Tuesday, March 26, 2013

பாராளுமன்ற தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி



பாராளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் பிஸியாகியுள்ளன. அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணியை பிரிந்து தனித்து நிற்கின்றன.

எந்த எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாகவில்லை என்றாலும், சில கட்சிகளில் நடவடிக்கைகளைப் பார்த்தால் திமுக, தேமுதிக-வுடன் கூட்டணி அமைப்பதற்காக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த திமுக, இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. அதேபோல தேமுதிக-அதிமுக கூட்டணி பிரிந்து விட்டதாலும், இவர்களும் இனி கூட்டண் அமைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கருதும் திமுக, தேமுதிகாவை இழுக்க முயற்சித்து வருகிறது.

அதேபோல தேமுதிக-வை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரசும் முயற்சிக்கிறது. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் காங்கிரசுடன் இணைந்தால் நன்மை ஏதும் நடக்காது என்று கருதும் தேமுதிக மேலிடத்திற்கும் தற்போதுள்ள ஒரு வாய்ப்பு திமுக தான்.

அதற்கு ஏற்றாற் போல் சட்டசபையிலும் தே.மு .தி.க.வுக்கு ஆதரவாளரின் நிலைப்பாட்டையே தி.மு.க. கடை பிடிக்கிறது. நேற்று 6 எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு நீக்கப்பட்டதும், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே போல் இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று விமர்சிப்பதை நிறுத்தி விட்டன. விஜயகாந்தும் தி.மு.க.வை அவ்வளவாக விமர்சிப்பதில்லை.

இந்த சூழ்நிலைகளை பார்க்கும் போது தி.மு.க.-தே.மு.தி.க. இடையே நெருக்கம் அதிகரிப்பதையே காட்டுகிறது. எனவே தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இரு கட்சி வட்டாரத்திலும் பலமான பேச்சு அடிபடுகிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...