Saturday, July 27, 2013

ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..!


ஒரு ஊர்ல.. ஒரு வெங்காயம், தக்காளி, ice cream அப்படின்னு மூன்று நண்பர்கள் இருந்தாங்களாம்.

ஒரு நாள் மூவரும் கடற்கரைக்குப் போனாங்களாம். அப்ப சொல்ல சொல்லக் கேக்காம ice cream, தண்ணீருக்குப் போய் கரைஞ்சிப் போச்சாம்.

தக்காளியும் வெங்காயமும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வரும் வழியில் லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.

உடனே வெங்காயம் அழுதுக்கிட்டே கடவுள் கிட்ட வேண்டிக்கிச்சாம். " ice cream செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்போ தக்காளி செத்தப்ப நான் அழுதேன்.. ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா? ன்னு கேட்டுச்சாம். 

அதற்கு கடவுள், "சரி இனிமே நீ சாகும் போது பக்கத்துல இருக்குற எல்லாருமே அழுவாங்க" ன்னு சொன்னாராம். 

அதனால் தான் வெங்காயம் நறுக்கும்போதெல்லாம் நாம் அழறோம்:)))

***********************

ஒரு அதிகாரி, 


"நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது" என்பதில் குறிக்கோளாக இருந்தார். 


அதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் முக சவரம் செய்துகொண்டே குளிப்பார். கழிவறையில் பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்ச்சி பண்ணிக்கொண்டே, வானொலியில் பக்திப் பாடல்கள் கேட்பார். 


இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்தையும் விரயமாக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது. 


மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கை கழுவ வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது செய்திதாளில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. 


கண்ணின் விழி கரண்டியோடு வந்துவிட்டது. 


இப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். 


மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருகிறார். பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார். 


நீதி : *நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது*.

***********************



எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.

பின்னே என்னங்க ... 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து "வாக்குவம் கிளீனர்" வாங்கிக் கொடுத்த பிறகும், வாரத்துக்கு ஒரு விளக்குமாறு வாங்கிக்கிறா.

"உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்" என்று கோபத்தில் கத்தினேன் நான்.

அவள் அமைதியாகச் சொன்னாள்,

"செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??"

1 comment:

  1. கணவன் மனைவி ஜோக் புதுசு. ரசித்தேன்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...