Wednesday, September 21, 2011

நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை


ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள ராஜபக்சேவை, ஐநா. கூட்டத்தைத் தவிர வேறு எங்கும் போக வேண்டாம். நியூயார்க்கை விட்டு வெளியேற வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எங்கும் போக முடியாமல் நியூயார்க்கோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.


ராஜபக்சேவுக்கு இலங்கையை விட்டு எங்கும் சுதந்திரமாக இருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் மிகப் பெரிய தமிழர் எதிர்ப்பைச் சந்தித்தார்.மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் போன வேகத்தில் அவர் நாட்டுக்கு ஓடி வர வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் தற்போது ஐநா. கூட்டத்தில் பேசுவதற்காக வந்துள்ள ராஜபக்சேவை, நியூயார்க் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனராம். வெளியேறினால் போர்க்குற்ற வழக்கில் சிக்கிக் கைதாக நேரிடலாம் என்றும் அவருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.

ஐநா. கூட்டத்திற்கு வருவதற்கு மட்டும்தான் உரிய பாதுகாப்பு தர முடியும். மாறாக பிற இடங்களுக்குப் போவதாக இருந்தால் அந்தப் பாதுகாப்பு தர முடியாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நியூயார்க்கைத் தவிர வேறு எங்கும் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.

அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உடையவர் ராஜபக்சே. இதனால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்கும் அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். தற்போது அதில் அமெரிக்க அதிகாரிகள் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...