Tuesday, October 8, 2013

இனிமேல் அரசியல் இப்படித்தான் இருக்குமா...?


தமிழக முதல்வராக , காமராஜர் இருந்த போது, அவரது பேரன், மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு, மருத்துவக்கல்லுரியில் சேருவதற்கு, அவரிடம், சிபாரிசு செய்யச் சொன்னார். 

அதற்கு, காமராஜர், 'நீ என்ன மதிப்பெண் பெற்றுள்ளாயோ, அதற்கு தகுந்த படிப்பில் சேர்ந்து படித்துக் கொள்' என்று, சிபாரிசு செய்ய மறுத்து விட்டார். ஆனால், இன்றைய அரசியல்வாதிகள், எப்படி தங்களது அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர்? 

பிரதமர் வி பி சிங் அமைச்சரவையில், முன்பு சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவரும், தற்போது, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யுமாக இருப்பவருமான, ரஷீத் மசூத், தன் மருமகள் உட்பட, ஒன்பது மாணவர்களுக்கு, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ், தகுதியில்லாதவர்களுக்கு மருத்துவக் கல்லுாரி அட்மிஷன், லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இப்படி, நாடு முழுவதும், கடந்த, 30 ஆண்டுகளில், பல துறைகளில் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளன. பலருக்கு, அரசு வேலைகளும், பலருக்கு மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில், பல கல்லுாரி படிப்புகளுக்கான சீட்டுகளும் லஞ்சம் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சிக்கியவர், எம்.பி., ரஷீத் மட்டுமே. அதிலும், இன்று மத்தியில் ஆளும் காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியில், ஊழல் என்பது, ராணுவம் வரை புரையோடி கிடக்கிறது. 

இதில், வேடிக்கை என்னவெனில், 'ரஷீத் மசூத் குற்றவாளி' என, நீதிமன்றம் அறிவித்த பின், தண்டனை அளிக்க, சிறப்பு நீதிமன்றம் கூடிய போது, அவரது வழக்கறிஞர், 'என் கட்சிக்காரர், இந்த நாட்டுக்காக, பல ஆண்டுகள் சேவை புரிந்தவர். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. \

தண்டனை விஷயத்தில், அவருக்கு கருணை காட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார். ரஷீத் மசூத், 30 ஆண்டுகளாக, அரசியலில் இருப்பவர். ஆனால், சிக்கிக் கொண்டது என்னவோ, இந்த ஊழல் வழக்கில் தான். இன்னும், சிறை செல்ல வேண்டியவர்கள், பலர் உள்ளனர். 

இவர்களா, காமராஜர் ஆட்சியை தரப் போகின்றனர்? தற்போதைய சூழலில், ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை, அரசு கையகப்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

2 comments:

  1. இனி ஒரு தலைவர் இப்படி பிறந்து வரனும்.

    ReplyDelete
  2. எது நல்லது என்று தேர்ந்தெடுத்த காலம் போய் எது நல்ல மோசம் என்று பார்த்து தேர்ந்தெடுக்கும் கால கட்டத்தில் இருக்கின்றோம்.
    இப்போது போய் இந்த பதிவை தருகிறீர்களே.கொஞ்சம் துாங்கி கனவு கண்டீர்களா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...