Tuesday, August 13, 2013

நீதிக்கே ஓய்வா...? நாம என்ன வெள்ளைக்காரனா...?


"நீதி மன்றங்களுக்கு, கோடை விடுமுறை விடப்படுவதால், தீர்ப்புகள் தாமதமாகின்றன என்ற கருத்து தவறு' என்று, நீதிபதிகள் கூறுகின்றனர். 

ஐ.ஐ.டி.,யில், பணி நியமனங்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக, ஆசிரியை ஒருவர், வழக்கு தொடர்ந்தார். 1997-98 கால கட்டத்தில், இந்த வழக்கு ஆரம்பமானது. 2013 ஜூலை, 25ம் தேதி, இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வழக்கு தொடரப்பட்ட நாள் முதல், இன்றைய தினம் வரை நடைபெற்ற, ஐ.ஐ.டி., பணி நியமனங்களை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று. ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இது மிகச் சரியானதே. 

ஆனால், வழக்குத் தொடுத்த ஆசிரியை, நியாயம் கிடைக்காமல், பணி ஓய்வு பெற்று விட்டார். தவறான வழிகளில், பணி நியமனம் பெற்ற பலர், சம்பளம், சலுகைகள் அனுபவித்து, ஓய்வு பெற்று விட்டனர். 



ஆனால், வழக்கு தொடர்ந்தவரோ பாதிக்கப்பட்டு உள்ளார். "தாமதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு, மறுக்கப்பட்ட தீர்ப்புக்குச் சமம்!' ஆங்கிலேயர்களால், கோடை நாட்களில், பணி செய்ய இயலாது. நம் தட்பவெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, அவர்கள், நம்மை ஆளும் போது, கோடை விடுமுறையை விரும்பினர். 

குழந்தைகளால், கோடையில், பள்ளிக்குச் செல்ல முடியாது. எனவே, கோடை விடுமுறை அவசியம். மற்ற அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும், பணி செய்து கொண்டு தானே இருக்கின்றனர். 

எனவே, காலை, 10:30 மணிக்கு வந்து, 1:30 மணி வரையும்; 2:30க்கு வந்து, மாலை, 5:30 வரையும் பணி செய்யும், இந்திய நீதிபதிகளுக்கு, கோடை விடுமுறை தேவையில்லை. தேவைப்படுபவர்கள், விடுப்பு எடுத்துக் கொள்ளலாமே. 

தற்போதைய பள்ளி, கல்லூரிகள், இரண்டு, "ஷிப்டு'களில் செயல்படுகின்றன. அதுபோல, இரண்டு அல்லது மூன்று, "ஷிப்ட்'டுகளில், நீதிமன்றங்கள் வேலை செய்து, தேங்கியுள்ள வழக்குகளை, உடனடியாக முடித்து, தீர்ப்புகளை வழங்க வேண்டும். இதுவே, மக்கள் எதிர்பார்ப்பு.

1 comment:

  1. சரியா சொன்னீங்க. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைமுறையில் இருந்த இந்த வழக்கத்தை இன்னும் தொடர்வது சரியல்ல. ஆனால் பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்பதுபோல் இந்த விஷயத்தில் எந்த அரசு வந்தாலும் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...