை துவங்கினேன். இந்த படமும் அவர்களைப் பற்றியதுதான் என்பதால் விழாவிற்கு வந்திருந்த அனைத்து போட்டோகிராபர்களையும் மேடை ஏற்றி அவர்கள் மூலம் பாடல் சிடியை வெளியிட செய்தார்.

இதனால் தங்களின் ஃபிளாசை காட்டிலும், அதிகமான பிரகாஷத்தை வெளிப்படுத்திய போடோகிராபர்கள், கலைஞர் டிவியில் நாங்க வரப்போகிறோம் என்று சொந்த பந்தங்களுக்கு தந்தி அடிக்காத குறைதான். ஜனவரி 26ஆம் தேதி, இந்த நிகழ்ச்சியை கலைஞர் டிவி ஒளிபரப்ப, அத்தனை போட்டோகிரபர்களும், அவர்களின் குடும்பத்தாரும் டிவி முன் ஆஜராகி, அந்த இறுதி காட்சிக்காக காத்திருந்தனர். "நான் போட்டோகிராபராகத்தான் இருந்தேன். படமும் அவங்களபத்திதான் அதனால் இந்த பாடல் டிசியை அவங்க வெளியிடட்டோம்" என்று கே.வி.ஆனந்த் மைக்கில் சொல்ல, "ஆஹா நம்ம முகம் வரப்போகுது" என்று எதிர்பார்த்திருந்த போட்டோகிராபர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். அந்த காட்சியை மட்டும் கலைஞர் டிவி போடவில்லையாம். மாறாக வந்திருந்த விஐபிகளின் முகத்தை காண்பித்து விட்டார்கள்.

"இவங்களும் ஒரு மீடியா தானே நம்மள காமிச்சா என்ன. இவங்க சீரியல பத்தி மட்டும் நம்ம செய்தி போடலையா" என்று விழாவுக்கு விழா கூட்டம் கூடி குமுறுகிறார்களாம் இந்த போடோகிராபர்கள்.

பார்க்கக்கூடாத படம்..


தலைப்பிலுள்ள வாசகத்தை சொல்லிச் சொல்லித்தான் மேற்கத்திய விமர்சகர்கள் ஒரு ஹாலிவுட் படத்தின் டிரவுசரை அக்கு வேறு ஆணி வேறாக கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படம், ‘தி வாரியர்’ஸ் வே’. 

பக்கா கொரியன் நேட்டிவிட்டி என்பது விமர்சகர்களின் வயிற்றில் அமிலம் சுரக்க காரணமென்றால், கொரியன் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ஜாங் டன் கன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது அவர்கள் பற்களை அழுத்தமாக கடிக்க மற்றொரு காரணம். போதும் போறாததற்கு ஸ்னக்மோ லீ என்ற கொரியன் இயக்குநரே இப்படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். என்ன, தயாரிப்பாளர் மட்டும் எந்த சாங் சூங் லீயும் இல்லை. அதாவது கொரியன் இல்லை. பதிலாக, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ படத்தை தயாரித்து கல்லாவை நிரப்பிக் கொண்ட அமெரிக்கரான பேரி.எம்.ஆஸ்போர்ன்.

இப்படி கிழக்கத்திய கலைஞர்களை வைத்து மேற்கத்திய தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரித்திருப்பதே விமர்சகர்களின் புகைச்சலுக்கு காரணம் என செல்லூலாயிட் அம்மன் முன்னால் கற்பூரம் ஏற்றி சிலர் சத்தியம் செய்கிறார்கள். இதை ஏற்பதும், துறப்பதும் அவரவர் ரசனையை பொறுத்த விஷயம்.

ரைட். கதை?

கருவில் உருவாகும் சிசுவுக்கே தெரிந்த ஒரு கதையில், மகாபாரத இதிகாசத்தின் கிளைக் கதை ஒன்றை மிக்ஸ் செய்தால் வரும் ஒன்லைன்தான், ‘தி வாரியர்’ஸ் வே’ படத்தின் ஒட்டு மொத்தக் கதையும். மார்ஷியல் ஆர்ட்ஸில் கரை கண்ட இரு குழுக்கள் கொரியாவில் மோதுகின்றன. ஒரு குழு ஜெயிக்கிறது. தோற்ற குழுவை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என வெற்றி பெற்ற குழுவின் தலைவர் கட்டளையிடுகிறார். ஆனால், இந்தக் கட்டளையை அக்குழுவின் தளபதி மீறுகிறான். காரணம், தோற்ற குழுவில் எஞ்சி நிற்பது ஒரேயொரு பச்சிளங் குழந்தைதான். அக்குழந்தையை கொல்ல அவனுக்கு மனமில்லை. அதற்காக குழந்தையை அப்படியே விட்டு விட்டாலோ, வேறு யாராவது கொன்று விடுவார்கள்.

எனவே குழந்தையுடன் தப்பித்து மேற்கு அமெரிக்காவுக்கு வருகிறான். அவன் வந்து சேர்ந்த கிராமம் சொல்ல முடியாத சோகத்தில் மிதந்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வற்புறுத்தியும் யாரும் அவனிடம் சோகத்துக்கான காரணத்தை சொல்லவில்லை. அதே கிராமத்தில் கண்களில் வெறுமை வழிய வாழும் அழகான இளம் பெண்ணுடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. அவளும் அவனிடம் தன் வெறுமைக்கான காரணத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. பதிலாக மார்ஷியல் ஆர்ட்ஸில் வித்தகனான அவனிடமிருந்து அக்கலையை கற்றுக் கொள்கிறாள். அவனும் தனது வித்தை எந்த வகையிலாவது அவளுக்கு பயன்பட்டால் சரிதான் என கசடற கற்றுத் தருகிறான்.

ஒன் ஃபைன் மார்னிங், அந்தக் கிராமமே ஏன் சோகத்தில் மிதக்கிறது என்ற காரணம் அவனுக்கு தெரிய வருகிறது. பக்கத்து கிராமத்தை சேர்ந்த வில்லன், குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தக் கிராமத்துக்கு வந்து வயதுக்கு வந்த இளம்பெண்களை தூக்கிச் சென்று வன்புணர்ச்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான். அடுத்தமுறை வில்லன் வரும்போது உடன் செல்ல வேண்டியவள், அவன் மனம் கவர்ந்த இளம்பெண். அதனால்தான் அந்தப் பெண்ணின் கண்களில் வெறுமை.

இந்த உண்மையை அறிந்ததும் எப்படி அவன் வில்லனை அழிக்கிறான் என்பது சைட் டிராக். கூடவே, தான் அழைத்து வந்த குழந்தையை கொலை செய்ய வரும் தன் கூட்டத்தாரிடமிருந்து அவன் தப்பிப்பது மெயின் டிராக். இந்த ‘கிழக்கத்திய’ கதையைத்தான் ‘மேற்கத்திய’ விமர்சகர்கள் அடித்து, துவைத்து காயப்போடுகிறார்கள். ஆனால், லேட்டஸ்ட் டெக்னாலஜியில் சீட்டின் நுனியில் அமர வைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக் காட்சிகளை பாராட்ட மட்டும் அதே விமர்சகர்கள் தவறவில்லை. விமர்சகர்களின் பேச்சை மீறி ரசிகர்கள் திரையரங்கு செல்லவும் அதுவேதான் காரணம்!

Tuesday, January 25, 2011

பாஸாகிவிட்டார் - விஜய்


ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விளம்பரங்களா? நல்ல கதையா? என்று பட்டிமன்றம் நடத்தினால் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற பதில்தான் வரும். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை. 

பெரிய பெரிய நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், அந்நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் சிறுபட்ஜெட் படங்கள் பல பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அப்படியே ரீலிஸ் ஆனாலும் அது கடலுக்குள் எதிர் நீச்சல் போட்ட கதையாகவே இருக்கிறது. எதிர்நீச்சல் போட்டு ஜெயிப்பது என்பது? எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியும்தானே!

 அப்படி பெரிய நிறுவன படங்களுடன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றிருக்கிறது காவலன் படம். படப்பிடிப்பில் ஆரம்பித்த பிரச்னை படம் முடிந்து பெட்டிகளை தியேட்டருக்கு அனுப்பும் வரை நீடித்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் அசினுக்கு எதிர்ப்பு என்று கிளம்பிய சிலர், பின்பு விஜய்க்கு எதிராக பிரச்னையை திசை திருப்பினார்கள். இது ஒருபுறமென்றால் படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் கடைசி நேரத்தில் பண நெருக்கடி‌யும் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக பல வருட அனுபவம் பெற்ற விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரையே நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மலை‌போல வந்த பிரச்னைகளையும், சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு பொங்கல் தினத்தில் படத்தை ரீலிஸ் செய்து விட்டனர். ரீலிஸ் முயற்சியில் பெற்ற வெற்றி, பட ரிசல்ட்டிலும் கிடைத்து விட்டது.

இத்தனைக்கும் காவலனுடன் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவான இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு டி.வி. சேனல்கள் மற்றும் எப்.எம். ரேடியோக்களில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பரப்படுத்தப்பட்டது. இன்னமும் விளம்பரங்கள் தொடர்கின்றன. காவலன் விளம்பரம் வெளியிடுவதற்கும் சிலபல சிக்கல்கள் உருவாக்கப்பட்டதால் எந்தவித விளம்பரமும் இல்லாமல் களத்தை சந்தித்து வெற்றி பெற்றது.

காவலனுக்கு பல சிக்கல்களால் விளம்பரம் செய்ய இயலாமல் போனது. ஆனால் இதேபோல இதற்கு முன்பு சில படங்கள் எந்தவித விளம்பரங்களும் இன்றி வெற்றியடைந்திருக்கின்றன. நாடோடிகள் படம் ரீலிஸ் ஆகும்வரை டி.வி., எப்.எம்.களில் விளம்பரப்படுத்தப்பட வில்லை. பட ரிசல்ட் வந்த பிறகுதான் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதேபோலதான் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களுக்கும். விளம்பரத்தின் துணையின்றி வெற்றி பெற்ற படங்கள் அத்தனையும் தரமான படங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

நந்தலாலா, தா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல தரமான படங்கள் சரியான தியேட்டர் கிடைக்காததாலும், விளம்பரங்கள் இல்லாததாலும் வெற்றி நூலிழையில் கைவிட்ட படங்கள். இதி்ல தா படத்தை மீண்டும் ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் அதன் தயாரிப்பாளர்கள் அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். மைனா என்ற வெற்றிப்படம், உதயநிதி ஸ்டாலின் என்ற பெரிய தயாரிப்பாளர் மூலம் வெளியானதால் வெற்றி பெற முடிந்தது. அந்த படத்தை அவர் வாங்கி வெளியிடாமல் இருந்திருந்தால் தா, நந்தலாலா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களின் நிலைதான் மைனாவிற்கும் ஏற்பட்டிருக்கும் என்பது விவரமறிந்தவர்களின் கருத்து.

எந்தவித கதையம்சமும் இல்லாத படத்தில் இடம்பெறும் ஒரு சில நல்ல வசனங்களை மட்டும் எடுத்து விளம்பரமாக்கி, அந்த விளம்பரத்தை நிமிடத்திற்கு நிமிடம் டி.வி. மற்றும் எப்.எம். ரேடியோக்களில் வெளியிட்டு படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார்கள். விளம்பரத்தை நம்பி படத்தை பார்க்கப் போன பலருக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம். சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இந்த விவகாரத்தை சற்று மறைமுகமாக சாடிய சங்கத்தலைவர் இராம.நாராயணன், டி.வி., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும், என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார். எப்போதும்போலவே அந்த தீர்மானமும் ஏட்டிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கும் என்பது மற்ற சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தெரியாதா என்ன?

பண பலம், அதிகார பலம் உள்ள பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இன்று தமிழ்சினிமா தலைகீழாக போய்க் கொண்டிருக்கிறது என்று கூறும் முன்னணி இயக்குனர் ஒருவர், ‌ரீலிசுக்கு தயாராகி நூற்றுக்கணக்கான படங்கள் தியேட்டர் கிடைக்காமல் பெட்டிக்கும் முடங்கிக் கிடக்கிறது என்கிற அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கிறார்.

சமீபத்தில் எப்.எம். ரேடியோ ஒன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் இரு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். என்ன‌டா ரெண்டு நாளா ஆளையே காணோம் என்று ஒரு நண்பர் கேட்க, அதற்கு பதில் சொன்ன மற்றொரு நண்பர், இளைஞன் படம் பார்த்‌தேன். ரொம்ப நல்லா இருந்துச்சி. அதான் ரெண்டு நாளா மூணு ஷோவையும் பார்த்தேன், என்கிறார். இப்படிப்பட்ட விளம்பரங்கள் மூலம் பெறும் வெற்றி உண்மையான வெற்றியா? எந்தவித விளம்பரமும் இன்றி பெறும் வெற்றி உண்மையான வெற்றியா?

கண்ணதாசன் குடுமபத்திலிருந்து ஓரு வாரிசு

  kannadasan2.jpg
ஒரு ‌கோப்பையிலே
என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என்
துணையிருப்பு...

எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை...
 
படைப்பதினால் என் பேர் பிரம்மன்...

ஒரே பாடலில் அத்தனை அம்சங்களையும், தன்னுடைய வாழ்க்கை நிலையையும் விளக்கியவர் கவிஞர் கண்ணதாசன்.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கதைகள், இலக்கிய வார்ப்புக்கள் கட்டுரைகள் பல எழுதியவர் கண்ணதாசன்.  

தமிழ் சினிமாவில் அவரது இடத்தை நிரப்ப யாரலும் முடியாது. தற்போது அவரது பேரன் ஆதவ் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 'பொன்மாலைப் பொழுது' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 

கண்ணதாசன் குடும்பத்தில் இருந்து ஒரு கலைவாரிசு இவர் சிறக்க நாமும் வாழ்த்துவோம்...

Monday, January 24, 2011

கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா வீடுகளில் ரெய்டு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news 

மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகைகள் கேத்ரினா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கேத்ரினா கைப், லண்டனைச் சேர்ந்தவர். இவரது தந்தை காஷ்மீரி இந்தியர். தாய் இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர். மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வரும் கேத்ரினா கைப், படம் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘தீஸ் மார் கான்’ என்ற இந்திப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும் இதில் இடம் பெற்றிருந்த கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. இதே போல் மற்றொரு முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்று திரைப்படங்களில் நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானத்துக்கு உரிய வரி கட்டப்படவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடிகைகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை.

சிவன் வேடத்தில் தனுஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news 

கவுரவ வேடத்தில் தோன்றும் படம் ‘சீடன்’. மலையாளத்தில் ரிலீஸான ‘நந்தனம்’ ரீமேக்கான இதை சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். பிரசாத் லேப்பில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்கிறது. ‘‘கவுரவ வேடத்தில் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். நான் சிவபெருமானின் தீவிர பக்தன். ‘சீடன்’ படத்தில் சிவன் வேடம் ஏற்க வேண்டும் என்று சுப்ரமணியம் சிவா சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன்’’ என்றார் தனுஷ்.
 
கவுரவ வேடத்தில் தனுஷ் நடித்துள்ள “சீடன்" அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதில் அனன்யா ஹீரோயினாக நடித்துள்ளார். சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ளா

வில்லத்தனத்திற்கே முக்கியத்துவம் - முமைத்


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


‘நேனு நான் ராட்ஷசி’ என்ற தெலுங்கு படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் முமைத்கான். இதுபற்றி அவர் கூறியதாவது: எனது கண்ணும், உடல்வாகும் வில்லிக்கு ஏற்ற மாதிரி இருப்பதாக, பல படங்களில் வில்லியாக நடிக்க அழைப்பு வந்தது. 
 
நான்தான் மறுத்து வந்தேன். ஆனால் வில்லியாக நடிப்பதும் நடிப்புதானே என்று தோன்றியதால் இப்போது ஒப்புக் கொண்டேன். ராணா, இலியானா ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் எனது வில்லி கேரக்டர்தான் அனைவரையும் கவரும். 
 
இதுதவிர கன்னட படம் ஒன்றிலும் வில்லியாக நடிக்க இருக்கிறேன். தமிழில் ‘பவுர்ணமி நாகம்’ படத்தில் வில்லியாகவும், ஹீரோயினாகவும் நடித்தேன். இப்போது மலையூர் மம்பட்டியானில் நல்ல கேரக்டரில் நடித்து வருகிறேன். வேறு படங்கள் இல்லை.

Sunday, January 23, 2011

விஜய்யின் அரசியல் பிரவேசம் - தந்தை முடிவு

அரசியலில் இறங்க இது சரியான நேரமில்லை… இப்போதைக்கு சினிமாதான் முக்கியம், என்று நடிகர் விஜய் நேற்று கூறிய நிலையில், ‘ரசிகர்கள் விரும்புவதால் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்றும், அடுத்த மாதம் ரசிகர் மாநாடு கூட்டி அதை அறிவிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின்றன. இன்னொரு பக்கம் அ.தி. மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வார் விஜய் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜய் தீர்மானமான எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆனாலும், அரசியலில் இறங்குவது பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கூறினார், நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்.

இதுபற்றி விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

“விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை. அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம். ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை.

பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.

எம்ஜிஆர் உயரத்துக்கு இணையாக…

எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்? விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி.

ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்… விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி (விஜய்க்கு இப்போது 37 வயது!)”, என்றார்.

Saturday, January 22, 2011

மங்காத்தா பற்றி புதிய தகவல்


ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வெங்கட் பிரபு இயக்கும் அஜீத்தின் பொன் விழாப் படமான மங்காத்தாவில் மகாகவி சுப்ரமணிய பாரதியின் பேரன் நிரஞ்சன் பாரதி பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார்.


க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. மே 1-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


பொதுவாக வெங்கட் பிரபு படங்களில் வாலியும் கங்கை அமரனும்தான் பாடல்கள் எழுதுவார்கள். இந்த முறை புதிதாக நிரஞ்சன் பாரதியை அறிமுகப்படுத்துகிறார் வெங்கட் பிரபு.


இவர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களில் ஒன்றை இவர் எழுதுகிறார். மற்றவற்றை வாலியும் கங்கை அமரனும் எழுதுகிறார்கள்.

இக்கால நடிகைகள் கர்வம் பிடித்தவர்கள் - ராதா


“அலைகள் ஓய்வதில்லை” படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதா. “முதல் மரியாதை” படத்தில் சிவாஜியுடன் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றோருடனும் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது அவர் மகள் கார்த்திகா “கோ” என்ற படம் மூலம் ஜீவா ஜோடியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

திருப்பதி கோவிலுக்கு வந்த ராதா அங்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் மும்பையில் வசிக்கிறேன். எனது கணவர் அங்கு ஓட்டல் வைத்துள்ளார். எனக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மகள் கார்த்திகா என்னைப்போல் சினிமாவுக்கு வந்துள்ளாள். தெலுங்கில் “ஜோஷ்” படத்தில் நடித்தாள். தற்போது “கோ” என்ற தமிழ் படத்திலும் நடிக்கிறாள்.

என்னைப்போல் எனது மகளும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 1980-ல் இருந்து 1992 வரை சினிமாவில் இருந்தேன். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

அப்போது எனக்கு இருந்த புகழ் தெரிய வில்லை. இப்போது என் மகள் வயது உள்ளவர்கள் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நடிகைகள் ஒரு படத்திலேயே தங்களை திறமைசாலிகள் போல் காட்டிக் கொள்கின்றனர்.

சிலருக்கு கர்வம் இருக்கிறது. எனக்கு அப்போது பத்து படங்களில் நடித்தும் கூட பயம் இருந்தது. புது நடிகைகளுக்கு நான் அறிவுரையாக சொல்வது என்னவென்றால் எல்லைளை தாண்டாதீர்கள்.

குடும்பம் நடத்த தேவையான திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். தொழில் தொடங்குவதற்கு அவசரம் காட்டாதீர்கள்.

Friday, January 21, 2011

ஏ.வி.எம்- மின் 175-வது படம்

AVM Productions Logo.png

சிவாஜி', 'அயன்' படங்களைத் தொடர்ந்து ஏவிஎம் புரொடக்ஷன் புதிய படமொன்றை தயாரிக்கிறது. 'முதல் இடம்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம், ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படமாகும்.

 ஏவிஎம்-ன் 175வது படம் 'முதல் இடம்'ஆர்.குமரன் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'மைனா' விதார்த் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக கேரளாவைச் சேர்ந்த கவிதா நாயார் அறிமுகமாகிறார். இவர்களுடன் 'பொல்லாதவன்' கிஷோர், இளவரசு, திருமுருகன், மயில்சாமி, அப்புக்குட்டி, கலைராணி, மனோபாலா, பொன்னம்பலம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

காதல், மோதல், காமெடி, செண்டிமென்ட் கலந்து அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகும் 'முதல் இடம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கி தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடைபெறவிருக்கிறது.

எனக்கு எதிராக சதி நடக்கிறது - விஜய்


என் படம் ரிலீஸாகக் கூடாது, எனது கேரியரை பாழ்படுத்த வேண்டும் என சில வேண்டாக சக்திகள் சதி செய்வது எனக்குத் தெரியும். அவர்களை என் ரசிகர்கள் துணையுடன் முறியடிப்பேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
விஜய் நடித்த காவலன் படம் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் ரிலீசானது. படம் பரவலான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் விஜய் நடித்த படங்களில் இது பரவாயில்லை என்று இது விமர்சனங்களில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. படத்தின் பேனர்கள் அகற்றப்படுவதாக ரசிகர்கள் புகார்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்து வருவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
எனது திரையுலக வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரச்சினைகளைச் சந்தித்த பிறகு ஒரு படம் ரிலீஸாவது இதுவே முதல்முறை. பொதுவா ஒரு படம் ரிலீஸாகும்போது சில பிரச்சினைகள் வருவது சகஜம்தான். பின்னர் அவை தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் காவலன் விஷயத்தில், பிரச்சினை தீரக்கூடாது என முடிவு செய்து பலர் வேலை செய்தனர்.

இந்த சதியில் பல விரும்பத்தகாத விஷ சக்திகளின் கை இருப்பது எனக்கும் தெரியும். அவர்கள் யார் என்பதும் தெரியும். ஆனால் இவர்களை எனது ரசிகர்களின் துணையுடன் நான் எதிர்கொள்வேன்.
அந்த வகையில் காவலன் எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்,” என்றார் விஜய்.

Thursday, January 20, 2011

நீயா? நானா? - விஜய் தனுஷ்

Aadukalam and Kaavalan

உலகெங்கும் சூப்பர் ஹிட், இந்த ஆண்டின் மெகா ஹிட், மூவி ஆப் தி டிகேட், ஹாலிவுட்டுக்கு சவால் என்றெல்லாம் கலர் கலர் வார்த்தைகளுடன் தினமும் விளம்பரம் கொடுக்கப்படும் பொங்கல் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன?

'இந்தப் படம் வசூலில் சூப்பர்' என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லா படங்களுமே ததிங்கினத்தோம் போடுகின்றன.

தற்போதைய நிலவரப்படி விஜய்யின் காவலனும், தனுஷின் ஆடுகளமும் மட்டுமே சற்று ஓடிக் கொண்டிருக்கின்றன. சிறுத்தை மற்றும் இளைஞன் பின்தங்கியுள்ளன.

ஜனவரி 14-ம் தேதி தனுஷின் ஆடுகளம் மற்றும் புதிய இயக்குநர் சிவாவின் சிறுத்தை படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களில் ஆடுகளம் முதலிடத்தைப் பெற்றது.

அடுத்த நாள் விஜய்யின் காவலன் மற்றும் பா விஜய்யின் இளைஞன் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த படம் என்பதால் ஓப்பனிங் நன்றாக இருந்தது. திரையிட்ட இடங்களில் ரசிகர் கூட்டம். வழக்கமான விஜய் படம் போல இல்லை என்ற வார்த்தை பரவவே படத்திற்கு ரெஸ்பான்ஸும் இருந்தது.

வசூலிலும் கூட மற்ற மூன்று படங்களையும் முந்தியது. இப்போது நான்கைந்து நாள்கள் முடிந்த நிலையில், தனுஷின் ஆடுகளத்துடன் முதலிடத்திற்குப் போட்டா போட்டியில் இறங்கியுள்ளது காவலன்.

ஆடுகளத்திற்கு வார இறுதிகளில் 90 சதவீதம் நிரம்பிய திரையரங்குகளில் இப்போது 40 முதல் 50 சதவீத பார்வையாளர்கள் உள்ளனர். ஆன்லைனில் எப்போதும் சுலபத்தில் கிடைக்கிறது இந்தப் படத்துக்கான டிக்கெட்.

இப்படி காவலனும், ஆடுகளமும் முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இடத்தில் சிறுத்தை, இளைஞன் உள்ளன. இதில் இளைஞன் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தும் கூட படம் குறித்து சத்தத்தையே காணோம்.

ரவுத்திரம் 50 சதவீதம்


ஜீவா நடிக்கும் ரவுத்திரம் படத்தின் இரண்டாம் ஷெட்யூல் ஒரு வழியாக தொடங்கியுள்ளது. ஸ்ரேயாவால் இரண்டாவது ஷெட்யூல் தாமதமாகி வந்தது. 

சிக்கு புக்கு, தெலுங்கு டான் சீனு படங்களின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டதால் ரவுத்திரம் படப்பிடிப்பில் ஸ்ரேயா பங்கேற்கவில்லை. அவர் இல்லாமலேயே முதல் ஷெட்யூலை முடித்தனர். 

இரண்டாம் ஷெட்யூலுக்காக அவரிடம் பட யூனிட் தேதி கேட்டபோது, குக்கிங் வித் ஸ்டெல்லா ஆங்கில படத்தின் புரமோஷனுக்காக வெளிநாடு சென்றுவிட்டாராம் ஸ்ரேயா. இதனால் ஸ்ரேயாவுக்காக யூனிட் காத்திருந்தது. இப்போது ஒரு வழியாக அவர் ரவுத்திரம் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார். ஜீவா, ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம் பட ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்துவிட்டது.

விமலாராமனுக்கு பாலிவுட்டிலிருந்து அழைப்பு


இன்னும் எத்தனை நாளைக்குத்தான் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது..! சில மலையாளப் படங்களில் நடித்தாகிவிட்டது.. தெலுங்கில் ஆடிக் களைத்தாகிவிட்டது. தமிழில் நடித்த ‘பொய் சுமாராக ஓடியது.. ‘ராமன் தேடிய சீதை பரவாயில்லை என்றானது..!

ஆனாலும் விடாப்பிடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் கால் பதித்தற்கு எதையாவது சாதித்துவிட்டுத்தான் செல்வேன் என்ற கங்கணத்துடன் இருந்த விமலாராமனுக்கு ஆஃபர் இப்போது பாலிவுட்டில் இருந்து வந்திருக்கிறது.

30 வருடங்களுக்கு முன்பு வைஜயந்திமாலா நடித்து வெளிவந்த இந்தி படம் `அமரபாலி.` ஒரு இளவரசியை பற்றிய கதை அது. முப்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் அதேபெயரில் இப்படம் இப்போது தயாராகிறது.

அதில், வைஜயந்திமாலா நடித்த வேடத்தில் விமலா ராமன் நடிக்கிறாராம். `ஜோதா அக்பர்` (இந்தி) படத்தை இயக்கிய அதுல் கே.கார்க், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். சல்மான்கானின் உறவுப் பையன் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

`அமரபாலி` படத்தில் நடிப்பதற்காக, விமலாராமனுக்கு ஒரு பெரிய தொகை அட்வான்சாக கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். இது, முழுக்க முழுக்க கதாநாயகியை சுற்றிவரும் கதை என்பதால், விமலாராமன் உற்சாகமாக காணப்படுகிறார். இந்த படத்துக்காக அவர், 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்!

காத்திருந்து, காத்திருந்து ஒரு வாய்ப்பு வருகிறபோது அதைக் கைவிட அவர் என்ன முட்டாளா..? இன்னொரு சவுகரியம் விமலாவுக்கு.. பார்ட்டி பிரியரான அவருக்கு மும்பையின் பார்ட்டி லைஃப் ரொம்பவே பிடித்துப் போகலாம்..!

அஸின், த்ரிஷா, பத்மப்பிரியா வரிசையில் பாலிவுட்டுக்கு படையெடுத்திருக்கும் இவராவது வைஜெந்திமாலாவின் சாதனையைத் தொடுவாரா என்று பார்ப்போம்..!

ரஜினியே பாரட்டி விட்டார்..!

ஆடுகளம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் டாப்ஸி இவர் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். டாப்ஸி அளித்த பேட்டி வருமாறு:- நான் நடித்த ஆடுகளம் தமிழ் படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
 
எனக்கு தமிழ் பேச தெரியாது. ஆடுகளம் படத்தை ரஜினி பார்த்தார். அவருடன் உட்கார்ந்து படம் பார்க்க பதட்டமாக இருந்ததால் வெளியே நின்று விட்டேன். படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரஜினி என் கையை பிடித்து பாராட்டினார்.
 
இதனை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்திப் பட வாய்ப்புகள் வருகின்றன. அங்கு போக எனக்கு விருப்பம் இல்லை.

மழைக்காலம் – திரைவிமர்சனம்


ஓவிய கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம்.சென்னை ஓவிய கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, `மழைக்காலம்’ என்ற படம் தயாராகிறது.

அன்றில் பறவைகள், ஒன்றை ஒன்று பிரிந்தால் உயிர் வாழாது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.அதுபோல் உயிருக்கு உயிராக பழகிய ஒரு காதல் ஜோடியை பற்றிய கதை இது.

படத்தில், வில்லன் கிடையாது. புதுமுகங்கள் சஞ்சீவன் கதாநாயகனாக நடிக்க, `காதல்’ சரண்யா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரேம் ஆனந்த் இசையமைக்கிறார். கதை- திரைக் கதை- வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், தீபன். ஏசுதாசன், எம்.வி.ராஜன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Wednesday, January 19, 2011

தமிழ் சினிமா என்னை கைவிடாது : ஜோதிர்மயி


மலையாளத்தில் ‘சீனியர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் கூறியதாவது: தமிழ் சினிமா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்போது தமிழில் நடிக்கவில்லை என்றாலும் எனது கவனமும், ஆர்வமும் தமிழ் மீதுதான் இருக்கிறது. கொஞ்சம் திறமை காட்டினால் கூட தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்துக்கொண்டாடுவார்கள். 

அதனால்தான் ஒவ்வொரு மலையாள நடிகைகளுக்கும் தமிழ்ப் படங்கள் மீது ஆர்வம் இருக்கிறது. எல்லோரையும் ஆதரிக்கும் தமிழ் சினிமா என்னை கைவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

தற்போது ‘சீனியர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். அதற்கு பிறகு முக்கியமான படத்தில் நடிக்கிறேன். படத்திற்கு பெயர் வைக்கவில்லை. கேரளாவில் உள்ள மலபார் பகுதியில் வாழும் ‘டெம்ப்யம்’ என்ற இன மக்கள் கோவில்களில் நடனம் ஆடுபவர்கள். இந்த இனத்துப் பெண்ணாக நடிக்கிறேன்

அசின் உதட்டில் அறுவை சிகிச்சையா?

விஜய் ஜோடியாக அசின் நடித்த காவலன் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அசினை பார்த்த ரசிகர்கள் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதாக சொல்கிறார்கள். கஜினி, போக்கிரி, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஆழ்வார் போன்ற படங்களில் வந்த அசினுக்கும் காவலன் அசினுக்கும் வித்தியாசம் உள்ளது என்கின்றனர்.

இந்த மாற்றத்துக்கு காரணம் அறுவை சிகிச்சை என்று கூறப்படுகிறது. உதட்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று தகவல் வெளி யாகியுள்ளது. சல்மான்கானுடன் அசின் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் படப்பிடிப்பு லண்டனில் நடந்த போது சிறிய விபத்தில் சிக்கினார் என்றும் இதில் அசின் உதடு கிழிந்து தொங்கியது என்றும் மும்பை பட உலகம் கிசுகிசுக்கிறது.

காவலன் படப்பிடிப்பு துவங்கிய போது உதட்டுக்கு அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். இது பற்றி அசின் தரப்பில் கேட்ட போது மறுத்தனர். லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் வேலை செய்து இரு வருடங்கள் ஆகிவிட்டது.

இத்தனை நாளைக்கு பிறகு அசின் விபத்தில் சிக்கினார் என்றும் உதட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் செய்திகள் பரப்புவது உள்நோக்கமானது என்று அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

பிளாஷ்டிக் சர்ஜரி நடந்ததாக வெளியான தகவல்கள் புரளிதான் என்றும் கூறினர். அசின் “இமேஜை” சிதைப்பதற்காகவே இந்த புரளி கிளப்பப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tuesday, January 18, 2011

இவர் நம்ம வீட்டுப் பிள்ளை

  (பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை)
 
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து....
.....................................
என்ன இவ்வளவு தொடர்புள்ளிகள் என்று பார்க்றீர்களா? ஆம்...இன்னும் தொடர்ந்து மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தானே  இருக்கிறார் இவர். அதற்கு உதாரணமாக இதோ அந்த மாபெரும் தலைவரின் வாழ்க்கையில் நடந்த சில துளிகள்....

மாபெரும் சபைதனில்நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும். ஒரு மாசு குறையாத
மன்னவன் இவன் என்று
போற்றிப் புகழ வேண்டும்
என்ற பாடலை வாழ்ந்து காட்டியவர். அவர் தான் இந்த நட்சத்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
இவரது முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். 17.1.1917ல் இலங்கையில் உள்ள கண்டியில் கோபாலமேனன், சத்யபாமா  தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது அண்ணனின் பெயர் சக்கரபாணி. கும்பகோணத்தில் உள்ள ஆனையடிப்பள்ளியில் 3ம்  வகுப்பு வரை படித்தார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை அதற்கு மேல் தொடர முடியவில்லை. 7 வயதிலேயே அண்ணனுடன்  சேர்ந்து நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.மக்கள் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நேர்மை, நாணயம், நம்பிக்கை, கட்டுப்பாடு, மனித  பண்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக திகழ்ந்தவர். அறிஞர் அண்ணாவின் அன்பு தம்பி இவர்.
அரசியல்
எம்.ஜி.ஆர். காந்தியடிகள் மீது பற்றுக் கொண்டு கதர் ஆடை அணிந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கையை பிரச்சாரம் செய்தார்.  பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். நாளடைவில், அந்த கட்சியில் பொருளாளராக உயர்ந்தார். எம்.ஜி.ஆர். 1950 முதல்  1972 வரை தி.மு.க.வில் இருந்தார். அதன்பின்பு, 1972ல் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். 1972 முதல் 1987 வரை தமிழக முதல்வராக  பதவியில் இருந்தார்.
  
தொண்டுகள்
பள்ளிகளில் பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, புத்தகம்,  காலணி போன்றவற்றை இலவசமாக வழங்கினார். தன்னிறைவுத்திட்டம், உழவர்களின் கடன் தள்ளுபடி திட்டம், வீட்டுவசதி திட்டம்,  ஆதரவற்ற மகளிருக்கான நலத்திட்டம் என்று பல நல்ல திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தினார். அதனால், அவரை மக்கள்,  பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் என்று அழைத்தனர்.
மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்ட எம்.ஜி.ஆர், 24.12.1987 தேதியன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின்,  1988ல், இந்திய அரசு இவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் சார்பாக, சென்னை மெரீனா கடற்கரையில்  எம்.ஜி.ஆருக்கு என்று தனியாக சமாதி எழுப்பப்பட்டுள்ளது.


வாரிக்கொடுக்கும் வள்ளல்
தன்னைக் காண வருபவர்களுக்கெல்லாம் வயிறாற உணவு கொடுப்பதைத்தான் இவர் தலையாய கடமையாகக் கொண்டிருந்தார். எப்படி  வாழ வேண்டும் என்று நினைத்தாரோ, அதேபோல் வாழ்ந்து நினைத்ததை முடித்தவர்.
தாய்க்குப் பின் தாரம் என்ற எம்.ஜி.ஆரின் படம் இவரது வாழ்க்கைக்குப் பொருத்தமாகவே இருந்தது என்று சொல்லலாம். முதல் மனைவி  தங்கமணி, இரண்டாவது மனைவி சதானந்தவதி. இவர்கள் இருவரும் காலமானார்கள். அதன் பிறகு சென்னையில் ராமாவரம் என்ற  இடத்தில் உள்ள தோட்டத்தில் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு குடிவந்தார். தன்னுடைய 3 வது மனைவி வி.என்.ஜானகியுடன் வாழ்ந்தார்.  இவர் 1996ல் காலமானார்.

சரித்திரம் படைத்த திரையுலக சிற்பி
7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார், எம்.ஜி.ஆர். திரையுலகில் 1934 முதல் 1977 வரை  சுமார் 44 ஆண்டுகள் முடிசூடா  மன்னராக இருந்தார். மனிதராக பிறந்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனது திரைப்பட பாடல்களின் மூலம் மக்களுக்கு  உணர்த்தினார்.
எம்.ஜி.ஆரை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கந்தசாமி முதலியார். தமிழில் இவர் நடித்த முதல் படம் சதிலீலாவதி. இந்த  படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தொடர்ந்து இவர் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். முதல்  கதாநாயகனாக நடித்த படம் ஜூபிடர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ராஜகுமாரி.
100வது படம் 20.9.1963ல் வெளியான ஒளிவிளக்கு. இவரது கடைசி படம் 14.1.1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.  தமிழில் வெளிவந்த முதல் கலர் படம் அலிபாபாவும் 40 திருடர்களும் தான். தென்னிந்தியாவின் ஜனாதிபதி விருதுபெற்ற படம்  மலைக்கள்ளன். உலகம் சுற்றும் வாலிபன், என் தங்கை போன்ற படங்கள் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன.  வெள்ளிவிழாவை 12 படங்கள் தொட்டன. வெற்றிவிழாவை 86 படங்கள் கண்டன. எம்.ஜி.ஆர். நடித்த மொத்த படங்கள் 137.
உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் போன்ற படங்களை இயக்கியவர் எம்.ஜி.ஆர்.

வாங்கிக் குவித்த பட்டங்கள்
* மக்கள் திலகம் - கல்கண்டு ஆசிரியர் திரு.தமிழ்வாணன் 1951 ல் வழங்கினார்.
* புரட்சி நடிகர் - உறந்தை உலகப்பன் அவர்கள் இயற்றி, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி 1952 -திருச்சியில் வழங்கினார.
* வாத்தியார்  - 1960ல் நெல்லை நகராட்சி மன்றம் வழங்கியது-.
* பொன்மனச் செம்மல்  - 1963ல் ,கருரில் நடைபெற்ற விழாவில், கிருபானந்தவாரியார் வழங்கியது-
* இதயக்கனி - 1967ல் அறிஞர் அண்ணா வழங்கியது-
* புரட்சித்தலைவர்  -1972ல் சென்னை மெரீனா கடற்கரையில் 10 லட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் கே.ஏ.கிருஷ்ணசாமி  வழங்கினார்.

புரட்சி நடிகர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்
நாடோடி மன்னன், ஆசை முகம், ராஜா தேசிங்கு, நினைத்ததை முடிப்பவன், எங்கவீட்டுப் பிள்ளை, கலையரசி, பட்டிக்காட்டுப் பொன்னையா,      மாட்டுக்கார வேலன், அடிமைப் பெண், நீரும் நெருப்பும், நாளை நமதே, நேற்று இன்று நாளை, உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன்,  அரசிளங்குமரி, சிரித்து வாழ வேண்டும், குடியிருந்த கோயில்.

விருதுகள்
* பாரத் -     இந்திய அரசு , 1971
* பாரத் ரத்னா  - இந்திய அரசு , 1988
* டாக்டர் பட்டம் - சென்னை பல்கலைக்கழகம், 1983
* கௌர டாக்டர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா, 1974
* அண்ணா விருது  - தமிழக அரசு, 1971
* சிறந்த நடிகர் - இலங்கை அரசு, 1968
* சிறந்த நடிகர் - (ரிக்ஷாக்காரன்) முதல்பரிசு,- சிங்கப்பூர்ரசிகர்கள், 1971
* சிறந்த நடிகர்  - (ரிக்ஷாக்காரன்) முதல் பரிசு, -இந்திய அரசு, 1971
* மலைக்கள்ளன் - சிறந்த நடிகர், இரண்டாம் பரிசு, - இந்திய அரசு, 1954
* காவல்காரன்  - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1967
* குடியிருந்த கோயில்  - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1968
* அடிமைப்பெண் - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1969
* எங்க வீட்டுப் பிள்ளை  - சிறந்த நடிகர் பிலிம்பேர் வருது, 1965
* அடிமைப்பெண் - சிறந்த படம், முதல்பரிசு, பிலிம்பேர் விருது, 1969
* உலகம் சுற்றும் வாலிபன் - சிறந்த படம், பிலிம் பேர் விருது, 1973

பதவிகள்
* தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டத் துணை தலைவர் - 1967
* தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்  & 1962
* தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்  - 5 முறை (1967, 1972, 1977, 1980, 1984)
* தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர்    
* திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளர்  - 6 ஆண்டுகள்
* அ.இ.அ.தி.மு.க.     பொதுச் செயலாளர் - 16 ஆண்டுகள்
* தமிழக முதல் அமைச்சர்  - 3முறை -(1977, 1980, 1984)
* நடிகர் சங்க பதவிகளில் இருந்த வருடங்கள்
* தலைவர்  - 1958, 1961
* துணைத் தலைவர்- 1952, 1953
* செயலாளர்- 1955
* பொதுச் செயலாளர்  - 1954, 1957
* தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாட்கள்  - 4.7.1977, 9.6.1980, 10.2.1984

சுவையான குறிப்புகள்

* சினிமா, அரசியலைத்  தாண்டி ஓர் ஆளுமையைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இவர் அனைவருக்கும்  ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... முத்தாய்ப்பாய் சில...

* எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).  பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும்.  ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம்.

* எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி.  எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’  பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்.

* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக  துப்பாக்கியைப் பரிசாக அளித்தார், பிரபாகரன்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார்.  மலைக்கள்ளனில் ‘ஹூக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில்  தாமதம் ஏற்பட்டதாம்.

* முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை  மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

* ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால்  மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

* நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக  நடிப்பார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.

* எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா இது. இந்தியாவில்  உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது. காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத்  தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள். சினிமாவில்  அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா  படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.

* எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய  துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.

* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை.  10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார், எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக்  கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை.

* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன், -சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்.
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார், எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர்  வைத்திருந்தார்.

* ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே...!’ என்றுதான் அழைப்பார் !

* அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே, அதைத்  தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.

* எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை  வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப்  பின்பற்றினார், எம்.ஜி.ஆர்.

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம்  வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்.
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோவில் கட்டி வைத்திருந்தார்.

* ‘நான் ஏன் பிறந்தேன்?’ -ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை.  அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே  நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் பெருமைகளும் முற்றுப் பெறவில்லை.

எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்

* அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட  வேண்டும்.

* சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது  நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது.

* வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது. விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.  அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள  வேண்டும்.

* வன்முறை தான் போராட்டமுறை என்றால், தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

* எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும், அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின்  தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள். எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு  வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு  இழுப்பது என்பது ஒரு வகை.

* நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்.  சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

* சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவைகளே.  என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய  மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.

* தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச் சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

* ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை  ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.

* மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குகிறதோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம்  அறியாமலேயே சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கக் கூடியவை.

* கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தைக் காட்ட முடியும்.

* கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.

* பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காகக அல்ல! ஆடலும் அது போலத்தான்.  ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.

* கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல. தரத்தை மட்டுமல்ல, அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது  மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின்  அடிப்படை மூலதனமாகும்.

* குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

* கலை எப்போதும் நிரந்தரமாகவே இருக்கும். ஆனால் கலைஞர்கள் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள்.

* இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் நமது சந்ததியினரருக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

* சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்.

* ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான்  கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.

* சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள்  எடுத்துக்கொள்ள கூடாது.

* உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

* பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது.  மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.

* நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.

24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால், நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால், அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால்  நாம் துடைப்பதில்லை.

* கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும்; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.

* மதத்தின் பெயரால் பிரச்சினைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சினைகள் வருகின்றன.

* உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால், இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.

* நமக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்; ஆனால், அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும், அதை எதிர்த்தே ஆக  வேண்டும்.

* கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக்காரர்கள் தான்.

* இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது.

* நீதித்துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது. வந்து விட்டால், நீதி செத்துவிடும்.

* நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால், போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.

* சக்தி குறைந்தர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.

* சொந்தக் காலில் நிற்பது நல்லது மட்டுமல்ல. நடைமுறைக்கும் தேவைதான்.

* ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.

* நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான  விளைவுகளை ஏற்படுத்தும்.

* மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர, எஜமானர்கள் அல்ல  என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றர்வர்களும் அந்தப் பணியைச் செய்தால் தான் நிலைமை சீர்படும்; எந்தத் திட்டமும் நிறைவேறும்.

* உடலைப் பேணிக் காப்பது, உடற்பயிற்சி செய்வது, உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மையைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக  விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே  மாணவர்களின் கடமைகள்.

* எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மை தான் நிலைக்கும் என்பதை மனதில் கொண்டு விமர்சியுங்கள்.

* மக்களை மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால் தான் கலைஞர்களின் வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால்  அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.

* வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான, பயங்கர விஷவாயு.

* ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் தான். ஆனால், ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுவத்துவதற்குச் சிந்திக்கவும்,  பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.

* சராசரி மனிதனின் எண்ணங்கசளையும், அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத  எவனுக்கும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ, உரிமையோ கிடையாது.

* என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும் போது அன்போடு பேசுவதற்குக்  காரணமே, அவர்ளது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும்  வெகுதூரம் என்பதனாலும் தான்.

* அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத் தான் சொந்தம்; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.

* மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காகப் பெற்றோரைத் துன்பப்படுத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப்படக்கூடாது.  நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

* சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடிவரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும்,  என்ன நடந்தாலும் கலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.

* கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

* திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான்  அஸ்திவாரம்.

* ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால் தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.

* நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே.

* கணவன், மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். பாச  உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.

* எல்லோரும் நமக்கு வேண்டிவர்கள் தான்; ஆனால், எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம்  விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

* நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக  அமையாது.

55. கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.

* சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன்கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று  யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச்  செல்கிறவர்களைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

* மக்களுக்கம் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைக் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.

* உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது; ஆனால், அதற்கு முன்பே நாமே கொடுக்கக் கூடிய நிலையை  உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாதபோது அந்த மொழியை கட்டாயப்படுத்தக் கூடாது.

* ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.

* இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால், பெண்களின் பெயருக்குப் பின்னால் இல்லை. பெண்கள் தான்  ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

* என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே  நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?
* அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.

* சமுதாயத்தின் கட்டுப்பாடுகள். ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.

* தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்.

வருடத்திற்கு இரண்டு படங்கள்!

 
 
சமீரா ரெட்டி தமிழில் நடித்துள்ள "நடுநிசி நாய்கள்' படம் தெலுங்கிலும் டப் ஆகிறது. வருடத்திற்கு இரண்டு பெரிய படங்களிலாவது நடிக்க வேண்டும் என்பது இவரது முடிவாம்.

Monday, January 17, 2011

காவலன் திரைவிமர்சனம்

நல்ல கதையை எப்படி சொதப்பலா படம் எடுக்கிறதுன்னு எல்லோரும் காவலன் பார்த்த்து தெரிஞ்சுக்கலாம்.
ராஜ்கிரண் ஊரில் ரொம்ப பெரிய மனிதர், அவரை  பாதுகாக்க வரும் விஜய் ஒரு கட்டத்தில் அவரின் மகளுக்கு பாடிகார்டாக காலேஜ்க்கு அவர்களுடன் ஸ்டுடண்டாக செல்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க அவரை காதலிப்பதாக சொல்லி போன் செய்கிறார் அசின். விஜய் காதலிக்க, ஒரு கட்டத்தில் அசினும் காதலிக்க ஆரம்பிக்கிறார், பிறகு காதலும் போராட்டமும் முடிவும் தான் கதை.
கதை கேட்க சூப்பராதான் இருக்கு ஆனா படம் உஷப்பா.. முதல் 45 நிமிட படத்தில் ஏன்டா உள்ள வந்தோம்னு நினைக்க வைத்து விடுகிறார் டைரக்டர். ஓபனிங்க் பாக்சிங்க பைட்டுக்கு பாங்காங் போறாராமா?? அதுலயும் விஜய் கைல பட்டு விழுந்தவர் எழமாட்டேங்றார். நல்லவேளை பைட் முடிஞ்சதும்  பாட்டு போட்டுடுவாங்கன்னு பயந்தது நடக்கவில்லை ஆனா தேவை இல்லாத ஒரு இடத்துல விண்ணைக்காப்பான் ஒருவன் வந்து காதை கிழிக்கிறான்.
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கதைக்குள் வரும் வடிவேலுவுடன் விஜய் செய்யும் காமெடிகள் சில இடங்களில் சிரிப்பு பல இடங்களில் கடுப்போ கடுப்பு. விஜய் காலேஜ் போவதும் அதும் நெஞ்சை நிமிர்த்திகிட்டு நடக்கிறது அசினுக்கு மட்டும் அல்ல நமக்கே எரிச்சலை வர வைக்கிறது. அடப்போங்கப்பா..
படத்தின் இரண்டாம் பாதி ஆறுதல், ஆனாலும் வசனமோ காட்சிகளோ புதுமை எதுமே இல்லை. காதலியை சந்திக்க பொட்டானிக்கல் கார்டனில் நின்று அசினுடன் ஒத்திகை பார்த்த காட்சியை ஏற்கனவே விஜய் பூமிகாவுடன் பத்ரியில் பார்த்துவிட்டார். அவ எப்படி உங்களுக்கு போன் பண்ணுவான்னு சொல்றீங்கன்னு அசின் கேட்க உண்மையான காதல் எப்பவும் பொய்யாகாதுன்னு சொல்லும் போது பக்கத்துல இருக்கவன் காதை கடிச்சுடலாமாங்கற அளவுக்கு கோபம் வருது. அசினின் அண்ணன் காதலும் ஒரு பைட்டும் கதையின் நீளத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஸ்டெப் ஸ்டெப் பாடலும், விண்ணைக்காப்பான் ஒருவனும் திணிக்கப்படுகிறது.. வழக்கமாக விஜய் படத்தில் இருக்கும் துள்ளல் டான்ஸ் இந்த படத்தில் மிஸ்ஸிங்க்.. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஸ்டெப் ஸ்டெப் பாடல் டான்ஸ் சொதப்பல். பைட்டும் அப்படியே சொல்லிக்கொள்ளும் படி இல்லை.
எல்லா படத்திலும் பார்த்த எக்ஸ்ப்ரஸன்ஸுடனே விஜய் வருகிறார் கொஞ்சம் சதை போட்டு மேலும் அழகாக தெரிகிறார் அதும் கிளைமாக்ஸ் ஹேர் ஸ்டைல் அட்டகாசம், பாடல்காட்சிகளில் ஹேர்ஸ்டைல் அலங்கோலம்.  அசின் சில இடங்களில் அழகாகவும், சில இடங்களில் குளோசப்பில் பயமுறுத்தவும் செய்கிறார்.ராஜ்கிரண், ரோஜா, எம் எஸ் பாஸ்கர் யாருக்குமே பெரிதாக வேலை இல்லை.
படத்திற்கு இசை வித்தியாசாகர் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எதுமே இல்லை, பிண்ணனி இசை இரைச்சலோ இரைச்சல். அதுவும் வடிவேலுவுக்கு ஒரு பேக்ரண்ட் மீயூசிக் போட்டிருக்காரா அட அட.. சத்தியமா முடியல..மேலும் இந்த படத்திற்கு எவ்வளவு யோசித்தாலும் பாசிட்டிவாக சொல்ல எதும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..  போன் காதலில் ஏற்படும் சின்ன சின்ன எதிர்ப்பார்ப்புகள் படத்தை லேசாக தூக்கி நிறுத்துகிறது. நல்ல கதையை தேர்வு செய்துவிட்டு மோசமான திரைக்கதையில் சருக்கிவிட்டார் டைரக்டர் சித்திக். வழக்கமான மசாலாக்களை விட்டு விட்டு நல்ல கதையை தேர்வு செய்ததற்கு விஜய்க்கு ஒரு பாராட்டு..

Saturday, January 15, 2011

ஆடுகளம் விமர்சனம்

aadukalam-movie-first-look-stills-3 தமிழ் சினிமாவில் மதுரையை களமாய் எடுத்துக் கொள்கிறவர்களில் பல பேர் ஏதோ அவ்வூர்காரர்கள் எல்லா நேரத்திலும் அரிவாளும் கையுமாகவே திரிவார்கள் என்ற எண்ணத்தை ஏறபடுத்தி, கும்பல் கும்பலாய் நாலைந்து பேர் ‘வந்திட்டாய்ங்க. போய்ட்டாய்ங்க” என்று பேசிக் கொண்டலைபவர்களாகவும்,, லைவாய் படமெடுக்கிறேன் என்று யாரையாவது நடுரோட்டில் லந்து கொடுத்துக் கொண்டும் அலைபவர்களாக நினைத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டிருக்க, அதே  நினைப்புடன் படம் பார்க்க போனால் நிச்சயம் பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சும்.

சேவல் சண்டையை பல மதுரை பேஸ்டு படங்களில் ஏற்கனவே வைத்திருந்தாலும் அதையே கதை களமாய்  வைத்துப் போடப்படும் சண்டையை திரைக்கதையாய் அமைத்து, அதனூடே மனித மனங்களின் சேவல் ச்ண்டைகளையும், அதன் நுண்ணிய உணர்வுகளையும் ஊடே நுழைத்து பயணித்திருக்கும் படம் தான் ஆடுகளம். இயக்குனர் வெற்றிமாறன் நின்று ஆடியிருக்கிறார் பல இடங்களில்.

aadu
பேட்டைக்காரருக்கும், ரத்தினம் டீமிற்கும் சேவல் சண்டையில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஒரு முக்கிய பிரச்சனையில் மீண்டும் போட்டி வெடிக்கிறது. அதில் பேட்டைக்காரனின் சிஷ்யனின் சேவலை அதுவும் ஏற்கனவே பேட்டைக்காரர் கொல்லும் படி சொன்ன சேவலை அவர் கொல்லாமல் வளர்த்துவந்து அதை வைத்து ஒரு பெரிய அமெளண்ட்டை வெற்றி பெருகிறார். அந்த வெற்றி அவர் வாழ்க்கையை எப்படி மாற்றிப் போட்டது என்பதுதான் கதை. பார்க்க, கேட்க சிம்பிளாக இருந்தாலும் ரத்னம், பேட்டைக்காரர், கருப்பு, பேட்டைக்காரர் பெண்டாட்டி அத்தாச்சி, துரை, கருப்பின் நண்பன் இவர்களுக்குள் இருக்கும் பகை, பகை முடிக்க அவர்கள் தீட்டும் சதி, வன்மம் எல்லாம் சேர்த்து திரைக்கதையாக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் ஆழமான ஒரு கேரிக்கேட்சரை உருவாக்கி அதை நம் மனதில் பதியவைத்தாலே ஒழிய, நிற்காது.

சேவச் சண்டையையே வாழ்க்கையாய் கொண்டிருக்கும் பேட்டைக்காரர், அவரின் மேல், அவர் திறமையின் மேல் காதல் கொண்டு எல்லோரையும் விட்டு வந்த அவரது இளம் மனைவி, ஒயின் ஷாப் பார் நடத்தும் கிஷோர், எந்த விதமான கவலையுமில்லாமல் அண்ணே.. அண்ணே என்று அவர் பின்னாலேயே அலையும் கருப்பு தனுஷ், காமெடிக்காக வைக்கப்படும் நண்பன் கேரக்டர் போலில்லாமல் கூட அலையும் நண்பன் கேரக்டர், ஆங்கிலோ இந்தியன் தப்ஸி, அவரின் பாட்டி, அவர்களின் நண்பரான ஜெயப்பிரகாஷ் என்று ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து வைத்திருக்கிறார் இயக்குனர்.

Aadukalam-movie-Pictures
கதை நாயகன் என்று சொல்லப்போனால் அது பேட்டைகாரர் ஜெயபால் தான். அந்த அடந்த மீசைக்குள் புதைந்திருக்கும் முகமும், அந்த கண்களும், பல இடங்களில் நடிப்பது தெரியாமல் நடித்திருக்கிறார். முக்கியமாய் அந்த சேவல் சண்டைக் காட்சியில் தன் வித்தை மேல் இருக்கும் அசகாய நம்பிக்கையில் ஏன் அந்த சேவலை அறுத்து போடலைன்னு கேட்பதும், அதே சேவல் தொடர்ந்து ஜெயிக்கும் போது தன் பெயர் சொல்லித்தான் ஜெயிக்கிறான் என்றாலும், தன் கணிப்பு மாறிப் போய்விட்டதே என்று மருகுவதும், அந்த மருகல் கொஞ்சம், கொஞ்சமாய் பொறாமை ஆவதும், தன் பெருமை குறைந்துவிட்டதாய் காம்ப்ளெக்ஸில் இறுகிப் போய் நிற்குமிடத்தில் எல்லாம் ஜெயபால் மின்னுகிறார். இவர் நடித்ததை விட ராதாரவி அவரின் குரலில் நடித்தது அதிகம். அவர் முகம் காட்ட வேண்டிய உணர்வுகளை சின்ன சின்ன பாஸ்களிலும், மாடுலேஷனிலும் பேசி நடித்திருக்கிறார் ராதாரவி. அதே போல கிஷோருக்கு குரல் கொடுத்திருக்கும் சமுத்திரக்கனியையும் பாராட்ட வேண்டும்.

தனுஷ் படம் பூராவும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் கூட மிளிர்கிறார். வேட்டைக்காரனிடம் காட்டும் பவ்யமாகட்டும், மதுரை ஸ்லாங்காகட்டும், அதே வேட்டைக்காரனிடம் தன் சேவல் பந்தயம் ஜெயிக்கும் என்று கொஞ்சம் தைரியமாய் சொல்லுமிடமாகட்டும், ஆங்கிலோ  இந்தியப் பெண்ணின் பின்னால் சுற்றி, அங்கிருக்கும் லோக்கல் பஞ்சாயத்து ரவுடியின் முன் அவள் தன்னைத்தான் காதலிக்கிறாள் என்று சொன்னதும் முகத்தில் காட்டும் ரியாக்‌ஷனாகட்டும், தனுஷ் பல இடங்களில் தூள் பரத்துகிறார். முக்கியமாய் இரண்டாவது பாதியில் அவர் வாழ்க்கையில் எதிர்பார்க்காத நிகழ்வுகளாய் நடக்கும் போது மிகவும் வெள்ளெந்தியாய் அதை எதிர்த்து போராடுவதும், யார் காரணம் என்று தெரிந்து கொண்டவுடன் அந்த அதிர்ச்சியுடன், ஏதும் செய்ய முடியாத இயலாமையையுடன் பேசும் காட்சியில் உருக்குறார். என்ன மொத்தமாய் ஒரு லெக் பீஸ் அளவுக்கு இருந்து கொண்டு பத்து பேரை போட்டு துவைப்பது எல்லாம் தான் கொஞ்சம் ஓவராய் இருக்கிறது.

தப்ஸி ஆங்கிலோ இந்திய பெண்ணுக்கு சரியான தீர்வு. திரிஷாவை விட இவர் சரியாக பொருந்துகிறார். படத்தில் எனக்கு ஒட்டாத ஒரு விஷயமே தனுஷ், தப்ஸியின் காதல் தான். பெரிதாய் ஏதும் இம்பாக்ட் இல்லாத ஒரு ட்ராக்காகத்தான் தோன்றுகிறது. கமர்ஷியல் வேல்யூவுக்காக வைக்கப்பட்டது அதற்கு ஏற்றார் போல அமைந்துவிட்டது.

Aadukalam-Wallpaper-1-300x225
டெக்னிக்கலாக சொல்ல வேண்டுமென்றால் வேல்ராஜின் ஒளிப்பதிவு மிகவும் லைவ்வாக இருக்கிறது. குறிப்பாய் சேவல் சண்டைக்காட்சிகளிலும், இரவில் நடக்கும்சண்டைக்காட்சிகளிலும். சேவல் சண்டைக்காட்சிகள் முழுவதும் சி.ஜியில் செய்திருக்கிறார்கள். ஆங்காங்கே தெரிந்தாலும் பாராட்டபட வேண்டிய ஒர்க். ரத்தம் சொட்டுவது எல்லாம் தான் கொஞ்சம் ஓவராய் இருந்து காட்டிக் கொடுத்து விடுகிறது. ஜி.வி. பிரகாஷின் இசையில் ஏற்கனவே “யாத்தே..யாத்தே” பாடல் ஹிட் அதை படமாக்கியிருக்கும் விதமும் நச்சுன்னு இருக்கிறது. பின்னணியிசையிலும் ஓரளவுக்கு நிறைவாகவே செய்திருக்கிறார். முக்கியமாய் இண்டர்வெல் சேவல் சண்டைக்காட்சிகளில்.

vetri maran
எழுதி இயக்கிய வெற்றி மாறனுக்கு இரண்டாவது படம். பொல்லாதவனின் ஹாங் ஓவரிலிருந்து ஆரம்பிக்கிறது இப்படமும். ஆனால் எடுத்துக் கொண்ட கதைக்களம், சேவல் சண்டைப் பற்றிய நுணுக்கங்கள், முக்கிய கேரக்டர்களில்லாமல் ரத்னம், அவருடய அம்மா, பேட்டைக்காரரின் மனைவி, ஆங்கிலோ இந்திய ஏரியாவில் உதார் விடும் ரவுடி, என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஆரம்பிக்கும் போது என்னடா திரும்ப, திரும்ப சேவ்ச்சண்டை என்று வருகிறது என்று ஆயாசப்பட ஆரம்பிக்கும் போது மனித மனங்களின் சண்டை ஆரம்பிக்க, சூடு பிடிக்க ஆரம்பித்தது முடிவு வரை குறையவேயில்லை. என்ன ஆங்காங்கே வரும்  பாசக்காட்சிகள், காதல் காட்சிகள் கொஞ்சம் ஸ்பீட் ப்ரேக்கராய்தான் தெரிகிறது. அதே போல க்ளைமாக்ஸும் படு சினிமாவாக இருப்பது கொஞ்சம் நிரடத்தான் செய்கிறது.  இவ்வளவு பரபரப்பான கதைக்களனில் மிக நுணுக்கமான மன உணர்வுகளை வைத்து ஆட நல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியம் உள்ள வெற்றி மாறனுக்கு மீண்டும் வெற்றி கிடைத்திருப்பது ஒன்று அதிசயமில்லை.
ஆடுகளம் – நிச்சயம் பார்க்க வேண்டிய படம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...