Saturday, June 25, 2011

பிள்ளையார் தெரு கடைசி வீடு... - திரை விமர்சனம்



ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவாவின் அண்ணன், இவர் ஜித்தன் மற்றும் மதுரை வீரன் படத்தின் மூலம் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள"பிள்ளையார் தெரு கடைசி வீடு" படத்தை இயக்குனர் திருமலை கிஷோர் அவர்கள், ஒரு கிராம கதையை மையமாகவைத்து, இளகிய மனம் படைத்த ஒரு இளைஞன், அவரது அன்பான குடும்பம், நண்பர்கள் மற்றும் அவரது காதலை சேர்த்து குதூகலமிக்க ஒரு குடும்ப பாங்கான திரைபடத்தை இயக்கியுள்ளார்.

கணேஷாக வரும் (ஜித்தன் ரமேஷ்) ஒரு பெரிய பண்ணையாரின் மகனாக வருகிறார். அவருடைய முழுபொழுதுபோக்கு மற்றும் தலையாய பொறுப்பாக அவர் கருதுவது தனது கிராமத்து நண்பர்களுடன் குடித்து பொழுதைகழிப்பதும், ஜல்சா படங்களுக்கு செல்வது மற்றும் கிராமத்தினரிடையே சிறு சிறு கலகங்களை உண்டுபண்ணுவதையே தனது வாழ்கையின் லட்சியமாக கருதுகிறார்.

ஒரு அதிகாலையில், இவர் ஒரு இடத்திற்கு செல்ல வேகமாக முற்படும் பொழுது சந்தியாவை (சஞ்சிதபடுகோனே) இடித்து விடுகிறார்.முதல் பார்வையிலேயே காதல் வயபடுகிறார். மேலும் கணேஷுக்கு சந்தியா தனது தங்கையின் தோழி என்றும் அவர் நகரத்தில் இருந்து தனது வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் தனது காதல் கைகூடும் என்று நம்புகிறார்.
 
மேலும் கணேஷ் தன்னை தானே, ஒரு வழிகாட்டியாக கூறிக்கொண்டு சந்தியாவை கிராமத்தின் நாலாபுறமும்அழைத்துச்சென்று மகிழ்ச்சி அடைகிறார் . கணேஷின் மாமாவாக வரும் இளவரசு ஒரு குடிகாராகவும், மிகுந்த கடனாளியாகவும் வருகிறார். அவர் தொடர்ந்து கணேஷின் அத்தை மற்றும் மகள் வள்ளி (சுஹாசினி) இருவரையும் காரணமில்லாமல் திட்டிக்கொண்டு இருக்கிறார். இவர்கள் கணேஷின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷின் மீதுள்ள மரியாதை நிமித்தமாக இதை பொறுத்து கொள்கிறார். குடிகார மாமா கணேஷின் தந்தையையும் விட்டுவைக்க வில்லை, அவரையும் காரணமில்லாமல் வசைபாடுகிறார். கணேஷின் அத்தை குடும்பம், கணேஷுக்கும் அவரது தந்தைக்கும் உறுதுணையாக உள்ளார்கள். சிறிது நாட்களுக்குள், சந்தியாவும் கணேஷின் மீது கொண்டுள்ள காதலை உணர்கிறார், ஆனால் தன்னுடைய காதலை வெளிபடுத்தாமல் தக்க சந்தர்பத்திற்காக காத்திருக்கிறார்.

கதை இவ்வாறாக நகர்ந்து கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத விதமாக கணேஷின் மாமா தனது மகளை ஒரு உள்ளூர் ரௌடிக்கு திருமணம் செய்துவைக்க பார்க்கிறார். இதற்கு பிரதிபலனாக தனது கடன் அனைத்தையும் முழுமையாக தீர்த்து விடலாம் என்று எண்ணுகிறார். இதை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியாத கணேஷின் அத்தையும் மகள் வள்ளியும், கணேஷின் தந்தை உதவியை நாடுகிறார்கள்.

குடிகார அப்பனிடமிருந்து வள்ளியை காப்பாற்ற இருக்கும் ஒரே நிரந்தர தீர்வாக கணேஷின் குடும்பம் நினைப்பது,கணேஷுக்கும் வள்ளிக்கும் மணம் முடிப்பது என்று முடிவு செய்கிறார்கள். இந்த முடிவு, கணேஷ் இல்லாத நேரத்தில் எடுக்கப்படுகிறது. இது தனது காதலை வெளிபடுத்த சந்தர்பத்தை எதிர்நோக்கி இருக்கும் சந்தியாவிற்கு பேரிடியாக விழுகிறது.

சந்தியா கணேஷின் மீதுள்ள காதலுக்கும் , அவரது குடும்பத்தின் மீதுள்ள பாசத்திற்கும் இடையே ஒரு போராட்டத்தை நடத்துகிறார், இதில் இவர் எதை தேர்ந்தெடுக்க போகிறார் ? மேலும் சந்தியா ஒரு எதிர்பாராத ஆச்சிரியபடதக்க முடிவு எடுக்கிறார். அந்த முடிவு என்ன? கணேஷ் சந்தியாவை மணந்தாரா இல்லை வள்ளியை மணந்தாரா? கணேஷ் உண்மையிலேயே ஒரு இளகிய மணம் படைத்தவர் தானா இல்லை அவருக்குள் ஏதேனும் ரகசியம் புதைந்து கிடைகிறதா? அது அவருடைய குடும்பத்தை உலுக்குவதாக அமையுமா? பதில்வெள்ளித்திரையில்......................

இந்த படத்தின் கதைகளம் ஏற்கனவே பல முறை பயணிக்கப்பட்ட கதையாக இருந்தாலும் இயக்குனர் திருமலைகிஷோர் தனக்கென தனி யுக்தியை கையாண்டு கதையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். இதனால் இக்கதை, இதுபோல் வந்த படங்களில் இருந்து தனித்து தருகிறது. 
 
ஜித்தன் ரமேஷுக்கு இந்த படம் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு மறு அவதாரம் என்றே கூற வேண்டும்.அவர் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. சஞ்சித படுகூனே கன்னடத்தில் ஒரு வலம் வந்திருந்தாலும்,அவருடைய கதாபாத்திரம் புதுமுகம் சுஹாசினியை ஒப்பிடும் பொழுது சற்று குறைவாகவே உள்ளது. கணேஷின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷ் இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். மாமாவாகவரும் இளவரசு, தனது இயல்பான நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

பன்னிர்செல்வத்தின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்தின் வனப்பையும், செழுமையையும் மிக சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். எ. ஆர். மோகனின் கலைத்தன்மையின் அமைந்த வீடே படத்தின் தலைப்பாக கிடைத்தது பெருமை. பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு நமது செவிகளில் ரிங்காரம் இடவில்லை. காமெடியும் சுமார் ரகம் தான்.இதனை தவிர்த்து "பிள்ளையார் தெரு கடைசி வீடு" குடும்பத்தோடு கண்டுகளிக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நடிகர்கள் : ஜித்தன் ரமேஷ், சஞ்சித 
படுகோனே, சுஹாசினி, ஜெயா பிரகாஷ், இளவரசு, சூரி, துளசி, அகிலா.
இயக்கம் : திருமலை கிஷோர்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்: ஆர். பி. சௌத்ரி.
இசை : சக்ரி
ஒளிப்பதிவு: எம். வி. பன்னிர்செல்வம்
எடிட்டிங் : வி. ஜெய் சங்கர்
எழுத்து: நாகராஜன், திருமலை கிஷோர்
சான்றிதழ் : யு .

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...