Monday, April 16, 2018

இயற்கையிடம் தான் எத்தனை பாடங்கள்!!


மழை நின்ற பிறகும் தன்னிடம் இருக்கும் இலைகளில் தேங்கிய மழைநீரைக் கொண்டு மீண்டும் ஒரு மழையைப் பொழிகிறது மரங்கள்.

மழை பெய்து ஓய்ந்து, ஊரே அடங்கியதும் மறுநாள் சத்தமே இல்லாமல் குடையைத் தூக்கி கொண்டு வருகிறது காளான்.

குளத்து தண்ணீரில் பிறந்து, அதிலேயே வளர்ந்து வாழும் தாமரையின் இலை, அந்த தண்ணீருடனே பட்டும் படாமல் தான் இருக்கிறது.

காற்று அடித்ததும் கீழே கிடக்கும் காகிதமும் பறந்து பட்டமாக முடியற்சிக்கிறது. உயரத்தில் பறக்கும் பட்டமும் காற்று நின்றதும் தரைக்கு வந்து குப்பை ஆகிறது.

தனக்கு எந்த இரை கிடைத்தாலும் அதை தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணுவதோடு மட்டுமல்லாமல், கூடு கட்டத் தெரியாத வேறு ஒரு பறவைக்கும் தன் கூட்டில் முட்டை இட அனுமதி தந்து அதை அடைகாக்கவும் செய்கின்றன காக்கைகள்.

நாம் மரமா, காளானா, தாமரை இலையா, காற்றா, காகமா என்பது நாம் வாழும் முறையில் தான் இருக்கிறது. 

மரம் எனில் பிறரை மகிழ்வியுங்கள்.
காளான் எனில் பிரச்சனை தீர்ந்ததும் தீர்வு கொண்டு வராதீர்கள். 
தாமரை இலை எனில் வளர்ந்து விட்டோம் என்பதற்காக வளர்த்தவர்களிடமே பட்டும் படாமல் இருக்காதீர்கள்.
காற்று எனில் பிறருக்கு முடிந்த அளவு வாய்ப்பைத் தாருங்கள். 
காகம் எனில் இயலாதவனுக்கு உதவுங்கள்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...