Showing posts with label அழகிரி. Show all posts
Showing posts with label அழகிரி. Show all posts

Wednesday, March 27, 2013

திரும்புகிறது 2001 மு.க. அழகிரியை வைத்து அதிமுக போடும் தேர்தல் கணக்கு!


ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசில் இருந்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக விலகிய பின்னரும் திடீரென மு.க. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பை தொடருவதற்கு அதிமுக அரசு முடிவு எடுத்ததன் பின்னணியில் ஒரு தேர்தல் கணக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிற திமுகவின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்து போனார் மு.க. அழகிரி. மற்ற திமுக அமைச்சர்களுடன் சேராமல் தனியே போய் ராஜினாமா கொடுத்தார். 

அத்துடன் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றோரை தனியே சந்தித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அண்மையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தின் போது 'சென்னையில்' இருந்து மதுரைக்கு போய் முகாம் அடித்திருந்தார். 

இப்படி திமுகவில் கலகக் குரலாக தம்மை வெளிப்படுத்தி வருகிறார் மு.க. அழகிரி. இந்நிலையில்தான் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்பும் கூட அழகிரிக்கான போலீஸ் பாதுகாப்பை தொடர அதிமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 

அத்துடன் லோக்சபா தேர்தல் காலம் வரை அழகிரி முகாம் மீது எந்த வழக்கும் போட வேண்டாம் என்றும் அழகிரி தரப்பு வழக்குகளில் கடுமை காட்ட வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டிருக்கிறlது என்கிறார்கள். 

அதிமுக அரசுக்கு மு.க அழகிரி மீது அப்படி என்ன கரிசனை என்றால் 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களேபரம் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தத் தேர்தலில் திமுக தலைமையோடு மோதிக் கொண்டிருந்த அழகிரி தமக்கும் செல்வாக்கு இருக்கு என்பதைக் காண்பிப்பதற்காக திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான போட்டி வேட்பாளர்களை நிறுத்தி கலகமூட்டினார். 

அவர் நினைத்தபடியே மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் தோற்றுப் போயினர். இதனால் எப்படியும் வரும் லோக்சபா தேர்தலிலும் திமுகவுக்கு அழகிரி ஆப்படிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் மீதான இறுக்கத்தை தளர்த்தியிருக்கிறதாம் அதிமுக அரசு. தலைமை மீதான கோபத்தில் லோக்சபா தேர்தலில் ஏதாவது கலாட்டா செய்வதன் மூலம் ரிசல்ட் தங்களுக்கு சாதகமாகிவிடும் என்பதுதான் அதிமுகவின் கணக்காக சொல்லப்படுகிறது.

Thursday, November 17, 2011

நல்லா இருக்க மாட்டான் தமிழன்!... இப்படிக்கு தன்மானத்தலைவர்...



"தமிழனுக்குள்ள ஒரே சாபக்கேடு, எத்தனை முறை குட்டுபட்டாலும் புத்தி வராது' என, அங்கலாய்த்திருக்கிறார் கருணாநிதி. உண்மைதான்! தமிழினத்திற்காகப் போராடும், "தமிழினத் தலைவன்' கருணாநிதியை, வீட்டுக்கு அனுப்பி விட்டனரே, இந்த நன்றி கெட்ட தமிழர்கள். 
 
தன் அளப்பரிய சேவையால், தமிழக மக்களை, குறிப்பாக, "குடிமகன்களை' வாழ வைத்த இந்த பெருந்தகையை, தமிழர்கள் புறக்கணித்தது முறைதானா? முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததுமே, மதுவிலக்கை ரத்து செய்து, "குடிமகன்'களை மகிழ்வித்தவர் அல்லவா? இவர் ஏற்றி வைத்த இந்த தீபம், இன்றளவும் அணையாமல், சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறதே, இதற்காகவே இவரை தமிழினம் உள்ளவரை நினைவில் கொள்ள வேண்டாமா? எதைப் பற்றியும் கவலைப்படாமல், அதிகாலை முதல், நள்ளிரவு வரை, "குடிமகன்கள்' ஓயாமல் தம், "கடமையை' செய்ய, அதைக் கண்டு, அவர்கள் வீட்டுப் பெண்கள் இன்றளவும், "ஆனந்தக் கண்ணீர்' வடித்துக் கொண்டிருக்கின்றனரே, அதைத்தான் மறக்க முடியுமா? 
 
இப்படி, கடமையே கண்ணாக, "குடிமகன்கள்' இருந்ததால், இவர்கள் இல்லங்கள், "நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக' செல்வச் செழிப்பில் வளர்ந்து வருகிறதே, அதைத் தான் மறுக்க முடியுமா?"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கிணங்க, இவரது, "நல்' ஆட்சிக்கு, இது ஒன்றே சான்றாகாதா? "தன் மக்கள்' பதவிகளுக்காக, டில்லி சென்று சோனியாவை சந்தித்துப் பேசிய, "தமிழினத்' தலைவர், நம் தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட போது, அறிக்கைவிட்டு, கடிதம் எழுதி, மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தி, மூன்று மணி நேர உண்ணாவிரதம் கூட இருந்தாரே, அதைத்தான் மறக்க முடியுமா? 
 
கட்சிக்காக ஓடாக உழைத்து, தியாகங்கள் பல புரிந்த அழகிரி, கனிமொழி, தயாநிதி போன்ற தம் குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவி கொடுத்து, இவர்கள் மூலம் தமிழகத்தில் பல சேவைகளைப் புரிந்தாரே, அதைத்தான் மறக்கலாமா? தன் பேரன்கள் மூலம், "ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்றும், "கிளவுட் நைன்' என்றும், சுந்தரத் தமிழில் பெயர் வைத்து, "வா குவாட்டர் கட்டிங்' என்று, "பண்பாடு' காக்கிற படங்களை எடுக்க வைத்து, தமிழ் சேவை செய்கிறாரே, அதைத்தான் மறக்க முடியுமா?
 
எல்லாவற்றையும் விட, "கையிலே காசு இல்லாத போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக, கழகத்தையே காட்டிக் கொடுக்க முனைகின்றனர்' என, தமது கட்சியைச் சேர்ந்தவரை பற்றிக் கூறி, தாங்கள் அடித்த கொள்ளைப் பற்றி, திறந்த மனதோடு ஒப்புக்கொள்கிறாரே, இப்படிப்பட்ட உன்னதத் தலைவரைத்தான் மறக்கலாமா?
 
"நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், நான் கட்டு மரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்' என்று, மேற்சுட்டியவாறு, பல சாதனைகள் புரிந்தவரை நிந்திப்பதுதான் நியாயமாகுமா? "தமிழனுக்குள்ள சாபக்கேடு; எத்தனை முறை குட்டு பட்டாலும் தமிழனுக்கு புத்தி வராது' என, தமிழர்களைப் பற்றி, "புகழ்ந்து' அரசியல் நாகரிகத்தோடு, நற்சான்றிதழ் வழங்கும், இத்தகு சிறப்புக் குரிய தலைவரை, 75 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரை, ஐந்து முறை முதல்வராக இருந்தவரை, தேசிய அரசியலில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதியை மறக்காமல், இவரிடமிருந்து பாடம் பெற்று, இனியாவது, விழித்துக் கொள்ளுமா தமிழினம்?

இப்படிக்கு...
கழகத்தொண்டன்...

Friday, September 9, 2011

திருச்சி இடைத் தேர்தலில் மதிமுக போட்டியா - வைகோ


திருச்சி இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


கும்பகோணம் வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இருப்பினும் இந்தத் தேர்தலில் திமுகவுடனோ அல்லது அதிமுகவுடனோ நாங்கள் கூட்டணி சேர மாட்டோம்.

ஒத்த கருத்துக்களுடைய கட்சிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.

அதேசமயம், திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடியும் மதிமுக எடுத்துள்ளது. இத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்றார் அவர்.

Wednesday, July 20, 2011

நண்பர்களுக்காக சிறை சென்றார் மு.க. அழகிரி.. பரபரப்பு நிமிடங்கள்...

 
நில மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மதுரை திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்ட 4 பேரை சந்திக்க பாளையங்கோட்டை சிறைக்கு சென்று வந்தார் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வேங்கடசாமி சமுத்திரத்தை சிவனாண்டி என்பவருக்கு சொந்தமான 5.14 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கூறி, திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு, கொடி.சந்திரசேகரன், சேதுராமன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கேட்டை சிறையில் அடைத்தனர்.

இதில் கோ.தளபதி, சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் ஆகியோர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டவர்கள் என்பதால்,இவர்களை காண பாளையங்கோட்டை சிறைக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை வந்தார்.இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி,மைதீன்கான்,மதுரை துணை மேயர் மன்னன், தேனி மாவட்ட திமுக செயலாளர் மூக்கையா, திருநெல்வேலி திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அவ்வளவு தாங்க நீங்க என்ன நினைச்சீங்க...
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...