Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Wednesday, May 9, 2018

இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும்...?

இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது. 


இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை?

"தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலை தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக சாப்பாட்டுக்கு முன், இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புக்களை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக் கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு உடனடியாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புக்கள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்." என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.


இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:

"சித்த மருத்துவத்தில் இளநீர், 'பூலோகக் கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏ, சி, பி, கே போன்ற வைட்டமின்களும், சோடியம், பொட்டாசியம் கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. 

ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். 

இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புக்களைச் சரி செய்யும். 

உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் மூத்திர எரிச்சலைச் சரிசெய்யும். ஏற்படும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. " என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்...

Thursday, April 19, 2018

உங்களுக்கும் வரலாம்... பெண்களே உஷார்....



இன்றைய தினம் இளம் பெண்களை அதிகமாகப் பாதிக்கிற ஹார்மோன் பிரச்னைகளில் தைராய்டு ஹார்மோன் பிரச்னை முன்னிலை வகிக்கிறது. தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. 


இது சாதாரணமாக நம் கண்ணுக்குத் தெரியாது. இதன் இயல்பான எடை 12 லிருந்து 20 கிராம் வரை இருக்கும். இந்த எடைக்கு மேல் அதிகமானால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று பொருள். அப்போது நோயாளியானவர் உணவை விழுங்கும்போது, குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும். 

தைராய்டு ஹார்மோன்கள்

தைராய்டு சுரப்பி, தைராக்சின்(T4), டிரைஅயடோதைரோனின் (T3) எனும் இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இவற்றில் தைராக்சின் செய்யும் பணி முக்கியமானது. தைராய்டு செல்களில் `தைரோகுளோபுலின்’ எனும் புரதம் உள்ளது. இதில் `டைரோசின்’ எனும் அமினோ அமிலம் உள்ளது. 

தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினோடு இணைத்து, தைராக்சின் ஹார்மோனை சுரக்கின்றன. ரத்தத்துக்கு தைராக்சின் ஹார்மோன் தேவைப்படும்போது, அதை அனுப்பி வைக்கின்றன. மற்ற நேரங்களில், அதை தைரோகுளோபுலினில் சேமித்து வைக்கின்றன. இத்தனை செயல்பாடுகளையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் `தைராய்டு ஊக்கி ஹார்மோன்’ (TSH) கட்டுப்படுத்துகிறது. 

தைராக்சின் பணிகள்

கருவில் உள்ள குழந்தையின் 11வது வாரத்திலிருந்து சுரக்கத் தொடங்குகின்ற தைராக்சின் ஹார்மோன், அப்போதிலிருந்தே உடலிலுள்ள செல்களின் இயக்கத்தையும், வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலைகளையும் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுகிறது. குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு பலம், தசை உறுதி, புத்திக்கூர்மை என்று பலவற்றுக்கு தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதி

வினைகள் புரிவதற்கு தைராக்சின் தேவை. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச்சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை முடுக்குவது தைராக்சின். புரதச்சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக்கூழிலிருந்து குளுக்கோஸை பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன்தான். இதயம், குடல், நரம்புகள், தசைகள், பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் இயக்கங்களையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. 

மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பதும் தைராக்சின் ஹார்மோன்தான். உடல் செல்களில் பல நொதிகள் உருவாவதற்கும் தைராக்சின் ஹார்மோன் தேவைப்படுகிறது. 

இவ்வாறு உடலின் அன்றாட தேவைக்கு ஏற்ப, கூட்டியும் குறைத்தும் சுரந்து, கருவில் வளரும் குழந்தை முதல் முதிய வயது வரை, அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் துல்லியமாக செய்து முடித்து, உடலைப் பேணி இயக்கும் உன்னதமான ஹார்மோன், தைராக்சின். `அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சியடையாது என்றால் மிகையில்லை. 

குறை தைராய்டுதைராய்டு சுரப்பியில் தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், குறை தைராய்டு (Hypothyroidism) எனும் நிலைமை ஏற்படும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இவை... உடல் சோர்வு, உடல் தளர்வு, சாதாரண வெப்பத்தைக்கூட குளிர்ச்சியாக உணர்வது, குளிர் தாள முடியாமல் போவது, முடி கொட்டுவது, உலர்ந்த தோல், தோலில் அரிப்பு, பசி குறைவது. அதே நேரத்தில் எடை அதிகரிப்பது, ஞாபக மறதி, மலச்சிக்கல், அதிக தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கைகால்களில் மதமதப்பு, கருத்தரிப்பதில் பிரச்னை, மூட்டுவலி. 

இப்படிப் பல பிரச்னைகள் குறை தைராய்டு உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படும் என்றாலும், உடனே பயந்துவிட வேண்டாம். வேறு சில நோய்களிலும் இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு ஏற்படுவதுண்டு. அதே நேரம், டாக்டரை கலந்து ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளைச் செய்து, தைராய்டு நோயை உறுதி செய்யவும் தயங்க வேண்டாம். 

குறை தைராய்டு நோய் உள்ளவர்களுக்குக் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதும், உடலில் நீர் கோா்த்துக் கொண்டு பருமனாவதும், குரலில் மாற்றம் ஏற்படுவதும், தோல் வறண்டு போவதும் நோயை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள். ரத்தசோகை இருப்பது, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்றவையும் இந்த நோய் உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியத் தடயங்களாகும்.ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

தைராய்டு நோயாளிக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படுவதில்லை. மெதுவாக, மிக மெதுவாக, ஒன்றன்பின் ஒன்றாகவே வெளியில் தெரியவரும். என்றாலும், இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிடாமல், ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

பெரியவர்களுக்கு ஏற்படும் குறை தைராய்டு நோய்க்கு `மிக்சிடீமா’ (Myxoedema) என்று பெயர். இதுவே குழந்தைகளுக்கு ஏற்படுமானால், அதைக் `கிரிட்டினிசம்’ (Cretinism) என்று அழைக்கின்றனர்.என்ன காரணம்?அடிப்படையில் உடலில் ஏற்படுகிற அயோடின் சத்துக் குறைபாடுதான் `குறை தைராய்டு நோய்’க்கு முக்கியக் காரணம். 

இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் பேருக்கு இப்படித்தான் தைராய்டு பிரச்னை உருவாகிறது. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியைத் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்கு தைராக்சின் ஹார்மோனை சுரக்க முடியாது. 

பதிலாக, அது வீங்கிவிடும். அப்போது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று அது காணப்படும். அதற்கு ‘முன்கழுத்துக்கழலை’ (Goitre) என்று பெயர். இது ஒரு தன் தடுப்பாற்றல் நோய் (Auto immune disease). 


குடலை பாதிக்கும் சில பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிர் அணுக்கள் (Anti bodies) தோன்றும்போது, அவை அந்தக் கிருமிகளை அழிப்பதோடல்லாமல், தைராய்டு சுரப்பி செல்களையும் அழித்துவிடுகிறது. இதன் விளைவால், தைராக்சின் சுரப்பது குறைந்து, குறை தைராய்டு நோய் உண்டாகிறது. 

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாக தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படுதல், தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சையால் அகற்றுதல், முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைதல் போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு நோய் வரலாம். இளம் வயதில் புற்றுநோய் தாக்கி, கதிரியக்கச் சிகிச்சை பெற்றிருந்தால், தைராய்டு சுரப்பி சிதைவடைந்து, குறை தைராய்டு ஏற்படும். மன அழுத்தம் கூட இதற்கு ஒரு காரணம்தான். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்பு உண்டு.

குழந்தைக்கும் குறை தைராய்டுபிறந்த குழந்தைக்கும் குறை தைராய்டு (Cretinism) ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்தவுடன் குழந்தை வீறிட்டு அழவில்லை என்றால், மூன்று நாட்களில் தாய்ப்பால் அருந்தவில்லை என்றால், குட்டையாக இருந்தால், மூக்கு சப்பையாக இருந்து, நாக்கு வெளித்தள்ளி, வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கம் காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குக் குறை தைராய்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

பொதுவாக, குழந்தைக்கு வயது ஏற ஏற அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆனால், குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு `வளர்ச்சி மைல்கல்’ தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டு திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது போன்ற வளர்ச்சி நிலைகளில் பாதிப்பு ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றும்.

பள்ளி வயதில் அதன் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q.) பின்தங்கும். முக்கியமாக, கற்றலில் குறைபாடு கள், நினைவாற்றலில் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை 
உடனடியாக டாக்டரிடம் காண்பிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால், குழந்தை எப்போதுமே மந்த புத்தியுடன்தான் இருக்கும். காலத்தோடு கவனித்து, தகுந்த சிகிச்சை பெற்றால், குழந்தைக்கு நோய் குணமாகும்.

காரணம் என்ன?

கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன் சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது. இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. 

கர்ப்ப காலத்தில் தாய்க்கு அயோடின் சத்து கிடைக்காமல், தாயின் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, சில அறிகுறிகள் தென்படும். அதாவது, முடி உதிர்வது, உடல் பருப்பது, தோலில் வறட்சி ஏற்படுவது, நெடுநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இந்நிலையில் தாய் தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், குழந்தைக்குப் பிறவியிலேயே குறை தைராய்டு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மிகை தைராய்டுதைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கப்படும். இந்த நிலைமைக்கு `மிகை தைராய்டு’ (Hyperthyroidism) என்று பெயர். இந்த நோய் உள்ளவர்களுக்குப் பசி அதிகமாக இருக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். 

விரல்கள் நடுங்கும். விரல் நுனிகள் தடித்திருக்கும். உள்ளங்கை வியர்க்கும். அடிக்கடி மலம் போகும். அடிக்கடி சிறுநீர் கழியும். சிறிது கூட பொறுமை இருக்காது. எதற்கெடுத்தாலும் கோபம் வரும். சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும். கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். பாலுறவில் விருப்பம் குறையும். திருமணமான பெண்களுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும்.

இந்த நோயை `கிரேவ் நோய்’ (Grave’s disease) என்றும் அழைப்பதுண்டு. இதுவும் ஆண்களைவிட பெண்களைத்தான் அதிக அளவில் பாதிக்கும். சுமார் இரண்டு சதவிகித பெண்களுக்கு இது ஏற்படுகிறது. முக்கியமாக, 20 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். 

அயோடின் உள்ள உணவுகளையோ, மருந்துகளையோ அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு மிகை தைராய்டு நோய் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியில் கட்டிகள் தோன்றினாலும், முன்பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி தோன்றும்போதும் இந்த நோய் ஏற்படுவதுண்டு.

பரிசோதனைகள் 

ரத்தத்தில் டிரைஅயடோதைரோனின் (T3), தைராக்சின் (T4), தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) ஆகிய மூன்று ஹார்மோன்களின் அளவைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். இத்துடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் முதலியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும். `ஐசோடோப் ஸ்கேன்’ பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது. 

சிகிச்சை முறைகள்

அயோடின் குறைவினால் வரும் முன்கழுத்துக்கழலை நோய்க்கு, அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். குறை தைராய்டு நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில், `எல்தைராக்சின்’(Eltraxin) மாத்திரையைச் சாப்பிட வேண்டும். மிகை தைராய்டு நோய் உள்ளவர்கள் `நியோமெர்க்கசால்’ (Neomercazole) மாத்திரையையும், `புரோபுரனோலால்’ (Propranolol) மாத்திரையையும் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு, மருந்து தேவைப்படும் கால அளவு ஆகியவற்றை டாக்டர்தான் தீர்மானிக்க வேண்டும். 

நோயாளியானவர் இந்த மருந்துகளைச் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றியிருந்தால் அறுவை சிகிச்சை செய்யப்படும். அதுவே புற்றுநோயாக இருந்தால், அறுவை சிகிச்சையுடன் கதிரியக்கச் சிகிச்சையும் தேவைப்படும். இன்றைய நவீன அணுவியல் மருத்துவத்தில், `ரேடியோ அயோடின் ஐசோடோப்’ சிகிச்சை மூலம் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் உள்ளிட்ட தைராய்டு பாதிப்புகளைக் குணப்படுத்த முடியும். `அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சி அடையாது!
டாக்டா் கு.கணேசன்

Thursday, April 10, 2014

இதையும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க



நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்


நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கைதோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

Saturday, October 5, 2013

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!


உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!!

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

Thursday, October 3, 2013

யானைகளை கண்டிப்பாக பாதுகாக்கனும்... ஏன் தெரியுமா..?



பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம், குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை. 

உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு. 

தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும். வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனிஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் குள்ளமானவை. கூட்டமாக வாழக்கூடியவை. 

ஆண் யானை பருவ வயதை (15) அடைந்தவுடன், மற்ற யானைகளால் தனியே விரட்டிவிடப்படும். இப்படி விரட்டப்பட்ட "பேச்சிலர்கள்' தனிக்கூட்டமாக வாழும். வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டி. குட்டிகளை கண்டிப்புடன் வளர்க்கக்கூடியவை. அடுத்து "சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு "பதவிக்கு" வரும். 

யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். பெரும்பாலும் ஆண் யானைக்குதான் தந்தம் இருக்கும். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத யானைகளை "மக்னா' என்கின்றனர். 

யானையின் வால் அடிப்பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், "வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.உணவு, தண்ணீர், நிழல் போன்றவற்றை கணக்கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை காட்டை சுற்றி வரும்.

 இயற்கையாகவே ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புல் தேவை. சராசரியாக யானையின் எடை 4000 கிலோ. தோலின் எடை மட்டும் ஆயிரம் கிலோ. தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும். நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் "டென்ஷன்' ஆகும். மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் "எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக யானை கருதப்படுகிறது. ஞாபகசக்தி அதிகம். 


மதம் பிடிப்பது ஏன்?

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் மதம் என்கிறார்கள். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். அதிகபட்சம் 45 வயது வரை மதம் பிடிக்கும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும். மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். யானைகள் சந்திக்கும்


சவால்கள் :

பரவலான மலைப்பகுதிகள் இல்லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. 

ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன. இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு திரும்பிக் கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அதை உண்ணும் யானை, ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. 


யானையை பாதுகாப்பது முக்கியம் :

யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகளை விரும்பி உண்ணும். அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் போன்றவை உண்ணும். மரக்கிளைகளை உடைத்து செடிகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி முயல் போன்ற சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.

இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கும் யானைகளை பாதுகாப்பது நமது கடமை. அதேசமயம் இயற்கை வனங்களை அழிக்காமல், ரசித்து, அதோடு ஒன்றி வாழ்வது சுற்றுச்சூழலுக்கு செய்யும் நாம் செய்யும் பேருதவி. 

Thanks - டாக்டர் கலைவாணன்,
யானைகள் நல மருத்துவர், தேனி.
மொபைல்: 94434 61712 

Wednesday, September 25, 2013

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? 

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.


முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 


நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. 


இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. 


தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. 


இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. 



இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். 


இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். 


மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். 


இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். 


இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். 


விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

Monday, September 16, 2013

யார் வேண்டுமானாலும் டாக்டர் ஆயிடலாம் போல...!




நம் நாட்டின், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காக, எம்.பி.பி.எஸ்., படிப்பில், "ஹவுஸ் சர்ஜன்' பயிற்சி முடித்த பிறகு, "எக்சிட்' தேர்வு முறையை, அறிமுகப்படுத்தப் போவதாக, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்திருக்கிறது. 

தமிழக மருத்துவர்கள் சங்கம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மனித உயிர்களைக் காக்கும், பொறுப்பு நிறைந்த தொழிலில் ஈடுபடுவோர், தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று, அரசு எதிர்பார்ப்பதில், எந்த தவறும் இல்லை. 

இன்று, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், மருத்துவம் படித்து வரும் மாணவர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலின், "எக்சிட்' தேர்வு என்னும் தகுதித் தேர்வை நிறைவு செய்தால் தான், இங்கு, மருத்துவராகப் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவர். 

அது போல, இங்குள்ள எம்.பி.பி.எஸ்., - எம்.டி., போன்ற மருத்துவப் பட்டங்கள், சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளால், அங்கீகரிக்கப்படவில்லை. இங்குள்ள மருத்துவக் கல்வியின் தரம், சர்வதேச மருத்துவக் கல்வியின் தரத்துக்கு, இணையாக இல்லை என்பதே, இதற்கு காரணம். 



இன்று, பிற நாடுகளில், மருத்துவத் துறையில், புகழ் பெற்று விளங்கும் இந்திய மருத்துவர்கள் எல்லாருமே, அந்தந்த நாட்டின் தகுதித் தேர்வை, நிறைவு செய்தவர்கள் தான். அமெரிக்கா போன்ற நாடுகளின், மருத்துவத் துறையின் தரத்தோடு, ஒப்பிடும்போது, நாம், 50 ஆண்டுகள், பின் தங்கித்தான் இருக்கிறோம். 

அங்கு, நோயாளிக்கு பரிந்துரைக்கப்படும், ஒவ்வொரு பரிசோதனைக்கும், மருந்துக்கும், மருத்துவர், தகுந்த விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். தேவையில்லாத பரிசோதனைகளையோ, மருந்துகளையோ, நோயாளிக்கு பரிந்துரை செய்ய முடியாது. ஆனால், இங்கு... 

நோயாளிக்கு, நிறைய, "டெஸ்ட்'களை பரிந்துரை செய்து, மளிகை சாமான், "லிஸ்ட்' போல, இரண்டு பக்கத்துக்கு எழுதும் மருத்துவர்கள் தான், விவரமுள்ள மருத்துவராகக் கருதப்படுகிறார். 

அவர், இங்கு, யாருக்கும், விளக்கம் சொல்லவும் தேவையில்லை. 





அது மட்டுமின்றி, இங்கு, ஒரு மருத்துவரிடம், ஆறு மாதம் உதவியாளராக இருந்து, "ஸ்டெதஸ்கோப்பை' காதில் மாட்டவும், "சிரிஞ்சை' பிடித்து ஊசி குத்தவும் கற்றுக் கொண்டால் போதும், யார் வேண்டுமானாலும், டாக்டர் ஆகி விடலாம். எட்டாம் வகுப்பு கூட பாஸ் ஆகாத, போலி டாக்டர்கள், தமிழகத்தில் மட்டுமின்றி, படித்தவர்கள் அதிகம் வாழும், கேரளத்திலும் இருக்கத் தான் செய்கின்றனர். 











இவர்கள், காயத்துக்கு கட்டுப் போடுவதிலிருந்து, கருக்கலைப்பு வரை, அனைத்து சிகிச்சையிலும், வித்தகர்களாக செயல்படுகின்றனர். அப்பாவி கிராம மக்கள், குறைந்த செலவில், சிகிச்சை பெறுவதற்காக, இவர்களை நாடுகின்றனர். நாட்டின் மருத்துவத் துறையின் தரம் மேம்பட வேண்டுமானால், ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்து வரும் டாக்டர்களுக்கு, "எக்சிட்' தேர்வு நடத்தி, ஓராண்டு கிராமப்புற மருத்துவமனையில் பணியாற்றிய பின் தான், எம்.பி.பி.எஸ்., பட்டம் கொடுக்கப்பட வேண்டும். 





ஆனால், அந்த ஓர் ஆண்டு காலத்துக்கு, அரசு உதவி மருத்துவர்களுக்கு இணையாக, சம்பளம் வழங்கப்பட வேண்டும். போலி மருத்துவர்களை ஒழிக்க, முறையான சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். இல்லையெனில், எத்தனை நூற்றாண்டுகளானாலும், நம் மருத்துவத் துறையின் தரத்தை, உயர்த்த முடியாது. (
டாக்டர் டி.ராஜேந்திரன், அருப்புக்கோட்டை)

Thursday, August 8, 2013

டாஸ்மாக் போல இதுக்கும் அரசே விலை நிர்ணயிக்குமா...?



இன்று, மனிதனின் வாழ்க்கையில், முக்கிய அங்கம் வகிப்பது மருந்து. ஒரு நாள் உணவில்லாமல், மனைவி இல்லாமல் கூட இருக்க முடியும். ஆனால், மருந்தில்லாமல் வாழ முடியாது. நோய்கள் பெருகி, அதற்கேற்றாற்போல் மருந்துகளின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. 

ஆனால், மருந்துகளின் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதி, இதய நோய், சிறுநீரக பிரச்னை, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு, வாழ்நாள் முழுவதும், மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும். 

இந்த மருந்துகளை வாங்கும் போது, அதன் விலையைக் கேட்டால், தலைச் சுற்றல் வருகிறது. சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தும், "இன்சுலின்' முன்பு, 70 ரூபாய்க்கு விற்றது, இன்று, 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வயதானவர்கள் இரண்டு பேருக்கு, குறைந்தபட்சம், மாதம், 4,000 முதல், 5,000 ரூபாய் வரை, மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது. 

பெரும்பாலான மருந்து கடைகளில், எம்.ஆர்.பி., விலைக்கு மேல், 6 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். இதை, யாருமே கண்டு கொள்வதில்லை.

அரசு, உப்புச் சப்பில்லாத சாதாரண விஷயங்களுக்கெல்லாம், முக்கியத்துவம் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும் போது, மருந்து விஷயத்தை, ஏன் கவனிக்காமல் விட்டு வைத்துள்ளது?

"அத்தியாவசிய மருந்துகளின் விலைகள், கணிசமாகக் குறைக்கப்படும்' என்று, 2006 முதல், அரசு சொல்லிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், மாதா மாதம், விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 



இந்த லட்சணத்தில், போலி மருந்து தயாரித்து, மக்களை ஏமாற்றி, கொள்ளை லாபம் அடிக்கும் கும்பல் வேறு. மகாராஷ்டிராவில் விற்கப்படும் மருந்துகளில், 40 சதவீதம், போலி மருந்துகள் தான் என்று, மருந்துக் கடைக்காரர்களே கூறு கின்றனர். இதெல்லாம், அரசுக்குத் தெரியாதா? 

மத்திய அரசு, உடனடியாக, இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, போலிகளைக் கண்டறிந்து, கைது செய்ய வேண்டும். முக்கியமான மருந்துகளுக்கு, அரசே விலையை நிர்ணயித்து, மருந்து கம்பெனிகளுடன் கலந்து பேசி, முடிவெடுக்க வேண்டும். நிர்ணய விலைக்கு மேல் விற்கும் மருந்துக் கடைகளுக்கு, "சீல்' வைக்க வேண்டும்.

Monday, July 29, 2013

உடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்....


புற்றுநோயில் இருந்துமனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக"காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன..

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதா ன் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக் கும்,ஆராய்ச்சியாளர்க ளுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும்உண்டு.

புற்றுநோய் வந்தபிறகுகொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ்,மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்க ு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள் ளனர்.அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும ், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும் , தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும்விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிற
து.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்கள ைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட் டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளு ம்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும்உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது.அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூட ியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

Friday, May 24, 2013

கோடையில் நீங்கள் இதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்


* வெயிலுக்கு உகந்தது கதர்ஆடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும்.

* வெயில் காலங்களில், ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக, அதிகமான "அல்ட்ரா வைலட்' கதிர்கள் பாயும். இதனால், கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க 'ஆட்டோ ரிப்ளக்ஷன் கிளாஸ்' அணிவது நல்லது.

* உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க, அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

* வியர்வை நாற்றத்தைப் போக்க, குளிக்கும்போது, எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி, கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால், வியர்வை நாற்றம் வராது.



* கோடைக்காலத்தில் வரும் அக்கி, அம்மை நோய்க்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது.

* காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்களை, அருந்துவதைத் தவிர்த்து இந்த சீசனில் கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது அவசியம்.

* ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால், உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

* வட்டமாக அரிந்த வெள்ளரியை, கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால், கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

* மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட, தேங்காய் எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து, மறுநாள் காலை வில்வங்காய் கலந்த சிகைக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பது கோடை காலத்துக்கு உகந்தது.

* குளிக்கும்போது, தேய்ப்பதற்கு என்று நாட்டு மருந்து கடைகளில் தனியாகப் பொடி விற்கப்படுகிறது. இதனை வாங்கி, சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தி வந்தால் முகத்திலும், உடலிலும் எண்ணெய் வழியாமல் நிற்கும்.

* பழ ஜூஸ்களுக்கு, ஐஸ் கட்டிகள் தயாரிக்கும்போது, நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பு கலந்து, "ஐஸ் ட்ரே'யில் ஊற்றி தயாரித்தால், ஜூசில் போடும் போது சுவையாக இருக்கும்.

* இளநீர் காய்களை வாங்கியவுடன், குளிர்ந்த நீரில் போட்டு விட வேண்டும். வெயில் காலத்தில், பனை நுங்குகளை தோலுரித்து சிறு துண்டுகளாக்கி, இளநீருடன் கலந்து குடித்தால், குளிர்ச்சியாக இருக்கும்.

* கோடையில், அதிகமான ஐஸ் கட்டிகள் தேவைப்படும். "ஐஸ் ட்ரே'யில் கொதித்து ஆறிய நீரை ஊற்றி வைத்தால், சீக்கிரமாக "ஐஸ்' கிடைக்கும்.

* கோடையில், குளிர்பானம் அருந்துவதற்கு பதில் சோடா குடிக்கலாம். சிறிது எலுமிச்சை சாறும், உப்பும் சேர்த்து சாப்பிட தாகம் தணியும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...