Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

Monday, December 23, 2013

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை


ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகிவிட்டது. 

அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை. 

இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப் பெருமைப்படுத்துவதாகவே இருக்கும். இப்போது அதிகமாக உலாவரும் ஒரு ரஜினி துணுக்கு இது.



ஒரு முறை அமிதாப் ரஜினியிடம் கேட்டார்... 'ரஜினி, உலகில் உங்களுக்குத் தெரியாத ஆளே கிடையாது என்கிறார்களே.. நிஜமா...' 

'எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க... சரி, ஏதாவதொரு ஒரு ஆள் பேர் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சவரான்னு பார்ப்போம்..." 

அமிதாப் கொஞ்சம் கடுப்புடன், "டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?" 'ஓ! என் பழைய நண்பராயிற்றே. வாங்க நேர்லயே போய்ப் பார்க்கலாம்...' என்றார் ரஜினி. 

இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத் தட்டினர். 
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார், 

'தலைவா, வாங்க வாங்க. நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்'. அமிதாப் அசந்து போனார். ஆனாலும் சந்தேகம். 

'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா ரஜினி?' என்று 

ரஜினி சொன்னார் "நன்றாகத் தெரியும்". இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். 

ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார், "என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி. ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !" அமிதாப் ஆடிப் போனார். 

இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்.. "போப்பைத் தெரியுமா?" ரஜினி சொன்னார்... "போப்பை நன்றாகத் தெரியும். பாபாஜி வழியில் தொடர்புண்டு," என்றார். 

இருவரும் வாடிகன் சென்றனர். போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. 

ரஜினி சொன்னார். "அமிதாப்ஜி, இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது. நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன், பாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். 

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி. திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. 

"என்ன ஆச்சு?" ரஜினி கேட்டார். அமிதாப் சொன்னார். "ஒப்புக்கிறேன் ரஜினி.. உலக சூப்பர் ஸ்டார் நீங்க. நீங்க போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. 

நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற ஒரு வெள்ளைக்காரர் கேட்டார்,

"பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!"

போப்பாண்டவரை தெரியாது.. ஆனால் ரஜினியை தெரியுமா..?



Tuesday, November 12, 2013

நீங்கள் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின்



1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு, குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும்.இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப் போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்.  
Thanks : Tamil News

Monday, October 28, 2013

இந்த புகைப்பிடித்தால் முதுமை வராது...! நீதிமன்றம் சந்தித்த விசித்திர வழக்கு




ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..


அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,

ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

2 உங்களுக்கு முதுமையே வராது

3 பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்காடினார்.

நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் .

"இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்

அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"

"திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்"

"ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்"

2 வது என்ன சொன்னேன்

முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?

3 வது என்னசொன்னேன்

பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நட்ச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது"

Saturday, October 26, 2013

அடக்கடவுளே...! நம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க...


ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். 

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது. 

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு, 

"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார். 

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்… 

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார். 

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம். 

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், 

"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

Wednesday, October 16, 2013

இதெல்லாம் நம்புகிறமாதிரி இல்லையே


உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள். அதாவது அவர்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்கள்.

1)ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

2)சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

3)கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

4)எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

5)என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

6) படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

7) ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

8) சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

9)அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

10)தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

*********************************

"எந்த மனிதனும் தன் மரியாதைக்குக் கேடு நேரும் வகையில் நன்றியுடன் இருக்க முடியாது. எந்த நாடும் தன் சுதந்திரத்திற்குக் கேடு நேரும் வரையில் நன்றியுடன் இருக்க முடியாது!"

- - தோழர் சே குவேரா


Wednesday, October 2, 2013

சிரிங்க! கூடவேகொஞ்சம் சிந்தியுங்க!!


ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...
அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு. 

காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு,  அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க. 

அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.

என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்... (ரசித்தது)

Thursday, September 26, 2013

சும்மா சிரிச்சிட்டு போங்க...


யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வர சூப்பர் ஐடியா!

4 மணிக்கு எழுந்திரிச்சு பிரஸ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் குளிங்க. 

5 மணி ஆயிடும் அம்மாவ எழுப்பினா காபியோ டீயோ தருவாங்க. 
6 மணிக்கு கிளம்பி 6.30க்கு யுனிவர்சிட்டி போயிடுங்க. 

நீங்கதான் 
யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட


*********************************************************************************


ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.

என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்

எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்


********************************************************************************

திருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர். கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார். 

அக்கம் பக்கம் நின்றவர்கள் நீ ஏன் அழுகிறாய்?... என்று வினாவினார்கள். அதற்கு அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று. 

அப்போ அருகில் நின்ற கணவன் சொன்னார்!... ஏன் கவலைப்பட்டு அழுகிறாய்?... வெகு விரைவில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்!...... 

***************************************************************************

இது என்னங்க வரவேற்பு பேனர்ல ’கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக’ன்னு வித்தியாசமா எழுதியிருக்காங்க ?'

'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் !  (Re-Post)

Thursday, September 19, 2013

பரவசப்படுத்தும் சிரிப்பு மிட்டாய்




பக்கத்து வீட்டுல ஒரே சத்தம்.

என்ன? ஏதுன்னு விசாரிக்கிறதுக்காக ஓடினேன்.

அந்த வீட்டுக்காரர் சமையலறையை நோக்கி நின்றுகொண்டு படு பயங்கரமாகக் கத்திக்கொண்டிருந்தார்.

"என்ன‌ சார் ... யாரை திட்டுறீங்க‌?" கேட்டேன் நான்.


"நீங்க போங்க சார் ... நான் என் மனைவியைத்தான் திட்டிகிட்டிருக்கேன்"


அவங்க ஊருக்கு போயிருக்காங்கன்னு சொன்னீங்க...

அதான் தைரியா திட்டிகிட்டு இருக்கேன்...!

+++********************************+++


மதிய நேரம்.

அலுவலகத்தில் சக நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தி கொண்டிருந்தேன்...

அப்போது ஒரு நண்பரிடம்,

"சார் ... உங்க கேரியர்ல மறக்க முடியாதது எது ?" என்று கேட்டேன் நான்.

அதற்கு அவர் சொன்ன பதில்,

"போனா மாசம் ஒரு நாள் என் பொண்டாட்டி எனக்கு கொடுத்தனுப்பிய பழைய சாதமும், பச்சை மிளகாவும் தான் ... உங்களுக்கும் ஒரு நாள் எடுத்து வரவா?"



+++********************************+++



நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?

ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.

அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,

"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"

கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,

"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன்.

அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,

"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். .."



+++********************************+++



டாக்டர் : தினமும் காலையில வெறும் வயித்துல அரை மணி நேரம் நடந்தா உங்க வெயிட் குறைஞ்சிடும்.

பேஷண்ட் : யார் வயித்துல டாக்டர் நடக்கணும்?


டாக்டர் எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு...


டாக்டர் கிட்ட சொல்றதுக்கு என்னம்மா கூச்சம், தயங்காம சொல்லுங்க...

அட நீங்க வேற டாக்டர், எனக்கு பல்லு கூச்சமா இருக்குனு சொன்னே


+++********************************+++


வீட்டு ஓனர் : வாடகையை எப்ப சார் தருவீங்க?

குடியிருப்பவர் : சம்பளம் வாங்கினதும் தந்துடுறேன்ங்க...

வீட்டு ஓனர் : அப்படியா... அப்போ உங்களுக்கு எப்போ சம்பளம் போடுவாங்க...?

குடியிருப்பவர் : என்ன சார், சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க. வேலை கிடச்சா தானே சம்பளம் கிடைக்கும்..


+++********************************+++
ரசித்தது

Thursday, August 22, 2013

தலைவா கதை தயாரித்தது எப்படி..! புதிய தகவல்...!


தலைவா பட்டர் மசால் 

செஃப் .விஜய் 

நாயகன் - ஒரு கிலோ 

சர்க்கார் - அரை கிலோ 

பாம்பே -1 துண்டு 

தேவர்மகன் - 6 பல் 

இந்திரா - ஒரு தேக்கரண்டி 

பில்லா - அரை கப் 

புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன் 

பொல்லாதவன் - தேவையான அளவு 

கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் 
இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும். 

இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். 

பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். 

நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். 

நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். 

நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். 

தலைவா ரெடி...

எப்பூடி.... பேஸ்புக் அலம்பல்கள்...


Tuesday, August 13, 2013

தினந்தோரும் பேஸ்புக்கில் இதுதாங்க நடக்குது...


முகநூலில் நம் அன்றாடப் பணிகள்...

1. பதிவிடுவது

2.நமக்குப் பிடித்த பதிவிற்கு லைக் இடுவது.

3. குறிப்பிடத்தக்க பதிவுகளுக்கு கமெண்ட் இடுவது

4. நம் பதிவிற்கு லைக் இடும் நண்பர்களின் பதிவிற்கு லைக் இடுவது.

5. நம் பதிவில் கமெண்டுக்கு பதில் மற்றும் லைக் இடுவது.

6.நோடிபிகேசன் செக் செய்வது

7. பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது

8. இன்பாக்ஸ் கேள்விகளுக்கு பதில் சொல்வது

9. தேவையற்ற அநாகரீக நட்புகளை களை எடுப்பது.

10. பேஜ் களை பார்வையிடுவது.

11. க்ரூப்களை மைந்தின் பண்ணுவது

12. க்ரூப் சேட்டை சமாளிப்பது.

13.அக்கம் பக்கம் நடக்கும் பஞ்சயத்துகளுக்கு தீர்ப்பு எழுதுவது

14. கோப போராளி நண்பர்களை சமாதனம் செய்வது.

15. க்ரூபில் மாட்டிக் கொள்ளும் நண்பனைக் காப்பாற்றுவது

## யே யப்பா எவ்வளவு உழைப்பு.
இவ்வளவும் அந்த ஒற்றை லைக் தரும் சந்தோசத்திற்காகவா?

இதுவும் முகநூலில் பிடித்ததுதான்...!

Monday, August 12, 2013

இதுதாங்க மனைவி அகராதி...!


உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்

மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க

மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை

மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்

மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.

மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்

மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்

மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.

மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு

மனைவி : சரி
அர்த்தம் : நோ..

மனைவி : நோ
அர்த்தம் : சரி

மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க

மனைவி ; ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு..

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்.

ரசித்தது

Saturday, July 27, 2013

ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..!


ஒரு ஊர்ல.. ஒரு வெங்காயம், தக்காளி, ice cream அப்படின்னு மூன்று நண்பர்கள் இருந்தாங்களாம்.

ஒரு நாள் மூவரும் கடற்கரைக்குப் போனாங்களாம். அப்ப சொல்ல சொல்லக் கேக்காம ice cream, தண்ணீருக்குப் போய் கரைஞ்சிப் போச்சாம்.

தக்காளியும் வெங்காயமும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வரும் வழியில் லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.

உடனே வெங்காயம் அழுதுக்கிட்டே கடவுள் கிட்ட வேண்டிக்கிச்சாம். " ice cream செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்போ தக்காளி செத்தப்ப நான் அழுதேன்.. ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா? ன்னு கேட்டுச்சாம். 

அதற்கு கடவுள், "சரி இனிமே நீ சாகும் போது பக்கத்துல இருக்குற எல்லாருமே அழுவாங்க" ன்னு சொன்னாராம். 

அதனால் தான் வெங்காயம் நறுக்கும்போதெல்லாம் நாம் அழறோம்:)))

***********************

ஒரு அதிகாரி, 


"நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது" என்பதில் குறிக்கோளாக இருந்தார். 


அதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் முக சவரம் செய்துகொண்டே குளிப்பார். கழிவறையில் பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்ச்சி பண்ணிக்கொண்டே, வானொலியில் பக்திப் பாடல்கள் கேட்பார். 


இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்தையும் விரயமாக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது. 


மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கை கழுவ வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது செய்திதாளில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. 


கண்ணின் விழி கரண்டியோடு வந்துவிட்டது. 


இப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். 


மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருகிறார். பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார். 


நீதி : *நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது*.

***********************



எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.

பின்னே என்னங்க ... 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து "வாக்குவம் கிளீனர்" வாங்கிக் கொடுத்த பிறகும், வாரத்துக்கு ஒரு விளக்குமாறு வாங்கிக்கிறா.

"உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்" என்று கோபத்தில் கத்தினேன் நான்.

அவள் அமைதியாகச் சொன்னாள்,

"செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??"

Thursday, July 25, 2013

இனிமேல் நீங்க அவசரப்படுவீங்களா..?


“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.

“என்ன சங்கதி’ என்றார்.

“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை’ என்றான் வந்தவன்.

இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.“ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு ஒரே ரூட் தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய்தான் இருந்தது. கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான். “ஏன் டிக்கெட் வேண்டாம்’ என்று கேட்க கண்டக்டருக்குப் பயம். தள்ளி வந்து விட்டார்.

மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது. கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

அவன் பலசாலியாக இருப்பதால்தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார். தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார். ஆறு மாதங்கள் இப்படியே போனது. கண்டக்டரின் உடல் வலுவானது. பயம் கொஞ்சம் போனது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டுவிட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.

இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், “நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான். கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வர வழைத்துக் கொண்டு “ஏன் தேவையில்லை?’ என்று விறைப்பாய் கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில், “நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்’.’

இந்தக் கதையைச் சொன்னதும் வந்தவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து மிரளும் தன்னுடைய குணம் புரிந்தது.  அப்போது குரு அவனுக்கு சொன்ன  ஒரு பழமொழி:

பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

Saturday, June 29, 2013

இந்த பெண்ணுங்க இப்படித்தாங்க... எப்படி மாறிடுறாங்க பாருங்க...!




திருமணமான புதியதில்
==================
=
=
=
=
=
=
=

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா?
இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
==================
=
=
=
=
=
=
=

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=================
=
=
=
=
=

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும். யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.
இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட 
போது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

நன்றி: முகநூலில் படித்தது...

Sunday, June 2, 2013

கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் ஆண்கள் இப்படியாயிடறாங்க...!




ஒரு டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க....

"திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது அது பெரிசு தான் ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது" 

உடனே ஒரு பொண்ணு கேட்டுச்சு,"இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே"

டீச்சருக்கு கடுப்பு திரும்பவும் சொன்னாங்க,

"இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது" 

அந்தப்பொண்ணு,

"சரி ... நான் சொர்க்கத்துக்கு போனா ஜான் கிட்ட கேப்பேன்" 

டீச்சர்,

"ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...." 

" நீங்க கேளுங்க"



*********************************



ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.

அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. 

''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

எலி சொல்லியது,

"சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.." 


*************************************


சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?

இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

******************************************

இப்படிக்கு உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்

Saturday, May 25, 2013

“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”


பைத்தியக்கார ஆஸ்பத்திரியை ஒரு தரம் பார்க்கணும்ன்னு என் நண்பர் கிட்டே சொன்னேன்.

“என்னிக்கோ ஒரு நாள் போகத்தான் போறே, இன்னிக்கே போறதிலே தப்பில்லே” ன்னு கூட்டிக்கிட்டுப் போனாரு.

“ஓரளவு குணமானவங்களை பார்த்தா போதும். ரீசன்ட்டா அட்மிட் ஆனவங்கல்லாம் வேண்டாம்”

“அதிலே கூட ரிஸ்க் இருக்கு”

“அதிலே என்ன ரிஸ்க்கு?”

“வின்ஸ்ட்டன் சர்ச்சிலொட பையன் உன் மாதிரிதான் குணமானவங்களை பார்க்கப் போனாராம். ஒருத்தன் அவரைப் பார்த்து நீ யாருன்னு கேட்டானாம். இவர், நான்தான் சர்ச்சிலொட பையன்னாராம். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”

“என்ன சொன்னான்?”

“உனக்கு சீக்கிரம் சரியாய்டும். நான் வர்றப்போ சர்ச்சிலே நாந்தான்னு சொல்லிக்கிட்டு வந்தேன்னானாம்.”

“ஐயய்யோ, என்னை யாராவது நீ யாருன்னு கேட்டா என்ன பண்றது?”

“உனக்கந்த கவலை இல்லே. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க”

“ஏன்?”

“எப்டி இருந்தாலும் ரொம்ப நாள் கூட இருக்கப் போறான், மெதுவா கேட்டுக்கலாம்ன்னுதான்”

நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.

“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

அடப்பாவமேன்னு அடுத்த ஆளைக் கேட்டோம்.

“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

ஓ… ஒரே மாதிரி ரெண்டு கேசா!

அடுத்த ஆளைக் கேட்டோம்.

“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

என்னடா இது!

மூணு நாலு அஞ்சுன்னு எல்லாரும் இதே பதிலைச் சொல்ல எங்களுக்கு அலுப்பாயிடிச்சு.

ஆறாவது ஆளும்

“விமலாவைக் காதலிச்சேன்…..” ன்னு ஆரம்பிச்சான்.

நான் வெறுத்துப் போய் “காதல் தோல்வியா?” ன்னு கேட்டேன்.

“இல்லே.. வெற்றி. அவளைக் கல்யாணம் பண்ணி கிட்டேன். அதான் பைத்தியமா ஆயிட்டேன்” ன்னான்.

என் நண்பர் என்னைப் பார்த்து சிரிச்சி “இதுலேர்ந்து நாம அறிகிற நீதி என்ன?” ன்னார்.

“தெரியலையே?”

“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”

சொன்னது: 
பட்டி மன்றப் பேச்சாளர் திரு.அறிவொளி 

Thursday, May 23, 2013

சும்மா நச்சுன்னு இருக்கு...! சூப்பர் மேட்டர் உங்களுக்காக


துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. 

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...

''அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!''

ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி.

அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''
***********************************


வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.

அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."

Monday, May 20, 2013

தைரியம் இருந்தால் இதை தமிழில் சொல்லித்தான் பாருங்களேன் ..?


தமிழில் சொல்லித்தான் பாருங்களேன்.............


சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு


இப்படி தமிழில் உணவகங்களில் கேட்டால் ஏதெ நம்மை வைகிறான் என்று பரிமாறுபவர் அடிக்க வந்தாலும் ஆச்சரியம் இல்லை....

தூய தமிழ் இன்னும் படித்தவர்களையே சென்றடையவில்லை...  பாமரனை சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ...

Friday, May 10, 2013

இது உலகமகா மொக்கடா சாமி....!


2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.



நாயர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது. 


கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி. 


ஐந்து ரூபாய் 


ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி. 


கடைக்காரருக்கு ஒரு சந்தேகம். கோழி தானே முட்டைபோட முடியுமே இது எதற்காக நம் கடையில் முட்டை வாங்குகிறது? ஒரு முட்டையை எடுத்து கோழியிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “நீயே முட்டைபோட முடியுமே பின் எதற்காகக் கடையில் வாங்குகிறாய்?” 


கோழி எதுவுமே பேசவில்லை. 


கடைக்காரர் திரும்பவும் விடாமல் வற்புறுத்திக் கேட்டார். 


“அது எனக்கும் என் கணவருக்கும் உண்டான ரகசியம், சொல்லக்கூடாது” என்றது கோழி. 


கடைக்காரரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை, திரும்பவும் கேட்டார், “அப்படியென்ன ரகசியம்?’ 


“என் புருசன் சேவல்தான் சொன்னாரு அஞ்சு ரூபா முட்டைக்காக எதுக்கு உன் அழகிய உடம்பை கெடுத்துக்கிறேனு? அதான் முட்டையை கடைல வாங்கிட்டு போறேன்!”

# படித்ததில் பிடித்தது #

Monday, May 6, 2013

பணம் கொடுத்தால் சொர்க்கம்... அதனால் இப்போதே தயாராகுங்கள்..




ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.


ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு  
சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. 
மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. 



‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’

‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!



நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...