Wednesday, May 11, 2011

அழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு திரையிடல்



இயக்குனர் சுசீந்தரனின் இயக்கத்தில் நாளை (12-ம் தேதி) வெளியாக இருக்கும் அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ் எழுத்தாளர்களுக்கென பிரத்தியேகமாக இன்று திரையிடப்பட்டது.

சிறுகதை

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சிறுகதை அழகர்சாமியின் குதிரை. அக்கதை பத்திரிகையில் வெளியான போதே பல்வேறு தரப்பின் பாராட்டுக்களைப் பெற்றது. தேனி அருகேயுள்ள சிறு கிராமத்தில் தான் வளர்க்கும் குதிரையின் மீது அளப்பரிய பிரியம் கொண்ட அப்பாவி கிராமத்தானின் கதையே அது.

திரைப்படம் ஆனது

சுசீந்தரனின் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றினார் பாஸ்கர் சக்தி. இருபடங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாக்க முடிவு செய்தனர்.

சிறப்பு திரையிடல்

அப்பாக்குட்டி, ஐஸ்வர்யா இவர்களோடு ஒரு குட்டிக்குதிரையும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கும் இப்படத்தின் சிறப்பு திரையிடல் இன்று சத்தியம் தியேட்டர் 6 டிகிரி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களுக்கென் ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடலில் பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், யுகபாரதி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...