Monday, December 5, 2011

புதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...


வாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, 

அப்புறம் நீங்க
ஷேமமாக இருக்கேளா? ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா?  அப்படின்னு கேட்க நான் ஐயர் ஆத்து பிள்ளை இல்லிங்க... உங்க வீட்டுப்பிள்ளை...

நீங்கள் பதிவுலகில் தற்போதுதான் புதியவராக வந்துள்ளீர்களா? பலே. இந்தப்பதிவு உங்களுக்குத்தான். பத்திரிகைகளில் சாதிக்கும் ஆர்வமும், திறமையும் இருந்தாலும் வாய்ப்பு மிகச்சிலருக்கே கிடைக்கிறது. எனவே உங்களுக்கென ஒரு வலைப்பூவை தொடங்கி அதில் தங்கள் திறமையை நிரூபித்து வெற்றி பெற காலடி எடுத்து வைத்து இருப்பீர்கள். 

அப்படி வெற்றிப்பெறவரும்போது முன்னோடி பதிவர்களையும், தங்கள் தளத்துக்கு வரும் பதிவர்களையும் வரவேற்க மறக்காதீர்கள். பதிவுலகத்திற்கு வந்தபிறகு, ஏன் தாங்கள் தனியாக யாரும் இல்லாத ஆள்போல் இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம்.. அதற்காக அறிவுரைகள் இங்கே வழங்குகிறேன்.. வாருங்கள்...


********* நல்ல பதிவுகளை போடுங்கள்.... மற்ற பதிவுகளை வாசித்து அந்த பதிவு எப்படியிருக்குன்னு பார்த்து உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்க. பதிவு பிடிச்சிருந்தா பிளஸ் ஓட்டு போடுங்க.. பிடிக்கலையா மைனஸ் ஓட்டுப்போடுங்க தப்பே இல்லை. பதிவர்களில் என்ன கலப்பட பதிவர்கள் இங்க என்ன பால் வியாபாரமா செய்யுறோம் கலப்படம் செய்ய.

********* பதிவை படிங்க, சும்மா சிம்பிளா ஒரு கமாண்ட் போட்டுட்டு போங்க.. அதுல தப்பே இல்ல. உதா. ஒரு கவிதைப்படிக்கிறோம்ன்னு வச்சிக்கங்க.. அது பிடிச்சிருந்தா சூப்பர், அருமை, வாழ்த்துக்கள் அப்படின்னு போடுங்க தப்பேயில்லை. கவிதை பிடிச்சிருக்கு அதுக்காக பத்து பக்கத்தில கமண்ட்ஸ் போடனுமா என்ன...? விருப்பம் இருந்தா விவரமா கருத்துப்போடுங்க. இல்லன்னா சுருக்கமா.. அம்புட்டுத்தான்.

********* உங்க வலைப்பூ ஆரம்பிச்ச உடனே வரக்கூடய பாளோவர்களை அன்போடு அழையுங்கள். அவருக்கு நன்றி சொல்லுங்க. முதலில் வருவதால் உங்க சொத்தையா கேட்க போறாங்க. சிலர் இருக்காங்க நீங்க வளர்ந்து பெரிய ஆளா ஆனப்பிறகு வந்து ஒட்டிப்பாங்க அவங்கள நம்பாதீங்க. முதலில் வருபவர்கள் ஓட்டுக்குத்தான் வராங்க அப்படின்னு நினைக்காதீங்க. நீங்க ஓட்டுப்போட்டு பிரதமர் பதவிக்காக வரப்போறாங்க. எல்லாம் ஒரு நட்புதான்.

********* முதலில் பாளோவரான வந்து சேர்ந்தால் அவர்களுக்கு ஒரு அறிவிப்பு வையுங்கள் அதற்கு பரிசாக அன்பு பகிரப்படும் அப்படின்னு போர்டு வையுங்க. அப்படி அன்பே காட்டவில்லையென்றாலும் நம்ம பதிவுலக எதார்த்தவாதிகள் பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி பதிவர்கள் ஆகியோர் கண்டிப்பாக வந்து சேருவாங்க. ஏன்னா அவர்களுக்கு  குஷிப்பட ஜோதிகா மாதிரி ஈகோ-வெல்லாம் கிடையாது. புதியதாக வரும் பதிவர்களை கண்டிப்பாக இவர்கள் அன்போடு வரவேற்பார்கள். அம்புட்டு நல்ல மனசு.

********* பதிவுலக அரசியல் கத்துக்கங்க. நீங்க யாரையும் மதிக்காம, யாருடைய வலைப்பூவுக்கும் போகாமல், யாருடைய பதிவையும் வாசிக்காமல், யாருக்கும் கருத்திடாமல், வாக்களிக்காமல் இருந்துவிட்டு என் கடைப்பக்கம் யாரும் வரவில்லை என்று சொன்னால் எப்படி. அதனாலே வினைவிதைப்பவன் வினைஅறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது போல நீங்கள் மற்றவர்களிடம் அன்பை விதையுங்கள் அன்பை அறுவடை செய்யலாம்.

********** உங்க கருத்தை, உங்க சிந்தனையை, உங்க படைப்புகளை பதிவா போடுறீங்க அதை யாரும் படிக்க கூடாதுன்னு க‌தவை அடைச்சிட்டா எப்படி. அதை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்க..

********** இங்கு இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரையறை இல்லை. எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், தங்கள் மனதுக்கு பட்டதை சொல்லுங்கள். அதில் மற்றவர் மனசு சங்கடப்படாமல் இருந்தால் மட்டும் போதும்.

பிரெட்சிக்காரன் என்ற பேரில் ஒருவர் பதிவுலகில் நுழைந்து இந்த பதிவுலகையே புரட்டிபோட்டுவிடலாம் என்று, ஜேம்ஸ்பாண்டு 009 மாதிரியும், புரட்சிபுயல் வடிவேலு மாதிரியும் வந்திருக்கிறார்


அவரை யாரும் நம்பாதீர்கள். அவரிடம் பெரிய புரட்சியெல்லாம் ஒன்றும் இல்லை பதிவுலகில் வளர்ச்சிப்பாதையில் இருக்கும் பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி ஆகிய மூவரை மட்டுமே தாக்கி எழுத வந்திருக்கும் புதிய அவதாரம். 

அவரு்டைய பதிவுகளை பாருங்கள் அதில் இந்த மூவரை மட்டுமே தாக்கி எழுதியிருக்கும் பதிவுகள் மட்டுதான் இருக்கும். இவர்கள் தானும் வாழமாட்டார்கள் மற்றவர்களையும் வாழ மாட்டார்கள்.

பிரெட்சிக்காரன் என்ற போலி முகத்தைக் கொண்டு யாரும் இந்த பதிவுலகை ஆட்சிசெய்து விடமுடியாது. அன்புக்கு மட்டுமே தலைவணங்கும் இந்த பதிவுலகில் யாவரும் மன்னர்களே..!

அவர் பெரியவர் இவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையுடன் வலம் வருவோம்.  என்றாவது ஒருநாள் முகம் பார்க்காத நாம் முகம்பார்க்கும் போது அன்பை வெளிக்காட்டி அரவணைப்போம். அப்போது ஒரு துளி கண்ணீர் நம் கண்களில் எட்டிப்பார்க்கும் அப்போது புரியும் நம் பந்தங்களின் உறவு.

34 comments:

 1. மாப்ள நல்லா விளக்கமா சொல்லி இருக்கீங்க...புரிய வேண்டியவருக்கு புரியும்னு நெனைக்கறேன் நன்றி!

  ReplyDelete
 2. அன்பை விதையுங்கள்
  அன்பை அறுவடை செய்யலாம்.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. உண்மைதான் தோழரே புரியும் என்று நினைக்கிக்றேன் புரியலைன்னா....மனநோய்ன்னு முடிவு செய்யறதுதான் நமக்கு நல்லது...

  ReplyDelete
 5. ////அவர் பெரியவர் இவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையுடன் வலம் வருவோம். என்றாவது ஒருநாள் முகம் பார்க்காத நாம் முகம்பார்க்கும் போது அன்பை வெளிக்காட்டி அரவணைப்போம். அப்போது ஒரு துளி கண்ணீர் நம் கண்களில் எட்டிப்பார்க்கும் அப்போது புரியும் நம் பந்தங்களின் உறவு.////

  அழகாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே பதிவுலகில் நாம எல்லாம் என்ன சாதித்து இருக்கின்றோம் என்று கேட்டால் துணிந்து சொல்லாம் நிறைய நண்பர்களை சம்பாதித்து இருக்கோம்.என்று இதைவிட வேறு ஒன்றும் தேவையில்லை நாம் பதிவெழுத வந்ததுக்கு

  ReplyDelete
 6. பதிவு எழுதத் துவங்கியபின் எனக்கும் நிறைய நட்புகள், உறவுகள் கிடைத்துள்ளன. இதைவிட வேறென்ன வேண்டும்?

  ReplyDelete
 7. அடுத்த பிரச்சினை ஆரம்பமா...

  ReplyDelete
 8. பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி
  இவங்க எல்லாம் யாரு?

  ReplyDelete
 9. நல்ல பதிவு! புதியவர்கள் மட்டுமல்ல பதிவுலக
  நண்பர்கள் அனைவருக்கும் இது தேவையாகும்
  உங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...!!!

  ReplyDelete
 11. புதியவர்களுக்கு மிகவும் உபயோகமான பதிவு...

  ஆனால் இது புதியவருக்குப் போய்ச் சேருமா என்பது தான் தெளிவாகத் தெரியவில்லை...

  பலருக்கு இதில் பிரச்சனை இருக்கிறது... இந்த பதிவுலகக் குழுக்கள் என்று தகர்க்கப்படுகிறதோ அன்று தான் நாம் அந்நிய மொழி பதிவர்களுடன் போட்டி போட முடியும்..

  நேரடியாகச் சொன்னால் எம் நண்பர்களுக்கு கூகுல் அட்சென்ஸ் பெறுவதற்கான எந்த முன்னெடுப்புமே இல்லை... அவர்கள் விதித்துள்ள விதியை பார்தாலே போதும்...

  ReplyDelete
 12. @FARHAN
  //பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி
  இவங்க எல்லாம் யாரு?//
  வேடந்தாங்கல் இல்லம்,கவிதைவீதி அஞ்சாவது தெரு,
  அங்க போய் அட்ரா சக்க...அப்படின்னு ஆச்சர்ய பட்டிங்கன்னா பொருப்பு நான் இல்லை

  ReplyDelete
 13. மனசிலே இருப்பதை எழுத்துக்களா, வெளிப்படையாய் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்கள்!

  ReplyDelete
 14. //பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி ஆகிய மூவரை மட்டுமே தாக்கி எழுத வந்திருக்கும் புதிய அவதாரம்.
  //
  இவர் பருப்பு அவர்களிடம் வேகாது ..

  ReplyDelete
 15. அட, யாருப்பா இது, ..
  தங்களின் கருத்துகள் உண்மையே..

  பதிவுலகில் நல்ல நண்பர்கள்தான் எனக்குன் கிடைத்திருக்கிறார்கள்..

  ReplyDelete
 16. பதிவின் முடிவில் "அப்போது ஒரு துளி கண்ணீர் நம் கண்களில் எட்டிப்பார்க்கும் அப்போது புரியும் நம் பந்தங்களின் உறவு." அருமை நண்பரே!
  நம்ம தளத்தில்:
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

  ReplyDelete
 17. நல்ல்ல்ல கருத்துக்கள்.

  ReplyDelete
 18. //விக்கியுலகம் said...
  மாப்ள நல்லா விளக்கமா சொல்லி இருக்கீங்க...புரிய வேண்டியவருக்கு புரியும்னு நெனைக்கறேன் நன்றி//

  எனக்கு மரமண்டை. வெளக்கமாச் சொன்னாலே ஒண்ணும் புரியாது. இப்படி வேற பண்ணினா நான் என்னங்க பண்ணறது?

  ReplyDelete
 19. கலக்கீட்டீங்க தலைவா

  ReplyDelete
 20. இது சிபி செந்தில் அவர்கள் பதில் போட்ட என்னுடைய கருத்து...  என்தரப்பு நியாயங்கள்...


  இந்த பதிவுலகத்தில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருக்கிறார்கள். இதுவரையில் யாரையும் தரக்குறைவாகவே மற்றப்பதிவர்களை விமர்சித்தோ, பிரபதிவுக்கு சென்று குறைச் சொல்லியோ, வரம்புகள் மீறியோ நடந்ததில்லை.

  தொடர்ந்து நாங்கள் வஞ்சிக்கப்படுவதில் விளைவுதான் இந்த பதிவுகள். தவறு என்று சொல்வதற்கும, அதை சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு பதிவு போதும் அதற்காக 10 பதிவுகளா போடுவார்கள்.

  யாருடைய மனதையும் எந்த ஒரு சகபதிவரையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது.

  ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

  இங்க இது வேண்டாம் என சொல்லும் எந்த ஒரு பதிவரும் எங்களுக்கு எதிராக பதிவிடும்பேர்து வாய் மூடிக்கொண்டிருந்தது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை.

  தலைப்பு, பதிவின்கரு, பதிவின் போக்கு போன்றவற்றை மற்றவரின் நிர்பந்தத்திற்காக எங்களது சுயமரியாதையை விட்டு நாங்கள் செயல்பட எங்கள் தன்மானம் தடுக்கிறது.

  தமிழ்மணம் என்பது எங்களது கட்டுப்பாட்டில் இருப்பது அல்ல. ரேங்க் போன்றவற்றிலும் எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. அப்படியிருக்க டாப் 20 வருகிறார்கள் என்றால் ஏதோ அதில் எங்களது உழைப்பு இல்லாமல் வந்துவிடுவதில்லை.

  இந்த பதிவுலகில் வாழ்வதற்க்கு எங்கள் தன்மானத்தையும் சுயமரியதையும் விட்டால் தான் முடியும் என்றால் அப்டியொரு பதிவுலமே எங்களுக்கு வேண்டாம்.

  தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும்போது பாமரர்களே கேள்வி கேட்கும்போது நாம் படித்தவர்கள். அமைதியா இருந்தால் அதை விட அசிங்க வேறு ஏதிருக்கிறது.

  ReplyDelete
 21. கிசு கிசு புதுசா பழசா? பிழிடா சக்கை, புலவர் வீதி பேரில் எல்லாம் உண்மையாவே வலைப்பூ தொடங்கலாம் போல இருக்கு. நல்ல ஐடியா.

  ReplyDelete
 22. அருமையான பதிவு

  //பிரெட்சிக்காரன்//- இதை புரட்சிகாரன் என மாற்றுங்கள். இல்லையேல் அதற்கான காரணத்தையும் ஆதாரத்தையும் முன்வையுங்கள் சகோ :-)

  ReplyDelete
 23. அப்பா இப்படி ஒரு உலகம் இருக்கிறதா? இதைப் பற்றி அறியவே எனக்கு 4 வருடங்கள் ஆகியிருக்கு. நண்பரே, இப்படி சில பதிவுகளினால் தான் எங்களைப் போன்றவர்கள், பதிவுலகத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்கிறோம். மிக்க நன்றி

  ReplyDelete
 24. எங்களைப்போன்ற புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. பதிவுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் எனக்கு பல உறவுகள் காத்திருப்பதை உணர்த்துகிறது. தங்களின் வரவேற்ப்பிற்கு நன்றி!

  ReplyDelete
 25. அன்பை விதையுங்கள்
  அன்பை அறுவடை செய்யலாம்...

  ReplyDelete
 26. நல்ல பதிவு.பகிர்வுக்கு மிக்க நன்றி..நன்பரே//

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...