Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Thursday, December 26, 2013

பலிக்குமா கலைஞரின் இந்த கேடுகெட்ட வியூகம்


'காங்கிரசோடும் பா.ஜ.,வுடனும் கூட்டணி இல்லை' என, கருணாநிதி, தன் கட்சி பொதுக்குழுவில், அடித்து சத்தியம் செய்திருக்கிறார். 

கிராமப் புறத்தில், மொடாக் குடிகாரன், 'இனி, நான் குடிக்கமாட்டேன்' என, சத்தியம் செய்தால், 'இது எத்தனையாவது சத்தியம்?' என, பலரும் அவனை கிண்டலடிப்பர். அதுபோல் தான், கருணாநிதியின் சத்தியமும், கேலிக்குரியதாகி உள்ளது. 

ஒவ்வொரு முறையும், 'காங்கிரசுடன் உறவு முறிந்து விட்டது' என, கருணாநிதி அறிவிக்கும் போதெல்லாம், தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்து, காங்கிரசாரின் உருவ பொம்மையை கொளுத்தி விளையாடுவது வழக்கம். 

கொளுத்திய பட்டாசு அணைவதற்குள், பதவிக்காக, தன் குடும்ப நலனுக்காக, காங்கிரசோடு ஒட்டி உறவாடுகிற நிலையை, கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் எடுத்து விடுவார் கருணாநிதி. 

'இந்திராவிடம், தாயின் அன்பைப் பார்த்தேன், சோனியாவிடம், மகளின் பாசத்தைப் பார்க்கிறேன்' என, சில தினங்களுக்கு முன் உருகினார். சில மாதங்களுக்கு முன், மகள் கனிமொழியின் எம்.பி., பதவிக்காக சோனியாவை, 'மணிமேகலை' என்றார். 'பண்டார பரதேசிகள்' என, அழைத்த, பா.ஜ.,கட்சியுடன் தான், மத்தியில் பேரம் பேசி அமைச்சர் பதவி வாங்கினார். 

அது, காங்கிரசாய் இருந்தாலும், பா.ஜ.,வாக இருந்தாலும், வேறு வழியில் லை. இப்படி, 'உதார்' விட்டால், கிட்டே வரும் உதிரிக் கட்சிகளை வைத்து வென்று, பின், அவற்றை கழற்றி விட்டு, மத்தியில் ஒட்டிக் கொள்ளலாம் என்ற நரித்தந்திரம் தான், கருணாநிதி நினைப்பில் உள்ளது. 

அதனால் தான், 'மத்தியில் அந்தக் கட்சி வருமா? இந்தக் கட்சி வருமா?' என, ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமும் உட்கார்ந்து, கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்கு என்பது, மொத்த வழக்குகளையும், எப்படி குழிதோண்டி புதைப்பது என்பது தான். இதில், தமிழர் நலன், கட்சி நலன் என்பதெல்லாம், 'டுபாக்கூர்' தான்! 

எது எப்படி போனாலும், இனி வரும் காலங்கள், காங்கிரசுக்கு மட்டுமல்ல; தி.மு.க.,வுக்கும் தேய்பிறை தான். எத்தனை கூட்டல், கழித்தல், வகுத்தல் போட்டுப் பார்த்தாலும், கருணாநிதியின் கணக்கு, தப்பாகவே இருக்கும். இது சத்தியம். என்.மதியழகன், பெண்ணாடம், கடலூர்.

Monday, June 17, 2013

தற்போது விஜயகாந்தின் முடிவு என்ன...?



மேல்சபை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தில் சரியான போட்டி நிலவுகிறது. மற்றயாராவது விட்டுக்கொடுத்தால் அல்லது  ஆதரவு அளித்தால் மட்டும் 6-வது உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை உறுவாகியுள்ளது. தேமுதிக உறுப்பினர்கள்  ஆதரவு இருந்தால் மட்டுமே 6 உறுப்பினரின் வெற்றி உறுதியாக இருக்கும் என்ற நிலையில் அனைவரின் கவனமும் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளது... இந்நிலையில் யாருக்கு விஜயகாந்த் ஆதரவு அளிக்கபோகிறார் என்பது   கேள்விக்குறியாக இருக்கிறது...



ஹலோ... விஜயகாந்த்.... உங்க காட்டுல பண மழைதான் போங்க ...

Sunday, June 16, 2013

இவ்வளவுதாங்க கனிமொழி அவர்களின் சொத்து...!


திமுக எம்.பி. கனிமொழியின் சொத்துக்கள் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.8.56 கோடியில் இருந்து ரூ.26.67 கோடியாக அதிகரித்துள்ளது. 

திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். 

வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்து விவரங்களை அவர் அளித்தார். தனக்கு ரூ.16.67 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.10 கோடி அசையா சொத்துக்கள் என்று மொத்தம் ரூ.26.67 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் ரூ.8.56 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 360 கிராம் தங்க நகைகள் இருந்தது. ஆனால் தற்போது 700 கிராம் தங்க நகைகள் உள்ளன. 

ஆனால் கடந்த 2007ம் ஆண்டைப் போலவே தற்போதும் அவரிடம் 10 காரட் வைரம் நகைகள் தான் உள்ளது. மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள பங்குகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, May 14, 2013

கலைஞரின் ஆட்டோகிராப்... நிறைவேறாத சம்திங்.. சம்திங்...


சுயமரியாதை திருமணம் தான், நடத்தி கொள்ள வேண்டும் என, நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால், நான் காதலித்த பெண், எனக்கு கிடைக்காமலே போய் விட்டாள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில், ராயபுரம் பகுதி பிரதிநிதி நான்குட்டி இல்ல திருமண விழாவை, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று நடத்தி வைத்து பேசியதாவது: 

இன்றைக்கு, மே, 13. இதே நாளில், செப்டம்பர் மாதத்தில், எழுபதாண்டுகளுக்கு முன், என்னுடைய திருமணம் நடந்தது. இதே கோபாலபுரம் வீட்டில், இதுவரை நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை, 2,000-க்கும் அதிகம். 

இது தவிர, நான் வெளியூர்களுக்குச் சென்று நடத்தி வைத்த திருமணங்கள், சென்னையிலே வேறு பகுதிகளில், நான் நடத்தி வைத்த திருமணங்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால், 10,000-க்கும் மேற்பட்ட திருமணங்களை, நான் நடத்தி வைத்திருக்கிறேன். 

தற்போது, சுயமரியாதை திருமணங்களை, நடத்திக் கொள்ள முன் வருகிறவர்களின் எண்ணிக்கை, பெருகி வருகிறது. என்னைப் பொறுத்தவரை, 1944-ல் செப்டம்பர், 13-ம்தேதி அன்று, நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன், நான் காதலித்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

சுய மரியாதை திருமணம் தான் நடத்திக் கொள்ள வேண்டும் என, நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால், நான் காதலித்த பெண் எனக்குக் கிடைக்காமலேயே போய் விட்டாள். 

ஆக, சுயமரியாதைத் கொள்கைக்காக, 1944-ம் ஆண்டிலேயே, காதலித்தப் பெண்ணை இழந்தவன் தான் நான்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

Tuesday, May 7, 2013

மானஙகெட்ட ஜாதி கட்சி அரசியல்.... தடுமாறும் தமிழகம்... பரிதவிக்கும் பொதுமக்கள்..!


"ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று, அவ்வை சொன்னதை, தமிழகத்தில் சில சாதிகட்சிக் தலைவர்கள் வறாக புரிந்து கொண்டிருக்கின்றர் போலும். இந்தியாவில், 4,000 த்துக்கும் மேற்பட்ட ஜாதியினர் உள்ளனர் என்பதை மறந்த இவர்கள், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி கொலை செய்வது போல், ஒருவரை ஒருவர் தாக்கி மாண்டு வருவது, நாகரிகமற்ற செயல்களாக தோன்றுகின்றன. 

ஜாதித் தலைவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு, பல்வேறு ஜாதித் தலைவர்கள் தோளில் ஒரு துண்டை போட்டு உலா வருகின்றனரே, இவர்கள் தங்கள் ஜாதிக்காரர்களின் முன்னேற்றத்திற்காக, ஒரு துரும்பை தூக்கிப் போட்டதுண்டா? 

பல லட்சம் பேர் இன்னும் பள்ளிக்குச் சென்று படிக்க வசதியற்றவர்களுக்கும், அன்றாடம் உழைத்தால் தான் அடுப்பு எரியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும், பொருளாதார சூழ்நிலையால் திருமண வயதை கடந்து நிற்கும் பெண்களுக்கும், இவர்கள் என்ன உதவி செய்துள்ளனர் என்று பட்டியல் போட முடியுமா?


நான்காவது முறையாக பதவியேற்று இருக்கும், திரிபுரா முதல்வரின் கணக்கில், வங்கியில் உள்ள தொகை, 4,000 ரூபாய் மட்டுமே. சொந்த வீடோ, வாகனமோ இல்லை. தினமும் சட்டசபைக்கு ரிக்ஷாவில் தான் வருகிறார். 

ஆனால், ஜாதித் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நம்மூர் பிரஜைகள், தலைவராக பொறுப்பேற்ற போது, இவர்களின் நிலை என்ன, தற்போது இவர்களின் வாழ்க்கை நிலை என்ன என்று, அந்த ஜாதி மக்கள் உணர்ந்தாலே போதும், "எனக்கு எந்த ஜாதியும் வேண்டாம்; ஜாதித் தலைவரும் வேண்டாம்' என்று, தாங்களாகவே ஒதுங்கிக் கொள்வர். 

அ.தி.மு.க., - தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தே.மு.தி.க., போன்ற பிரதான கட்சிகள், "இனி எந்த ஜாதிக் கட்சிகளுடனும், கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்' என்று, ஓர் உறுதிமொழியை எடுப்பது நலம். 


இவர்களை தனிமையில் விட்டு, வேடிக்கை பார்த்தால், ஜாதிக் கட்சிகளின் ஓட்டுக்கள் எத்தனை சதவீதம் என்பது புலப்படும். எல்லா பிரதான கட்சியிலும், எல்லா ஜாதிக்காரர்கள் தலைவராக உள்ள போது, ஜாதியை சொல்லி எவரும் தமிழகத்தில் குப்பையை கொட்ட முடியாது என்பதை, மக்கள் இவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

Thursday, April 11, 2013

ஜெயா இரும்பு பெண்மணி, கருணாநிதி பயந்தாங்கோலி - விக்கிலீக்ஸ் தகவல்


விடுதலைப்புலிகளை தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதமாக கையாண்டன என்பது குறித்து விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா குறித்து சில செய்திகள் இடம்பெற்றுள்ளன.


விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளன.

அந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடம் 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த குறிப்பில் விடுதலைப்புலிகள் விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சி தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் எப்படி மாறுபட்ட விதத்தை கையாண்டார்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, விடுதலைப்புலிகள் விஷயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அனுப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது, ‘ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒடுக்க உத்தரவிட்டார்.

இதை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக திகழ்வது தெரிகிறது. அவரது துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக இருந்த விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது' என அந்த தகவல் தொகுப்பில் கூறப்பட்டு இருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக திமுக தலைவர் கருணாநிதி குறித்து 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்ட குறிப்பில், விடுதலைப்புலிகள் மீதான பயம் காரணமாகவே, கருணாநிதி அந்த அமைப்பை ஆதரித்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று குறிப்பிடபட்டிருந்தது.

Sunday, April 7, 2013

காங்கிரஸ்-பா.ஜ., கலைஞரின் ஆடுபுலி ஆட்டம்...!


சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, சிறு செயல்களால் கோபமடைந்து, "உம் பேச்சு... கா... டூ...' என்று சொல்லி கொள்ளும். சிறிது நேரம் கழித்து, டூ விடப்பட்ட குழந்தை, சாப்பிட ஏதாவது தந்தால், "உம் பேச்சு பழம்' என்று சொல்வதைப் போலுள்ளது, காங்கிரசிடம், தி.மு.க., "கா... டூ...' விட்ட கதை. 

ஈழ தமிழர்களின் இனப் படுகொலையை, தடுத்து நிறுத்த வேண்டிய நேரத்தில் தடுக்காமல், தன் மக்களின் பதவி சுகத்திற்காகவும், ஊழலில் ஏற்பட்டிருக்கும் களங்கத்தை மூடி மறைப்பதற்காகவும், அப்போது மவுன சாமியரைப் போல் பேசாமல் இருந்து விட்டு, தற்போது, "நான் வாபஸ் வாங்கியதால், என்ன விடிவுகாலம் பிறந்து விட்டது?' என்று பேசியுள்ளதில் இருந்து, இவரின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை, மக்கள் புரிந்து கொண்டிருப்பர். 

ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் போன்றவர்கள், இவரை ஒப்புக்கு சமாதானம் செய்வதற்காக, சென்னைக்கு வந்து சென்ற, 10 மணி நேரத்தில், வாபஸ் நாடகம் அரங்கேற்றி விட்டார். அம்மூவரிடம் இவர் என்ன பேசியிருப்பார் தெரியுமா...


* இந்த அம்மாவுக்கு, காவிரி பிரச்னையில், மத்திய அரசு இதழில் வெளியிட, சுப்ரீம் கோர்ட் மூலம் பெற்ற வெற்றியால், அவர்களின் செல்வாக்கு கூடியுள்ளது.


* தற்போது, தமிழக மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து, மத்திய அரசுக்கு எதிராக திரும்பியுள்ள சூழ்நிலையில், இதை இந்தம்மா, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, என்னையும், என் கட்சியையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவார் போலுள்ளது.


* நீங்கள் இந்த தேர்தலில், தமிழகத்தில் போணியாக போவதில்லை என்பது உறுதி. அதனால், உங்களுடன் நாங்களும் சேர்ந்திருந்தால், நாங்களும் தேற மாட்டோம்... அதனால், இந்த நேரத்தில், நான் தற்காலிகமாக விலகுகிறேன்.


* எங்களால் காங்கிரசுக்கு எந்த பாதகமும் வரப்போவதில்லை என்று உணர்ந்து தான், நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். 

சோனியாவிடம் என் நன்றி கடனை சொல்லி விடவும். நான் சிறந்த கதை ஆசிரியர் என்பதால், நானே இந்த வாபஸ் நாடகத்தை அரங்கேற்றுகிறேன். -இவ்வாறு சொல்லியிருப்பார்; அவர்களும் இதை ஆமோதித்து சென்றிருப்பர். ஆனால், உள்ளுக்குள் இவரின் எண்ணம், கீழ்கண்டபடியும் இருந்திருக்கும்: 

எப்படியும், மறுபடியும் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் வர வாய்ப்பில்லை. நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக நியமித்தால், கட்டாயம் அவர் தான் அடுத்த பிரதமர். இவர், இந்த அம்மையாருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதால், நாளை, பா.ஜ., ஆட்சி வந்து விட்டால், மறுபடியும், "2ஜி' ஊழல் விஸ்வரூபம் எடுக்கும். அது, பேராபத்தை கொடுக்கும். எனவே, பா.ஜ.,வின் ஆதரவு நமக்கு தேவையெனில், நாம் காங்கிரசை விட்டு விலகுவது மட்டுமல்ல; பா.ஜ.,வை விட, ஒருபடி மேலே சென்று வசைப்பாடினால் நல்லது என்று நினைத்திருப்பார். 

ஒரு வேளை, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கருணையால், பா.ஜ., ஆட்சிக்கு வராமல், உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன், மறுபடியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே திண்ணைக்கு துண்டை விரித்து விட்டதால், சோனியா நம்மை கூட்டணியில் சேர்த்துக் கொள்வார். நமக்கும் கைத்தட்ட ஒரு கூட்டம் உள்ளவரை, ஏன் கவலை? -இப்படி யோசித்திருப்பார். 

இவரின் ராஜ தந்திர கணக்கு, ஜெயிக்குமா என்பதை, 2014ல் நடக்கும் பார்லிமென்ட் தேர்தல் தீர்மானிக்கும். "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற எம்.ஜி.ஆர் பாடல், அப்போதே, இவரை நினைத்து தான் எழுதப்பட்டதோ...?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...