Monday, December 19, 2011

பிரபல பெண்பதிவரிடம் பல்பு வாங்கிய சிபி செந்தில்குமார்...


பதிவுலகில் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர் அட்ராசக்க சிபி செந்தில் குமார் இவருக்கு வேலை சினிமா விமர்சனம் எழுதுவது  அதற்கடுத்து காமெடி கும்மி என்ற பெயரில் இருக்கிற பதிவர்களை போட்டு கலாய்ப்பது தான் இவருக்கு வேலை...

இதைவிட்டு இன்னும் வேற ஏதாவது சொன்ன பயபுள்ளைக்கு கோவம் வரும் நான் மேட்ருக்கு வந்துடுறேன்.

கடந்தவாரம் அவரோட பிளாக்கில் இவர் போட்ட பதிவுதான்


பிரபல பதிவர்கள் சுயம்வரத்தில் செய்த சலம்பல்கள் காமெடி கலாட்டா

இந்த பதிவுல பிரபல பதிவர்கள் சுயம்வரம் சென்று அங்கு மாட்டை அடக்க சொல்லியிருந்தா என்ன பண்ணுவாங்க என்ற கருத்தை மையமா வச்சி ஒரு பதிவு போட்டிருந்தாரு.

அந்த பதிவுல நம்ம மனோ அண்ணாச்சி, விக்கி உலகம் விக்கி, தமிழ்வாசி பிரகாஷ்,  சூர்ய ஜீவா, ஐ.ரா ரமேஷ்பாபு, போகுலத்தில் சூரியன் வெங்கட், நல்லநேரம் சதீஷ், சிரிப்பு போலீஸ் ரமேஷ் ஆகியோர் சுயம்வரத்தில் கலந்துக்கொண்டு மாடுபிடிச்சா எப்படியிருக்கும்ன்னு நல்ல அவருக்கே உரிய பாணியில் நல்ல நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார்.

அந்த பதிவு கமாண்ட்டுல நம்ம காணாமல் போன கனவுகள் ராஜி அக்கா வந்து போட்டாங்க பாருங்க ஒரு கமாண்டு....


எல்லோரையும் சிபி கலாய்ச்சா, சிபியை இவங்க கலாய்ச்சிட்டாங்க...

அந்த கமாண்ஸ்ல சிபி சுயம்வரத்தில் கலந்துக்கொண்டு மாட்டை அடக்க சொன்னால் எப்படியிருக்கும் என்று போட்டிருந்தார்கள்...

/////////
மாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,
சிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை
மாமனார்: அதுக்கு என்ன இப்போ,
சிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.
மாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்?
சிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.
பொண்ணு: கிர்ர்ர்ர்ர்ர் டமால்
///////////

எனகருத்திட்டு அனைவரையும் பரவசப்படுத்தினார்.

11 comments:

  1. சிறந்த பதிவுகளை வரவேற்கிறோம்..

    ReplyDelete
  2. பின்னே சிபி மட்டும்தான் கலாயிப்பானா, என் தங்கச்சி விட்டுருவாங்களா என்ன...?

    ReplyDelete
  3. என் கமெண்டை வைத்து ஒரு பதிவை தேத்திட்டீங்களே

    ReplyDelete
  4. அடப்பாவி கமெண்ட்டை வெச்சே பதிவா? இருந்தாலும் சிபி நாறடிக்கப்பட்டிருப்பதால் அமைதியாக செல்கிறேன்.....!

    ReplyDelete
  5. ஹா ஹா அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...