Sunday, September 18, 2011

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை! (காணொளி,படங்கள் இணைப்பு)


என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு சென்றாலும் வினோதமான மனிதப்பிறப்புக்கள் அவ்வப்போது உலகில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறான ஒரு விபரீதமான மனிதப்பிறப்பினையே நாம் இன்று பார்க்கப்போகின்றோம். கிட்டத்தட்ட இச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அமெரிக்காவின் அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும் இது தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். 

சரி அப்படி என்னதான் சம்பவம் அது? அமெரிக்காவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த பெண்குழந்தைதான் Julianna இவரது தந்தை ஒரு கடற்படை அதிகாரி. அவரது அம்மா Collins Syndrome ஒரு 
ஆசிரியை.


ஆனால் இவருக்கு பிறந்த குழந்தையோ முகம் முழுமையாக இன்றி முற்றிலும் சிதைத்த நிலையில் பிறந்துள்ளது. குழந்தையின் அசாதாரண நிலைமைய கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு சம்பவம் எனவும் தெரிவித்தனர்.


இச்சிறுமியின் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்கள் சாதாரண மனிதனின் முகத்தில் காணப்படுகின்ற சதை எழும்புகளில் இவருக்கு 40% சதவீத எழும்புகள் இல்லாமல் காணப்படுவதாக தெரிவித்தனர்.


மேலும் சிறுமியின் தாடை, பற்கள், காது, கண்கள் ,மூக்கு என அத்தனை அங்கங்களும் வினோதமான முறையில் அமைந்துள்ளது. இவரின் இந்நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் பெரிதும் கவலைப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுவரை 20 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


எனினும் சத்திர சிகிச்சை மூலம் ஒருபோதும் முற்றிலுமாக சரிசெய்ய முடியாது எனவும் வைத்தியர்கள் தெரிவித்தார்கள். குறித்த சிறுமி குழாய் மூலமாகவே சுவாசித்து வருகிறார். மற்றவர்களுடன் சிரித்து பழகி வருவதாகவும், வாசிக்க பழகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இது பற்றி கருத்து தெரிவித்த சிறுமியின் தயார் இதெல்லாம இறைவன் எமக்கு தந்த சோதனைகளே.. இது பற்றி கவலைப்பட்டாலும் இந்த உலகிற்கு நாம் ஒரு வினோதமான குழந்தையை காட்டியிருக்கிறோம் என தெரிவித்தார். இவரின் எதிர்காலம் சிறப்பாக அமைய நாமும் இறைவனை பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...