Tuesday, October 1, 2013

சர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!


உலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பெயர், ஒன்று கூட இடம்பெற­வில்லை. எப்­படி, தர­வ­ரி­சைப்­பட்­டி­யலை பட்­டியல் இடு­கின்­றனர்? 

பல்­க­லைக்­க­ழ­கத்தில் பணி­யாற்றும் ஆசி­ரி­யர்­களின் தகுதி. உல­க­ளவில் புகழ் பெற்­றுள்ள இதழ்­களில், அவர்கள் எழு­திய கட்­டுரை. அக்­கட்­­­­­டு­­­­­ரை­கள், உல­க­ளவு அறி­ஞர்­களால் அங்­கீ­கரிக்­கப்­பட்­டவை. புதிய கண்­டு­பி­டிப்­பு­களின் ஆய்வு அறிக்கை. அப்­பல்­கலைக் கழ­கத்தில் பயிலும், அன்­னிய நாட்டு மாண­வர்­களின் எண்­ணிக்கை. இந்த வகை தகு­தியை வைத்து, தர­வ­ரிசை நிர்­ண­யிக்­கப்­பட்­டன. 


சுதந்­திரம் பெற்று, 66 ஆண்டு கடந்தும், இன்னும் மர­ணப்­ப­டுக்­கை­யி­லி­ருந்து கல்வி எழ அடம்­பி­டிக்கக் ­காரணம், நாம் கல்­வியை போதிக்கக் கூடிய சரி­யான ஆசி­ரியர்­களை தேர்வு செய்­ய­வில்லை என்­பதும், நம்­ கல்வி முறை அறிவை துாண்டும் வித­மாக இல்­லாமல், பியூன் வேலைக்கு தகு­தி­யான முறையில் உள்­ளது என்­பதை மறுப்­ப­­­­­தற்கு இல்லை. 
உல­க­கெங்கும், ஒரு ஆசி­ரி­யருக்கு, 20 மாணவர் என்ற விகிதம் உள்­ளது. ஆனால், இங்கு ஆசி­ரி­ய­ருக்கு, 80 என்ற விகி­தத்தில், 1:80 நிலையில் உள்­ளது. இது தவிர பெரும்­பா­லான கல்­விக்­கூ­டங்­களில், கட்­டட அமைப்பு, விளை­யா­டுத்­திடல், சுகா­தார வசதி, குடிநீர், நுாலகம் ேபான்­றவை இல்லை.


அடிப்­படை கல்­வியை ஒழுங்­கான முறையில் அளிக்­காத ­போது, இவர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்தில் என்ன சாதித்து விட­மு­டியும்? ஆசி­ரியர் தகுதி தேர்வு, எப்­படி நடத்­தப்­ப­டு­கி­­­­­றது இங்கே? ஒருவர் அப்­பட்­டத்­திற்­கான தகுதி ­இருக்­கி­றதோ, இல்­­­­­லையோ கையில், பி.ஏ., – எம்.ஏ., – ­எம்.எஸ்சி., என்ற பட்­டத்­துடன், பி.எட்., பட்­டத்­தையும் சேர்த்து சுமக்­கிறோம்.


அரசு இப்­ப­டிப்­பட்ட பட்­டங்­களை நம்­பாமல், அரசு எதற்கும் பயன்­ப­டாத தேர்வு முறையை புகுத்தி, ‘மம்தா பானர்­ஜியின் தாயார் பெயர் என்ன?’ என்ற கேள்­விக்கு யார் சரி­யாக பதிலை அளிக்­கின்றனரோ, அவர்களையே அதி­புத்­தி­சா­லி­க­ளாக நினைத்து, அவர்­க­ளிடம் மாண­வர்­களை ஒப்­ப­டைத்தால், மாணவர் எப்­படி உருப்­ப­டுவர்? கடந்த, 1948ல் நம் நாட்டைப் போலவே, நம் எதிரி நாடான சீனா இருந்­தது. ஆனால், அந்­நாட்டில் இயங்கும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் முதல் பத்து இடத்தில் இடம் பெற்­ற­தற்கு என்ன காரணம்? அங்கு, தாய்­மொ­ழி­யா­கிய சீன மொழி­யையே ஆரம்ப கல்வியில் துவங்கி, பல்கலைக்கழகம் வரை படித்து, படிப்பின் தன்­மையை புரிந்து கொண்டு, அவர்கள் நம்மை விட எல்லா வகை­யிலும் முன்­னேற்றம் கண்­டுள்­ளனர்! 


இங்கே படிக்கும் பாடமே எது­வுமே புரி­தல்­ப­டாத மனப்­பாடம் செய்து, செய்த மனப்­பா­டத்தை அப்­ப­டியே ஒரு­வரி பிறழாமல் எழுதி விடுவர். ஒரு வாரம் கழித்து அப்­பா­டத்தை பற்றி கேட்டால் கையை பிசைந்து நிற்பர். எம்.பில்., – பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சிக் கட்­டு­ரைகள், யாரோ ஒருவர் எழுதி தர, அவ­ரிடம் ஒரு குறிப்­பிட்ட பட்­டத்­திற்கு, பணம் கை மாறி­ய­வுடன், அம்­மா­ணவன் இப்­பட்­டத்­திற்கு தகுதியானவர் என்று இங்குள்ள கீழ்தரமான நிலையை அறிந்த பிரான்ஸ் போன்ற நாடுகள், நம் நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்கள் அளிக்கும் முனைவர் பட்­டத்தை துாக்கி குப்­பையில் போட்டு விடுகின்றன. 


நம் ஆசி­ரி­யர்­களில், 100க்கு, 90 பேர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தகு­தியே இல்­லா­த­வர்கள் என்­பதை உறு­தி­யாக அறி­யலாம். மாத ஊதியம் மட்டும் இவர்­க­ளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை அரசு கொட்டி அழு­கி­றது. உடல் ஊன­முற்­ற­வனை, ராணுவ வீர­ராக தேர்வு செய்து, லடாக் பகு­தியில் பாது­காப்­பிற்கு நிறுத்­து­வது எப்­படி முட்­டாள்­த­ன­மா­னதோ, அதே போல் தான், ஆசி­ரி­ய­ராக தேர்வு செய்யும் தேர்வு முறையும். 


சீனர்கள் நமக்கு எதி­ரி­யாக இருக்­கலாம். ஆனால், அவர்­க­ளிடம், பால பாடம் படித்து, நம் கல்­வி­யா­ளர்கள் கல்­வி­மு­றையை மாற்­றினால் நல்­லது. இல்­லையேல், ஏட்டு சுரைக்காய் கறிக்கு உத­வாத நிலையில் நம் கல்­வியை சமா­தியில் அடக்கம் செய்­யலாம்.

4 comments:

 1. மாற்றம் வரும்... நம்பிக்கை கொள்வோம்...

  ReplyDelete
 2. என்ன பாஸ்,
  யாரை இவ்வளவு கேவலமாத்திட்டுறீங்க...
  வாத்தியருங்களையா? இல்ல அரசாங்கத்தையா?
  ரெண்டுபேருமே இப்ப மகாஆஆஆ.......................................கேவலமாத்தானிருக்குறாய்ங்க!!!
  என்ன செய்ய...

  ReplyDelete
 3. நிச்சயமா...நான் என்ன நினைக்கிறேன்னா..இதுக்காக மத்திய கல்வி மந்திரி முட்டாள் கபில்சிபில்..அப்புறம் அறிவு ஜீவின்னு சொல்லிகிட்டு அலையிற மூதேவி பயலுங்க எல்லாம் அமெரிக்காகிட்ட காசு வாங்கிகிட்டு இதுமாதிரி செய்யுறாங்கன்னு நெனைக்கிறேன்......

  ReplyDelete
  Replies
  1. இதுக்கும் அமெரிக்காவா ? என்ன கொடும சார் இது ?

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...