Wednesday, April 6, 2011

செல்வாவை நாறடித்த மொக்கராசு...


மொக்கராசு ஒரு முறை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார் அதில் 10 வெள்ளாடுகளும் 10 செம்மறி ஆடுகளும் இருந்தன. 

அப்போது அங்கு வந்த செல்வா எப்படியாது நிறைய கேள்விகள் கேட்டு இவனை அழ வைக்க வேண்டும் என்று நினைத்து பல்வேறு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்....

செல்வா: இந்த ஆடுகள் எவ்வளவு புற்களை திண்ணும்...

மொக்கராசு : இந்த வெள்ளாடுகள் 5 கிலோ புற்கள் வரை திண்ணும்

செ: அப்ப அந்த செம்மறியாடுகள்...

மொ : அதுவும் 5 கிலோ புற்களைத்திண்ணும்..

செ : சரி இந்த ஆடுகள் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் நடக்கும்...

மொ : இந்த வெள்ளாடுகள் சுமார் 10 கிலோ மீட்டர் வரை நடக்கும்..

செ : அப்போ இந்த செம்மறியாடுகள்..

மொ : அதுவும் 10 கிலோமீட்டர் வரை நடக்கும்...

செ: சரி இந்த ஆடுகள் எவ்வளவு விலைப்போகும்..

மொ : இந்த வெள்ளாடுகள் 4000 ரூபாய் வரை விற்பனையாகும்..

செ : அப்போ.. இந்த செம்மறியாடுகள்..


மொ : அதுவும் 4000 ரூபாய் வரை விலைப்போகும்..

செ: ஏன்னடா நீ என்ன லூசா.. எல்லாத்தையு்ம் ஒண்ணா சொல்ல வேண்டியது தானே ஏன் இப்படி பிரிச்சி பிரிச்சி சொல்ற...

மொ : ஏன்னா.. இதில் வெள்ளாடுகள் என்னுடைய  சொந்த ஆடுகள்..

செ: அப்போ செம்மறியாடுகள்.. 

மொ : அதுவும் என்னுடைய ஆடுகள் தான்...

செ : .....ம்... என்னால முடியல...


மொக்கை ராசாவை கலாய்க்க வந்த செல்வா தான் காய்ந்து மொக்கராசாவை முறைத்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்..

இது போன்று தான் சொல்வாவை மொக்கராசா நாறடித்தார்..

டிஸ்கி: நீங்கதான் டிஸ்கி போடுவிங்களா நாங்களும் போடுவோம்ல...

டிஸ்கி 1 : இதில் செல்வா மொக்கராசு இருவரும் எங்க கிராம்மத்துல இருக்கிற நம்ம பயபுள்ளைக...


டிஸ்கி 2 : இங்க யாராவது இது மாதிரி இருக்காங்களா... இருந்தா வந்து ஒரு அட்டனசை போட்டுட்டு போங்க..

14 comments:

  1. எப்பா ... ஆளை விடுங்கடா சாமி....

    ReplyDelete
  2. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..

    ReplyDelete
  3. //மொக்கை ராசாவை கலாய்க்க வந்த செல்வா தான் காய்ந்து மொக்கராசாவை முறைத்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்..

    இது போன்று தான் சொல்வாவை மொக்கராசா நாறடித்தார்..//

    என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா....

    ReplyDelete
  4. ஐ .. நானும் வந்தேனே .. ஹி ஹி ..இது என்ன ? படிச்சிட்டு வரேன்..

    ReplyDelete
  5. நான் அந்த மொக்க ராசு வ பார்க்கணுமே ? ம்ம்ம்ம் ...

    ReplyDelete
  6. மொக்கைக்கே மொக்கை தந்த மொக்கை ராசு வாழ்க

    ReplyDelete
  7. வாழ்க வாழ்க எங்கள் மொக்கை தங்கதிற்கு மொக்கை தந்த வள்ளல்...!!!

    ReplyDelete
  8. வாழ்க வாழ்க

    ReplyDelete
  9. உலகம் எங்கிலும் மொக்கை போடும் செல்வா
    நீ மொக்கை நாயகனே
    உலகம் எங்கிலும் மொக்கை போடும் செல்வா
    நீ மொக்கை நாயகனே
    உலகம் எங்கிலும் மொக்கை போடும் செல்வா
    நீ மொக்கை நாயகனே

    ReplyDelete
  10. சூப்பருயா - செல்வாவுக்கு இன்னும் வேணும் - மொக்கராசு வாழ்க நீ

    ReplyDelete
  11. அந்த மொக்கை ராசுவ புடிச்சு, க்லோனிங்’ல 10-30 மொக்கை ராசுவ உருவாக்கி, பதிவுல்ககத்துல விட்ரனும்பா..... இந்த செல்வா இம்சை தாங்க முடியல....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...