Saturday, June 22, 2013

ஆட்டோ தொழிற்சங்கங்களின் அடாவடியும்... காற்றில் பறக்கும் அரசின் உத்தரவுகளும்



நீண்ட இடைவேளைக்குப் பறகு, தமிழக அரசு, முதல், 2 கி.மீ., தூரத்திற்கு, குறைந்தபட்சக் கட்டணம், 20 ரூபாயும், கூடுதல் ஒவ்வொரு கி.மீ., தூரத்திற்கும், 10 ரூபாய் என்ற அடிப்படையிலும், கட்டணம் நிர்ணயித்துள்ளது.


சென்னை நகரில், இன்றைய கணக்குப்படி, 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவை, ஏறத்தாழ, 10 தொழிற்சங்க அமைப்புகளைச் சார்ந்து இயங்கி வருகின்றன.


இவற்றில், 50 முதல், 60 சதவீத ஆட்டோக்கள், இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட சங்கங்கள் எல்லாம் கூடி, தமிழக அரசின் புதிய ஆட்டோ கட்டணத்திற்கு எதிராக, போர்க்கொடி உயர்த்தியுள்ளன.



இந்தக் கூட்டமைப்பு, தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதத்திற்குப் பதிலாக, முதல், 2 கி.மீ.,க்கு, 30 ரூபாயும், கூடுதல் கி.மீ., ஒவ்வொன்றுக்கும், 15 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அதை அடையும் வரை, போராட்டம் தீவிரம் அடையும் என, எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தான், 2007ல், தமிழக அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தை ஏற்க மாட்டோம் என்று நிராகரித்தவர்கள். அதற்குப் பதில், டிஜிட்டல் மீட்டரை, ஆட்டோவில் காட்சிப் பொருளாகப் பொருத்தி, பயணிகளிடம், தம் இஷ்டம் போல, தொகையை பேரம் பேசிக் கறப்பதை, வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்கள்.


இது ஒரு புறம் இருக்க, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற, அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களில், ஆட்டோ கட்டணம், முதல், 2 கி.மீ.க்கு, 14 முதல், 16 ரூபாய் வரையும், அடுத்த ஒவ்வொரு கி.மீ., தூரத்திற்கும், 7 அல்லது 8 ரூபாயாகவும், அந்த அரசுகள் நிர்ணயித்த கட்டணம், இன்றும் எந்தவித சிக்கலும் இன்றி, அமலில் இருந்து வருகிறது.

உயர்ந்த வாழ்க்கைத் தரமும், கூடுதல் பணப் புழக்கமும் உள்ள, அந்த நகரங்களில் எல்லாம், ஆட்டோ ஓட்டுனர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தில், ஆட்டோ ஓட்ட முடிகிறது எனும் போது, சென்னை ஆட்டோ ஓட்டுனர்களால் முடியாதா?


ஒரு சின்னக் கணக்கு... ஒருவர், 5 கி.மீ., தூரம் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்ய, எவ்வளவு கட்டணம் தர வேண்டி இருக்கும்?

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், 40 ரூபாய் செலவாகும். தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள, புதிய கட்டணப்படி பார்த்தால், 50 ரூபாய் கொடுக்க வேண்டி வரும். 
ஆனால், தற்போதுள்ள மீட்டர்படி அல்லது நடைமுறைப்படி, குறைந்தது, 80 ரூபாய் வ‹லிக்கப்படுகிறது.


இடதுசாரி அரசியல் செல்வாக்கு படைத்த பெரும்பான்மையினர், ஆட்டோ ஓட்டுனர்களாக இருக்கின்றனர்; அவர்கள், மக்கள் பக்கம் நிற்கக் கடமைப்பட்டவர்கள் என்பதை, நிரூபிக்கும் காலம் இது.

4 comments:

  1. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தான் வந்தால்....?


    புரிதலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. ஆட்டோக்காரர்கள் சரியான கட்டணம் வாங்கினால் நிறைய சவாரி கிடைக்கும். ஆனால் அவர்கள் ஒரே தடவையில் நிறைய சம்பாதிக்கவே விரும்புகிறார்கள். ரிடர்னில் சும்மா சென்றாலும் செல்வார்களே தவிர சரியான கட்டணத்துக்கு கூட வரமாட்டார்கள்
    இதற்கு ஷேர் ஆட்டோக்கள் கொஞ்சம் பரவாயில்லை

    ReplyDelete
  3. என்னதான் கவர்மெண்ட் அப்பிடி இப்பிடி செய்தாலும் ஆட்டுக்காரர்கள் ச்சே ஆட்டோக்காரர்கள் அடங்க மாட்டார்கள் என்பதே உண்மை...!

    ReplyDelete
  4. The government should take stern action to implement the rate fixed by Govt.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...