Thursday, May 16, 2013

மானங்கெட்ட ஜாதிவெறியர்கள் கவனத்திற்கு! பேஸ்புக்கில் நடந்த உண்மை சம்பவம்..!


ஜாதிவெறியில் திளைத்து, ஜாதி மறுப்புத் திருமணம் வேண்டாம்; காதல் திருமணம் கூடாது என்று முகநூலில் (Facebook) கருத்துக்களை வெளியிடும் அன்பர்களுக்கு சில செய்திகள் பகிர விரும்புகிறோம்.

இன்று பேஸ்புக் உரிமையாளரும் அதை உருவாக்கியவருமான மார்க் எல்லேய்ட் ஜுக்கர்பெர்க் (http://facebook.com/zuck) -இன் பிறந்த நாள். மார்க் எல்லேய்ட் மே 14 1984 ஆண்டு பிறந்தார்.

அமெரிக்கரான இவர், வியட்னாம் நாட்டிலிருந்து தனது தாய் தந்தையை இழந்து சீனத்தம்பதிகளின் அரவணைப்பில் அகதியாக அமெரிக்கா வந்து குடியேறிய பிரிஸ்கில்லா சான் என்ற 18 வயது பெண்ணை காதலித்து மணந்தவர். சான் என்பது அவரை வளர்த்த சீன தம்பதியினரின் குடும்பப்பெயர், பிரிஸ்கில்லா என்பது அவர் படித்த பாடசாலையில் வைத்தபெயர்.

திருமணத்திற்கு பிறகு மருத்துவம் படித்து அகதிகளுக்கு சேவை செய்யவிருக்கிறார் சான். மார்க், பிரிஸ்கில்லா இருவருமே மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, ஒரு அகதியாக வளர்ந்து, நாடு விட்டு நாடு வந்த பெண்ணைத் திருமணம் செய்யும் மார்க், தற்போது நெம்பர் 1 இளம் பணக்காரர். மேலும் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர்.

அவர் உருவாக்கிய முகநூலில் ஜாதிவெறி, மதவெறியைப் பரப்பி இத்தம்பதிகளை இழிவுபடுத்த வேண்டாம் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த வேற்று நாடு, இனம், மதம், மொழியைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்யும் 29 வயதே ஆன மார்க் எங்கே? நாங்கள் ஆண்ட பரம்பரை, அந்தப் பரம்பரை, ஆதிக்க ஜாதி, மேல் ஜாதி என்று கொலைவெறியில் திரியும் இவர்கள் எங்கே?

10 comments:

 1. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 2. neththiyadi padhivittamaikku nandri nammavargal thirundhira aalunga illai, nandri
  surendran

  ReplyDelete
 3. முகநூல் 'ரசிகர்கள்' அறிய வேண்டும்...!

  ReplyDelete
 4. அய்யோ கொல்றாங்களே வரலாற்று காணொளி மாதிரி ராமதாஸ் மூஞ்சியை தொங்கப்போட்டு பேயறைந்த மாதிரி உட்கார்ந்து கொண்டு நான் அழுது கொண்டே சிரிக்கிறேன் என்ற காணொளியும் இனி வரலாற்றில் இடம் பெறும்.

  இந்த பதிவை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனோபாவம் கொண்ட மனிதநேயங்களுக்கு அர்ப்பணம் செய்யலாம்.

  ReplyDelete
 5. பாராட்டப்பட வேண்டிய நபர், பலரை சென்றடைய வேண்டிய செய்தி

  ReplyDelete
 6. "பேஸ்புக்கும் கலப்புத் திருமணமும்: மானங்கெட்ட சாதிவெறியர்களுக்கு ஒரு பதில்!"

  http://arulgreen.blogspot.com/2013/05/Mark-Zuckerberg-Priscilla-Chan.html

  "நான் உங்க வீட்டு பிள்ளை" எனும் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளது போன்று மணமகளின் வயது 18 அல்ல. மார்க் ஜுக்கர்பெர்க் திருமணம் செய்யும் போது அவரது வயது 28, அவரது காதலி பிரிஸ்கில்லா சானின் வயது 27. (இருபத்தேழு வயது மணப்பெண்ணை, 18 வயது என்று குறிப்பிடும் கேடுகெட்ட நிலை இந்தப் பதிவருக்கு ஏன் வந்தது?)

  ReplyDelete
  Replies
  1. சாதிஒழிப்பை சமத்துவத்தை பேசினால் வயதை காரணம்காட்டி அதிலும் ஒரு கலவரத்தை உண்டுப்பண்ண உங்களைப்போன்ற மிகச்சிறந்தவர்களளே மட்டுமே முடியும்...

   ஐயா ராமதாஸின் சாதனைகளை நானும் பார்த்துக்கொண்டுதான் இரு்க்கிறேன்.


   பெண்ணுக்கு 21 வயது பூர்த்தியாகிவிட்டால் அடுத்த சாதியின் பெண் கொடுக்க உங்கள் ஐயா சம்மதிப்பாரா... கேட்டுச்சொல்லுங்கள்
   அப்புறம் நானும் ஐயாவின் புகழை பாடிவிட்டுப்போகிறேன்...

   Delete
 7. Thanks Aurl anna !

  he speak about all the other side of country
  I ask the blog person suppose you have sister your sister love lower cast person shall you allow marry her ??

  or you have any ambition will marriage any lower cast girl? shall you prove that I will accept your post dont waste your time becoz you dont like Thiru Ramadoss..

  ReplyDelete
  Replies
  1. ஜாதி வெறி பிடித்த மிருகம் ராமதாசுக்கோ, அவனுடைய அல்லக்கைகளுக்கோ நீங்கள் கூறும் வேதம் புரியாது

   Delete
 8. நண்பர்களே...
  நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
  அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
  நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
  பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
  எதுவும் வெளியிடாமல்...
  அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
  இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

  அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
  இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...