Wednesday, June 29, 2011

சினிமாவில் இனி நடிக்க மாட்டேன்: சூப்பர் ஸ்டார் அதிரடி


தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் யாரெனில் அது ரஜினிகாந்த். அதுபோல் தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் யாரெனில் அது சிரஞ்சீவிதான். இவர் ஆந்திராவில் பிரஜா ராஜ்யம் என்ற கட்சியினை துவக்கி, அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வந்தார்.


நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிரஞ்சீவி கூறியதாவது;
“இனிமேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன். சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடப் போகிறேன். சினிமாவில் முதல்வராக நடித்தது போதும், இனி நிஜத்தில் முதல்வராகப் போகிறேன். அதற்காகத்தான் இந்த சினிமா வேலைக்கு முழுக்கு போட்டிருக்கிறேன்.

பிரஜா ராஜ்யம் கட்சியை பலப்படுத்தி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும். என் மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்” என்றார். கடந்த 2007-ல் வெளிவந்த 'சங்கர் தாதா ஜிந்தாபாத்' என்ற படம்தான் இவர் நடித்த கடைசிப் படமாகும்.

மனித உரிமை மீறல் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் - அமெரிக்கா

 
சர்வதேச மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

உரிய விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் நம்பகமானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான சுயாதீன விசாரணைகளுக்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் முழுமையான ஆதரவினை வழங்கும் என தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் முதன்மைக் கடமைகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறெனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணைகளை நடத்த முடியாத சூழ்நிலை காணப்பட்டால், சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச தரத்தில் விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களை ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியும் என்பதனை இலங்கை அரசாங்கம் துரித கதியில் நிரூபிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கச்சார்பற்ற விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கை அரசாங்கம் உரிய முனைப்புக் காட்டத் தவறினால் மாற்று வழிகள் குறித்து சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சகல குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Saturday, June 25, 2011

180 - திரைவிமர்சனம்


கங்கை ஆற்றங்கரையில் தன் தந்தையின் இறுதிக்காரியங்களை செய்கிறார் மனோவாக வரும் சித்தார்த். அதே போல ஒரு சிறுவனும் அவனது தந்தைக்கு இறுதிக்காரியங்களை செய்கிறான்.

அது முடிந்ததும் தனது பொம்மை காரோடு விளையாடப் போய்விடுகிறான். இதைக் காணும் மனோ, வாழ்க்கையில் மரணம் என்பது வரத்தான் செய்யும், ஆதலால் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறார்.

 சென்னைக்கு வரும் மனோ மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். பத்திரிகை நிருபராக இருக்கும் வித்யா (நித்யா மேனன்) மனோவை சந்திக்கிறார். சில சந்திப்புகளில் மனோ மேல் காதல் கொள்கிறார் வித்யா. தன் காதலை மனோவிடம் சொல்ல, அதை சில காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார். அவரை ஒதுக்கவும் செய்கிறார்.

இதனிடையே ஒரு ஆக்சிடெண்டில் வித்யா சிக்கிக் கொள்கிறார். அவரது மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு கூட்டிச் செல்லும் பொறுப்பு மனோவின் மேல் விழுகிறது. வேறு வழியின்றி கூட்டிச் செல்கிறார்.

அப்போது ஒரு பிளாஷ் பேக் வருகிறது – அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் மருத்துவராக பணியாற்றுகிறார் அஜய் (சித்தார்த்). அங்கு ரேணுகாவை (பிரியா ஆனந்த்) சந்திக்கிறார். இருவருக்கும் பிடித்துப் போகவே திருமணம் செய்துகொள்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு அஜய் தற்கொலை செய்துகொள்கிறார். - பிளாஷ்பேக் முடிகிறது.

மனோ அமெரிக்காவிற்கு வித்யாவோடு வருகிறார். அங்கே அவரை ரேணுகா பார்த்து விடுகிறார்.

மனோ, வித்யாவின் காதலை ஏன் மறுத்தார்? அஜய் தற்கொலை செய்து கொண்டது ஏன்? ரேணுகாவின் நிலை என்ன? என்பதை சுவாரசியமாகக் காட்டி சுபம் போட்டிருக்கிறார்கள்.

சென்னை மாடர்ன் பையன் மனோவாக வருவதிலும், அமெரிக்க மருத்துவர் அஜயாக வருவதிலும் வித்தியாசத்தைக் காட்டி நடித்திருப்பதில் சபாஷ் வாங்குகிறார் சித்தார்த்
.
பிரியா ஆனந்த், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் அசத்துகிறார்கள். காதல் வயப்படும் காட்சிகளில் நித்யா மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால், தன் கணவனை மீண்டும் காணும் போது ஏற்படும் உணர்ச்சிகளை பிரியா ஆனந்த் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நடிகர் சந்திரமௌலி தன்பங்கிற்கு தனது காட்சிகளை நிறைவாகச் செய்திருக்கிறார்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 180 டிகிரி கோணங்களைப் போல அவரது கேமரா கங்கை, சென்னை, அமெரிக்கா என கண்டம் தாண்டியும், கடல் தாண்டியும் விரிகிறது. காட்சிகள் கண்களில் நிறைகிறது.

ரெட் டிஜிட்டல் கேமராவில் சுட்டுத் தள்ளிய காட்சிகள் அனைத்தும், நேரில் பார்த்து ரசிப்பது போல் நம் கண்களில் இயல்பான காட்சிகளாக விரிகிறது. ஷரத்தின் பின்னணி இசை படத்திற்கு இதமாய் இருக்கிறது. பாடல்களும் நன்று.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. அந்த வேகம் இரண்டாவது பாதியில் இல்லை என்றே சொல்லவேண்டும். சுபாவின் வசனங்கள் சில இடங்களில் கைதட்ட வைக்கின்றன.

மொத்ததில் நகரவாசிகளை ரசிக்க வைக்கும் படமாக நூற்றெண்பதை வடிமைத்திருக்கிறார் இயக்குனர் ஜெயேந்திரா.

பிள்ளையார் தெரு கடைசி வீடு... - திரை விமர்சனம்



ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவாவின் அண்ணன், இவர் ஜித்தன் மற்றும் மதுரை வீரன் படத்தின் மூலம் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள"பிள்ளையார் தெரு கடைசி வீடு" படத்தை இயக்குனர் திருமலை கிஷோர் அவர்கள், ஒரு கிராம கதையை மையமாகவைத்து, இளகிய மனம் படைத்த ஒரு இளைஞன், அவரது அன்பான குடும்பம், நண்பர்கள் மற்றும் அவரது காதலை சேர்த்து குதூகலமிக்க ஒரு குடும்ப பாங்கான திரைபடத்தை இயக்கியுள்ளார்.

கணேஷாக வரும் (ஜித்தன் ரமேஷ்) ஒரு பெரிய பண்ணையாரின் மகனாக வருகிறார். அவருடைய முழுபொழுதுபோக்கு மற்றும் தலையாய பொறுப்பாக அவர் கருதுவது தனது கிராமத்து நண்பர்களுடன் குடித்து பொழுதைகழிப்பதும், ஜல்சா படங்களுக்கு செல்வது மற்றும் கிராமத்தினரிடையே சிறு சிறு கலகங்களை உண்டுபண்ணுவதையே தனது வாழ்கையின் லட்சியமாக கருதுகிறார்.

ஒரு அதிகாலையில், இவர் ஒரு இடத்திற்கு செல்ல வேகமாக முற்படும் பொழுது சந்தியாவை (சஞ்சிதபடுகோனே) இடித்து விடுகிறார்.முதல் பார்வையிலேயே காதல் வயபடுகிறார். மேலும் கணேஷுக்கு சந்தியா தனது தங்கையின் தோழி என்றும் அவர் நகரத்தில் இருந்து தனது வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் தனது காதல் கைகூடும் என்று நம்புகிறார்.
 
மேலும் கணேஷ் தன்னை தானே, ஒரு வழிகாட்டியாக கூறிக்கொண்டு சந்தியாவை கிராமத்தின் நாலாபுறமும்அழைத்துச்சென்று மகிழ்ச்சி அடைகிறார் . கணேஷின் மாமாவாக வரும் இளவரசு ஒரு குடிகாராகவும், மிகுந்த கடனாளியாகவும் வருகிறார். அவர் தொடர்ந்து கணேஷின் அத்தை மற்றும் மகள் வள்ளி (சுஹாசினி) இருவரையும் காரணமில்லாமல் திட்டிக்கொண்டு இருக்கிறார். இவர்கள் கணேஷின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷின் மீதுள்ள மரியாதை நிமித்தமாக இதை பொறுத்து கொள்கிறார். குடிகார மாமா கணேஷின் தந்தையையும் விட்டுவைக்க வில்லை, அவரையும் காரணமில்லாமல் வசைபாடுகிறார். கணேஷின் அத்தை குடும்பம், கணேஷுக்கும் அவரது தந்தைக்கும் உறுதுணையாக உள்ளார்கள். சிறிது நாட்களுக்குள், சந்தியாவும் கணேஷின் மீது கொண்டுள்ள காதலை உணர்கிறார், ஆனால் தன்னுடைய காதலை வெளிபடுத்தாமல் தக்க சந்தர்பத்திற்காக காத்திருக்கிறார்.

கதை இவ்வாறாக நகர்ந்து கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத விதமாக கணேஷின் மாமா தனது மகளை ஒரு உள்ளூர் ரௌடிக்கு திருமணம் செய்துவைக்க பார்க்கிறார். இதற்கு பிரதிபலனாக தனது கடன் அனைத்தையும் முழுமையாக தீர்த்து விடலாம் என்று எண்ணுகிறார். இதை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியாத கணேஷின் அத்தையும் மகள் வள்ளியும், கணேஷின் தந்தை உதவியை நாடுகிறார்கள்.

குடிகார அப்பனிடமிருந்து வள்ளியை காப்பாற்ற இருக்கும் ஒரே நிரந்தர தீர்வாக கணேஷின் குடும்பம் நினைப்பது,கணேஷுக்கும் வள்ளிக்கும் மணம் முடிப்பது என்று முடிவு செய்கிறார்கள். இந்த முடிவு, கணேஷ் இல்லாத நேரத்தில் எடுக்கப்படுகிறது. இது தனது காதலை வெளிபடுத்த சந்தர்பத்தை எதிர்நோக்கி இருக்கும் சந்தியாவிற்கு பேரிடியாக விழுகிறது.

சந்தியா கணேஷின் மீதுள்ள காதலுக்கும் , அவரது குடும்பத்தின் மீதுள்ள பாசத்திற்கும் இடையே ஒரு போராட்டத்தை நடத்துகிறார், இதில் இவர் எதை தேர்ந்தெடுக்க போகிறார் ? மேலும் சந்தியா ஒரு எதிர்பாராத ஆச்சிரியபடதக்க முடிவு எடுக்கிறார். அந்த முடிவு என்ன? கணேஷ் சந்தியாவை மணந்தாரா இல்லை வள்ளியை மணந்தாரா? கணேஷ் உண்மையிலேயே ஒரு இளகிய மணம் படைத்தவர் தானா இல்லை அவருக்குள் ஏதேனும் ரகசியம் புதைந்து கிடைகிறதா? அது அவருடைய குடும்பத்தை உலுக்குவதாக அமையுமா? பதில்வெள்ளித்திரையில்......................

இந்த படத்தின் கதைகளம் ஏற்கனவே பல முறை பயணிக்கப்பட்ட கதையாக இருந்தாலும் இயக்குனர் திருமலைகிஷோர் தனக்கென தனி யுக்தியை கையாண்டு கதையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். இதனால் இக்கதை, இதுபோல் வந்த படங்களில் இருந்து தனித்து தருகிறது. 
 
ஜித்தன் ரமேஷுக்கு இந்த படம் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு மறு அவதாரம் என்றே கூற வேண்டும்.அவர் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. சஞ்சித படுகூனே கன்னடத்தில் ஒரு வலம் வந்திருந்தாலும்,அவருடைய கதாபாத்திரம் புதுமுகம் சுஹாசினியை ஒப்பிடும் பொழுது சற்று குறைவாகவே உள்ளது. கணேஷின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷ் இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். மாமாவாகவரும் இளவரசு, தனது இயல்பான நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

பன்னிர்செல்வத்தின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்தின் வனப்பையும், செழுமையையும் மிக சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். எ. ஆர். மோகனின் கலைத்தன்மையின் அமைந்த வீடே படத்தின் தலைப்பாக கிடைத்தது பெருமை. பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு நமது செவிகளில் ரிங்காரம் இடவில்லை. காமெடியும் சுமார் ரகம் தான்.இதனை தவிர்த்து "பிள்ளையார் தெரு கடைசி வீடு" குடும்பத்தோடு கண்டுகளிக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நடிகர்கள் : ஜித்தன் ரமேஷ், சஞ்சித 
படுகோனே, சுஹாசினி, ஜெயா பிரகாஷ், இளவரசு, சூரி, துளசி, அகிலா.
இயக்கம் : திருமலை கிஷோர்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்: ஆர். பி. சௌத்ரி.
இசை : சக்ரி
ஒளிப்பதிவு: எம். வி. பன்னிர்செல்வம்
எடிட்டிங் : வி. ஜெய் சங்கர்
எழுத்து: நாகராஜன், திருமலை கிஷோர்
சான்றிதழ் : யு .

Friday, June 24, 2011

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கத்தரி!


கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.

இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. 


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான வேதிப்பொருட்கள் அர்ஜினைன், லுஸைன், நிகோடின் அமிலம், சொலசோடைன், டையோஸ்ஜெனினி, டிரான்ஸ், கெபெய்க் அமிலம், டேடுரடியோல்.


ஆஸ்துமா நோயை குறைக்கும்

கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்; சிறுநீர்க் கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும்; வாயில் எச்சில் சுரக்க உதவும். வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது. வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுத்தப்படுகிறது.

கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். காலின் வீக்கத்தை குறைப்பதற்கு அப்பகுதியில் பூசிக்கொள்வார்கள். இதை பிழிந்து சாறு எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவதன் மூலம் வியர்வையை தடைசெய்யலாம்.


கொழுப்புக்கு எதிரானது

மேலும் கொழுப்பு சேர்வதற்கு எதிரானது. கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவினைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தினை சரிப்படுத்த சிறந்த உணவாகும். உடலில் கூடுதலாக உள்ள கொழுப்புச்சத்தின் அளவை கட்டுப்படுத்த கத்தரிக்காய் உதவுகிறது. அத்துடன் இது ஒரு போஷாக்கு நிறைந்த உணவாகையால் ஏழைகளின் இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது,

ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்த ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவத்தை தடுக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலநோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது. நசுக்கப்பட்ட கனியானது வெங்குரு மற்றும் வெயில் காரணமாக முகம் சிவந்திருத்தலை போக்க வல்லது.

Thursday, June 23, 2011

ராணாவில் வடிவேலு... ரஜினியின் பெருந்தன்மை...


ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் வடிவேலு தாறுமாறாக விஜயகாந்தை விமர்சித்தார். அவரது இந்தப் போக்கால் அதிருப்தியடைந்த ரஜினி, ராணாவில் வடிவேலுவுக்கு தருவதாக இருந்த பாத்திரத்தை கஞ்சா கருப்புக்கு கொடுத்தார்.

திரையுலகில் இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கெனவே அரசியல் காரணங்களால் வாய்ப்புகளை இழந்துவிட்ட வடிவேலுவுக்கு இது பெரும் சரிவாகவும் பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, தனது நிலை குறித்து விளக்கமும், ராணா பற்றிய தனது கருத்துக்களுக்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். உடல்நலம் சீரடைந்து, மீண்டும் ராணா பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள ரஜினிக்கு, வடிவேலுவின் நிலை சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்க்க முடிவு செய்து, அதை இயக்குநர் ரவிக்குமாரிடமும் கூறிவிட்டாராம். அதேநேரம், வடிவேலுவுக்கு பதில் சேர்க்கப்பட்ட கஞ்சா கருப்புவும் படத்தில் இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

Monday, June 20, 2011

TOP 10 பிளாக்கர்ஸ்... புதிய பட்டியல்...


வாராவாரம்  சினிமாத்திரைப்படங்கள் தான் வரிசைப்படுத்தப்படுகிறது. ஒரு சின்ன மாறுதலுக்கு பிளாக்கர்ஸ் வரிசைப்படுத்தினால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன். அதன் விளைவுதான் இது.

ஆனால் பிளாக்கர்ஸ் வரிசைப்படுத்துவது கடினமான வேலைதான் அதனால் தான் இப்படி...

பிளாக்கர்களை வரிசைப்படுத்தியதில் 
முதல் 8 இடத்தில் இவர்கள் தான்


பிளாக்கர் பட்டியலில் 2 இடத்திலும் இவரும்


பிளாக்கர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இவர்தான்.


அடுத்த வாரம் புதிய பட்டியலுடன் சந்திப்போம்..

எப்பூடி....

Wednesday, June 15, 2011

சத்தமில்லாமல் ஒரு வன்முறை- மனதுக்குள் கண்ணீர் சிந்தும் மூத்தோர்கள்


முதுமை என்பதும் மற்றுமொரு குழந்தைப் பருவம்தான் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் புரிந்து கொள்வதில்லை. இதன் காரணமாகவே இன்றைக்கு வீட்டில் இருக்கும் மூத்தவர்களை உதாசீனப்படுத்துவது அதிகரித்து வருகிறது.

சத்தமில்லாத வன்முறை

இந்தியாவில் மட்டும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 9 கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் பலரும் மகன் மற்றும் மருமகள்களால் சத்தமில்லாமல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மூத்த குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்கள் 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

உதாசீனத்தால் பாதிப்பு

இந்த வன்முறை சம்பவங்கள் மூத்த குடிமக்களை பெரிதும் பாதித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் செய்யும் உதாசீனம் அவர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்துவதும் தெரியவந்துள்ளது. நமக்கும் முதுமை வரும் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொண்டு வயதானவர்களின் மீதான வன்முறைப் போக்கினை கைவிட வேண்டும்.

முன்பெல்லாம் மாமியார் கொடுமைதான் அதிகம் பேசப்படும். ஆனால் இன்றோ மருமகள்களால் அவதிப்படும், அல்லலுறும், சித்திரவதைக்குள்ளாகும் மாமியார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்.

வீட்டில் நிலவும் இப்படிப்பட்ட நிம்மதியில்லாத நிலைமை, அல்லலிருந்து தப்பிக்க விரும்புவது ஆகியவை காரணமாக உறவுகள் எல்லாம் இருந்தும் கூட முதியோர் காப்பகங்களை நாடி வரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பல வீடுகளில், பிள்ளைகளே, தங்களது பெற்றோர்களை காப்பகஙக்ளுக்கு அனுப்பி வைத்து விடும் அவலங்களும் கண் கூடாகி வருகிறது.  (நன்றி தட்ஸ் தமிழ்)

வயது முதிர்ந்தவர்களுக்காக உதவி புரிவதற்காகவே ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 14, 2011

ஜெயலலிதாவுடன் சோனியா தூதர் திடீர் சந்திப்பு..!



டெல்லி வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவை நேற்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஜெயலலிதாவை சந்தித்துள்ள முதல் முக்கிய காங்கிரஸ் தலைவர் ஷீலா என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட முக்கியமாக, சோனியாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஷீலாவும் ஒருவர். எனவே இந்த சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சோனியா சார்பில் ஜெயலலிதாவை ஷீலா சந்தித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அங்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து ஜெயலலிதாவை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வந்து சந்தித்தனர். அதில் முக்கியமானவர் ஷீலா தீட்சித்.

தமிழ்நாடு இல்லம் வந்த ஷீலா தீட்சித், ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது, இது கர்ட்டசி கால் (மரியாதை நிமித்தமான சந்திப்பு). முதல்வராகப் பதவியேற்றதற்காக ஜெயலலிதாவுக்கு வாழ்தது தெரிவித்தேன் என்றார் ஷீலா.

அதற்கு மேல் செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டார் ஷீலா. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஷீலா கூறினாலும் கூட சோனியா சார்பாகத்தான் ஷீலா வந்து சந்தித்திருப்பதாக கருதப்படுகிறது.

ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தின்போது சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்று பேச்சு நிலவி வந்தது. இருப்பினும் இந்த சந்திப்பால், திமுகவுடனான கூட்டணி முழுமையாக முறிந்து போய் விடலாம் என்று கருதிய சோனியா கடைசி நேரத்தில் சந்திப்பைத் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தன் சார்பில் ஷீலாவை அவர் அனுப்பி வைத்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதேபோல பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், சிபிஐ தேசியச் செயலாளர் ராஜா ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து ராஜா கூறுகையில், ஜெயலலிதாவுடனான சந்திப்பின் போது அரசியல் பற்றி பேசவில்லை. மின்சார பற்றாக்குறையாலும், கடன்சுமையாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் ஜெயலலிதாவுக்கு பாரதீய ஜனதா சார்பில் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது டெல்லி வரும் போது சந்திப்பதாக தெரிவித்தார். அதன்படி இந்த சந்திப்பு நடைபெற்றது என்றார்.

Friday, June 10, 2011

இலவச கலைஞர் டிவி அனைத்தும் அனாதை இல்லங்களுக்கு அளிக்கப்படும்-ஜெ



தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தற்போது அரசின் வசம் மீதமுள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் கலர் டிவி பெட்டிகளையும் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இந்தத் திட்டடத்தின் கீழ் அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 1 லட்சத்து 27 ஆயிரம் டிவி பெட்டிகள் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த அரசு முழுமையாக கைவிட்டு விடவில்லை. தரமான கல்வியைத் தருவதாக அந்தத் திட்டம் தற்போது இல்லை. எனவே அதை சீர்படுத்தி தரமான கல்வியுடன் கூடியதாக அதை அமல்படுத்தும் நோக்கில்தான் இந்த ஆண்டு அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்.

தலைமைச் செயலகத்தை கோட்டைக்கு மாற்றியதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நிர்வாக குளறுபடிகளைத் தவிர்க்கவே தலைமைச் செயலகத்தை கோட்டைக்கு மாற்றினோம்.

அதேசமயம், புதிய தலைமைச் செயலகம் உரிய முறையில் பயன்படுத்தப்படும் என்றார் ஜெயலலிதா.

மேலும், இனி நிலப்பட்டா மாற்றத்திற்காக மக்கள் தாசில்தார் அலுவலகங்களுக்குச் செல்லாமல் கிராம நிர்வாக அதிகாரிகளிடமே அதற்காக விண்ணப்பித்து நிலப்பட்டாக்களைப் பெறலாம் என்றும் முதல்வர் அறிவித்தார்.

Wednesday, June 8, 2011

திமுக ஆல் அவுட் - சோனியா தீர்மானம்...

நடந்து முடிந்த தேர்தலில்  எதிர்கட்சியின் அங்கீகாரம் கூட கிடைக்காத திமுகவுடன் உறவை புதுபிக்க விரும்பாத சோனியா அவர் ஆட்சிகாலத்தில் நடத்திய ஊழலை  தூசி தட்டி எழுப்புகிறார். .
ராஜா,  கனிமொழி அதைதொடர்ந்து தற்போது தயாநிதிமாறன என சிபிஐ வலைக்குள் சிக்கவைத்து கைது என பல்வேறு நடவடிக்கை தொடர்கிறது...
அதை சித்தரிக்கும் வகையில் தினமலர் வெளியிட்ட கார்டூன்..


நன்றி : தினமலர்

Tuesday, June 7, 2011

தூள், சாமி போன்ற கதைக்காக காத்திருக்கிறேன், அதான் லேட்-விக்ரம்



தூள், சாமி மாதிரி அதிரடி ஆக்ஷன் கதைகளில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார் நடிகர் விக்ரம்.

சமீபத்தில் தனது புதிய படம் ஒன்றிற்காக நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தில், தூள், சாமி போன்ற படங்களில், ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாமே சரியாக இருந்தது.

அந்த மாதிரி படங்களில் நடிக்கததான் நான் விரும்புகிறேன். எனது அடுத்த படம் இந்த மாதிரி அமையும்.

கிளாஸிக், மசாலா என எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

எனது ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி விழுவதை இனி தவிர்க்க முயற்சித்து வருகிறேன். இந்த இடைவெளியை நானாக விரும்பி தேடிப்போவதில்லை. சில படங்களில் அப்படியாகிவிடுகிறது. இதற்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை," என்றார் விக்ரம்.

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குபவர் சுசீந்திரன். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி, நாம் முன்பே அறிவித்த தீக்ஷா சேத். பிரபல தெலுங்கு நடிகை.

இந்தப் படத்திலும் சுசீந்திரன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொடர்கிறது.

Monday, June 6, 2011

பாரதிராஜா - அமீர் மோதல்!


தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த சங்கத்தில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் என மொத்தம் 2,100 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த முறை தலைவராக பாரதிராஜா இருந்து வந்தார்.

மீண்டும் போட்டி

வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பதவிக்கு எழில் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பாரதிராஜாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு அமீர் போட்டியிடுகிறார். இவருடைய அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு சேரன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ஜனநாதன் போட்டியிடுகிறார்.

செயற்குழு உறுப்பினர்கள்

இதே அணியில் வசந்தபாலன், சிம்புதேவன், பிரபு சாலமன், ஏ.வெங்கடேஷ், பாலசேகரன் உள்பட பலர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

Thursday, June 2, 2011

ராம்தேவுடன் கலமிருங்குகிறார் அன்னா ஹசாரே ..!


ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு ராம்தேவுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.  ஊழல் புகாரில் சிக்கும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும், அதனை வரையறுக்கும் குழுவில் பொதுமக்கள், பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, கடந்த மாதம் 5ம் தேதி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டம் நாடு முழுவதும் ஆதரவு அலைகளை ஏற்படுத்தியதால், அவர் உள்பட 5 சமூகசேவகர்கள், அமைச்சர்கள் அடங்கிய லோக்பால் கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் லோக்பால் மசோதாவின் அதிகார வரம்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கறுப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும், ஊழலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 4ம் தேதி டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக யோகா குரு ராம்தேவ் அறிவித்தார். அவர் உண்ணாவிரத திட்டத்தை கைவிட மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தது. வருமான துறை அதிகாரிகள் அவரை சந்தித்து, கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். பிரதமர் மன்மோகன் சிங்கும் கடிதம் எழுதினார்.  இதற்கிடையே டெல்லி வந்த பாபா ராம்தேவ்வை அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில்சிபல், பவன் குமார் சுபோத் காந்த் சகாய் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை ஏற்க ராம்தேவ் மறுத்து விட்டார். அவரிடம் மீண்டும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இதற்கிடையே ராம்தேவ் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, தானும் அவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது, ‘‘ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அரசு பலவீனப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ஜூன் 5ம்தேதி முதல் ராம்தேவுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க போகிறேன். எங்கள் கோரிக்கைகளை ஏற்பதாக அரசு வாக்குறுதி அளித்தது. இப்போது எங்களை ஏமாற்ற நினைக்கிறது. ஊழலுக்கு எதிராக நாங்கள் இணைந்து போராடுவோம். லோக்பால் மசோதா குறித்து எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை’’ என்றார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...