Wednesday, March 13, 2013

பரதேசி பட்ட பாடு..! பாலா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்


இது பாலா வாரம்.. எனும் அளவுக்கு பரதேசி பற்றிய செய்திகளும் படங்களும் வீடியோக்களும் ஊடகங்களில் குவிந்துவிட்டன. 

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இந்தப் படம் உலகம் முழுக்க வெளியாகிறது. 

பரதேசி பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகளும்… கடைசியில் ஒரு ஷாக்கிங் வீடியோவும் உங்களுக்காக! 

* பரதேசி படத்தின் ஒரிஜினல் கதை ரெட் டீ நாவல்.. அது மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் தமிழிலும் வெளியானது. தமிழில் தலைப்பு எரியும் பனிக்காடு! 

* இந்தப் படத்துக்கு முதலில் சனி பகவான் என்று பெயர் வைத்தார். அந்த நேரம் பார்த்து ஆதி பகவன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் அமீர். அதை பின்னர், கல்லறைத்தோட்டம் என மாற்றினார். பின்னர் என்ன நினைத்தாரோ.. பரதேசி என்று முடிவு செய்துவிட்டார். 


* பாலா என்ற ஒரு இயக்குநர் வெளியில் தெரியும் முன்பே அவருக்கு எல்லாமாக இருந்து ஆசி வழங்கியவர் இளையராஜா. தன் இசையால் அவர் படைப்புகளுக்கு அர்த்தம் தந்தவர். ஆனால் இந்தப் படத்தில் முதல் முறையாக ராஜா குடும்பத்துக்கு வெளியில், ஜி.வி.பிரகாஷிடன் இணைந்திருக்கிறார் பாலா. ஆனால் மனசுக்குள் ராஜா மேல் உள்ள மரியாதையைக் காட்ட, படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவுக்குக் காட்டி ஆசி பெற முடிவு செய்துள்ளாராம்.

* பாலாவின் படங்களில் வெளிநாட்டில் அதிக அரங்குகளில் வெளியாவதும் பரதேசிதான். 18-ம் நூற்றாண்டில் தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளுக்கு ஆங்கிலேயர் செய்த கொடுமைகளை ஆங்கிலேயருக்குச் சொல்ல ஆங்கில சப்டைட்டிலுடன் 25 திரையரங்குகளில் பிரிட்டனில் வெளியாகிறது பரதேசி.


* பொதுவாக தன் பாடல் வரிகளில் யார் செய்யும் திருத்தங்களையும் அத்தனை சுலபத்தில் ஏற்க மாட்டார் வைரமுத்து. ஆனால் பாலா பல திருத்தங்கள் சொல்லச் சொல்ல, அதற்கேற்ப தன் பாடல்களை மாற்றிக் கொண்டாராம். அது மட்டுமல்ல, அடுத்த படத்துக்கும் வாய்ப்பு கேட்டுள்ளார். பாலா வழக்கம் போல சிரித்து வைத்தாராம். காரணம், அடுத்த படத்துக்கு மீண்டும் இளையராஜாவிடம் போகும் திட்டத்திலிருக்கிறார் பாலா. வைரமுத்துவுக்கு எப்படி வாக்கு தரமுடியும்! 

* இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச இயக்குனர் சீமானை அழைக்க முடிவு செய்தார் பாலா. ஆனால், கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டார். அஜீத் விவகாரத்தில் சீமான்தான் பாலாவுக்கு உதவியவர் என்பது நினைவிருக்கலாம். 

* படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமெடுத்து முடித்துவிட்டு, மனசு பாரம் தாங்காமல் சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் இரண்டு நாட்கள் படுத்துறங்கிவிட்டு வந்தாராம்! 

* இந்தப் படம் வலி மிகுந்த ஒரு வரலாற்றைச் சொல்லும் படம்தான் என்றாலும், பாலாவின் படங்களுக்கே உரிய நகைச்சுவையும் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள். 


* அதெல்லாம் ஓகேதான்… இந்தப் படத்துக்காக பாலா தன் நடிகர்களைப் படுத்தியிருக்கும் பாட்டை ஒரு வீடியோவாகத் தந்திருக்கிறார். 

அதைத்தான் எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை.. ரீலா.. ரியலா.. ? 

பரதேசியை அவர் பாராட்டினார்.. இவர் சிலாகித்தார் என்று வந்த அத்தனை பாஸிடிவ் செய்திகளையும் நாசமாக்கியிருக்கிறது இந்த ரியாலிட்டி டீஸர் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.  (
நன்றி சினிமா தளங்கள் 
)

இதோ அந்த வீடியோ.. 



1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...