Friday, September 30, 2011

பிறந்த நாள் பரிசு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பு.. நிலுவையிலுள்ள வழக்கு பட்டியல்..!


முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக ரூ 2 கோடி காசோலைகள் வந்தது தொடர்பான வழக்கிலிருந்து அவரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, அவரது பிறந்த நாளுக்குப் பரிசாக ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் வந்தன. இதை அரசுக் கணக்கில்சேர்க்காமல்தனது கணக்கில் அவர் போட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ நடத்தி வந்தது. இத்தனை காலமாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை பத்து ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, சிபிஐ காலதாமதமாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதற்கான காரணத்தை அது கூறவில்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.

தற்போது அழகு திருநாவுக்கரசு திமுகவில் இருப்பது நினைவிருக்கலாம். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீதான வழக்குகளில் மேலும் ஒன்று குறைந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீது திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள்

1995ம் ஆண்டு ரூ. 8.5 கோடிக்கு 45,302 கலர் டிவி பெட்டிகளை வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு (விடுதலை), டான்சி நில வழக்கு (விடுதலை) , ரூ. 2 கோடி கிப்ட் காசோலை வழக்கு (விடுதலை), பிளசன்ட் ஸ்டே வழக்கு (தண்டனை-அப்பீல் நிலுவையில் உள்ளது), நிலக்குமதி இறக்குமதி ஊழல் (நிலுவை), திராட்சைத் தோட்ட வழக்கு (விடுதலை), சாப் விளையாட்டு விளம்பர ஊழல் (விடுதலை), சொத்துக் குவிப்பு வழக்கு (நிலுவை), கிரானைட் குவாரி ஊழல் (நிலுவை) , டிட்கோ முதலீட்டு விலக்கு ஊழல் (விடுதலை), வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது (நிலுவை).

3 comments:

  1. அருமையான பிறந்த நாள் பரிசு!

    ReplyDelete
  2. வெரிகுட். அம்மாக்கு வரிசையா இனி ஏறுமுகம்தான் என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. அம்மையாருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...