Showing posts with label தெரிந்துக்கொள்ளுங்கள். Show all posts
Showing posts with label தெரிந்துக்கொள்ளுங்கள். Show all posts

Wednesday, August 28, 2013

ஜாக்கிரதை... இதைக் கவனிங்க முதல்ல..


இதைக் கவனிங்க முதல்ல..

ஆசையாக வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கும் காரில், சொட்டுச் சொட்டாக பெட்ரோல் கசிவதைப் பார்ப்போம். 'நாளைக்கு சரி செய்து விடலாம்... நாளைக்கு சரி செய்து விடலாம்' என ஒரு மாதமேகூட ஓடிவிடும். இதனால், வீணாவது பெட்ரோல் மட்டுமல்ல... பணமும்தான்!

1 நிமிடத்துக்கு, வீணாகும் பெட்ரோல் 2 மில்லி அப்படியானால், ஒரு நாளைக்கு? 2.880 லிட்டர் ஒரு மாதத்துக்கு... 86.4 லிட்டர் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 74.00 எனில், 86.4 லிட்டருக்கு ரூ. 6393.60



இதைக் கவனிங்க முதல்ல..

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வீடு மாற்றி வரும்போது, ஃபேனுக்கான ரெகுலேட்டரை மறந்து விட்டிருப்போம். புது வீடு வந்ததும் அவசரத்தில் ரெகுலேட்டரே இல்லாமல் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இப்படி ஓடுவதால் எவ்வளவு காசு வீண் தெரியுமோ..?!

ரெகுலேட்டர் இல்லாமல் நாள்

முழுக்க ஒரு ஃபேன் ஓடினால் வீணாகும் கரன்ட் 1 யூனிட் மாதத்துக்கு 30 யூனிட் 1 யூனிட் 1 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே... மாதம் 30 ரூபாய் வீண்.



இதைக் கவனிங்க முதல்ல..

ஒரு குண்டு பல்பு மாதம் முழுக்க எரிவதற்கு ஆகும் கரன்ட் செலவு 40 யூனிட் சி.எஃப்.எல் பல்ப் இதேபோல எரிந்தால் 10 யூனிட் மாதம் முழுக்க மிச்சமாகும் தொகை (ஒரு யூனிட் கரன்ட் 1 ரூபாய் என வைத்துக் கொண்டால்)... 30 ரூபாய்.



இதைக் கவனிங்க முதல்ல..

அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தும்போது துணிக்கு ஏற்ற வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். இதற்காக அயன்பாக்ஸில் உள்ள பட்டனை பயன்படுத்தத் தவறினால்... இழப்பு உங்களுக்குத்தான். 

உதாரணமாக நைலக்ஸ் துணிக்கான வெப்பத்தைப் பயன்படுத்தி காட்டன் டிரெஸ்ஸை அயர்ன் செய்தால், ஒருமுறைக்கு இருமுறையாக தேய்க்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 5 செட் டிரெஸ்ஸை இப்படி தேய்த்தால் வீணாகும் கரன்ட் 1/2 யூனிட் மாதத்துக்கு 15 யுனிட் மாதம் முழுக்க வீணாகும் தொகை 15 ரூபாய்.

எரிபொருள் சிக்கனம் உங்கள் பர்ஸூக்கு மட்டும் பாதுகாப்பானது அல்ல, நாட்டின் கஜானாவுக்கும்தான். இதில் சிக்கனம்... தேவை இக்கணம்!

Friday, May 24, 2013

கோடையில் நீங்கள் இதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்


* வெயிலுக்கு உகந்தது கதர்ஆடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும்.

* வெயில் காலங்களில், ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக, அதிகமான "அல்ட்ரா வைலட்' கதிர்கள் பாயும். இதனால், கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க 'ஆட்டோ ரிப்ளக்ஷன் கிளாஸ்' அணிவது நல்லது.

* உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க, அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

* வியர்வை நாற்றத்தைப் போக்க, குளிக்கும்போது, எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி, கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால், வியர்வை நாற்றம் வராது.



* கோடைக்காலத்தில் வரும் அக்கி, அம்மை நோய்க்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது.

* காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்களை, அருந்துவதைத் தவிர்த்து இந்த சீசனில் கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது அவசியம்.

* ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால், உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

* வட்டமாக அரிந்த வெள்ளரியை, கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால், கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

* மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட, தேங்காய் எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து, மறுநாள் காலை வில்வங்காய் கலந்த சிகைக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பது கோடை காலத்துக்கு உகந்தது.

* குளிக்கும்போது, தேய்ப்பதற்கு என்று நாட்டு மருந்து கடைகளில் தனியாகப் பொடி விற்கப்படுகிறது. இதனை வாங்கி, சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தி வந்தால் முகத்திலும், உடலிலும் எண்ணெய் வழியாமல் நிற்கும்.

* பழ ஜூஸ்களுக்கு, ஐஸ் கட்டிகள் தயாரிக்கும்போது, நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பு கலந்து, "ஐஸ் ட்ரே'யில் ஊற்றி தயாரித்தால், ஜூசில் போடும் போது சுவையாக இருக்கும்.

* இளநீர் காய்களை வாங்கியவுடன், குளிர்ந்த நீரில் போட்டு விட வேண்டும். வெயில் காலத்தில், பனை நுங்குகளை தோலுரித்து சிறு துண்டுகளாக்கி, இளநீருடன் கலந்து குடித்தால், குளிர்ச்சியாக இருக்கும்.

* கோடையில், அதிகமான ஐஸ் கட்டிகள் தேவைப்படும். "ஐஸ் ட்ரே'யில் கொதித்து ஆறிய நீரை ஊற்றி வைத்தால், சீக்கிரமாக "ஐஸ்' கிடைக்கும்.

* கோடையில், குளிர்பானம் அருந்துவதற்கு பதில் சோடா குடிக்கலாம். சிறிது எலுமிச்சை சாறும், உப்பும் சேர்த்து சாப்பிட தாகம் தணியும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...