Thursday, August 18, 2011

போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய


ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால் அவர்களின் மறுவாழ்வு பற்றி மட்டுமே பேச வேண்டும். அதை விட்டுவிட்டு போர்க் குற்றம், விசாரணை என்றெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசக் கூடாது என்று இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரும் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய கூறியுள்ளார்.

ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கை போர் குறித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசியல் ஆதரவு பெறுவதற்கான முயற்சியே தவிர வேறல்ல.

தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி தான். அவை இலங்கையின் உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். இலங்கை மக்கள் மீது எங்களுக்கு யாரை விடவும் அக்கறை அதிகம் உண்டு.

ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இலங்கை தமிழர்கள் அதிகம் வசிக்கும் கடற் பரப்பிற்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை முதலில் தடுத்து நிறுத்தட்டும். இது தான் இலங்கைத் தமிழர்களுக்கு அவர் செய்ய வேண்டிய முதல் வேலை.

இலங்கைத் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது. இதற்குத் தான் ஜெயலலிதாவும் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும்.

அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் பேசுவது எந்தப் பயனையும் தராது. எப்படி இங்கே சர்வதேச விசாரணை நடத்த முடியும்?. நாங்கள் அப்படி என்ன தவறு செய்துவிட்டோம்?. பன்னாட்டு விசாரணை என்று சொல்வதே தப்பு. சில நாடுகள் மட்டுமே அதை ஆதரிக்கின்றன.

எங்களுக்கு ரஷ்யா, சீனா, இந்தியாவும் என்று நிச்சயமாக நம்புகிறேன், பாகிஸ்தான், ஏராளமான ஆப்பிரிக்க நாடுகள், வளைகுடா நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆதரவாக உள்ளன. இவர்கள் தான் உண்மையான சர்வதேச நாடுகள். ஒரு சில நாடுகள் சொல்லும் கருத்து சர்வதேச கருத்து ஆகிவிடாது.

தமிழர்களுக்கு இதற்கு மேலும் அதிகாரப் பகிர்வு எல்லாம் தர முடியாது. இப்போது உள்ள அரசியல் சட்டத்தின் கீழ் சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து வாழ முடியும். விடுதலைப் புலிகள் போய்வி்ட்ட நிலையில், அதிகாரப் பகிர்வு என்பதெல்லாம் இனி எடுபடாது.

இதற்கு மேல் எதைத் தந்துவிட முடியும்?. என்ன தர வேண்டுமோ அதைத் தந்தாகிவிட்டது.

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படம் போலியானது, அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையற்றது என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட தமிழர்களுக்குத் தடை:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வசித்து வந்த வீட்டைப் பார்வையிட வட பகுதி தமிழர்களுக்கு இலங்கை அனுமதி மறுக்க ஆரம்பித்துள்ளது.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள வீட்டில் பிரபாகரன் வசித்து வந்தார். முதலில் இந்த வீட்டைக் காண வட பகுதி தமிழர்களுக்கு அனுமதி தந்த அரசு, இப்போது அனுமதி மறுக்க ஆரம்பி்த்துள்ளது.

2 comments:

  1. அந்த ....மவன் இப்படி பேசுவதற்கு காரணம் இந்தியா தான். எம் மக்கள் பாவம் செய்தவர்கள். எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்படுகிறார்கள்.

    www.panangoor.blogspot.com

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...