Friday, February 4, 2011

தூங்காநகரம் - படவிமர்சனம்படத்தின் கதை :

அருகில் உள்ள நகரங்கலான விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், ஊசிலம்பட்டி-ன்னு நாலு இடத்தில் இருந்து  மாநகர் மதுரைக்கு பிழைக்க வற்றாங்க ஒரு நாலு பேர்... அவங்கதான் (களவாணி விமல், நாடோடிகள் பரணி, நிஷாந்த், டைரக்டர் கௌரவ்) இந்த நாலு பேர் பிரண்ட்ஸ் ஆகராங்க..   குடித்து விட்டு நண்பர்களாகும் இவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தங்களுடைய நட்பை வலுப்படுத்தி கொள்கிறார்கள்... பரணி மனைவியின் சீமந்தம் செய்ய பணத்திற்காக வழுக்கு மரத்தில் ஏறி பணம் ‌ஜெயிக்கிற சீன் மற்றும் பாடல் அருமை...

ஒரு சமூக விரோத கும்பல் துணிக்டையில் உடை மாற்றுகிற ‌பெண்களை ஒளிந்திருந்து செல் போனில் படம் எடுத்து மிரட்டுராங்க... 

நாயகனுக்கு ‌தெரிந்த ஒரு கோயில் பூசாரியின் பெண்ணுக்கு இந்த நிலமை பாரில் ஐய்யர் கண்ணீர் வடிப்பதை பார்த்து அவருக்கு உதவ விமல் வில்லனை போட்டு புரட்டி எடுக்கிறார் கோவத்தில் கல்லை போட்டு அவருடைய கண்னை குருடாக்கிவிடுகிறார்...  ஆந்திரம் அடைந்த வில்லன் ஆட்கள் இந்த நாலு பேரையும் தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்கள்.. 

திரிஷா... என்ற அடை மொழியுடன் வரும்  அங்காடித் தெரு.. அஞ்சலி படத்தில் மதுரை உள்ளுர் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பந்தா பண்ணி விமலுடன் காதல்.. பின் கதையில் இவர்கள் ஒரே ஊர் சின்ன வயசு பழகும் கலைவாணியை இவள் என்று தெரிந்தவுடன் திருமணம் வரை கொண்டு சென்று விடுகிறார் இயக்குனர்..

ஒன்றாக வேலை பார்த்து விட்டு வைகை பாரில் குடித்து விட்டு ஜாலியா இருக்கும் இவர்கள் வில்லனை அடித்த பிறகு அவரவர் ஊர்களுக்கு சென்று  விடுகின்றனர்.

இவர்களை கண்டுபிடித்த வில்லன்கள்... திருமணத்தில் இருக்கும் விமலை கொல்ல மற்ற மூவரையும் விமலை கொலை செய்ய அனுப்பி வைக்கிறது.. அப்படி செய்ய வில்லையென்றால் அவரவர் குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டி பணியவைக்கிறது...


விமலின் திருமணத்திற்கு ‌செல்லும் நண்பர்கள் தன் நண்பனை கொலை செய்ய தனிதனியே முயல்கிறார்கள்... பின்பு மமூவரும் இதற்குதான் வந்தது தெரிய மூவரும் இணைந்து முயல்கிறார்கள்...


முதல் காட்சியில் நால்வரில் ஒருவரை கொன்று எரித்து விடுவது போல் காட்சிகள் நிழல்படத்தில் காட்டப்படுகிறது... அப்படியானால் இந்த நால்வரில் யார் இறப்பது... என்ற படபடப்பு பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது..

நண்பர்கள் மூவரும் விமலை கொல்ல முயற்சித்து தன் நண்பன் என்று மனதுரும் காட்சிகள் நட்பின் இலக்கணததிற்கு புது மரிமாணம்...

இறுதியில் இவர் விமலை கொன்றார்களா..  அல்லது நண்பனுக்காக மனம் மாறினார்களா... என்பதை விருவிருப்பு திகில் என் முடித்திருக்கிற படம் தான் தூங்கா நகரம்.

இந்த நான்கு போரும் மதுரையை சுத்தி தன் வேலையை பார்க்கும் போதும் பாரில் (வைகை பார் அதற்கு பிறந்தநாள் விழா வேறு) குடித்து விட்டு கலாய்க்கும் போதும்... படம் கலகலபாகவும் சிங்கம்புலியின் காமெடியுடன் நகர்கிறது..
வில்லன் அனைவரும் புதுமுகங்கள்  படத்தில் சரியான இடத்தில் சரியான பாடல்களுடன் படம் நகருது... மதுரையில் நடக்கிற அந்தனை விஷயங்களுடன் மதுரையை சுத்தி.. சுத்தி காட்டியிருக்கிறார் டைரக்டர்..

நீ.. சிரிச்சா கொண்டாட்டம்...  பாடல் சரியான கலக்கல் தியாட்டரை ஆடவைக்கிறது.. ஞான கரவேல் அவர்கள் எழுதிய  எட்டு கண்களுக்குள் ஒற்றை பார்வை என்ற பாடல் அருமை படம் முழுக்க இசையால் ஆட்சி செய்திருக்கிறார் சுந்தர் சி. பாபு..

நாலு நண்பர்களுள்  ஈவுஇரக்கம் அற்ற நண்பராக, பிணத்தை எரிக்கும் வேலையில் இருக்கும் இயக்குளர் கௌரவ், தனக்கு விபத்து ஏற்படும் போது தன்னுடைய நண்பர்கள் உதவுவதை பார்த்து மனம் மாரி நட்புக்காக உறுகி நடிப்பிலும் ஜெயித்திருக்கிறார்.. 


வடிவேலு.. படத்தின் ஆரம்பத்திலே தன்னோட குரல்ல கதையை விளக்குறாரு... படம் முழுக்க இசை, ஒளிப்பதிவு,  எடிட்டிங், என ‌அத்தனையும் பாரட்டும் படி இருக்கிறது...  

பாடல்கள் சூப்பர்....


படத்தில் அதிக புது முகங்கள் தன் பங்குக்கு தன்னுடைய வேலையை செய்திருக்கிறார்கள்...
 

மொத்தத்தில் தூங்காநகரம்.. மக்கள் மத்தில் பேசப்படும்

விமர்சம் சரியா...  இல்லையா... ன்னு எனக்கு தெரியாது ஏதோ என் அறிவுக்கு கொடுத்திருக்கிறன்... நன்றாக இருந்தால் வெளிப்படையாக ‌வாழ்த்துங்க.. சரியில்லையா.. மறைமுகமா திட்டுங்க... நன்றி வணக்கம்..

12 comments:

 1. வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்..இப்போ இரண்டு விமர்சனம் படிச்சிட்டேன்..

  ReplyDelete
 3. விமர்சனம் அருமை...

  ReplyDelete
 4. நான் படிச்சிட்டேன்...

  ReplyDelete
 5. //வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்//

  பாரதி என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு.........!!!!
  ஒரே கமெண்ட்ஸ்'ல மொத்தமா ஓட்டிட்டு இருக்கீங்க.....

  ReplyDelete
 6. இனி நான் எதுக்கு படத்தை பாக்கணும்....?
  அதான் எல்லா கதையையும் நீங்களே சொல்லிட்டீங்களே.....

  ReplyDelete
 7. பாரத்... பாரதி... said...

  வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

  நன்றி..

  ReplyDelete
 8. jai said...

  வாழ்த்துக்கள்..இப்போ இரண்டு விமர்சனம் படிச்சிட்டேன்..


  நனறி..

  ReplyDelete
 9. கிறுக்கல்கள் said...

  விமர்சனம் அருமை...

  நன்றி..

  ReplyDelete
 10. அசுரன் said...

  நான் படிச்சிட்டேன்...

  நன்றி..

  ReplyDelete
 11. MANO நாஞ்சில் மனோ said...

  //வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்//

  பாரதி என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு.........!!!!
  ஒரே கமெண்ட்ஸ்'ல மொத்தமா ஓட்டிட்டு இருக்கீங்க.....

  நன்றி..

  ReplyDelete
 12. MANO நாஞ்சில் மனோ said...

  இனி நான் எதுக்கு படத்தை பாக்கணும்....?
  அதான் எல்லா கதையையும் நீங்களே சொல்லிட்டீங்களே.....

  நன்றி..

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...