Friday, September 14, 2018

சீமராஜா - சினிமா விமர்சனம்



சிவகார்த்திகேயன், சூரி, இமான், பொன்ராம் வெற்றிக் கூட்டணியின் மூன்றாவது படைப்பாக வெளிவந்திருக்கும் படம் சீமராஜா...

காதல், காமெடி, சண்டை, பன்ச் டயலாக் என கலந்து கட்டி இருந்தாலும், சம்மு வரும் காட்சிகள் மனதை கொள்ளையடிக்கிறது.

சூரி வழக்கம் போல சிவாவுக்கு அல்லக்கையாக வந்தாலும், அவ்வப்போது பெண்கள் ஆடியன்ஸை கிச்சுகிச்சு மூட்டுகிறார். அதுவும், அந்த சிறுத்தை காமெடி தியேட்டரையே கலகலப்பாக்குகிறது. 

சிம்ரன் இடை'யிடையே வந்து கத்துகிறார். ரசிக்க முடியவில்லை. ப்ளாஸ்பேக் ராஜாவாக சிவா உடலளவில் கம்பீரமாக இருந்தாலும், முகத்தில் கம்பீரமற்று குறும்பு ராஜாவாக தெரிகிறார். 

ப்ளாஸ்பேக்கில் ராஜா மனைவியாக கீர்த்தி சுரேஷ் சில நிமிடங்களே வந்தாலும் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடிக்கிறார்.



சமந்தா, மிக அழகாக இருக்கிறார். கம்பு சுற்றும் காட்சிகளில் க்ளாப் வாங்குகிறார். இமான் இசை வழக்கம் போல முனுமுனுக்க வைக்கிறது. 

VVS, ரஜினிமுருகன் படங்களில் காதலையும், காமெடியையும் மட்டுமே நம்பி சக்ஸ்ஸ் ஆக்கிய இந்த கூட்டணி கிராமத்து மண் பங்கீடு பிரச்சனை எனும் கதையை காதலுடனும், காமெடியுடனும், சற்று விறுவிறுப்பைக் குறைத்து படைத்திருப்பதால் ருசி இல்லாத விருந்தாக வந்திருக்கிறார் சீமராஜா.
.
சிவா வழக்கம் போல, பெண் ரசிகைகளை கவர்கிறார். இதுவரை வந்த பெரும்பாலான கருத்துக்கள் படம் மொக்கை என்றே வந்திருந்தாலும், பெண்களின் விருப்பமாக சில நாட்களுக்கு சீமராஜா இருப்பார். அதற்கு சமந்தாவும், சூரியும் துணையிருப்பார்கள்.

முகநூலில் தமிழ்வாசி பிரகாஷ்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...