ஒரு சிலருக்கு time loop என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜிக் அதுதான் முன்னமே இந்த கேள்வியை கேட்டுவிட்டேன் , என்னடா இது நடந்ததே திரும்ப திரும்ப நடந்து கொண்டிருக்கின்றதே என்றொரு நிலைக்கு ஒரு சிலர் செல்வதுண்டு அதனாலே அவர்களால் இவ்வாறான கான்சப்ட் இல் எடுக்கும் படக்கங்களை ரசிக்க முடியாமல் போய்விடும் , Edge of Tomorrow திரைப்படத்தை ஒரு சிலர் ரசிக்க முடியவில்லை என்பதை பார்த்திருக்கிறேன் , time loop கான்சப்ட் திரைப்படங்கள் பிடிக்கும் என்றால் இது உங்களுக்கான ஒரு திரைப்படமே…
Jun-young (வாயில் நுழையாத பெயர் தான் , என்ன செய்வது அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்) ஒரு பிரபலமான டாக்டர் , வெளி ஊரில் charity வேலைகள் செய்து விட்டு , மீண்டும் நாட்டுக்கு திரும்புகின்ற ஒருவர் , இப்போது இவரது கனவு எல்லாம் தனது மகளை மீண்டும் பார்க்க வேண்டும் என்பதே..
ஒரு வழியாக நாட்டுக்கு வந்து அப்படியே மெர்சல் விஜய் போல ஏர் போர்ட்டிலேயே ஒரு உயிரை காப்பாற்றி விட்டு( பிற்குறிப்பு இதில் ஹீரோயிசக் காட்சிகள் கிடையாது , ஒரு டாக்டர் என்ன செய்வாரோ அதை மட்டுமே காட்சிப்படுத்தி இருப்பார்கள் வீணாக பீதியடைய வேண்டாம்) , தனது மகளை சந்திக்க செல்லும் போது வழியில் ஒரு டாக்ஸி ஆக்சிடண்ட் ஆகி , அதன் ட்ரைவர் குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்க , உடனே அவனுக்கு முதலுதவி செய்துவிட்டு , தனது மகளுக்கு தான் வருவதற்க்கு கொஞ்சம் லேட் ஆகும் என்பதை தெரிவிக்க , ஒருத்தன் போன் காலை ஆன்சர் செய்து , உங்கள் மகள் ஆக்சிடன் ஒன்றில் மாட்டிக் கொண்டால் என்று சொல்ல , உடனே போனை கட் செய்து விட்டு அப்படியே ரைட் சைடில் ஒரு லுக் விட எதிரே டாக்ஸி ட்ரைவர் இடித்தது தன் மகளைத்தான் என்று அறிந்து கொண்டு அவளை ஓடிச்சென்றூ பார்க்க அவள் இறந்து விட்டாள் என்பதை டாக்டர் அறிந்து கொண்டு அடுத்த நிமிடமே , டைம் லூப் பிரச்சனை தொடங்குகின்றது..
இப்போது மீண்டும் Jun-young ப்ளைட்டில் இருந்து கண் முழிக்கின்றார் , ஏற்கனவே நடந்த அனைத்தும் திரும்ப நடக்கின்றது , இந்த முறை மகளை காப்பாற்ற முயற்சி செய்து தோற்றுப் போக , திரும்பவும் முதலில் இருந்து எல்லாம் நடக்க தொடங்குகின்றது , இப்படியே போய் கொண்டிருக்க இந்த டைம்லூப் டாக்டருக்கு மட்டும் அல்ல அங்கு இன்னும் ஒருவனுக்கு நடந்து கொண்டிருக்கின்றது என்பதை டாக்டர் அறிந்து கொள்கின்றார் , மற்றையவனின் மனைவி ஆக்ஸிடண்ட் ஆகிய டாக்ஸியில் பயணித்தவல் ஆக்ஸிடண்டில் அவளும் இறந்துவிட்டிருப்பாள் , இப்போது இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இதை தடுக்க முயற்சிக்கிறார்கள் , ஒருத்தன் மகளை காப்பாற்ற வேண்டும் , இன்னும் ஒருவன் மனைவியை காப்பாற்ற வேண்டும்.
இப்படியே கதை தொடர இதே டைம்லூப்பினால் மூனாவதாக ஒருத்தனும் பாதிக்கப் பட்டிருப்பான் , அவன் யார் , இவர்கள் மூவருக்கும் என்ன சம்மந்தம் , ஏன் இதெல்லாம் நடக்கின்றது , இவர்கள் காப்பாற்ற நினைத்தவர்களை காப்பாற்றினார்களா என்பதையெல்லாம் படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.
a great script.
நன்றி. முகநூலில்...Aashik Stark
வணக்கம் நண்பரே.. !
ReplyDeleteஇன்னும் உங்களின் தளங்களிற்கான வருகையாளர்களுக்காக மற்றும் வாசகர்களுக்காக facebook போன்ற சமூகவலைத் தளங்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்களா... வேண்டாம்.. இவை போன்ற சமூக வலைத்தளங்கள் தற்காலிகமானவை. தங்களின் வியாபார உத்தியாக இலாபத்திற்காக எந்த நேரத்திலும் கொள்கைகளை மாற்றி, உங்கள் இணையத்தள வாசகர்களை தடம் மாற்றலாம்.
ஆகவே இது போன்ற சமூகப்பொறுப்பற்ற தளங்களிலிருந்து வெளிவாருங்கள்.. www.tamilus.com போன்ற தளங்களின் வளர்ச்சிக்கு உதவுதன் மூலம் உங்கள் இணைய வாசகர்களின் இருப்பை உறுதி செய்யுங்கள்.
நன்றி
தமிழ்US
May I know the name of the movie? Unable to see anywhere in this post.
ReplyDelete