Wednesday, August 28, 2013

ஜாக்கிரதை... இதைக் கவனிங்க முதல்ல..


இதைக் கவனிங்க முதல்ல..

ஆசையாக வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கும் காரில், சொட்டுச் சொட்டாக பெட்ரோல் கசிவதைப் பார்ப்போம். 'நாளைக்கு சரி செய்து விடலாம்... நாளைக்கு சரி செய்து விடலாம்' என ஒரு மாதமேகூட ஓடிவிடும். இதனால், வீணாவது பெட்ரோல் மட்டுமல்ல... பணமும்தான்!

1 நிமிடத்துக்கு, வீணாகும் பெட்ரோல் 2 மில்லி அப்படியானால், ஒரு நாளைக்கு? 2.880 லிட்டர் ஒரு மாதத்துக்கு... 86.4 லிட்டர் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 74.00 எனில், 86.4 லிட்டருக்கு ரூ. 6393.60



இதைக் கவனிங்க முதல்ல..

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வீடு மாற்றி வரும்போது, ஃபேனுக்கான ரெகுலேட்டரை மறந்து விட்டிருப்போம். புது வீடு வந்ததும் அவசரத்தில் ரெகுலேட்டரே இல்லாமல் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இப்படி ஓடுவதால் எவ்வளவு காசு வீண் தெரியுமோ..?!

ரெகுலேட்டர் இல்லாமல் நாள்

முழுக்க ஒரு ஃபேன் ஓடினால் வீணாகும் கரன்ட் 1 யூனிட் மாதத்துக்கு 30 யூனிட் 1 யூனிட் 1 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே... மாதம் 30 ரூபாய் வீண்.



இதைக் கவனிங்க முதல்ல..

ஒரு குண்டு பல்பு மாதம் முழுக்க எரிவதற்கு ஆகும் கரன்ட் செலவு 40 யூனிட் சி.எஃப்.எல் பல்ப் இதேபோல எரிந்தால் 10 யூனிட் மாதம் முழுக்க மிச்சமாகும் தொகை (ஒரு யூனிட் கரன்ட் 1 ரூபாய் என வைத்துக் கொண்டால்)... 30 ரூபாய்.



இதைக் கவனிங்க முதல்ல..

அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தும்போது துணிக்கு ஏற்ற வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். இதற்காக அயன்பாக்ஸில் உள்ள பட்டனை பயன்படுத்தத் தவறினால்... இழப்பு உங்களுக்குத்தான். 

உதாரணமாக நைலக்ஸ் துணிக்கான வெப்பத்தைப் பயன்படுத்தி காட்டன் டிரெஸ்ஸை அயர்ன் செய்தால், ஒருமுறைக்கு இருமுறையாக தேய்க்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 5 செட் டிரெஸ்ஸை இப்படி தேய்த்தால் வீணாகும் கரன்ட் 1/2 யூனிட் மாதத்துக்கு 15 யுனிட் மாதம் முழுக்க வீணாகும் தொகை 15 ரூபாய்.

எரிபொருள் சிக்கனம் உங்கள் பர்ஸூக்கு மட்டும் பாதுகாப்பானது அல்ல, நாட்டின் கஜானாவுக்கும்தான். இதில் சிக்கனம்... தேவை இக்கணம்!

7 comments:

  1. நீங்க சொன்னா எல்லா பாய்ன்டுமே valid pointsதான். நன்றி!

    ReplyDelete
  2. சிறிய விஷயங்க்கள் என நாம
    அலட்சியமாய் இருக்கும் விஷயங்களில்தான்
    அதிக இழப்புகளைச் சந்திக்கிறோம் என்பதைச்
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பயனுள்ள பகிர்வு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நீங்க சொன்னதுல்லாம் மிகச்சிறிய பாயிண்டுகள்தான்.. ஆனா, எவ்வளவு காசை மிச்சப்படுத்தலாம் அதன்மூலம்..

    ReplyDelete
  4. சின்ன சின்ன விஷயங்களில் எவ்வளவு பெரிய லாபங்கள் என்று கணக்குபோட்டால் வியப்பாக இருக்கிறது. அருமையான பகிர்வு நண்பரே.

    ReplyDelete
  5. ஒழுக விடுவதில் எவ்வளவு நஷ்டமென்று 'ஜொள்ளர்கள் 'மட்டுமல்ல ...எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளக்கிய விதம் அருமை !

    ReplyDelete
  6. இது போன்ற விசயங்களை நம்மைப்போன்ற நடுத்தர மக்கள்தான் கவலைப் படவேண்டும்.இப்படி வாயைக்கட்டி வயற்றைக்கட்டி சேமிக்கும் பணத்தைத்தானே மற்றவர்கள் 2ஜி,நிலக்கரி என்று பங்கிட்டுக் கொள்கிறார்களே.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...