Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

Wednesday, July 17, 2013

சூர்யாவுக்கு அதிரடியான அடுத்த கதை..!


ரன், சண்டக்கோழி,வேட்டை என இளைய நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த லிங்குசாமி, நடிப்பில் தங்களை அற்பணித்து முன்னணி நடிகர்களாக இருந்த அஜித், விக்ரம் நடித்த ஜி, பீமா திரைப்படங்களை வெற்றிபெறவைக்க முடியவில்லை. 





முன்னணி நடிகர்களையும் வைத்து ஹிட் கொடுக்கவேண்டும் என்ற முடிவில் சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி மிகப்பிரம்மாண்டமான கமர்ஷியல் திரைப்படம் ஒன்றை துவங்கியிருக்கிறார் லிங்குசாமி.


கவுதம் மேனன் திரைப்படம் முடிந்த பிறகு லிங்குசாமியின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த சூர்யா, சில காரணங்களால் லிங்குசாமி திரைப்படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டதால் தற்போது வேளச்சேரியில் தனியாக ரூம் போட்டு எவ்வித தொந்தரவுமின்றி கவனமாக திரைக்கதையை செதுக்கிவருகிறாராம்.


லிங்குசாமி வெளச்சேரியில் தனியாக ரூம் போட்டு திரைக்கதையை மெருகேற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில், தமிழ்த் திரையுலகெங்கும் அத்திரைப்படத்தின் கதை வெளியாகிவிட்டது. லிங்குசாமி திரைப்படத்தில் சூர்யா முதல் பாதியில் ஒரு மருத்துவராக நடிக்கிறார்.


மருத்துவராக இருக்கும் போது சூர்யாவுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து, வில்லன்களை பழிவாங்க ஐ.ஏ.எஸ் படித்து பிற்பாதியில் ஸ்ட்ரிக்டான போலிஸாக ‘சிங்கம்’ மாதிரி உலா வருவாராம் சூர்யா. 


சிங்கம் 2 திரைப்படத்தில் போலிஸாக நடித்து சூர்யா அடித்த அடியிலிருந்தும், கத்திப் பேசிய வசனங்களிலிருந்துமே ரசிகர்கள் வெளிவராத சமயத்தில் அடுத்த படத்திலும் சூர்யா போலிஸாக நடிப்பது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...