Tuesday, November 22, 2011

ஜெ., கொடுத்திருக்கும் கசப்பு மருந்து..!


நம் தமிழக அரசு, பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும், விரைவில் மின் கட்டணமும் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இவை, உடனடியாக கசப்பை விளைவிக்கின்றன. இருப்பினும், கசப்பு மருந்து சில சமயங்களில் நன்மை பயக்கவே கையாளப்படுகிறது. அதுபோல், நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க, சில தவிர்க்க முடியாத நடவடிக்கை தேவைப்படுகிறது. 

மேலை நாடுகள், தங்கள் வரம்பை மீறிய வாழ்க்கை முறையை பின்பற்றி, இன்று பல இடையூறுகளை சந்தித்திருக்கின்றன. நாமும் அந்நிலைக்கு தள்ளப்பட வேண்டுமா?இன்று, நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களின் சராசரி விகிதமும் அதிகரித்துள்ளது. அதனால், பல தேவையற்ற செலவுகளை செய்கின்றனர். 

உதாரணமாக, ஒரு சினிமா டிக்கெட் இன்று, 100 ரூபாய்க்கு குறைவில்லை. அதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக உள்ளதா?விடுமுறை உல்லாச பயணம் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்த போதிலும், 14 சதவீதம் வட்டி கொடுத்து, கார் வாங்குவோரின் எண்ணிக்கை குறையவில்லை. ஆகவே, யாவரும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. 

கீழ்மட்ட மக்கள் பெரிதும் கஷ்டத்திற்கு உள்ளாவர் என்பது உண்மை. அரசு, இம்மாதிரி சில முடிவுகள் எடுக்கும் போது, இந்த கஷ்டத்தை தவிர்க்க முடியாது. அரசும் சில முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டும். வீண் செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். 

உணவு பொருட்கள், தானியம், பால், இறைச்சிப் பொருட்களின் உற்பத்திக்கு கைகொடுக்க வேண்டும். ஆடம்பர பொருள் வரிச்சுமையை அதிகரிக்க வேண்டும். பொது போக்குவரத்து நடைமுறை முற்றிலும் சீர்படுத்தப்பட வேண்டும்.பொது வினியோகத் துறையில் அதிக கவனம் தேவை. வினியோகிக்கும் பொருள்கள், கீழ்மட்ட மக்களை சென்றடைகிறதா என்ற கண்காணிப்பை தீவிரமாகச் செயல்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யும் பட்ச்சத்தில் எதிர்கால பிரச்சனைகளில் இருந்து அரசும் மக்களும் காப்பாற்றப்படுவார்கள்.

6 comments:

 1. //ஆடம்பர பொருள் வரிச்சுமையை அதிகரிக்க வேண்டும்.// ஆடம்பர பொருள் என்று எதைச் சொல்கிறீர்கள்? முன்பு ஆடம்பரமாக கருதப்பட்ட பல பொருட்கள் இப்போது அத்தியாவசமான பொருட்களாக மாறிவிட்டன.

  ReplyDelete
 2. ராபின் சொன்னது சரியே, டிவி இல்லாமல் இருக்கமுடியுமா....? கிரைண்டர் மிக்சி இல்லாமல் இருக்க முடியுமா ஹி ஹி....

  ReplyDelete
 3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 4. //கீழ்மட்ட மக்கள் பெரிதும் கஷ்டத்திற்கு உள்ளாவர் என்பது உண்மை. அரசு, இம்மாதிரி சில முடிவுகள் எடுக்கும் போது, இந்த கஷ்டத்தை தவிர்க்க முடியாது.//


  நிச்சயம் நீங்கள் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை. அதனால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர். ஆகவே கீழ்மட்டத்தில் உள்ளோர் எல்லோரும் ஏதோ வாழ்ந்து தொலையுங்கள் இல்லையேல் சாகுங்கள் என்கிறீர்களா?அரச ஆடம்பரங்களை அரைவாசி குறைத்தாலே போதும் செய்வாரா?
  அம்மா! கர்நாடகா கோட்டுக்குப் போக ஆகும் செலவு
  எத்தனை லட்சம்...யார்? வீட்டுப் பணம்.
  கீழ்மட்டத்தைச் சிந்திக்காத எந்த நாட்டு அரசியலும் அர்த்தமற்றவை.அவை கேடுகளைச் சந்தித்தே ஆகும்.

  ReplyDelete
 5. ஊழலும் நிர்வாக குளறுபடிகளுமே இழப்பிற்கு காரணமாகும். ஜெயவுக்கு நிர்வாகமே தெரியாது, கண்மூடித்தனமாக எடுத்த முடிவு இது. தனியார் பேருந்துகள் எவ்வாறு லாபமாக ஓடுகின்றன?

  ReplyDelete
 6. நல்லா இருக்குங்க உங்க நியாயம். மக்கள் சிக்கன நடவடிக்கைக்காக அம்மாவின் கசப்பு மருந்தா...கொஞ்சம் அதிகமா தெரியலை?

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...