Monday, March 21, 2011

குழப்பத்தில் தேமுதிக-ஆபீஸை பூட்டிக் கொண்டு ஆலோசனை


41 தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டோம் என்று தேமுதிக கூறிய பின்னரும் கூட அதன் தொகுதிகளை கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் அக்கட்சியினர் பெரும் குழப்பமடைந்துள்ளனர். இன்றாவது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா என்று கொட்டாவி விட்டபடி அனைவரும் காத்துள்ளனர்.

மகா குழப்பத்தில் தொடர்ந்து நடை போட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி. அதிமுகவின் போக்கால் வெறுத்துப் போன மதிமுக கூட்டணியே வேண்டாம் என்று போய் விட்டது. இன்னொரு முக்கியக் கட்சியான தேமுதிகவோ இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது.

இக்கட்சிக் குழுவினர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஜெயலலிதாவுடன், 2 நாட்கள் விடிய விடிய பல மணி நேரம் நீண்ட ஆலோசனை நடத்தி 41 தொகுதிகளையும் அடையாளம் கண்டனர். நேற்றே விஜயகாந்த் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதிகாலை வரை ஒரு சத்தத்தையும் காணோம்.

நேற்று முழுவதும் தேமுதிக தலைமை அலுவலகம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு படு இறுக்கமாக காணப்பட்டது தேமுதிக அலுவலகம்.

தாங்கள் கேட்ட சில முக்கியத் தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது. இதனால்தான் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவிப்பதில் விஜயகாந்த் தாமதம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இன்று தேமுதிக பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றாவது பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகமும் கூடவே நிலவுகிறது.
 
 

4 comments:

  1. தே.மு.தி.க. வுக்கு கேட்ட தொகுதி கிடைக்குதோ இல்லையோ ஆனா எனக்கு கேட்காமலே வடை கிடைச்சிருச்சு.

    ReplyDelete
  2. முடிஞ்சா அப்பிடியே எனக்கும் ஒரு சீட் தர சொல்லுங்கைய்யா....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...