Monday, April 29, 2013

மே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை



சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிறார். அனிருத் இசையமைத்து இருக்கிறார். '3' படத்தினைத் தொடர்ந்து தனுஷ் இப்படத்தினையும் தயாரித்து இருக்கிறார்.

'3' கூட்டணியில் வரும் படம் என்பதால் படம் தொடங்கும் போதே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியது படத்தின் இசை தான். அனைத்து பாடல்களுமே ஹிட். 



பல வருடங்களாக குழந்தை இல்லாமல் ஒரு கோவிலுக்கு சென்று வேண்டுகிறார்கள் சிவகார்த்திகேயனின் அம்மாவும், அப்பாவும். அப்படி வேண்டியதால் பிறக்கும் சிவகார்த்திகேயனுக்கு அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயரான ‘குஞ்சிதபாதம்’ என்ற பெயரையே வைக்கிறார்கள்.

ஆனால் சிவகார்த்திகேயன் வளர வளர அவருக்கு அந்தப் பெயர் பிடிக்காமல் போகிறது. ஸ்கூலில் படிக்கும் போது சக நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிண்டலும்,கேலியும் செய்கிறார்கள், இதனால் தனது பெயரை வெளியில் சொல்ல வெட்கப்படும் அவர் எப்படியாவது தனது பெயரை மாற்றி விட வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறது.

இதனால் பெயரை மாற்றினால் எங்கே தெய்வக்குத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து போய் அந்த எண்ணத்தை கை விடுகிறார். பிறகு கல்லூரிக்கு போகும்போது ஹீரோயின் ப்ரியா ஆனந்த்தின் ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்கிறது. அப்போது அவர் சிவகார்த்திகேயனிடன் பெயரை கேட்கும் போது குஞ்சிதபாதம் என்று சொன்னால் எங்கே அவள் நம்ம சீப்பாக நினைத்து விடுவாளோ..? என்று பயந்து ஹரீஸ் என்று பெயரை மாற்றிச் சொல்கிறார்.


அப்புறம் என்ன ஆனது... வாழ்க்கையில் எப்படி 'எதிர் நீச்சல்' போட்டு ஜெயிக்கிறார் என்பதே 'எதிர் நீச்சல்' படத்தின் கதை.

'எதிர் நீச்சல்' படத்திற்கு மிகவும் பலம் என்றால் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் தான். அதுவும் இசை வெளியாகும் முன்பே பாடல்கள் உருவான விதம் என்று YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். அந்த வீடியோ பதிவு பயங்கர ஹிட். 

பாடல்கள் வெளியானவுடன் அனைத்து பாடல்களுமே YOUTUBE இணையத்தில் ஹாட் டாக். அனைத்து பாடல்களுமே 1,00,000 ஹிட்டுகளை தாண்டிவிட்டது. அதுமட்டுமன்றி நாயகன் வேறு சிவகார்த்திகேயன். இவரது டைமிங் காமெடிக்கு எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும். படத்தின் ஒப்பனிங்கிற்கு கேட்கவா வேண்டும். இப்படத்தின் ஒரு பாடலுக்கு தனுஷுடன் நயன்தாரா வேறு நடனமாடி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் ஒப்பனிங், தனுஷ் தயாரிப்பு, அனிருத் இசை என்று ஹிட் கூட்டணி இருப்பதால் படத்தின் ஒப்பனிங்கிற்கு பஞ்சமில்லை. படம் மே 1ம் தேதி வெளியாகிறது.

********************************



'சூது கவ்வும்' படத்தில் 40 வயது கொண்டவர் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக 'சூது கவ்வும்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சஞ்சிதாஷெட்டி நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துடன் நடித்திருந்தார். இந்தப் படத்தை நளன் குமாரசாமி இயக்குகிறார். 'அட்டக்கத்தி', 'பீட்சா' ஆகிய படங்களை தயாரித்த சி.வி.குமார்தான் தயாரிக்கிறார்.


படத்தில் நாற்பது வயது கொண்டவர் தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் இதுபோன்ற வேடம் ஏற்றிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது: குறும் படங்களில் நடிக்கும் போதே இந்த கதாபாத்திரத்தில் நடிக்கணும் என்ற ஆசை இருந்தது. நளன் எனக்கு நல்ல நண்பர். எனவேதான் நானே விரும்பிச் சென்று நடிக்கிறேன். ஒரு ஹீரோ எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். நாற்பதா இருந்தா என்ன, அறுபதா இருந்தா என்ன" என்று தெரிவித்தார்.

*******************************



அர்ஜுன்-சேரன்&விமல் நடித்த மூன்று பேர் மூன்று காதல் கேளடி கண்மணி, ஆசை, பூவெல்லாம் கேட்டுப்பார், நேருக்கு நேர், ரிதம், சத்தம் போடாதே ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், வஸந்த். இவர் இப்போது, மூன்று பேர் மூன்று காதல் என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார். 

குறிஞ்சி, நெய்தல், மருதம் ஆகிய நிலங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை இது. அர்ஜுன், சேரன், விமல் ஆகிய மூன்று பேரும் முதல்முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். கதாநாயகிகளாக சுர்வீன், லாசினி, பானு ஆகிய மூவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, அப்புக்குட்டி, சத்யன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர். 


யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருக்கிறார். எம்.ஜி.பரத்குமார், பி.ஏ.மகேந்திரன், மகா அஜய் பிரசாத் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர். சென்னை, நாகர்கோவில், ஊட்டி, சாலக்குடி, மங்களூர், பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. முக்கிய காட்சிகள், சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...