Showing posts with label பரபரப்பு தகவல். Show all posts
Showing posts with label பரபரப்பு தகவல். Show all posts

Thursday, May 2, 2013

பவர் ஸ்டார் வீட்டில் போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்


மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 

ஆந்திர மாநில தொழில் அதிபர் ரங்கநாதனுக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தர அவரிடம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.50 லட்சம் கமிஷனாகப் பெற்றார். ஆனால் பவர் கடனையும் வாங்கிக் கொடுக்கவில்லை, கமிஷனையும் திருப்பிக் கொடுக்கவில்லை. 

இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த 26ம் தேதி பவரை கைது செய்து முதலில் புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவரை வேலூர் மத்திய சிறைக்கு மாற்றினர். 

பவரை 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் பவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று காலை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தொடர்ந்து மோசடி புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தினோம். இதில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களை வைத்துக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது. 

விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் தெரியும் என்றார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பவர் ஸ்டார் மீது மேலும் 3 பேர் மோசடி புகார்கள் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, April 18, 2013

அஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!


அஞ்சலி தமிழுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை... அவர் தெலுங்கிலேயே இருந்து கொள்ளட்டும்... ஆனால் நம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என தவிக்கிறார்களாம்  தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும். காரணம், ஹைசதராபாத் போலீசாரிடம் தன்னை டார்ச்சர் செய்தவர்கள், தப்பாக அணுகியவர்கள் என பெரிய லிஸ்டையே கொடுத்திருக்கிறாராம் அஞ்சலி. 

இன்னும் சென்னைக்கு அஞ்சலி வரவில்லை. இங்கு வந்த பிறகு போலீசாரிடமும் நீதிமன்றத்திலும் அஞ்சலி வாக்குமூலம் தர வேண்டியிருக்கும். அப்படித் தந்தால் யார் யாரையெல்லாம் அவர் போட்டுக் கொடுப்பாரோ என திகிலில் உள்ளார்களாம். 

சித்தியும், 'கருங்காலி' இயக்குநரும் தன்னை எப்படியெல்லாம் படுத்தினார்கள் என்பதையும், வாய்ப்புகளுக்காகவும் பணத்துக்காகவும் அவர்கள் தன்னை நிர்ப்பந்தப் படுத்தியதையும் மீண்டும் ஒரு முறை சென்னை போலீசில் சொல்லிவிட அஞ்சலி முடிவு செய்திருக்கிறார். 

இதிலிருந்து அவரை திசை திருப்பவே சித்தியும் 'கருங்காலி'யும் வழக்கு, புகார் என பரபரப்பு கிளப்பி வருகிறார்களாம்!

Thursday, April 11, 2013

ஜெயா இரும்பு பெண்மணி, கருணாநிதி பயந்தாங்கோலி - விக்கிலீக்ஸ் தகவல்


விடுதலைப்புலிகளை தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதமாக கையாண்டன என்பது குறித்து விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா குறித்து சில செய்திகள் இடம்பெற்றுள்ளன.


விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளன.

அந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடம் 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த குறிப்பில் விடுதலைப்புலிகள் விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சி தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் எப்படி மாறுபட்ட விதத்தை கையாண்டார்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, விடுதலைப்புலிகள் விஷயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அனுப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது, ‘ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒடுக்க உத்தரவிட்டார்.

இதை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக திகழ்வது தெரிகிறது. அவரது துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக இருந்த விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது' என அந்த தகவல் தொகுப்பில் கூறப்பட்டு இருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக திமுக தலைவர் கருணாநிதி குறித்து 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்ட குறிப்பில், விடுதலைப்புலிகள் மீதான பயம் காரணமாகவே, கருணாநிதி அந்த அமைப்பை ஆதரித்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று குறிப்பிடபட்டிருந்தது.

Thursday, August 11, 2011

ராமதாஸின் அடுத்த காமெடி... திராவிட கட்சிகளை ஒழிப்பதே முதல் வேலை...


தமிழ்நாட்டை சீரழித்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான். இவற்றை ஒழிப்பதுதான் பாமகவின் முதல் வேலையாகும் என்று கட்சி தொடங்கிய நாள் முதல் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்து ஓய்ந்து போய் விட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை முதல் வேலையாக கொண்ட கட்சி பாமக. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்து புதிய சாதனை படைத்த கட்சி இது. இந்த நிலையில் திராவிடக் கட்சிகள்தான் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன. எனவே அதை ஒழிப்பதுதான் பாமகவின் முதல்வேலைஎன்று பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதுதான் இப்படிக் கூறினார் ராமதாஸ். அவர் பேசுகையில்,

தமிழகத்தில் 1967-க்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் 18 மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் இருந்தன. ஆனால், இன்று 11 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்வழிக் கல்விதான் இருந்தது. கல்விக் கொள்ளையர்களை அனுமதித்தது திராவிடக் கட்சிகள்தான். சாராயக் கடைகளைத் திறந்துவிட்டு சமூகம் கெடுவதற்கும், இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றியதற்கும், விவசாயம் பாழ்பட்டுப் போனதற்கும் காரணமான திராவிட கட்சிகளை அப்புறப்படுத்துவது வரலாற்றுக்கடமையாகும்.

சமச்சீர் கல்வியின் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் மட்டுமே இருக்கும் என்ற சட்டத்தைச் சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டும் 

சமச்சீர் கல்வியில் முழு வெற்றி கிடைக்கவில்லை. கருணாநிதி அரைகுறை சமச்சீர் கல்வியைத்தான் கொண்டுவந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாமக மட்டுமே வெற்றி பெற வேண்டும். அனைத்து நிலையிலும் தலைகீழாக மாற்றப்பட்டுள்ள தமிழகத்தை மீட்கும் மீட்பராகப் பாமக வந்துள்ளது என்றார் ராமதாஸ்.

Friday, April 29, 2011

மங்காத்தா நிறுத்தம் பரபரப்பு தகவல்...


எங்கள் ஊரில் இருக்கும் சிலர் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் புளியமரத்தடியில் எப்போதும் மங்காத்தா ஆடிக்கொண்டு காலத்தையும் பணத்தையும் விரயம் செய்துக் கொண்டிருந்தனர். 

இதனால் பலகுடும்பங்கள் வறுமையில் வாட நேர்ந்தது. குடும்ப பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினார்கள். இதற்கு முடிவுகட்ட நினைத்த கிராம மகளிர் அணி அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சுமார் 20 பெண்கள் சென்று புகார் கொடுத்தார்கள். 

அந்த புகாரில் தங்களின் கணவன்மார்கள் வேலைக்கு செல்லாமல் எப்போதும்  பொருப்பில்லாமல் மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கிறார்கள் எப்படியாவது அதை நிறுத்தவேண்டும் ‌என்று கேட்டுக்கொண்டார்கள்.


அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் ஒரு சிறப்புபடையுடன் சென்று அப்போது அங்கு மங்காத்தா ஆடிக் கொண்டிருந்த அனைவரையும் மடக்கிப் பிடித்தனர்.

பிடிப்பட்ட அனைவரையும் நைய்ய புடைத்த போலீஸ் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்கினர். பின்பு இனி மங்காத்தா ஆடுவதில்லை என்று அங்கு பிடிப்பட்ட அனைவரும் வாக்கு கொடுத்தோடு மட்டுமல்லாமல் கைப்பட எழுதியும் கொடுத்தனர். அதன் பிறகுதான் பெண்கள் நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு மங்காத்தா நிறுத்தப்பட்டது.


டிஸ்கி : அஜித் நடிக்கும் மங்காத்தாவிற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...