Saturday, February 12, 2011

சில்க் ஸ்மிதா படத்தில் ரஜினி கதாபாத்திரம்


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினியாக நடிக்கிறார் பாலிவுட்டின் பிரபல நடிகர் நஸ்ருதீன் ஷா.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் எண்பதுகளில் கவர்ச்சிப் புயலாக வந்தவர் சில்க். வெறும் கவர்ச்தசி நடிகை என்பதையும் தாண்டி, ஒரு அழுத்தமான நடிகையாகவும் தன்னை நிரூபித்தவர். இன்றுவரை அவருக்கு நிகரான நடிகையைப் பார்ப்பது அரிதாகவே உள்ளது.

சில்க் ஸ்மிதா சென்னை வானொலிக்கு அளித்த பேட்டியில் (அவரது ஒரே மீடியா பேட்டி) தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று குறிப்பிட்டது ஒருவரைத்தான். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி படங்களிலும் தொடர்ந்து சில்க் ஸ்மிதா இடம்பெற்றிருந்தார். அன்றைய காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான ரஜினி படங்களில் 
 அவர் இடம்பெற்றிருந்தார். மூன்று முகம், பாயும் புலி, தங்க மகன், முரட்டுக் காளை, அடுத்தவாரிசு, தாய் வீடு, துடிக்கும் கரங்கள் போன்ற பல ரஜினி படங்களில் சில்க் ஸ்மிதாவின் நடிப்பு பேசப்பட்டன. அடுத்த வாரிசு படத்தில் ரஜினியின் ஜோடிகளில் ஒருவர் சில்க்தான்.

1996-ல் சாலிகிராமத்தில் தனது குடியிருப்பில் மர்மமாக இறந்து கிடந்தார் சில்க் ஸ்மிதா.

காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை இந்தியில் சினிமா படமாக தயாராகிறது. மிலன் லுத்ரியா இயக்குகிறார். ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தி டர்ட்டி பிக்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது!

சில்க் ஸ்மிதாவின் உறவினர்கள் நண்பர்களிடம் கேட்டும் அவர் வாழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்தும் திரைக்கதை உருவாக்கியுள்ளார். சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.

சில்க் ஸ்மிதாவுக்குப் பிடித்த நடிகரான ரஜினி வேடத்தில் நடிக்க நஸ்ருதீன்ஷாவை இயக்குனர் தேர்வு செய்துள்ளார்.

இதுபற்றி நஸ்ருதீன் கூறும்போது, ரஜினி, சில்க் ஸ்மிதா நடித்த படங்களின் சி.டி.யை இயக்குனர் எனக்கு அனுப்பி வைத்தார். ரஜினி நடித்த எந்திரன் படத்தையும் பார்க்க உள்ளேன். அதன் பிறகு ரஜினி போல் நடிப்பேன் என்றார்.

ரஜினியைப் போன்ற உடைகள் நஸ்ருதீனுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரஜினியின் மேனரிஸங்கள் குறித்த காட்சிகளின் தொகுப்பும் அவருக்குத் தரப்பட்டுள்ளன.

இந்தப் படம் வெளியானால் பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பலாம் என பேசப்படுகிறது.

4 comments:

  1. சனிக்கிழமை.. என் பிளாக் ஈ - அடிக்குதா.. அதனால்தான் பழைய பதிவை தூசி தட்டினேன்..

    ReplyDelete
  2. இதுக்குகூட ஓட்டுபோன்னுமா?

    ReplyDelete
  3. Hi i am JBD From JBD

    Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


    Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...