Wednesday, March 2, 2011

அசின் ராஜபக்சாவுக்கு நெருக்கமானவரா.?


இலங்கை அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்திய விஜய்யின் காவலன் படத்தை இலங்கையில் செய்ய முற்பட்டதாகவும், அப்படத்தில் ராஜபக்ஷேவின் இலங்கை அரசுக்கு நெருக்கமான நடிகை அசின் நடித்திருந்ததால் அந்த முடிவை கை விட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 

நடிகை அசின் இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட சம்பவம் மற்றும் ராஜபக்ஷேவின் மனைவியுடன் சேர்ந்து யாழ்பாணம் சென்ற சம்பவத்தால் தமிழ் திரையுலகில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அசின் நடித்த படத்தை திரையிட விட மாட்டோம்; அசினை தமிழ் சினிமாக்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் கோஷமிடப்பட்டன. இந்நிலையில் அசின் நடித்த காவலன் படம் எந்தவித எதிர்ப்பும் இன்றி திரைக்கு வந்து, வெற்றியையும் பெற்று விட்டது.


 இன்னொருபுறம் நடிகர் விஜய் இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சமீபத்தில் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இதையடுத்து விஜய் நடித்த காவலன் படத்தை இலங்கையில் ‌தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் அப்படத்தில் அசின் நடித்திருப்பதால் அந்த முடிவை கைவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் கடந்த வாரம் நாகபட்டினம் பகுதியில் நடத்திய கூட்டத்தில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டால் இலங்கையை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என அவர் தெரிவித்தது இலங்கை அரசை கடும் சினமடைய வைத்துள்ளது.

 உடனடியாகவே விஜய் நடித்த காவலன் படத்தை இலங்கையில் தடை செய்யுமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு, அரசு அதிகாரிகளை பணித்திருந்தது. ஆனால் விஜய் படத்தை தடை செய்வதற்கு முன்னர், நாம் அதில் நடித்த கேரளா நடிகை அசின் தொடர்பில் கவனம் செலுத்தினோம். அசின் இலங்கை அரசுக்கு நெருக்கமானவர். பல எதிர்ப்புக்களின் மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்த அசின் தென்னிந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்புக்களை மிகவும் சிறப்பாக முறியடித்திருந்தார்.

மகிந்தாவின் மனைவி சிராந்தி ராஜபக்சாவுடன் யாழ்ப்பாணத்திற்கும் அசின் சென்றிருந்தார்.

விஜய் உண்மையில் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் தனது காவலன் படத்தில் அசினை நடிக்க வைத்திருக்கமாட்டார். இவற்றை கருத்தில் கொண்ட நாம் பின்னர் காவலன் படத்தை தடைசெய்யும் எண்ணத்தை கைவிட்டோம், என்று கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. எல்லாருமே குள்ள நரிங்கதான்....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...