Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Thursday, April 18, 2013

அஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!


அஞ்சலி தமிழுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை... அவர் தெலுங்கிலேயே இருந்து கொள்ளட்டும்... ஆனால் நம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என தவிக்கிறார்களாம்  தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும். காரணம், ஹைசதராபாத் போலீசாரிடம் தன்னை டார்ச்சர் செய்தவர்கள், தப்பாக அணுகியவர்கள் என பெரிய லிஸ்டையே கொடுத்திருக்கிறாராம் அஞ்சலி. 

இன்னும் சென்னைக்கு அஞ்சலி வரவில்லை. இங்கு வந்த பிறகு போலீசாரிடமும் நீதிமன்றத்திலும் அஞ்சலி வாக்குமூலம் தர வேண்டியிருக்கும். அப்படித் தந்தால் யார் யாரையெல்லாம் அவர் போட்டுக் கொடுப்பாரோ என திகிலில் உள்ளார்களாம். 

சித்தியும், 'கருங்காலி' இயக்குநரும் தன்னை எப்படியெல்லாம் படுத்தினார்கள் என்பதையும், வாய்ப்புகளுக்காகவும் பணத்துக்காகவும் அவர்கள் தன்னை நிர்ப்பந்தப் படுத்தியதையும் மீண்டும் ஒரு முறை சென்னை போலீசில் சொல்லிவிட அஞ்சலி முடிவு செய்திருக்கிறார். 

இதிலிருந்து அவரை திசை திருப்பவே சித்தியும் 'கருங்காலி'யும் வழக்கு, புகார் என பரபரப்பு கிளப்பி வருகிறார்களாம்!

Saturday, April 13, 2013

நான் அனுபவித்த கொடுமைகள் - அதிர்ச்சியூட்டும் அஞ்சலி .... புதிய தகவல்கள்


சித்தியிடமும் களஞ்சியத்திடமும் நான் அனுபவித்த சித்திரவதைகளை விரைவில் வெளியிடுவேன் என்று நிருபர்களிடம் கூறினார்  நடிகை அஞ்சலி. 

கடந்த ஒரு வாரமாக அஞ்சலி விவகாரம் பரபரப்பாக உள்ளது. சித்தி கொடுமை, இயக்குநர் களஞ்சியத்தின் அச்சுறுத்தல் போன்றவை குறித்து கடந்த வாரம் அம்பலப்படுத்திய நடிகை அஞ்சலி, திடீரென ஹைதராபாதிலிருந்து காணாமல் போனார். 

இதனால் அவர் நடிக்க இருந்த தெலுங்கு பட ஷூட்டிங்கும் தடைபட்டது. காணாமல் போன அஞ்சலியை பல இடங்களில் தேடினர். ஆனால் அஞ்சலியோ தன் சகோதரரிடம் மட்டும் அவ்வப்போது பேசி வந்தார்.

இதற்கிடையில் அஞ்சலியின் குற்றச்சாட்டுகளை மறுத்து பாரதி தேவி ஒருபக்கம் பேசி வந்தார். இயக்குநர் களஞ்சியமோ அஞ்சலி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். 

அஞ்சலியை யாரோ கடத்திவிட்டார்கள், அவரை கொண்டு வந்து ஆஜர்ப்படுத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சித்தி பாரதிதேவி ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்தார். 

இந்த வழக்கில் 2 வாரத்துக்குள் அஞ்சலியைக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டதால், தீவிர தேடுதலில் இறங்கினர் போலீசார். 

இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஹைதராபாத் வடக்கு துணை கமிஷனர் சுதீர்பாபு முன்னிலையில் ஜூப்லி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார் அஞ்சலி. 

போலீஸ் நிலையத்தில் விசாரணை முடிந்து வெளியில் வந்த அஞ்சலி நிருபர்களைச் சந்தித்தார். அவர கூறுகையில், "மிகுந்த நெருக்கடியான நிலையில் இருந்தேன். இப்போதுதான் முழு சுதந்திரத்தையும் அனுபவிக்கிறேன். நிம்மதியாக உள்ளது. இதுவரை அனுபவித்த அத்தனை சித்திரவதைகளையும் விரைவில் வெளியிடப் போகிறேன். 

போலீசிலும் என் வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டேன். ஒரு சில தினங்களில் மீண்டும் முழு வீச்சில் ஷூட்டிங்கில் பங்கேற்கப் போகிறேன். இனி யாரிடமும் என் சார்பாக தயாரிப்பாளர்களோ திரையுலகினரோ பேச வேண்டியதில்லை. என்னிடமோ பேசலாம்," 

என்றார். நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகப் போகிறார் அஞ்சலி. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...